17
மாலை வேலை விட்டு அனைவரும் செல்லும் பொழுது எப்பொழுதும் தாமரையுடன் செல்பவள் அன்று வில்லியம் உடன் இணைந்து கொண்டாள். ஏன் என்று புருவம் உயர்த்திய தாமரைக்கு வெட்கத்தை பதிலாக தந்தாள் ரெக்ஸி.
"யூ ப்ளஷிங் ரெக்ஸி!!" என்று சிரிப்போடு அவளை அணைத்து விடுவித்த தாமரை "பெஸ்ட் ஆஃப் லக்" என்று அவர்கள் முதல் டேட்டிங்கு வாழ்த்தி தெரிவித்து தன் வழி செல்ல, பின்னோடு வந்த ஜெர்ரி அவள் அருகே வந்ததும் ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
திரும்பிப் பார்த்தவளிடம் "எனக்குப் பின்னர் ப்ரொபோஸ் பண்ணவனுக்கு எல்லாம் செட் ஆகி டேட்டிங் எல்லாம் போறான். நான் பாரு இன்னும் சிங்கள உன் பின்னாடியே மிங்கிளாக சுத்திகிட்டு இருக்கேன்" என்க, "இன்னும் என்ன சொல்லி தான் உனக்கு புரிய வைக்க ஜெர்ரி!! என் நிலைமை உன் கிட்ட சொல்லிட்டேன். உன் காதலுக்கான எதிர்வினை என்னிடம் இருக்காது. என் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா உன் பிரென்ட் மாதிரி உனக்கு ஏத்த பொண்ணா ப்ரோபோஸ் பண்ணி இருந்தா, இந்நேரம் டேட்டிங் சேட்டிங்னு நீயும் சந்தோஷமாய் இருந்திருக்கலாம்" என்று கூறியவள் ட்ரெயின் வர அதில் ஏறி அமர்ந்தாள். அவனும் அவளருகே அமரவும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.
"ஓகே டாம்.. ஐ அக்செப்ட்டட் வாட் யூ சே.. எனக்கும் பீலிங்கா தான் இருக்கு, லவ் சொன்ன பொண்ணு வேண்டாம்னு போறதை பார்க்க.. பட் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா நீ!" என்று இருக்கையிலிருந்து சாய்ந்து அவள் முகம் பார்த்து அவன் கேட்க..
"சரியான முதுகுல ஏறின வேதாளம் நீ.. நச்சு நச்சுனு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க" என்று சத்தமாக முணுமுணுத்தாள். "சொல்லு எனக்கு அது ஓகே னா பார்க்கலாம்" என்றாள் எரிச்சலாக..
"இந்த வீக்கோடு நம்மளோட டிரைனிங் ப்ரோக்ராம் முடியுது. கம்மிங் ஃப்ரைடே மார்னிங் நம்ம ப்ராஜெக்ட் சம்மிட் பண்ணுவோம். ஈவினிங் ரிசல்ட் வரும். மறுநாள் பார்ட்டி இருக்கும். அதுக்கு அப்புறம் நீ யாரோ? நான் யாரோ? இதுல இருக்கிற நாள் வரை நாம.. நாம.." என்று இழுத்தவனை பார்த்தவளுக்கு நாக்கு வறண்டு கண்களை விரித்து, "நாம..." என்று அவள் எடுத்துக் கொடுக்க... உதடு கடித்து சிரித்தவன், "லெட் அஸ் ப்ரண்ட்ஸ்!!' என்று கையை நீட்டினான்.
"ப்ரண்ட்ஸா...??" என்று திகைத்தவள், பின் அவன் நீட்டிய கைகளை தயக்கத்துடன் பிடிக்க, அந்த தயக்கம் எல்லாம் அவனுக்கு இல்லை இரண்டு கைகளாலும் அவளது ஒற்றை கையை நன்றாகப் படித்து கையில் புதைத்துக் கொண்டான் வாய்ப்பை விடாமல்!!
ஜெர்ரி என்று அவள் உறும..
சாரி.. சாரி.. எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைத்த சந்தோஷத்தில் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் என்றவளை அவள் முறைக்க நீயா எப்பவும் தப்பா நினைக்க பார்க்கிறேன் நீ ஒரு கேர்ள்.. அப்புறம் என் ஃப்ரண்ட் அதைத்தான் சேர்த்து கேர்ள் பிரண்டு என்று சொன்னேன் என்று சிரிப்பை உதட்டுக்குள் ஒளித்துக் கொண்டான்.
அதன்பின் இவர்கள் இருக்கும் குடியிருப்பு வரை வளவளத்து கொண்டே தான் வந்தான். கேட்டால் "ஃப்ரெண்ட்லியா தான் பேசுறேன். என் மனதில் ஒன்றும் இல்லை. ஏன் உன் மனதில் ஏதாவது இருக்கா?" என்று அவளையும் மடக்கினான்.
"ஒரு வாரம்!! ஒரே வாரம் தாண்டா.. அதுக்கு அப்புறம் உன்னை தலை முழுகிடுறேன்" என்று கடுப்புடன் மொழிந்து விட்டு அவள் சென்றாள்.
செல்லும் அவளைத்தான் ரசித்துப் பார்த்தான் ஜெர்ரி. அதன்பின் வீட்டுக்கு சென்றவன் தந்தையிடம் சகலமும் கூறி "இன்னும் ஒரே வாரத்துல உங்க மருமகளை உங்க கிட்ட பேச வைக்கிறேன் "என்று கூறி போனை வைத்தான்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கழித்து என்று மகேஷோடு பேசினாள் தாமரை.
இந்த மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் அவன் தான் பேச வேண்டாம் என்பதை மறந்து "வர வர உனக்கு என் மேல அக்கறையே இல்லை! வேற ஏதாவது புது ஆள பிடிச்சிட்டியா என்ன? இத்தனை வருஷம் உனக்காக ஒருத்தன் காத்து இருக்கேன். எல்லாத்தையும் மறந்துட்டு நீ பாட்டுக்கு அங்கு வெளிநாட்டில் சந்தோசமா கூத்தடிக்கிற, வரும் போது போன போது எப்படி இருந்தியோ அப்படியே வருவியா?" என்று வார்த்தைகளை அமிலங்களாக அவள் மீது வீசினான்.
எதுவுமே புதுசாக அனுபவிக்கும்போது மகிழ்ச்சியோ வலியோ பயமோ சற்று அதிகமாகத்தான் இருக்கும். நாள் ஆக ஆக அதே தொடர்ந்து கொண்டிருந்தால் அது பழகி போன ஒன்றாகிவிடும்.
தாமரைக்கும் அப்படித்தான் மகேஷின் வார்த்தைகள் எவ்வளவு சூட்டோடு வந்தாலும் தாங்க கற்றிருந்தாள் இவ்வளவு நாட்களில்!!
"போ!! போ!!" என்று அவன் பேச்சை கடந்து விட்டு தனது அன்றாட வேலை செய்துவிட்டு படுக்கையில் சாய்ந்தவளுக்கு, அவள் உறங்கும் போது அவள் நினைவில் உறைந்தது, கண்களில் குறும்பு மின்ன முகம் நிறைய காதலோடு "நீ என் கேர்ள் ஃப்ரெண்ட் தானே!!" என்று சொன்ன ஜெர்ரியின் முகமே!!
அதன்பின் நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்ததா? இல்லை ஜெட் வேகத்தில் பறந்தனவா? என்ற வகையில் மீதமிருந்த நாட்கள் அவ்வளவு வேகமாக கடந்து போயின.
அதன்பின் ஜெர்ரியிடம் இருந்த குறும்பும் விளையாட்டுத்தனமும் காதல் சேட்டைகளும் அதெல்லாம் முற்பிறவிகளோ என்று அவளே வியக்கும் வண்ணம்.. நல்ல தோழமையோடு அவளோடு அளவலாவி அவளது தயக்கங்களை உடைத்து அவனோடு நன்றாக உரையாட வைத்தான். பெரும்பாலும் அவர்களது பிராஜக்ட் பற்றிய பேச்சுக்கள் இருந்தாலும் இடையிடையே அவளைப் பற்றியும் போட்டு வாங்கினான். தன்னைப் பற்றி சொல்கிறோம் என்பதை தெரியாமலேயே தனது குடும்பத்தைப் பற்றி சில விஷயங்களை கூறினாள். கூற வைத்தான் மாயவன்!!
அதையெல்லாம் இரவில் ஒன்றாக தொகுத்து பார்ப்பான். அப்போதுதான் தன்னவள் எவ்வளவு காயங்களை கஷ்டங்களை கடந்து வந்து இருக்கிறாள் என்பது புரிந்தது!!
இனிமேல் வரும் காலத்தில் கண்ணீர் கரை கூட காணாமல் அவளை காத்திட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான் காளையவன்!!
எதிர்பார்த்த வெள்ளிக்கிழமை காலை வந்தது. அனைவருமே ஒருவித பதட்டத்துடனும் கூடவே ஒரு சிறு மகிழ்ச்சியுடனும் இருந்தனர். ஒவ்வொரு டீம் ஆக தங்களது ப்ராஜெக்ட் பற்றி விவரித்து கொண்டிருக்க, அடுத்து பீட்டர் கூறிய டாம் அண்ட் ஜெர்ரி என்றதில் அனைவரும் உற்சாகத்தோடு அவர்களை வரவேற்றனர்.
ப்ரசென்டேஷனின் முதல் பாதியை தன்னவளுக்காக விட்டுக் கொடுத்து அவளை பேசவைத்து, அதன்பின் அந்த அரங்கையே தன்னுடைய பேச்சில் கட்டி வைத்தான் ஜெர்ரி. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டும் வண்ணம் இருந்தது அவர்களுடைய பேச்சு திறமையும் அவர்கள் கையாண்ட விதமும்!! அவர்களின் ப்ராஜெக்ட் ப்ரசெண்ட் பண்ணிய விதமும்!!
வழக்கம்போல மதிய உணவு இல்லாமல் இன்று அனைவருக்குமே வெளியிலிருந்து வர வைத்திருந்தனர். உற்சாகமாக அனைவரும் சாப்பிட்டபடி மாலை வரும் ரிசல்ட்டுக்காக காத்திருந்தனர்!!
மைக்குக்கு பிறந்தவன் போல மைக்கை கையில் எடுத்த பீட்டர், இந்த ட்ரெயினிங் பற்றி கூறி எவ்வாறு அவர்கள் இவர்களை மெருகேற்றினார்கள் என்று மேனேஜ்மென்ட் ஒரு பெரிய ஐஸ் மலையை வைத்து.. அதன் பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி அவன் வைத்துவிட.. அதன்பின் வந்த மற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அனைவருக்கும் உற்சாகமூட்டி பேசி சென்றனர்.
பின் முடிவுகள் அறிவிக்கப்பட வெற்றியாளர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல டாம் அண்ட் ஜெர்ரி!!
உற்சாகத்தோடு மேடையேறிய இருவரும் தங்கள் வெற்றி கோப்பையை வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள். அதன்பிறகு ஒவ்வொருத்தருக்கும் அவர்களின் தனி சிறப்பை போற்றி, அதற்கான விருதுகளும் வழங்கப்பட்டது. அதில் ஜெர்ரியும் தாமரையும் அடக்கம்.
"நாளை நடக்கும் பார்ட்டியில் வெற்றியாளர்களுக்கு அவர்கள் அறிவித்த சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கிறது, அதன்பின் பார்ட்டி முடித்தவுடன் அனைவரும் அவரவர் அலுவலகத்திற்கு வழக்கம் போல வேலைக்கு செல்லலாம்" என்று அறிவிப்போடு பீட்டர் தன் உரையை முடித்தான்.
ஆனால் பார்ட்டியில் தன்னை மறந்து தனது மனதில் உள்ளவற்றை கோப வார்த்தைகளாக அவனிடம் கொட்டித் தீர்த்தாள் பெண் அவள்!!
அதில் தாபம் கொண்டான் அவன்!!
"ஆமான்டா.. விரும்பி தொலைச்சிட்டேன் தான்!! உன்னை மட்டும்!! உன்னை மட்டுமே!! ஆனா.. இந்த தாமரை உனக்கு கிடைக்க மாட்டா!!" என்று அவனை தன் புறம் இழுத்து ஆண் அரிமா வன் இதழ்களை தன் இதழ்களால் வே
ட்டையாடினாள் பெண் அரிமாவாய்!!
அந்தோ பாவம் அரிமா!! ஆகச் சிறந்த அதிர்ச்சியில்!!
