யட்சன் 1

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 13 hours ago
Messages: 4
Thread starter  

அத்தியாயம்: 1

 

 

தன்னை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான் தேக்கு மர தேககாரன் அந்த இளவம்பஞ்சு தேகக்காரியிடம். 'அதீத காதல் உவகை கொண்ட காதலர்கள் போல இவர்கள்' என்று வான் நிலவும் இவர்களை பார்க்க நாணி மேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டது.

 

தனது மோகப் பசிக்கான முத்த  ஒத்திகையை அவளது இதழ்களில் காட்டிக் கொண்டிருந்தவனின் கண்களில் தான் அத்தனை தாபம்.

 

அவனின் காதல் கேளிக்கைகளில் உணர்ச்சி வசப்பட்டவள் காதல் மேவிட, சட்டென நிமிர்ந்து அவனின் இதழ்களை முற்றுகையிட்டாள் வன் காதலாக.. "யட்சிணி.." என்று முணுமுணுத்துக் கொண்டவன் வார்த்தைகள் எல்லாம் அவளது அதரங்களில் சென்று மறைந்தது.

 

உடம்பெல்லாம் மோகதத்தீயில் கொதித்தது அவ் ராவணனுக்கு!

தாபத்தில் ரத்தம் சூடேறி பரவி உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பு ஜிவுஜிவுத்தது அவளை ஆட்கொண்டிருந்தான். அப்படியே அவளை அள்ளித் தூக்கியவன் தன்னுள் பொதித்து அவளுடன் ஆலிங்கனம் செய்து கொண்டே காதல் யுத்தம் புரிந்தான் மெத்தையில்.

 

அவளின் இளம் தேகம் அவனின் இதழ்களின் தீண்டலிலும் விரல்களின் சீண்டலிலும் தரையிலிட்டப்பட்ட மீனை போல நெளிந்தாள்.. தவித்தாள்!

 

ஆனால் அவனை தடுக்கவில்லை. அவன் கை அவளின் அங்கங்களை உடையின் ஊடே உடையாய் போக.. அவளுள் மோகம் ஏறி தேகம் முறுக்கியது. அவனின் தொடுதலில் சுகத்தில் சொக்கியது அவளது கயல் கண்கள். 

 

அவன் உதடுகள் அவளின் காதோரம் முத்தமிட்டு கிசுகிசுத்தன.

 

"யட்சிணி.. இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தாய டி யட்சிணி!" என்றான். 

 

அவன் கை தாராளமாக  அவளின் தேகங்களில் விளையாடியது. அவள் தடுக்கவில்லை. நான் உனக்கே என்று அவனுக்கு ஒப்புக் கொடுத்தாள். அவன் கை மெல்ல மெல்ல முன்னேறியது. அவளின் இடையைத் தடவியது. பின் மெல்ல அவளின் ஆடையை களைய முனைந்தவன் தலையைணை உறையை கிழித்து எறிந்தான்.

 

அதன்பின் தான் உணர்ந்தான். இவ்வளவு நேரம் அவன் யட்சிணி யட்சிணி என்று உருகி குழைந்து கரைந்தது எல்லாம் தலைவியிடம் அல்ல தலையணையிடம் என…

 

"ச்சே.. இன்னைக்கு கனவு தானா?" என்று தானே தலையில் அடித்துக் கொண்டவன் அதன் பின்னே சுற்றம் உணர்ந்தான். அவனது அலுவலகத்தின் ஓய்வு அறையிலேயே தூங்கி விட்டதை உணர்ந்தவன் மெல்ல எழுந்து இரு கைகளையும் நீட்டி உடலை வளைத்து கழுத்தை நீவி நெட்டி முறித்து வெளியே பார்க்க இன்னும் காரிருள்தான். விடிய வில்லை!

 

'வீட்டுக்கு போகணுமா?' என்று ஒரு மனம் கேட்க.. 'போய்த்தான் ஆகணுமா?' என்று மறுமனமும் கேட்க 'போக வேண்டாம்!' என்று உறுதி எடுத்தவன் மீண்டும் படுக்கையில் மல்லாக்க படுத்தான். ஒரு முறைக்கு இருமுறை அவனது மனம் சொல்கிற பேச்சை மட்டுமே அவன் கேட்பான். அறிவு தொழில்துறையில் என்றால் வாழ்க்கையின் சில முடிவுகள் அவனது மனதிடம் மட்டுமே கேட்டு எடுப்பான்.

 

ஆனால் அது சரியா தவறா என்று அப்படி எடுத்த ஒரு முடிவை இன்னும் புரிந்து கொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

 

தூக்கம் கொஞ்சமும் அவனுக்கு கருணை காட்டாமல் எட்டியே நின்று சிரித்தது. "என்னடா இது?" என்று எழுந்தவன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு, "இப்படி இருப்பதற்கு சைட்டுக்கு போயாவது பார்க்கலாம்" என்று எழுந்து வேகமாக சட்டை மாட்டிக் கொண்டு வந்தவன் அவனது பிஏ ராஜீவுக்கு ஃபோன் போட்டான்.

 

"ராஜு சைட்ல இருக்கியா?" என்று தெலுங்கில் கேட்க "பாஸ்.. ஆமாம் பாஸ். தூங்கலையா நீங்க?" என்றான் அவனும்.

 

"இல்ல.. சைட்டுக்கு வரேன்!" என்றவனின் அதிகாரமான குரல் 'என்னிடம் கேள்வி கேட்காதே!' என்று உரைக்க அந்த பக்கம் அமைதியாகிவிட்டான் ராஜு.

 

உடனே தனது ஜீப்பில் ஏறியவன் தானே எடுத்துக் கொண்டு அந்த சைட்டை நோக்கி சென்றான். அவன் அலுவலகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்த கம்யூனிட்டி விலா போன்று 100 வீடுகளை கட்டிக் கொடுக்கும் ப்ராஜெக்ட் தான் இப்போது அவன் எடுத்து செய்து கொண்டிருப்பது.

 

அவன் விஷ்ராவணன் ரெட்டி! ஆந்திர பிரதேசம் அவனது கொட்டாரம் அது. 

 

ராவன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்றாலே ஆந்திர பிரதேசம் முழுதும் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே மிகப் பிரபலம். எந்த அளவுக்கு அவனுக்கு தொழிலில் நல்ல பெயரோ, அந்த அளவுக்கு அவன் மீது ஒரு பயமும் தொழில்துறையில் அவனிடம் உண்டு.

 

எந்த அளவுக்கு பயம்‌ என்றால்

இம்மாதிரி தொழிலதிபர்களிடமிருந்து தான் ரவுடிகள் அடியாட்கள் தங்களுக்கு தேவையான பணத்தை அவ்வப்போது வசூல் செய்து கொள்வார்கள். அரசியல்வாதிகளும் பண்ட் கட்சிக்கு நிதி என்று கறந்து கொள்வார்கள். ஆனால் ராவணனிடத்தில் எல்லாமே விதிவிலக்கு! தலைக்கீழ் தான்!

 

அவனுக்காக அவனிடத்தில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம்! அதுவும் அவன் கண் அசைவில் கட்டிக் கொண்டு வா என்றால் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்கள் தான் அதிகம்! அரசியல்வாதிகள் இவனிடம் பேசவே அஞ்சுவார்கள். இவன் அடிக்க நினைத்தால் பயங்கரமாக அடித்து விடுவான் அது பணத்தாலேயும் ஆட்களை வைத்து என்பதை அறிந்தவர்கள். அதனால் இவனிடம் அடக்கிய வாசிப்பார்கள்.

 

ராவணன் என்ற அவன் பெயரை உச்சரிக்கவே அத்தனை பயம் அங்குள்ளவர்களுக்கு. அண்ணையா என்று தான் அழைப்பார்கள்.  அதில் பாசமும் பயமும் சரி விகிதத்தில் கலந்து இருக்கும்.

 

அதன் பின் அவனுடைய ப்ராஜெக்ட் நடக்கும் இடத்திற்கு சென்றதும் அனைத்தும் மறந்து தொழில் மட்டுமே அவனுக்கு கண்களுக்கு தெரிய அதிலேயே ஆழ்ந்து போனான் விடியும் வரை. அவனின் முதல் மூச்சு முதல் காதல் எல்லாமே அவனது தொழில் தான். அத்தனை பிடித்ததோடு வெறியோடு ஒரு வேலையில் இறங்கி விட்டால்… சாதித்து விட்டு தான் வருவான். அதுதான் இன்றைய தொழில் துறையில் ராவணனின் ஆட்சிக்கு அடித்தளமிட்டது.

 

இரண்டு நாட்கள் வீட்டுக்கு கூட செல்லவில்லை அவன் வீட்டிலிருந்து அத்தனை முறை போன் கால் வந்தும் அனைத்தையும் தவிர்த்து விட்டு வேலை நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் ஏதோ மனம் வீட்டுக்கு செல்ல முரண்டு பிடிக்க வேலையில் தன்னை அமிழ்த்திக் கொண்டான்.

 

இரண்டாம் நாள் இரவு தான் வீட்டிற்கு வந்தான். 

 

"என்ன நாணா… எப்படி நீ உன்னையே வறுத்துகிட்டு வேலை செய்யணுமா? ரெண்டு நாளா வீட்டு பக்கம் வரவே இல்ல நீ! சரியா சாப்டியா இல்லையா?" என்று மகனின் முகத்தை பார்த்து வருத்தமாக புலம்பினார் வரலட்சுமி அவனது அன்னை.

 

"நம் வேலையை நாம் தான் பார்க்க வேண்டும் மா" என்று உரைத்தவன் விடுவிடுவென்று மாடிபடிகளில் ஏறி சென்று விட்டான்.

 

"இன்னைக்கும் வர மாட்டீங்கனு நினைச்சேன். பயந்திட்டீங்களோனு பார்த்தேன்" என்று எள்ளல் மிகுந்த குரல் அவனது காதை கிழிக்க..

 

இரவு உடைக்கு மாறிக் கொண்டிருந்தவன் திடுக்கென திரும்பிப் பார்த்தான். 

 

அங்கே இரவு உடையில் ஒயிலாக நின்று கொண்

டிருந்தாள் ஊர் நடுங்கும் இராவணனின் மனைவி தாத்ரிதேவி!

 

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top