Share:
Notifications
Clear all

யட்சன் Teaser

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 13 hours ago
Messages: 4
Thread starter  

 

 

யட்சனின் யட்சிணி!!

 

 

 

Every part of the cosmos  draws towards its mate..!" 

Rumi….

 

 

ஒவ்வொரு பிறப்பிலும் ஒரு யட்சனுக்கு ஒரு யட்சிணி என்பதே பேரியற்கையின் படைப்பு நிகழ்வாகும்!!

 

மனிதராய் இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு யட்சன் இல்லை ஒரு யட்சிணி உண்டு! அந்த இயற்கை நமக்கு படைத்திருக்கும் யட்சனை அல்லது யட்சணியை கண்டறிந்து சேர்வதே வாழ்வின் உன்னதமாகும்!!

 

நம் இணையை அந்த யட்சனை அல்லது யட்சிணியை கண்டறியும் ஒரு வழிதான் காதல்!!

 

காதல்…!! அன்பு..!! நேசம்..!!

 

எப்படி கூறினாலும் அது ஒரு உயிர் மற்றொரு உயிர் மீது காட்டும் அன்பை மட்டுமே காட்டும்! காதல் தோற்று விட்டது என்று கூறுவார்கள் இல்லை காதலர்கள் மட்டுமே தோற்கிறார்கள்… 

 

காதல் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்றிருந்தால் அதை ஏன் சங்க காலப் புலவர்கள் பாடியிருக்க போகிறார்கள்?

 

தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும், காதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது..!!

 

அப்படி என்றால் காதல் வேறு வார்த்தை இல்லை வாழ்க்கை அல்லவா? நம் வாழ்வோடு இணைந்த ஒன்றல்லவா??

 

அந்தக் காதல் சரியான இணையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்.. அங்கு உயிர்த்து வாழ்கிறது! இல்லையேல்… உயிர்ப்பின்றி மாள்கிறது!

 

அப்படி ஒரு காதல் கதையைத்தான் முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கப் போகிறோம்!!

 

நம் யட்சன்.. விஷ்ராவணன்!

 

நம் யட்சிணி… கதையின் ஓட்டத்தில் இவளை கண்டுபிடிங்களேன்…

 

 

 

விரைவில் கதையோடு வருகிறேன்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top