16
நேற்று நடந்தது சுவடே தெரியாமல் அலுவலகத்தில் அவர்கள் ப்ராஜெக்டை பாதி வரை முடித்திருந்தாள் தாமரை ஜெர்ரியின் உதவி இல்லாமலே..
"ஹாய் டாம்!!" என்று உற்சாகத்தோடு அவள் அருகில் அமர்ந்தவனை பார்த்து மெல்லிய தலையசைப்பு மட்டுமே பெண்ணிடம்!!
"இந்த பார்ட்டோட உன்னோட வொர்க் முடியாது டாம். இதுக்கப்புறம் இது நான் வொர்க் பண்ணிக்கிறேன்" என்று சொன்னவனின் பேச்சில் விளையாட்டுத்தனம் முற்றிலுமாக மறைந்து போயிருந்தது.
"அஸ் யுவர் விஷ் ஜெர்ரி" என்றபடி அவளது பார்ட்டை முடித்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள, அதில் அமர்ந்தவன் சற்று நேரம் அந்த இருந்த இடத்தில் அவளது வாசத்தை கண்களை மூடி சுவாசித்தான்!!
"என்ன ஆச்சு? ஏதும் தப்பா செய்து விட்டேனா?" என்று வேலை சார்ந்தே அவளது பேச்சுகள் அனைத்தும் இருக்க..
"இல்லை! இல்லை! என் மைண்ட் வேலை செய்யுற மூடுக்கு கொண்டுவந்தேன். நீ பக்கத்துல இருந்தா அது ஸ்கிப் ஆகி லவ் மூடுக்கு போய்டுது. அதனாலதான்!" என்றவன், அவள் முறைத்ததை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் ஈடுபட்டான்.
"இங்க பார் ஜெர்ரி.. நேத்து உன் கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிட்டேன்! இதுக்கு மேலயும் இப்படி பேசிக்கிட்டு இருக்கிறது நல்லதுக்கு இல்ல. இந்த வீக் மட்டும்தான் முடிஞ்சதும் நீ யாரோ? நான் யாரோ? அண்டர்ஸ்டாண்ட்!!" என்று படபடத்த பேசியவளை பார்த்தவனின் முகத்தில் ஒரு வசிய சிரிப்பு மட்டுமே!!
'இந்தப் பக்கி நாம சொல்றது கேட்டானா இல்லையா?' என்று பெரிய கேள்விக்குறி தாமரையின் முகத்தில். அவன் கேட்டா என்ன? கேக்கலைன்னா என்ன? போடா! என்பது போல, இவள் மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் லஞ்ச் பிரேக் வந்துவிட.. எப்பொழுதும் போல தாமரை ரெக்ஸியோடு இணைந்து கொண்டான் இம்முறை வில்லியமையும் அழைத்துக்கொண்டு..
ஆனால் நண்பர்கள் இருவரும் அவர்கள் இணைகளிடம் காதலைப் பற்றி பேச்சு என்ன மூச்சுக்கூட விடாமல் பொதுவான விஷயங்களை அவர்களுக்கு பிடித்தது பிடிக்காதது என்று பேச்சுவாக்கில் கேட்டு அறிந்து கொள்ள முற்பட்டனர். ரெக்ஸி பேசுவதற்கு அவ்வளவு பெரிய தூண்டுதல் எல்லாம் தேவைப்படவில்லை . ஜெர்ரி ஆரம்பித்த இரண்டு மூன்று கேள்விகளுக்கு அப்புறம் அவளாகவே தன்னுடைய விருப்பங்களை பிடித்ததை பிடிக்காததை அவள் குடும்பத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் சொல்லும் போது இடையிடையே வில்லியமும் தன்னதையும் சொல்லிக்கொண்டிருந்தான். தனது கூர் பார்வையால் சொல்ல வைத்தான் ஜெர்ரி. இருவரும் தங்களுக்குள் ஒத்துப்போகும் விஷயங்களை பற்றி சிலாகித்துக் கொள்ள.. சில விஷயங்கள் ஒத்துப்போகாததை பேசிக் கொள்ளவில்லை. ஆனால் தாமரையும் இவ்வளவு பேச்சுக்கும் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.
இடையில் கேண்டினில் வேறு வாங்குவதற்காக ரெக்ஸி செல்ல அவளோடு இணைந்து கொண்டான் வில்லியம், எனக்கும் அது வேண்டும் என்று!!
"பையன் தேறிட்டான்!!" என்று இருபக்கமும் தலையாட்டி சிரித்த ஜெர்ரியை பார்த்த தாமரை "என்ன ஃப்ரீ சர்வீஸா? அதுவும் ஆள் கோர்த்து விடுறீங்க போல?" என்று ஒரு மாதிரி குரலில் கேட்க..
சட்டென்று கோபம் அணை கடக்க தயாரானது ஜெர்ரிக்கு.
"எல்லோரும் உன்னைப் போலவே ரோபோவா இருக்கனும்னு அவசியம் கிடையாது டாம். அதிலும் வில்லியம் ரெக்ஸியை சின்சியரா லவ் பண்றான்.
ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருந்தா லவ் பண்ண போறாங்க.
நான் ஜஸ்ட் ரெண்டு பேருக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டேன் தட்ஸ் ஆல். இதுல என்ன சர்வீஸ் வந்தது?" என்று சீற்றத்தோடு பேசியவன் சட்டென்று தனது குரலைத் தழைத்து அவளின் கண்களை நோக்கி "உனக்கு ஏன் பொறாமை? நம்மை சேர்த்து வைக்க எல்லாம் இடையில் ஒருத்தன் வரவேண்டிய அவசியமே இல்லை.. நீ இம்முனு ஒரு வார்த்தை சொல்லு.. நான் ஜம்முனு உன்னை தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன்" என்று கண்ணடித்து சிரித்தவன் அறியவில்லை நிஜமாலுமே இவர்களை இணைக்க வேறு ஒருத்தன் தான் வரப் போகிறான் என்று!!
தாமரை அவனை உறுத்து விழித்தாள்.
"இப்படி லவ்வா எல்லாம் பார்க்காதே டியர்! அப்புறம் என்னை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் ஆயிடும் உனக்கு!" என்று கிறக்கமாக கூறியவன் அவளது தோளோடு தன் தோளை உரசினான்.
"ஸ்டாப் இட் ஜெர்ரி!!" என்று அவள் கத்த..
"வொய் ஷூட் ஐ?" என்று இவனும் பதிலுக்கு கத்த..
சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சாப்பாட்டை மறந்து இவர்களை தான் சுவாரஸ்யத்தோடு பார்த்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் மோதிக்கொண்டது பத்தாது என்று விழிகளாலும் மோதிக்கொண்டனர். ஆனால் ஜெர்ரியோ அவளைப் பார்த்து கண்ணடித்தவன் சுற்றியிருந்தவர்களை பார்த்து "இட்ஸ் பார்ட்னர்ஸ் ப்ராப்ளம்! யூ கேரி ஆன் கைய்ஸ்!!" என்றான் இரு பொருளில்!!
திரும்பவும் அவள் ஏதேனும் கேட்கும் முன் "ஐ பீனிஸ்ட்!!" என்று எழுந்து சென்று விட்டான்.
இங்கே ஒரு ஜோடி அனலாக தகித்துக் கொண்டிருக்க.. உணவு வாங்கச் சென்ற மற்றொரு ஜோடியோ இவர்களை மறந்து ஐஸ்கிரீம் குளுமையில் குளித்துக் கொண்டிருந்தது.
அங்கே உணவு ஆர்டர் செய்து விட்டு இவர்கள் காத்திருந்த நேரத்தில் அருகில் இருந்த பிரீசரில் உள்ள ஐஸ்கிரீமை ஆசையோடு பார்த்த ரெக்ஸிக்கு, அவள் கேட்கும் முன் எடுத்துக் கொடுத்தவன் இதையும் பில்லில் சேர்த்து விடுமாறு சைகை செய்து விட்டு அங்கேயே அவளிடம் சாப்பிட சொன்னான்.
பெண்கள் பெரும்பாலும் தேடுவது தன் தந்தை காட்டிய அதே பாசத்தையும் பாதுகாப்பையும் தான் தனக்கான ஆண் அவனிடத்தில்!!
அதன் பின்னே தான் அவன் உருவம் கலர் பொருளாதாரம் மற்றும் எக்ஸ்ட்ரா எல்லாம்...
இப்போது ரெக்ஸியின் மனதிலும் இவர்கள் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் உள்ள ஒற்றுமைகளையும்.. தனக்கு என்றவுடன் தனக்குப் பின்னே பாதுகாப்பாக வந்த அவனையும்.. தான் கேட்டவுடன் வாங்கித் தந்தவனையும் பார்த்தவளுக்கு மனதில் மெல்லிய சாரல்.. அது பெரும் மழையாக மாற்றும் பொறுப்பை வில்லியம் ஏற்றுக்கொண்டான்.
"என்ன கல்யாணம் பண்ணிட்டு என் கூட வந்துடு ரெக்ஸி!! உன்னை நான் பத்திரமா பாத்துப்பேன். என் கண்ணுல வச்சு!! எனக்கு அம்மா மட்டும் தான்! அப்பா இல்ல. எங்க அம்மாவும் உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க" என்று காதல் மொழிகளை இயல்பு வாழ்க்கையோடு அவன் கோர்த்து பேச பேச.. மயங்கினாள் அந்த கோல்டன் தலைக்காரி!!
அந்த மயக்கத்துடனே தன்னை பற்றி கூற என்று குடும்பம் காதலில் ஆரம்பித்து ஸ்வீட் நத்திங்ஸாக சென்றது அவர்களது சம்பாஷனை!!
"அன்னைக்கு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே ரெக்ஸி!!" என்று ஐஸ்கிரீம் சாப்பிடும் அவளது சிவந்த இதழ்களை பார்த்துக்கொண்டு வில்லியம் கேட்க...
அவளோ பதில் சொல்ல முடியாமல் வறண்ட தன் உதட்டினை குளுமையான தன் நாவினை கொண்டு மெலிதாக ஈரப் படுத்தினாள்.
அதை பார்த்தவனோ அதில் கிறங்கி மயங்கி "உன் இதழ் கொண்ட பாக்கியம் என் இதழும் பெறுமா?" என்று சோகமாக கூறியவனை பார்த்தவள் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்பூனாலே அவனுக்கும் ஐஸ்கிரீமை ஊட்டி விட்டாள்.
"இப்போதைக்கு என்னால் சட்டென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை வில்.. ப்ளீஸ் கிவ் மீ சம் டைம்" என்று அவள் சற்று வெட்கத்துடன் கேட்க..
"அதுக்கு என்ன ரெக்ஸி எவ்வளவு நேரம் வேணாலும் எடுத்துக்கோ. ஆனால் ஈவ்னிங் நாம வீட்டுக்கு போகும்போது என்கிட்ட உன் சம்மதத்தை சொல்லிவிடவேண்டும்" என்று குறும்பாக பேசி சிரித்தவன் அவளது நெஞ்சுக்குள் முற்றுமாக வந்திருந்தான்.
அதன்பின் ஒன்று இரண்டு மூன்று என்று ஐஸ்கிரீம்கள் அதன் கணக்கில் இருவரும் வாய்களிலும் மற்றவரால் ஸ்பூனால் ஊட்டப்பட..
"ஹேய் கைய்ஸ்.. காபிட்டேரியாவிலேயே ஐஸ்க்ரீம் தீர்ந்து போய் விட்டதாம். இனிதான் ஐஸ்கிரீம் கம்பெனியில் ஆர்டர் கொடுக்க அவர் போயிட்டாரு" என்று ஜெர்ரியின் நக்கல் குரலில்தான் இருவரும் தங்கள் காதல் உலகத்திலிருந்து கம்ப்யூட்டர் உலகத்திற்கு வந்தனர்.
தன் நண்பனை பார்த்து வெட்கத்துடன் முகத்தை மறைத்த வில்லியமை பாய்ந்து வந்து கட்டிக்கொண்டான் ஜெர்ரி.. "யூ டிட் இட் மேன்!! யூ டிட் இட்!!" என்று சந்தோஷ கூச்சலோடு அவன் பின்னே முதுகில் தொற்றிக் கொண்டான் ஜெர்ரி.
ரெக்ஸிக்கோ வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க.. அங்கிருந்து சென்றாள். அப்போதுதான் தாமரை ஞாபகம் வந்து அவர்கள் சாப்பிட்ட டேபிளை பார்க்க.. வில்லியம் முதுகிலிருந்து தொற்றிருந்த ஜெர்ரி, "ஆனாலும் உனக்கு இவ்வளவு சீக்கிரம் ஞாபகம் வந்திருக்க கூடாது ஸ்வீட்டி!! என் ஆளு போய் அரை மணி நேரம் ஆகுது" என்று கலாய்த்தான்.
"போ மேன்.. ரொம்ப ஓட்டாத!!" என்று ஓடினாள்.
