யட்சன் 2

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 13 hours ago
Messages: 4
Thread starter  

அத்தியாயம்: 2

 

"பார்டன்.. என்ன சொன்ன?" என்று கூர் விழிகளுடன் கேட்டான் அவளை பார்த்து.

 

"இல்லை வாரத்துக்கு ரெண்டு நாளா தான் வீட்டுக்கு வீட்டு பக்கம் வரீங்க. வந்தாலும் மிட்நைட் வந்து இயர்லி மார்னிங் கிளம்பி போயிடுறிங்க. வீட்டுல பொண்டாட்டினு ஒருத்தி இருக்கான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதுவும் இளம் மனைவி. புதுசா கல்யாணம் பண்ணிட்டு வந்த மனைவி! கல்யாணம் பண்ணி வெறும் மூணு மாசம் தான் ஆகுது" என்றவளின் குரலில் இளம் மனைவிக்கான ஏக்கம் தாபம் அனைத்தும் வழிந்து ஓடியது.

 

பெருமூச்சை ஒன்று இழுத்து விட்டவன் "நம் கல்யாணத்தின் போதே உனக்கு தெரியும் எனக்கு பெரிய பிராஜெக்ட் ஒன்னு கிடைச்சிருக்குனு. அப்புறம் இப்ப வந்து கேட்டா எப்படி?" என்றவன் அவளை நெருங்கி "நீ போட்டிருக்கிறது எல்லாம் சாதாரண நகை கிடையாது தாத்ரி. எல்லாம் வேர்ல்ட் பெஸ்ட் டைமண்ட் ஜூவல்லர்ஸ்! இப்படியெல்லாம் போட்டுக்கணும்னா நான் இப்படி ஓடித்தான் ஆகணும்" என்றவன் அங்கு இருந்த ஃப்ரிட்ஜில் இருந்து பீர் ஒன்றை எடுத்தான்.

 

அதனை தொண்டையில் சரிக்க குளுமையோடு கூடிய மெல்லிய போதை அவனை மெல்ல ஆட்கொண்டது.

 

"எனக்கு என்னமோ நீங்க சொல்றது சரியா தோணல! வேற ஏதோ காரணம்னு நினைக்கிறேன்" என்றாள் கடுப்போடு.

 

அவனோ "வாட் டு யூ திங்க்?" என்றான் அசட்டையாக.

 

அவன் முகத்தை உற்று நோக்கிய தாத்ரி,  "ஐ திங்க்.. யு மைட் பீ அன் பிட் ஃபார் செக்ஸூவல் லைஃப்!"

 

சட்டென விழிகளில் ரத்த வரிகள் தோன்ற, "யூ பிட்ச்..." என்றபடி அவளை நெருங்கி விரல்களை விரித்து அவளது  குரல்வளையை அழுத்தியவாறு மறு கையால் அவளது மோவாயை உயர்த்தி இதழ்களை பிதுக்கி ஆத்திரமாக கவ்வினான்.

 

முரட்டுத்தனமாக இழுத்ததில் தாத்ரியின் இதழ்களில் கிழிசல் ஏற்பட, கடைவாயில் மெல்லிய ரத்தக்கசிவு.

 

ஆனாலும் கத்தவில்லை கதறவில்லை அவள். அசராமல் நின்று அவனது மூர்க்கத்துக்கு இதழ்களைக் கொடுத்தவாறு நின்றிருந்தாள். "வேணும்.. இன்னும் வேணும் உன் மூர்க்கம்! அதனோடு கூடிய கூடல்" என்று அவள் அவனை கண்களில் கிறக்கமாக பார்த்தாள்.

 

அவனோ அவளை பார்த்தவன் "ஏற்கனவே என் மூர்க்கத்தை பார்த்தவள் தானே நீ!" என்று அவளை நெருங்கியவன், அவளது குரல்வளையைப் பற்றியிருந்த கைகளை எடுத்து அவளது மெல்லிய  இரவு உடையை கிழித்தெறிந்தான்.

 

தன்னைத் 'தாம்பத்தியத்திற்கு தகுதியற்றவன்' 'குடும்ப நடத்த தகுதியற்றவன்'

என்றவளை ஆத்திரம் கொண்டு வேகமாக ஆண்டு விடும் நோக்கத்தில் அவளை படுக்கையில் தள்ளினான்.

 

கிழிந்த இரவு உடைக்குள் கயிறுகளால் மட்டுமே இணைக்கப்பட்டிருந்த உள்ளாடைகளோடு இருந்தாலும் அழகோவியமாக படுக்கையில் விழுந்தவளின் மேல் பாய்ந்து படரும் முன்

தனது டீசர்ட்டை தலை வழியாக கழட்டியவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க.. 

 

"இவள்.. இவள்… அவள் இல்லை! அந்த யட்சிணி இவள் இல்லை. அந்த மென்மை இல்லை! அந்த குழைவு இல்லை! அந்த சிணுங்கல் இல்லை! அந்த கொஞ்சல் இல்லை! மொத்தத்தில் இவள் என் யட்சிணி இல்லை.. இல்லை.. இல்லை!" என்று அவனுள் இருந்த யட்சன் அதிவேகமாக கத்திக் கூப்பாடு போட, எவ்வளவு வேகமாக அவள் மீது படர்ந்தானோ, அதே வேகத்தில் அவளில் இருந்து விலகினான்.

 

இதை கொஞ்சமும் தாத்திரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி அவன் விலகலாம் என்று சீற்றத்துடன் அவனைப் பார்த்தாள்.

 

அவனோ வழக்கம்போல "சாரி தாத்ரி… ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்ட்!" என்றபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

வழக்கமான அவனது வார்த்தைகள் தான். ஆனால் இம்முறை அவளை குத்தி கிழித்தது. இந்த மூன்று மாதமாக அவளும் எவ்வளவோ முயற்சி செய்கிறாள் தான் அவனை தன் விழி அசைவில் வீழ்த்தி தன் அழகில் கட்டி போட, ஆனாலும் அவனோ அவளை அணைப்பதோடு சரி.

 

அதற்கு மேல் ஒரு சிறு நிகழ்வு கூட நிகழாது. ஏன்… இன்றைக்கு கொடுத்த முத்தம் கூட அவளது வார்த்தைகளில் தூண்டப்பட்ட கோபத்தால் கொடுத்ததே ஒழிய..

 

கணவன் என்ற முறையில் காதலால் ஏன் காமத்தால் கூட அவன் கொடுக்கவில்லை. "இந்த ராவணன் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது? எப்படி அவனை வழித் கொண்டு வருவது?" என்று எண்ணியபடியே குரோதமாய் குளியல் அறையின்‌ மூடிய கதவினை முறைத்தவள், உடைகளை மாற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்து விட்டாள் தாத்ரி.

 

குளியலறைக்குள் வந்தவனோ ஷவரின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் மனதில் இருக்கும் அந்த வெம்மை யட்சிணி யட்சிணி என்று கூவிக்கொண்டே இருக்க.. இரவின் குளிர்ந்த நீராலும் அதனை தணிக்க முடியாமல், அவன் கட்டுமஸ்தான உடம்பில் கரைபுரண்டு ஓடியது தண்ணீர் வெந்நீராய்.

 

கை முஷ்டிகளை மடக்கி அந்த சுவற்றில் குத்தியவன் தன் ஆத்திரம் தணித்த பிறகு தான் நனைந்த உடையோடு வெளியே வந்தான்.

 

தாத்ரியை பார்க்க.. அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை பார்த்தவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது.

 

வழக்கமாக காதல் கொண்டு மணந்த பெண்களுக்கே உள்ள எதிர்பார்ப்பு அவளிடம் இருக்க.. ஆனால் இவனால் ஏமாற்றம் மட்டுமே அவளுக்கு தர முடிகிறது!

 

உடையை மாற்றியவன் அவள் அருகிலேயே படுத்துக் கொண்டான். இருவருக்கிடையே உடலில் மட்டுமல்ல உள்ளத்தாலும் நிறைய இடைவெளிகள்.

 

அதே நேரம்… "நோஓஓஓஓ…!" என்று அதிர்ந்து விழித்தவள் நடுங்கிய உடலோடு தன்னை ஆராய்ந்தாள். அவள் இன்னும் அவளின் அறையில் அவளின் வீட்டில் தான் உள்ளாள். ஆனாலும் பயம்.. பயம்.. பயம்…

 

அதற்குள் "சித்து.. சித்து என்னாச்சு?" என்று பதறியப்படி ஓடிவந்தார் அவரின் பெரியன்னை கலாவதி. 

 

"பெரியம்மா.. பெரியம்மா..‌ என்னை யாரோ ஒருத்தன் தூக்கிட்டு போக பார்த்தான்" என்று என்ன நடுக்கம் தீராமல் தன் அறையை சுற்றிப் பார்த்தபடி பேசினாள் சித்து என்று அழைக்கப்படும் சித்ரலேகா!

 

"தூக்கத்துல ஏதாவது கனவு கண்டு இருப்பே டா.. சாமி கும்பிட்டு தூங்கு சரியாயிடும்" என்று ஆதூரமாக அவளை அணைத்துக்கொள்ள..

 

" இல்ல பெரியம்மா உண்மை மாறியே இருந்துச்சு. அவன்.. அப்படியே.. என்னை.. தூக்கி ரெண்டு கைகளாலேயும்…" என்று அவள் அரற்றிக் கொண்டே இருந்தாள்.

 

"அதுக்கு தான் கண்ட திரில்லர் படத்தையும் நைட்ல உட்கார்ந்து பார்க்க கூடாதுனு சொல்றது! அதுல வந்த எவனாவது ஒரு ராட்சசன் உன்னை பார்த்து பிடிச்சு போய் தூக்கிட்டு போயிருப்பானா இருக்கும்" என்று அவர் சிரித்தார்.

 

"சிரிக்காதீங்க பெரியம்மா.. தூக்கிட்டு போனவனை பார்த்தா ராட்சசன் அரக்கன் மாதிரி எல்லாம் இல்ல.. ஆனா அவன் வேற மாதிரி.. நல்லா ஹைட்டா.. ஒயிட்டா…" என்று அவள் சொல்ல தடுமாற..

 

"அப்போ என்ன யட்சன் வந்து உன்னை தூக்கிட்டு போனானாமாம்" என்று அவர் சிரித்தார். அவளோ அந்த யட்சன் என்ற வார்த்தையை தனக்குள் முணுமுணுத்துக் கொண்

டாள்.

 

ஏனோ அந்த வார்த்தை அவளுக்குள் திகிலை மூட்டியது!

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top