24
தன் முன் இருந்த கண்ணாடியை தன் முஷ்டியை கொண்டு வேகமாக குத்தினான் ஜெர்ரி.
அவ்வளவு கோபம்..
அடக்கமுடியா வெறி..
அலர் அவள் மீது!!
அப்படியென்ன செய்து விட்டேன் நான்! என் அன்பை தெரிவிக்க.. என் காதலை அவளுக்கு புரிய வைக்க.. ஒரே ஒரு முத்தம்! இதில் என்ன தவறு நேர்ந்துவிட்டது என்று அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லிவிட்டுப் போகிறாள். என்னை பார்த்தால் காமப்பிசாசு போலவா இருக்கிறது?
அப்படி உன்னுடைய உடல் தான் தேவை என்றால் என்றோ எடுத்து விட்டு சென்று இருப்பேனடி சகியே!!
இப்படி உன் பின்னே அலைந்து உனக்காக இந்தியா வந்து என் காதலை ஏற்றுக் கொள்ளடி என்று அலைய வேண்டியதில்லையே!!
காதல் கொண்ட பெண் மீது காமம் கொள்வதில் என்ன தவறு?
நீ எனக்காவள் தானே!!
காதலை போல.. காமமும் உன் மேல் மட்டுமே.. உன்னால் மட்டுமே என்னுள் எழுகின்ற உணர்ச்சி!!
என் காமம் மட்டுமல்ல..
என் காதலும் நீதானடி சகியே!!
இப்படி அவளை நினைத்துக் கொண்டு இவன் கண்ணாடி முன் நின்று தனது கோபம்.. வேகம்.. தாபம்.. வருத்தம் என்று அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.
அவனது உணர்வுகள் வலிகள் உணர்ச்சிகள் அனைத்தையும் அவனது கண்கொண்டு பார்த்து இருந்தது தான் அவனது பிழை.. ஏனென்றால் பழக்கவழக்கங்கள் மட்டும் கிடையாது உணர்வுகளும் உணர்ச்சிகளும் கூட நமக்கும் அவளுக்கும் வித்தியாசப்படும் என்பதை மறந்து சராசரி காதலனாய் கோபப்பட்டான்.
சராசரியை கடந்து வந்தால் மட்டுமே இந்திய பெண்ணுடன் அதுவும் தாமரை போன்ற அழுத்தமான பெண்ணுடன் வாழ முடியும் என்பதை அவ்வப்போது அங்கு அவனுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தாலும், தற்போது அதை முற்றிலுமாக மறந்து உணர்ச்சி பிழம்பில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதும் இந்நேரம் தன் மகன் அழைத்து இருப்பானே இன்று ஏன் அழைக்கவில்லை என்று எண்ணிய அங்கு அவனை அழைத்தார்.
"என்ன சன்.. இன்னைக்கு ரொம்ப பிசியா?" என்று கேட்க..
முதலில் ஒன்றும் பேசாமல் இருந்தவன் பின்பு "ஒன்னும் இல்லப்பா!" என்றான். அதிலே ஓராயிரம் இருந்ததை புரிந்து கொண்டார் அங்கு.
"உன் குரலே சரியில்லையே? ஏதாவது பிரச்சனையா பா?" என்று அவர் ஆதங்கத்தோடு கேட்க..
"உங்க மருமகளை தவிர எனக்கு பிரச்சினை கொடுக்கிறவன் இந்த உலகத்துல யாருமே கிடையாது!" என்றான் வருத்தமான சிரிப்புடன்..
"ஹா.. ஹா.. ஹா.." என்று பெருங்குரலெடுத்து சிரித்தார் அங்கு.
"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?" என்று பற்களை கடித்துக் கொண்டே இவன் கோபத்தோடு கேட்டார்.
"குடும்பஸ்தன் ஆகுற தகுதி கொஞ்சம் கொஞ்சமா உனக்கு வந்துகிட்டே இருக்கு டா மகனே! அதை நினைச்சேன் உடனே எனக்கு சிரிப்பு வந்துட்டு. பொண்டாட்டியின் கோபத்தை சமாளிக்க முடிந்தவனால் உலகத்திலுள்ள எந்த பிரச்சினையும் ஈசியாக சமாளித்துவிட முடியும்!" என்று தன் அனுபவத்தை மகனுக்கு கூற..
"ப்பாஆஆஆஆ… போதும்! போதும்!! உங்க வாழ்வியல் தத்துவங்களும் உங்க அனுபவங்களும்! எனக்கு இப்பவே கண்ண கட்டுது" என்றான் இவன் மேற்கத்திய ஆண்மகனாய்..
"இதுக்கே சலிச்சு கிட்டா எப்படி? கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் நிறைய பார்க்க வேண்டியது இருக்கே மகனே!" என்றார் இந்திய சராசரி கணவனாய்..
"போங்கப்பா!!" என்று இவன் சலித்துக்கொள்ள..
அதுவரை இலகுவாக இருந்த அங்குவின் குரல் இப்பொழுது சற்றே மாறி "ஜெர்ரி!!!" என்று அழுத்தமாக அழைத்தது.
தந்தையின் இந்த குரல் மாறுதலை அவனுக்கு ஏதோ உணர்த்த அமைதியாகவே இருந்தான். அவனின் அமைதியை அவர் சாதகமாய் எடுத்துக் கொண்டு "இங்க பாரு ஜெர்ரி!! ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் அவ ஒரு இந்திய பெண்! அதுவும் அவ மனசுல பல ரணங்கள் மறைந்திருக்கு. அதை எல்லாம் தகர்த்து தான் நீ உள்ளே போகணும். இப்படி ஒவ்வொன்றுக்கும் நீ சுணங்கி கொண்டு இருந்தால் சரிவராது! புரியுதா?" என்று கேட்க..
"ம்ம்ம்!!" என்றான்.
"இந்த ம்ம்ம் எனக்கு பத்தாது ஜெர்ரி.. நீ இங்க இருந்து இந்தியா போகும்போது உன் கிட்ட சொல்லி தான் அனுப்பினேன். நீ பார்த்து வளர்ந்த கலாச்சாரங்கள் வேற.. அங்கு நீ பாக்க போற கலாச்சாரம் வேறனு.. எப்பவும் உன் நிலையிலிருந்து யோசிக்காதே!! கொஞ்சம் இறங்கி தாமரையின் நிலையிலிருந்து யோசி! அப்போதுதான் அவளை உன்னால் புரிந்துகொள்ள முடியும்" என்றவர், "ஆல் த பெஸ்ட்!! நாளைக்கு உன் முகத்தில் சிரிப்பை தான் பார்க்கணும். அதனால இன்னிக்கு வீடியோ கால் வேண்டாம்" என்று வைத்துவிட்டார்.
மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் குளிக்கச் சென்று விட்டான்.
நல்லவேளை இந்த சென்னைக்கு கொஞ்சம் குளிர்க்காலத்தில் வந்தோம். நாம் வெயில்காலத்தில் வந்திருந்தால் நம்மால் தாங்கவே முடியாது போலவே!! என்று கூறிக்கொண்டே உடையை மாற்றிக் கொண்டிருந்தான் அவன்.
இதற்கும் அவன் ஆபீசிலும் வீட்டிலேயும் முழுக்கமுழுக்க சென்ட்ரலைஸ்டு ஏசிதான். அதற்குமே அவனுக்கு அவ்வப்போது காந்தி எடுத்தது. அதிலும் அவன் புல் சூட்டில் இருந்தால் இன்னும் கஷ்டம் அவனுக்கு இந்த சென்னை டிராபிக்கில் நீந்தி செல்வதற்கு.. முதல் ஒரு வாரம் மட்டும்தான், அதற்குப்பின் கம்பெனிக்கு காரை தவிர்த்துவிட்டு அவனது ஏசி காரை வரவழைத்து அதில் தான் இப்பொழுது அவனது சென்னை ஊர்வலம்!!
இரவு தூக்கம் வரவில்லை அவனுக்கு! இதோ மொட்டை மாடி தஞ்சம்!! நள்ளிரவு என்பதால் மிகவும் அமைதியாக இருந்தது அந்த அப்பார்ட்மெண்டே!! ஆனாலும் ஓரிரு வாகனங்கள் அங்கே இங்கே வந்து போய்க் கொண்டிருந்த சத்தம் கேட்டது.
வானத்தில் வளர் பிறை நிலா. மேகங்களுக்குள் ஒளிந்து விளையாடியபடி மெல்லிய ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த வளர் பிறை நிலவு போல இவன் காதல் வளருமா இல்லை தேய்ந்து காணாமல் போகுமா என்று பெரும் கவலை அவனுள்!!
அந்த மெல்லிய நிலாவினில் அவனின் நிலாவினியின் முகம் தான் தெரிந்தது!
தாமரையின் அழகிய முகமும்!!
கோபத்தோடு!!
வருத்தத்தோடு!!
அழுத்தத்தோடு!!
முறைப்போடு!!
கேள்வியோடு!!
இப்படி பல.. காதலாக பார்த்தியிருக்கிறதா? என்று பெரும் கேள்வி அவனுள். ஏன் இல்லை அன்றைய இரவில் அவள் முகத்தில்.. கண்களில் தெரிந்த வழிந்த காதல்.. உயிருள்ளவரை மறக்காது ஜெர்ரிக்கு! அது தான் இவ்வளவு தூரம் அவனை துரித்தி வர செய்தது!
அவனுள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது!!
அதுதான் அவளது உண்மையான முகம். இப்பொழுது போட்டுக் கொண்டிருப்பது முகமூடியே.. என்று சட்டென அவனது ஞாபகத்தில் வந்து போக, இது வரை இருந்த குழப்பம் வருத்தம் அனைத்தும் நிலவை மறைத்த முகிலென அனைத்தும் விலகிப் போக, பௌர்ணமி நிலவென அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்!!
"வரேன் டி டாம்!! மை ஹனி!! என்கிட்டேயே உன் ஆட்டத்தை காட்டுறியா?.. ச்சே.. என்னை இப்படி குழப்பி விட்டு ஓடி போவதே இவளோட வேலையா போச்சு. அப்படி எல்லாம் இனிமேல் உன்னை விட முடியாத டி" என்று மனதுக்குள் அவளை கொஞ்சம் கோபமாகவே கொஞ்சி கொண்டான்.
அடுத்து சரசரவென்று மாடி இறங்கி தன் அறைக்குச் சென்றவன், அறையிலேயே விட்டு வந்திருந்த மொபைலை எடுத்து இரவென்றும் பாராமல் யாருக்கோ போன் செய்து முடித்தவனின் கண்களில் அப்படி ஒரு மின்னல்!!
தாமரை அவனை வலிக்க வலிக்க திட்டும் போதெல்லாம் அவனுக்கு வலிக்கிறதோ இல்லையோ உள்ளுக்குள் அவளுக்கு தான் வலித்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வழக்கமான இறுக்கமான முகமூடியை முகத்தில் அணிந்துக் கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
வித்யா வழக்கம் போல அன்று நைட் டூட்டி என்பதால் அவள் உள்ளே நுழைந்ததை பார்த்தவுடன் அவள் முகத்தை கூட சரியாக கவனிக்காமல் "தாமரை நான் எனக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும். கேப் வந்துடுச்சு! ஓகே நான் வரேன்! நைட் உனக்கு மட்டும் தான் சாப்பாடு! ஓகேவா? மார்னிங் அஸ்யூஸ்வல் வந்துடுவேன்" என்றவள் இவளின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
தளர்ந்த நடை வெறித்த பார்வையோடு தன் அறைக்குள் நுழைந்தவள் கையில் இருந்த பேக்கை தூரப் போட்டு தொப்பென்று மெத்தையில் அமர்ந்தவளுக்கு அப்படி ஒரு வலி. தெரிந்தே தான் அந்த வார்த்தையை சொன்னாள் அவள்! அப்படி சொன்னால் ரோஷம் கொண்ட அவனது காதல் உள்ளம் அவளிடம் கோபம் கொண்டு போய் விடும் என்று எண்ணி!!
அவள் எங்கே அறிந்தால் உண்மை காதலின் வலிமையை!!
அந்த உண்மை காதல் எவ்வளவு வலிக்க வலிக்க திட்டினாலும்.. விரட்டி விரட்டி அடித்தாலும் மானம் ரோஷம் எதுவுமின்றி தன் இதயத்திற்கு நெருக்கமானவரை சுத்தி சுத்தி வரும் என்று!!
பத்தாதற்கு அப்போது மகேஷ் வேறு அவளை அழைத்து இருந்தான். அடித்துக் கொண்டிருந்த போனையே முகத்தை மட்டும் திருப்பி இருந்த இடத்தை விட்டு நகராமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் தாமரை. இப்போது அவனிடம் பேசவே அவளுக்கு பிடிக்கவில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே!! ஆனால் அவளுக்கான முடிவுகளை அவளால் எடுக்க முடிவதில்லையே!!
இரண்டு மூன்று முறை அடித்து விட்டு போன் மீண்டும் உறங்க சென்றுவிட.. இவளோ உறக்கமின்றி ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்த்த அந்த சின்ன பிறை நிலவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏனோ அந்த இளம் பிறை நிலா அவளின் இளமை பருவத்தை ஞாபகம் படுத்துவது போல இருந்தது. ஆனால் அதில் உள்ளது எல்லாம் இன்பம் அல்லவே! அனைத்தும் துன்பமே அல்லவா?
எப்பொழுதும் இம்மாதிரியான ஞாபகம் வந்தால் அனைத்தையும் கண்களைமூடி ஒன்று முதல் பத்து வரை எண்ணி விட்டு கடந்து போக முடிந்தவளால், இன்று ஏனோ வலி நிறைந்த அவனது கண்களும்.. ஆக்ரோஷமான அவனது முகமும்.. கையை ஓங்கிய அவனது கோபத்தையும்.. கடந்துவிட முடியவில்லை பெண் அவளால்!!
"என்னோடு வாழ்வதை விட இந்த வலி, உங்களுக்கு கம்மிதான் ஜோன்.. ஒதுங்கி போய்விடுங்க ஜோன். என்கிட்ட வராதீங்க!! அதுதான் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. சந்தோசத்தோடு சுற்றித்திரியும் நீங்களும் வலிகளோடு வாழும் நானும் என்றும் இணைந்து நல்ல ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது!! அப்படியே கல்யாணம் செய்தாலும் அதை நான் உங்களுக்கு வலியை மட்டுமே தருவேன். வேண்டாம்!! வேண்டாம்!! எந்த ஜென்மத்தில் யாருக்கு என்ன பாவம் செய்தனோ.. இந்த ஜென்மத்தில் இதையெல்லாம் அனுபவிக்கிறேன்! மீண்டும் உங்களுக்கு நான் அநீதியை இழக்க விரும்பவில்லை.. இப்படியே கோபத்தோடு நீங்களும்.. கடுஞ்சொற்கள் பேசும் ராட்சசியாய் நானும்.. பிரிந்து இருந்து விடுவோம்" என்று மனதுக்குள் ஆயிரம் சங்கல்பங்கள் எடுத்துக்கொண்டு அமைதியாக தூங்க முற்பட்டாள் உணவினை தவிர்த்து விட்டு தாமரைச்செல்வி!!
அவளது ஆயிரம் சங்கல்பங்கள் அரை நொடியில் தகர்த்துவிட்டு அவள் அறையின் உள்ளே நுழைந்து இருந்தான் இந்த காதல் கேடி ஜெர்ரிக் ஜோன்ஸ்!!
ஆமாம் இவளிடம் கேடியாக இருந்தால் மட்டுமே வேலைக்கு ஆகும் என்பதை நன்றாக புரிந்துகொண்டான் இந்நாளில்!!
அவன் போன் செய்து அவனுக்கு நம்பிக்கைக்கு உகந்த ஒரு ஆள் மூலமாக வித்யாவிடம் பேச வைத்து அவளிடம் உள்ள சாவியை அவள் அறியாமலேயே எடுத்து வர செய்தான். அவ்வாறு அந்த ஆளும் எடுத்து வந்து கொடுக்க, இதோ மாயக்கண்ணனாய் நுழைந்து இருந்தான் அவளது அறையினில்! எல்லாம் இந்த ராட்சசியின் மனதில் நுழைவதற்காக தான் என்று சலிப்பான கொஞ்சலோடு!!
அவளோ அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
"என்னை தூங்க முடியாமல் செய்திட்டு, இவ மட்டும் நல்லா தூங்குறா! போன ஜென்மத்தில் ஸ்லீபிங் பிரின்சஸா பிறந்து இருப்பாளோ?" என்று அதிமுக்கிய சந்தேகம் இப்போது அவனுக்கு!!
சிறு குழந்தையின் முகத்தைப் போல அவ்வளவு அழகாக இருந்தது அவனது ராட்சசியின் முகம்!!
முதுகில் புரளும் கற்றை முடிகளிலிருந்து பிரிந்த சில ஒற்றை முடிகள் லேசான காற்றில் ஆடிய படி அவள் முகத்தில் புரண்டு கொண்டிருந்து. பாதி முகத்தை அவளது கலைந்த முடிகளை மறைக்க.. மெதுவாக அவற்றை காதின் ஓரம் ஒதுக்கி விட கைகள் பரபரத்தது.
அவளின் அழகிய கன்னங்களுக்கு கீழே கைகள் இரண்டையும் இணைத்துக் கட்டிக் கொண்டிருக்க..
அவளது நீளக் கண்கள் இமை எனும் சிறகுக்களுக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க..
அவளின் கூரான மூக்கு அவள் சுவாசத்தில் விடைத்தும் சுருங்கியும் கொண்டிருக்க..
அதற்கு கீழே அனிச்சையாக அவன் பார்வை செல்ல.. அவைகளின் அபிரிமிதமான செழுமை அவன் கண்களை மட்டுமல்ல வாயையும் விரிய செய்தது!
அன்றைய நாள் நினைவு தறிகெட்டு ஓட.. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
மெல்ல அவளது இல்லா இடையில் தன் முரட்டு கையைப் போட்டு தன் விரிந்த மார்பில் அவளை ஒட்டி அணைத்துப் படுத்தான்.
அந்த நிமிடம் அவ்வளவு நிறைவாக இருந்தது அவனது மனதிற்கு.
எந்நாள் வருமோ இப்படி ஒரு பொன்னாள்? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவளது கன்னங்களை ஒற்றை விரல் கொண்டு வருடினான். மெல்ல மெல்ல அவளது முகத்தில் வலம்வந்த அவனது ஒற்றை விரல் கடைசியாக அவளது இதழ்களில் வந்து தஞ்சம் கொண்டது.
அந்தச் செர்ரி இதழ்களை மெல்ல வருடினான் ஜெர்ரி.
அவன் இன்னும் முற்றும் துறந்த முனிவனா? முற்றும் திறக்க நினைக்கும் மன்மதன் அன்றோ!!
அவள் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தி அழுத்தமாய் முத்தமிட்டான். தன் பற்களால் அவளது கீழுதடைக் கவ்வினான் புலி எப்படி தன் குட்டிகளை வலிக்காமல் கவ்வி பிடித்து தூக்குமோ.. அதே போல மெதுவாக இழுத்து சுவைத்தான்.
இவ்வளவும் அவன் நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்க அவளோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
"நான் வேண்டாம் ஜோன் உனக்கு!! போய்டு டா! என்னோடு உனக்கு சுகங்கள் கிடைக்காது சுமைகளும் வேதனைகள் மட்டுமே மிஞ்சும்!
அதிலும் என்னை எல்லாம் உன்னால் சமாளிக்கவே முடியாது நான் பஜாரி காட்டேரி ராட்சசி! உன் அழகுக்கும் திறமைக்கும் அழகான தேவதை போல பெண்கள் கிடைப்பாங்க! நீ இந்த ஊரை விட்டுப் போ.. என்னை விட்டுப் போ.." என்று தூக்கத்திலேயே பிதற்றி அவனை தள்ளிவிட்டாள்.
"எனக்கு இந்த அழகு ராட்சசி போதும்!! வேற யாரும் வேண்டாம்!!" என்றவன் அவளை இழுத்து அணைத்து குனிந்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தவன், பின் அவளது முகமெங்கும் முத்தங்களை வாரி இறைத்தான்.
"வேணாம்!! வேணாம்!!" என்று பிதற்றிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் அவனது முத்தத்திற்கா அல்லது இறுகிய அணைப்பிற்கா ஏதோ ஒன்றுக்கு கட்டப்பட்டு அமைதியாக உறங்கினாள்.
ஆனாலும் அங்குமிங்கும் இமைகளுக்குள் உருண்டு ஓடிக்கொண்டிருந்த அவளது விழிகளை பார்த்த ஜெர்ரிக் மெல்லிய இமைகளின் மேல் உதடுகளைப் பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
நானிருக்கேன் தான் டி!
என் காதல் நீ தான டி!
ராட்சசி நீயே போதுமடி!
இந்த காதல் அரக்கனுக்கு!!
என்று அவள் காதில் முணுமுணுக்க.. அவளோ ஆழ்ந்த நித்திரை கொண்டாள். அவனை இறுக்கி அணைத்தப்படி!!
மறுநாள் காலை அவளுக்கு முன்னமே முழித்தவன், தன்னை இரவு முழுதும் விடாது இறுக்கி அணைத்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்த அழகியை கண்களால் நிரப்பிக் கொண்டு நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
தன் நாக்கை நீட்டி நுனி நாக்கால் அவளது மூக்கு நுனியை வருடினான். அதன் குளர்ச்சியில் அவள் சிணுங்கி அவனது மார்பில் முகத்தை புதைத்து புரட்டிக் கொள்ள..
அவன் தந்தை சொன்ன அந்த தாம்பத்தியத்தின் இனிமையும் அழகியலும் அவனுக்கு புரிந்தது!!
என் பக்கத்தில் அவள் முகம்..
என் தோளில் அவள் நெஞ்சம்..
என் இடுப்பில் அவள் கைகள்.. பெண் நிஜமாகவே அவனை அந்த நிமிடம் உசுப்பினாள் தான்!!
அவனின் ஆண்மை விழித்துக் கொண்டு அவளை ஆட் கொள்ள பேயாட்டம் போட்டது!!
அவளின் வாசம் அவனின் சுவாசத்தில் கலந்து நாசிக்குள் இனிய மணத்தை உணர செய்தது. காற்றிலாடும் அவளது கூந்தலை போல அவனின் மனதும் மோகத்துக்கும் நிதர்சனத்துக்கும் இடையே அல்லாடியது.
இதற்கு மேல் இங்கே இருந்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்தவன் வேகமாக எழுந்து அறை கதவை திறந்துகொண்டு வெளியே வர..
தன் சாவி தொலைந்தால் எப்போதும் ஸ்பேர் ஒன்று கீழே அபார்ட்மென்ட் செகரெட்டரியிடம் இருக்கும். அதை வாங்கிக் கொண்டு கதவை திறந்து வந்த வித்யா அறையை மூடி விட்டு வந்த ஜெர்ரியை பார்த்ததும் அப்படி ஒரு திகைப்பு!!
அவனோ அவளை பார்த்து ஒற்றைக் கண்ணடித்துவிட்டு சென்றுவிட்டான் தனது வீட்டை நோக்கி..
இவன் வந்ததும் தெரியாமல்.. சென்றதும் தெரியாமல்.. ஆழ்ந்த உறக்கத்தில் டாம்!!
இனி என்ன…
