18
சனிக்கிழமை மாலை..
எப்பொழுதும் பார்ட்டிக்கு என்று அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் அதே கடற்கரையோர ரிசார்ட்டில் தான் இன்றும் இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒவ்வொருத்தர் முகத்திலும் கடந்த ஒரு மாதமாக புதிதாக கிடைத்த நட்புகளை பிரிந்து அவர்தம் சொந்த அல்லது ஏற்கனவே வேலை பார்த்த அலுவலகத்திற்கு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று லேசான வருத்தம் முகத்தில் இழையோடினாலும் அதைத்தாண்டி இந்த ஒருமாத கால புது அனுபவம் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியாக தெரிந்தது.
விழாவுக்கு என்று அனைவரும் தங்களை பிரத்தியேகமாக அலங்காரம் செய்து வந்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள் எல்லாம் புல் சூட்டில் உலா வந்து கொண்டிருக்க.. பெண்கள் பார்ட்டி கவுனில் விதவிதமாக ஜொலித்தனர்.
வழக்கம்போல மைக்கை கைப்பற்றிய பீட்டர்.. மேனேஜ்மெண்ட்டின் புகழை ஒரு பக்கத்துக்கு பாடிவிட்டு தான் பேசவே ஆரம்பித்தான்.
"இந்த ஒருமாத ட்ரெயினிங் உங்களுக்கெல்லாம் மன ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இதன் படி இனிவரும் காலங்களிலும் இந்த மாதிரி ரெக்ரேஷன் ப்ரோக்ராம் அடிக்கடி நடத்த வேண்டும் என மேனேஜ்மென்ட் இடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றவன் அடுத்து அவர்களது சிஇவோவை அழைத்தான். அவர் கூடவே இவர்கள் டைரக்டர் செபாஸ்டியன் மற்றும் தாமரையின் மேனேஜர் ஜேம்ஸூம் இருந்தனர்.
ஜேம்ஸூக்கோ மட்டில்லா மகிழ்ச்சி!! கிட்டத்தட்ட அவர்கள் கம்பெனியின் மொத்த கிளையிலும் உள்ள அத்துணை திறமைசாலிகளும் இங்கே அழைத்து பிராஜெக்ட் கொடுத்து இருக்க.. அதில் தனது டீமை சேர்ந்த தாமரை முதலில் வந்திருப்பது அப்படி ஒரு பெருமையை கொடுத்தது அவருக்கு. இதை சொல்லிக் கொண்டு இன்னும் ஒரு ஆறுமாதத்தை ஓட்டலாம் அல்லவா?
அதன்படி ஜெர்ரி மற்றும் தாமரையை அழைத்து அவர்கள் சொன்ன சர்ப்ரைஸை கொடுத்தனர். அதாவது இப்போ அவர்கள் வேலை பார்க்கும் சம்பளத்தில் உயர்வு கொடுத்து உலகத்திலுள்ள எந்த கிளைக்கும் அவர்கள் மாற்றல் வாங்கிக் கொள்ளலாம் என்பதே அது!!
அடுத்தவாரம் முதல் நீ யாரோ நான் யாரோ என்று பார்க்கும் ஒவ்வொரு கணத்திலும் கண்களால் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள் தாமரை. இப்போது வானத்தை வசப்படுத்திய உணர்வு ஜெர்ரிக்கு!!
இனி அவனது விருப்பம் போல் சான்பிரான்சிஸ்கோவில் வேலையைத் தொடர முடியும். அதுவும் தாமரையின் அருகிலிருந்தே.. சொல்லவும் வேண்டுமா ஜெர்ரியின் சந்தோஷ அளவை??
மிதப்பான பார்வை ஒன்றை தாமரையை நோக்கி இவன் கொடுக்க.. ஆனால் அவள் முகத்தில்.. அந்த கண்களில் என்ன இருந்தது? எவ்வளவு யோசித்தும் அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருவரும் தங்களுக்கான ஆர்டர் வாங்கிக்கொண்டு மற்றவர்களோடு அமர்ந்தனர். அதன் பின் களை கட்டியது பார்ட்டி!!
சர்வ சாதாரணமாக பலத்தரப்பட்ட மது வகைகள் பரிமாறப்பட வயது வித்தியாசம் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் கைகளில் கோப்பைகளோடு உலா வந்தனர்.
ரெக்ஸியும் வில்லியம் இந்த ஒருவாரத்தில் அப்படி ஒரு இணக்கம். கூடவே பார்ட்டி ஆரம்பித்ததிலிருந்து இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் அன்றில் பறவைகளாகவே சுற்றி வந்தனர் அந்த இடத்தில். காதலி கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் காதலியைப் பிரிந்து செல்லும் ஏக்கம் ஒரு பக்கம் என வில்லியம் தவித்துக் கொண்டிருந்தான். ரெக்ஸியோ அவன் நிலை அறிந்து, விடாமல் கையோடு கை இணைத்துக் கொண்டாள்.
அவ்வப்போது தன் கையோடு பிணைந்திருந்த ரெக்ஸியின் புறங்கையில் முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான் வில்லியம், சுற்றி உள்ளவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல்..
ஜெர்ரியும் அவனை கலாய்க்காமல் அமைதியாக தன் முன் இருந்த அந்த தேன் நிற திரவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். தாமரை எங்கே என்று பார்த்தவனின் கண்களில் தனியாக அமர்ந்திருந்து கடற்கரையை வெறித்து பார்த்தவள் பட, சற்றும் யோசிக்காமல் அவளை நோக்கி நடந்தான்.
என்ன பேச? என்று அமைதி காத்தவன், தன் கையில் இருந்த மதுவை நீட்டி.. "ஷல் யூ?" என்று கேட்டான் அவள் குடிக்க மாட்டாள் என்று தெரிந்தே..
அவனை ஒரு முறை கண்களால் எரித்தவளை, "சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்கலாம் தானே!!" என்று கேட்க.. அதுக்கும் பதிலில்லை அவளிடம்.
இதற்குமேல் அவளிடம் சொல்லி என்ன புரிய வைக்க என்று தெரியாமல் அதே சமயம் அவளை விட்டு நீங்காமல் மதுவை மெல்லமெல்ல குடித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் இவர்களை கடந்து சென்ற ரெக்ஸியும் வில்லியமும் அவர்கள் பார்வை படும் தூரத்தில் நின்று தங்கள் காதல் உலகத்தில் நுழைந்திருந்தனர்.. இதழணைப்பு மூலம்.
மிக நீண்ட நெடிய இதழணைப்பில் காதல் கிளிகள் சஞ்சரிக்க.. ஜெர்ரியோ அவர்களை பார்த்தவன், ஒரு தலை அசைப்போடு திரும்பி விட, தாமைரைக்கு தான் மனதில் இனம் புரியா உணர்வு. அவர்கள் முத்தமிடுவதை பார்க்கையில் ஜெர்ரி அன்று மப்பில் கொடுத்த முத்தம் அவளையும் அறியாமல் ஞாபகம் வர, தன்னை அறியாமல் உதட்டை விரல் கொண்டு நீவி கொண்டாள்.
உடலெல்லாம் அதன் தகிப்பு பரவ.. சிலிர்த்து எழுந்தாள் பெண். அதன் பிறகு ஜெர்ரியை பார்க்க என்ன.. அவன் இருக்கும் இடத்தில் கூட இருக்க முடியாமல் தவித்தாள்.
எங்கே சென்றாள் என்று இவன் தேட அவளோ சற்று அருகில் பீட்டரோடு பேசிக் கொண்டிருந்தாள். ஜெர்ரியும் எழுந்து அவள் அருகில் சென்றான். ஏனென்றால் ஏனோ அன்று அவளை பிரிய மனம் அவனுக்கு வரவில்லை. அவளின் அருகாமையை வெகுவாக தேடியது அவனின் காதல் மனம். அவளோ அங்கிருந்து நழுவ..
இப்படியாக இருவரும் ஒரு கண்ணாமூச்சி ஆட.. கடைசியாக ஜேம்ஸ் செபாஸ்டியன் இருவரும் நின்ற இடத்துக்கு இவள் செல்ல.. அவர்களோ சோசியல் டிரின்க் என்ற பெயரில் அவள் கையிலும் ஒரு மது கோப்பையை திணித்தனர்.
"டுடே யுவர் டே.. ஹவிட்!!" என்று வற்புறுத்தி செபாஸ்டின் கொடுக்க, கையில் வாங்கியவள் பேருக்காக ஒரு சிப் வாயில் வைக்க அதுவோ கசந்து வழிந்தது. ஆனால் புதிதாக உணர்ந்த அந்த போதை அவள் மனதிற்கு இதம் தர.. கையில் வைத்திருந்த கோப்பையை காலி செய்தாள்.
வழக்கமற்ற மது உள்ளே நுழைய..
சற்றே போதையில் அவள் தள்ளாட..
பின்னோடு வந்தவன், அவளை தாங்கிப் பிடித்தான்.
"ஹே.. டாம்.. பார்த்து. உனக்கு தான் பழக்கம் இல்லை இல்லை. பின்ன ஏன் குடித்த?" என்று அவளை கடிந்தப்படி கைத்தாங்கலாக அவளை அழைத்துச் சென்றான்.
கடற்கரை ஓரமாக அவர்கள் செல்ல குளிர்ந்த காற்றில் அவளது முந்தானை பறக்க.. அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் முழித்தான் இந்த வெளிநாட்டு காதலன். அவளோ போதையின் உச்சத்தில்..
"ஒரு கிளாசுக்கு இப்படி கவுந்துட்டாளே!!" என்று சிரித்துக்கொண்டே அவள் முந்தானையை எங்கே சொருகுவது என்று தெரியாமல் சுருட்டி கையோடு பிடித்துக்கொண்டான்.
சட்டென்று நின்றவள் "ஜெர்ரிரிரி..." என்று நா குழற அழைத்தாள்.
"என்ன டாம்?"
"என்னை மிஸ் பண்ணுவியா?"
"இல்லை! பண்ண மாட்டேன்" என்றான் அவளை காதலாக பார்த்துக் கொண்டு. அவன் தான் இவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கே வருவது என்று முடிவெடுத்து விட்டானே.. பின்னே எங்கே இருந்து மிஸ் பண்ணுவான்??
"அப்போ என் மேல லவ்வுன்னு சொன்னதெல்லாம் பொய்!! நீ சரியான லையர்!! ச்சீட்டர்!!" என்று இரு கைகளாலும் அவனது பரந்த மார்பில் அவள் குத்த..
அவனும் வாகாக காட்டிக்கொண்டு நின்றானே ஒழிய எதிர்க்கவில்லை தடுக்கவில்லை. ஏனென்றால் முதல் முறையாக அவளாக அவனை தொடுகிறாள்.. உரிமையாக அடிக்கிறாள். அதைவிட தன் மனதில் உள்ளதை எல்லாம் பேசத் துவங்கி இருக்கிறாள். பேசட்டும் என்று அமைதி காத்தான்.
"யூ லையர்!! ச்சீட்டர்!!" என்று அடித்து அடித்து ஓய்ந்தவள் அவன் மேலேயே சாய்ந்தாள்.
அவன் நெஞ்சில் பஞ்சு ஒத்தடம் கொடுப்பது போல மெத்தென இருந்தது அவளது மென்மைகள். அவளோ, அவன் எதர்பாராத நேரம் கையை தூக்கி அவன் முகம் வளைத்து பிடித்து 'பச்சக்!' என அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவனோ அதிர்ந்து அவளை பார்த்தான்.
ரைட்டு!! ஆல்கஹால் வேலைய காட்டுது!!
அவளது நெருக்கமும்.. உதட்டு முத்தமும்.. அவன் உடம்பில் உஷ்ணத்தைக் கிளப்பி கிறக்கியது. அவன் மண்டைக்குள் சுறுசுறுவென ஒரு குடைச்சல் உருவாக..
அதே நேரம் இந்த தனிமை அவர்களுக்கு கொடுமை என்று எண்ணியவன், அதன் பின் அவளை கையோடு அழைத்து சென்றால் அவளது வீட்டுக்கு. அது தான் இன்னும் பெரிய கொடுமை என்பதை அறியாமல்!!
ஆனால் அவள் வீட்டின் சாவியை காணவில்லை. அதனால் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். ஒருவழியாக அவளை அழைத்துக்கொண்டு.. கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் தான் "ஸ்ஸஸப்பபா!!" என்று பெருமூச்சு விட்டான் இவன்!!
பின்னே வழி முழுக்க அவள் செய்த அலப்பறைகள் அப்படி!!
