Share:
Notifications
Clear all

காதல் சகி 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

12

காதலில் விழுந்த மகன் ஜெர்ரிக்கு முதல் கட்டமாக இளையராஜாவின் இன்னிசையில் இருந்து ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் முதல் ஜிவி பிரகாஷ் பாடல்கள் வரை வெறும் காதல்களால் நிரப்பப்பட்ட பாடல்களை அனுப்பி வைத்தார் அரங்கநாதன் ஜோன்ஸ்!! 

 

 

எத்தனை பிள்ளைகளுக்கு கிடைக்கும் இம்மாதிரியான தோழமையுடன் கூடிய அப்பா.. அப்பா ஒரு வரமே!!

 

பெரும்பாலும் ஆண் பிள்ளைகளுக்கு அம்மாதான் மிக நெருக்கம் என்றால் ஜெர்ரி பொருத்தவரை தோழமையும் அரவணைப்பும் அரங்கநாதன் இடமிருந்தும்.. கண்டிப்பும் தண்டிப்பும் லூசியிடமிருந்தும் கிடைக்கும். அரங்கநாதனின் வாழ்க்கைமுறை நெறிகளை பார்த்த லூசிக்கு தன் மகனை தந்தையின் மறு பிம்பமாக வளர்க்கவே ஆசை கொண்டார். அதனாலேயே இந்த கண்டிப்பும் தண்டிப்பும். ஆனால் அரங்கநாதன் மனைவிக்கும் சேர்த்து பாசத்தையும் நேசத்தையும் பொழிபவர். ஜெர்ரிக் எவ்வளவுதான் அன்னை அவனிடம் கண்டிப்பு காட்டினாலும் மாயக்கண்ணனாய் கண்களால் சிரித்து குறும்புகளால் மாற்றி விடுவான் அவரை. கூடவே தந்தையின் அரவணைப்பு இருக்க.. பின்ன என்ன சேட்டைகளின் மன்னனான அந்த ஆயர்பாடி கண்ணன் போலவே தான் வளர்ந்து வந்தான்.

 

 

தந்தையிடம் இதுவரை எதையும் மறைத்தது கூட கிடையாது. பெட்‌ ஷேர் செய்ததை வரை. அங்குவுக்கு சற்றே இது மனதை நெருடினாலும், இந்த ‌ஜென்ரேஷன் என்று கடந்தாலும், பட்டும் படாலும் தங்கள் காதல் கதையை.. வாழ்க்கையை.. சொல்லி சொல்லி அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். வெளியில் லவ் என்றாலே லஸ்ட் என்று சொல்லித் திரிந்தாலும் மனதுக்குள் இனிய தம்பதியராய் வாழும் மனைவிக்காக காத்துதான் இருந்தான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!

 

மறுநாள் காலையில் புதுப்பொலிவுடன் தன் அலுவலகத்தை நோக்கி சென்றான் ஜெர்ரிக். 

 

அதே வாரியும் வாராத தலை முடி.. மூன்று நாள் ஷேவ் செய்யப்படாத தாடி..

எதிரே நிற்பவரை மயக்கும் புன்னகை..

கண்களில் தெரியும் சிநேக பாவம்.. 

இரண்டு இரண்டிகளாக துள்ளல் நடை.. 

எப்போதும் போல அதே ஜெர்ரிக் தான் அனைவருக்கும்!!

 

 

ஆனால் காதல் புகுந்த உள்ளம் அனைத்திலும் அழகை பார்த்தது!!

 

பார்ப்பது.. கேட்பது.. அனைத்தும் ரசனையானது!!

 

காதல் வந்தால் உலகமே அழகாகும் என்ற மாதிரி!!

 

சிகை கோதிக் கொள்வதும், இதழோரம் மடித்து மீசைக்குள் புதைத்து கொள்வதுமாய் என்று தனது முன் அமர்ந்து அடிக்கொருதரம் செய்யும் ஜெர்ரியைதான் வித்தியாசமாக பார்த்தாள் ரெக்ஸி.

 

"ஆர் யூ ஆல்ரைட் மேன்?' குழம்பி போய் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

 

"ஸ்டில்.. யெட் ஸ்வீட்டி!!" என்றான் சிரிப்புடன்.

 

"அப்பாடி உன் ஸ்வீட்டில தான் நீ ஒழுங்கா இருக்கேன்னு தெரியுது" என்று பெரு மூச்சு விட்டாள் ரெக்ஸி.

 

 

மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தான். "சொல்லு மேன்.. என்ன விஷயம் வேணும் என்கிட்ட இருந்து? இல்லையெனில் நீயெல்லாம் என் பக்கம் வரவே மாட்டியே" என்று ஆதங்கமாக சொல்கிறாளா? இல்லை நக்கல் அடிக்கிறாளா? என்று அவளை பார்த்தான் ஜெர்ரி.

 

 

"வாட் எவர்" என்று தோளைக் குலுக்கி கொண்டவன் "எனக்கு டாம்மை பத்தி தெரியணும்" என்றான் விளையாட்டு பேச்சுகளை கைவிட்ட அழுத்தமான குரலில்.

 

"எ..என்ன.. டாம் பத்தி என்ன?" என்றாள் 

ஆச்சரியத்துடன்.

 

"ம்ப்ச்.. கேட்டா பதில் சொல்லு ஸ்வீட்டி, எனக்கு அவளை பத்தி இன் அண்ட் அவுட் தெரியனும்" என்றான் யாரும் உருகும் தேன் குரலில்..

 

"வேணாம் ஜெர்ரி.. உன் விளையாட்டுத்தனம் எல்லாத்தையும் அவ கிட்ட வெச்சுகாதே!! ஷீ இஸ் நாட் லைக் தட் கேர்ள்" என்றாள் தோழிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு சற்றே கோபமான குரலில்.

 

"இதுல என்ன விளையாட்டுத்தனம் இருக்கு, ஏன் நீ கோபப்படுற?" என்றவனுக்கு உண்மையில் புரியவே இல்லை..

 

அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த புதிதில் ரெக்ஸியுடன் மட்டும் பேசிக் கொண்டிருப்பளை பார்த்த சில இளைஞர்கள் அவளை கரெக்ட் செய்ய ரெக்ஸியிடமே சிபாரிசு கேட்டது உண்டு. அதனால் இவனும் அவ்வாறு கேட்கிறானோ என்றுதான் அவள் கோபப்பட்டது.

 

முகம் தெளியாமல் தன் முன்னே அமர்ந்து இருப்பவளை பார்த்தவன் தொண்டையைக் கனைத்து அவளை கூர்மையாக பார்த்தவன் "ஐ லவ் டாம்!!" என்றான்.

 

"வாட்?? லவ்வா?? டாமரையா??" என்று அதிர்ந்தாள், சற்று தூரத்தில் அவளது டெஸ்கில் அமர்ந்திருந்த தாமரையை பார்த்துக்கொண்டே..

 

 

"நான் பேசும்போது என்னை பார்த்து பதில் சொல்லு. நீ அவளை பார்த்துக் கொண்டே என் கிட்ட பேசினா, நாம ரெண்டு பேரும் அவளை பத்திதான் பேசறோம்னு உன் பாடி லாங்குவேஜே அவளுக்கு காட்டிக் கொடுத்திடும்" என்றவன் இன்னும் வாகாக அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு தன்னுடைய சுட்டுவிரலால் போனை சுற்றிக் கொண்டிருந்தான்.

 

முன்னே பார்த்த அந்த விளையாட்டுத்தனமான ஜெர்ரிக்கும் இப்போது தன் எதிரே அமர்ந்திருக்கும் ஜெர்ரிக்கும் ஆறு என்ன ஆயிரம் வித்தியாசங்களை சொல்வாள் ரெக்ஸி. அந்த அளவு அவன் முகத்தில் தீவிரம் குடி கொண்டிருந்தது‌.

 

"என்ன சொல்ல மேன்? அவள் ஒரு லாக்டு புக்!! அவ்வளவு சீக்கிரம் அந்த புக்கை ஓபன் பண்ணி அவளை படிக்கிறது என்பது ரொம்ப கஷ்டம். வேலைக்கு வந்த புதிதில் ஐம்புலன்களையும் அடக்கி வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவளை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் சகஜமாக பேசும் நிலைக்கு கொண்டு வந்து இருக்கேன். ஆனால் அவளைப்பற்றிய பர்சனல் இன்ஃபர்மேஷன் எதுவும் எனக்குத் தெரியாது!!" இதை எதிர்பார்த்து இருந்தான் தான் ஜெர்ரிக்.

 

 

ஏதாவது ஒன்று ரெண்டு விஷயம் தனக்குத் தெரியாதது அவளுக்கு தெரிந்திருந்தால் என்று எண்ணி தான் வேலை நேரத்தில் இங்கே ரெக்ஸியிடம் கேட்டுக்கொண்டிருந்தான். மற்ற நேரத்தில்தான் இருவரும் ஒன்றாகவே சுற்றுகிறார்களே!!

 

 

ஜெர்ரி தாமரையை பாராமல் பார்த்துக் கொண்டே வந்தான். மிகத் தீவிரமாக தனது கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். வேறு என்ன அவர்களின் ப்ராஜெக்ட் தான்!! 

 

 

மெல்லிய இளம் புன்னகை இதழ்களில் நெளிய இருக்கையை மாற்றியமைத்து டேபிளில் கை ஊன்றி கன்னத்தை தாங்கியவாறு அவளை தான் பார்த்தவாறு அமர்ந்தான், அவளோ தீவிரமாக கணினியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவள் தளிர் விரல்களோடு விழிகளும் அந்த கீபோர்டில் சதிராட்டம் ஆட, அவள் கண்களை பார்த்துக்கொண்டே "பியூட்டிஃபுல்!!" முணுமுணுத்தான்.

 

"என்ன??" என்று அவள் புருவத்தை உயர்த்த..

 

"கோபமா?" என்றான் ஜெர்ரி.

 

ஒரே ஒரு வினாடி வேலை நிறுத்தம் செய்த விரல்களும் கண்களும் மீண்டும் தங்கள் சதிராட்டத்தை தொடர்ந்தது.

 

"அப்போ கோபம் தான்!!" என்று உதட்டை பிதுக்கினான், கேள்வியும் அவனே பதிலும் அவனே என்பதாய்!!

 

காலையில் வேலைக்கு வந்த உடன் நேற்று விவாதித்த ப்ராஜெக்டை பற்றி கூறிவிட்டு அவனுக்கான வேலையை கூறி விட்டு, தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டாள். இரண்டு நாட்களாக அவர்களுக்கு நடந்த எதுவும் அவளை பாதிக்கவில்லை என்பதாய்!!

 

சிறிது நேரம் அவளோடு சேர்ந்து வேலையை பார்த்தவனுக்கு அவளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொண்டே ஆகவேண்டும் தோன்ற, அவளிடம் ஒன்றும் கூறாமல் சிறிதுநேரம் காரிடரில் நின்று வெறித்துக் கொண்டிருந்தவன் கண்களுக்கு ரெக்ஸி பட அடுத்த அரை மணி நேரமும் அவளிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

முதலில் அவனை காணோம் என்று பார்த்த தாமரை அதன்பின் அவன் ரெக்ஸியோடு ஏதோ சிரித்து பேசுவதை பார்த்து "இவன் எல்லாம் திருந்த மாட்டான். நேத்து ஏதோ நம்மால தான் ப்ராஜெக்ட் லேட் ஆன மாதிரி பேசுனான் குதிச்சான்.. இப்ப பாரு உட்கார்ந்து கடலை வறுக்கிறத. நம்ம வேலையாவது முடிப்போம்" என்று தன் வேலையில் கவனமானாள்.

 

ஜெர்ரி ப்ராஜெக்ட் பற்றி பேசவா அவளை கூப்பிட்டான்? அது ஒரு சாக்கு என்று டாமுக்கு பாவம் தெரியவில்லை!!

 

டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டில்.. டாமை விட ஜெர்ரி கொஞ்சம் புத்திசாலிதான்!! எவ்வளவுதான் கட்டம் கட்டி திட்டம் தீட்டினாலும் அதற்கெல்லாம் பெப்பே காட்டி ஓடிவிடும் இந்த ஜெர்ரி குட்டி!! நம் நாயகனும் ஜெர்ரி மாதிரியே!!

 

"வேலை விஷயத்தை தவிர வேறு எதுவும் உங்களிடம் பேச எனக்கு இல்லை!!" என்று விழிகளை மட்டும் திருப்பி அவனிடம் கூறினாள்.

 

 

"நானும் வொர்க் பத்தி தான் கேட்டேன்" என்றான் ஒரு தோள் குலுக்களுடன்.. அவள் நம்ப பார்வை பார்க்க.. "ஆமாம்.. நேத்து ஃபுல்லா உங்க கிட்ட ப்ரொஜெக்ட் பத்தி பேசிட்டு இன்னைக்கு பக்கத்துல வேலை செய்யாமல் போனவுடன் உங்களுக்கு கோவமா இருக்கான்னு கேட்டேன். இட்ஸ் அப்சலூட்லி வொர்க் ஒன்லி யூ க்நோ" என்றான் முகிழ்த்த சிரிப்பை மறைத்துக்கொண்டு..

 

 

"ஆஹான்‌??!!" என்றாள் லேப்டாப்பில் இருந்து கண்ணை எடுக்காமலேயே..

 

"அதை என் முகத்தை பார்த்துக்கொண்டு கூட சொல்லலாம்" என்றான்‌ இவனும் விடாமல்..

 

"பாக்குற அளவுக்கு அங்க ஒன்னும் இல்ல" என்றாள் அலட்சியத்துடன்..

 

"வாட்?? கம் அகைன்?? மீ.. மீ.. பார்க்கிற மாதிரி இல்லையா? என்னடா ஜெர்ரிக்.. உனக்கு வந்த சோதனை!?" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அவளை பார்த்து "உனக்கு ரசிக்கிற தன்மை கம்மி டாம்" என்றான் அவளை ரசித்துக் கொண்டே..

 

"ஆங்கிள் ஆன் தி வே' அப்படின்னு போஸ்டர் ஒட்டுற மாதிரி ஒரு மூஞ்சு.. அதுல இவரு என்னவோ டாம் க்ரூஸ் நினைப்பு" என்று அவனை வாரினாள்.

 

'அடிப்பாவி.. வாய தொறந்தாலே வாரி அள்ளுறியே என்னை!!' என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டவன், "பின்ன ஏற்கனவே ஆண்ட்டியா இருக்குற உனக்கு பர்ஃபெக்ட் மேட்சா இருக்க வேண்டாமா?" என்றவனை பார்த்து முறைத்தவள், "நான் ஆன்ட்டியாவே இருந்திருக்கிறேன். ஆனா நீங்க ஏன் எனக்கு மேட்ச் ஆகணும்?" என்று கூர் பார்வையுடன் கேட்டாள்.

 

உள்ளுக்குள் பொங்கிய காதல் உவகையை அவளிடம் காட்ட முடியாது தடுமாறியவன் "அது நீயும் நானும் ஒரே பேட்ச் இல்லையா? அதுக்காக சொன்னேன்" என்று மழுப்பினான்.

 

 

அதன் பிறகு தாமரை மருந்தும் பர்சனலாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனையும் பேச அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க ப்ராஜெக்ட் பற்றியே அன்றைய நாள் ஓடியது.

 

 

மதியம் உணவுக்கு செல்லும்போது எதிர் எதிரே அமர்ந்த ரெக்ஸியும் தாமரையும் உணவு உண்ண.. தாமரை அருகே வந்து அமர்ந்தவன் "மே ஐ ஜாயின் வித் யூ ஸ்வீட்டி?" என்று ரெக்ஸியை பார்த்து கேட்டவன், அருகில் ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து முழுக்க முழுக்க ரெக்ஸியுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

 

 

பாவம் அந்த ரெக்ஸி தான் குழம்பி போனாள் இவனின் நடவடிக்கையில்.. 

ரெக்ஸியுடன் இவன் சிரித்து சிரித்து பேசும் நேரங்களில் தாமரையின் முகத்தில் ஏதாவது பொறாமை.. கோபம்.. எரிச்சல் ஏதாவது தோன்றுகிறதா? என்று இவன் பார்க்காமல் பார்க்க.. அப்படிப்பட்ட உணர்வுகள் எதுவுமே வரவில்லை சாதாரணமாகத்தான் உண்டு கொண்டிருந்தாள். ஆனால் அவன் எதிர்பார்த்த உணர்வுகள் எல்லாம் எதிர்பாராத இடத்தில் தோன்றி கொண்டிருந்தது. வேறு யாரு? ரெக்ஸியின் பேட்ச் மேட்டான வில்லியமிடமிருந்து...

 

 

உடல் அளவில் சற்று பருமனாக இருந்து வில்லியமுக்கு ரெக்ஸியின் மீது வந்தது முதல் ஒரு தனி ஈர்ப்பு தான். ஆனால் ரெக்ஸிகோ வில்லியம் இடம் உடன் பணியாற்றுபவன் என்பதை தவிர்த்து வேறு எந்த நாட்டமும் கொண்டிருக்கவில்லை. ஆனால் காலையில் இருந்து ஜெர்ரி அவளிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையை பார்த்தவனுக்கு இந்த பொறாமை எரிச்சல் எல்லாம் தலை விரித்து ஆடியது.

அதுவும் ரெக்ஸியும் அவனிடம் சிரித்து சிரித்து பேச.. நாம் பருமனாக இருப்பதனால் நம்மிடம் பேச மறுக்கிறாள் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்துகொள்ள எப்போ வேண்டுமானாலும் வெடித்துவிடும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தான் வில்லியம்.

 

அதன்பின் வந்த நாட்களில்

மாலை தாமரையோடு வீடு திரும்பும் போது டிரெயினில் அவள் அருகே தான் அமர்ந்தான். வீட்டுக்கு செல்லும் போது, ஏதேனும் பேசிக் கொண்டே தான் வருவான். அவன் பேச்சு, பார்வை, நடை எல்லாவற்றிலும் முன்பை விட ஒரு உரிமை உணர்வு தெரிந்தது. வழக்கம் போல, அவனின் விளையாட்டுத்தனம் இல்லை சகஜமான போக்கு என்று கடந்தாள் தாமரை. அதாவது அவளது கூட்டிலிருந்து அவளை வெளியே கொண்டு வந்து சகஜ நிலைக்கு கொண்டு வர தீர்மானித்தான் ஜெர்ரிக். 

ஒரு வாரம் ஒரு நாளாக ஓடி மறைய, அன்றைய‌ வார இறுதியில் எப்பொழுதும் போல பார்ட்டி என்று இல்லாமல், இம்முறை வெளியில் எங்காவது குழுவாகச் சென்று வரலாம் என்று பீட்டர் உரைக்க அனைவரும் ஆமோதித்தனர்.

 

அதன்படி அந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் இருக்கும்‌ ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க்கு செல்வது என்று உறுதியானது.

 

சனிக்கிழமையில் இருந்து தயாராக தொடங்கி விட்டான் ஜெர்ரிக். அன்றிரவு அப்பா உடனான தமிழ் வகுப்பு வேறு!!

 

 

சோபாவில் தலை சாய்த்துக் கொண்டு எதிரில் இருந்த டேப்பில் சுவாரஸ்யமற்ற தந்தை சொல்பவற்றைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜெர்ரி.

 

அரங்கநாதன் அருகில் அவரது ஆருயிர் காதலி லூசி. தமிழ் வகுப்பு என்ற போர்வையில் ஒரு மொழி திணிப்பை தான் நடத்திக்கொண்டிருந்தார் அரங்கநாதன். காதல் என்று அந்த ஒற்றை வார்த்தை.. ஜெர்ரியை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது. இல்லையென்றால்.. இந்நேரத்தில் அவன் ஓட்டம் எடுத்திருப்பான். மகனின் பாவமான முகத்தை பார்த்திருந்த அன்னைக்கு பரிதாபம் மேலோங்க..

 

"அங்கு டியர்.. நீங்க அவனை ரொம்பத்தான் படுத்துறீங்க? இட்ஸ் நாட் ஃபேர்.. பாவம் பிள்ளை முகமே சரியில்லை" என்று அவர் உருக..

 

 

"ஆல் இஸ் வெல் இன் லவ் அண்ட் வார் லூலு டார்லிங்!!" என்று மனைவியின் கன்னத்தில் அவர் முத்தம் வைக்க.. அதுவரை மகன் என்று பாசத்தில் பொங்கிக்கொண்டிருந்த லூசியோ ஒற்றை முத்தத்திலேயே கணவன் மீது காதல் பொங்கி வர.. மகனை மறந்து மன்னவனின் காதலில் உருகி குழைந்து போனார்.

 

 

ஜெர்ரி கன்னம் மூக்கு வாய் என்று அனைத்திலும் புகை வர, "எனக்கு தமிழ் கிளாஸ் எடுக்க சொன்னா அங்க அம்மாவுக்கு லவ் கிளாஸ் எடுக்கிறீங்களா? பா.." என்று உருமினான்.

 

 

"இந்த வயதிலும் என் ஒற்றை முத்தத்திற்கு உன் அம்மாவின் முகத்தை பார்த்தியா? இதுபோல் தான் நீ கொடுக்க வேண்டும்.. உன் அம்மாவைப் போல அந்த பெண் உருகி நிற்க வேண்டும்" என்று அரங்கநாதனின் வகுப்பு தமிழில் இருந்து காதலுக்கு இடம்பெயர ஜெர்ரியோ அப்பா சொன்னதை, இது நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க..

 

 

அதாவது காதலில் கசிந்துருகி கன்னங்கள் செம்மையுற நிற்கும் தாமரையின் முகத்தை அவன் என்ன கற்பனை செய்தாலும் வரவில்லை. அதற்கு பதில் கோபத்தில் கொந்தளித்துக் உருகி வரும் லாவாவை போல செந்தணலாய் நின்ற தாமரை தான் கண்ணில் வந்து போனாள். கூடவே அன்று கொடுத்த அவள் அரையும் அவன் எண்ணாமலே ஆஜராக.. தலையை உதறி கன்னத்தைப் பிடித்துக் கொண்டான்.

 

 

"டேய் அதுக்குள்ள கற்பனைக்கு போயிட்டியா?" என்று அரங்கநாதன் சிரிக்க லூசி அவர் தோளில் தலை சாய்த்து மகனைப் பார்த்து சிரித்தார்.

 

 

ஜாதி மத மொழி நாடுகடந்த அவர்களின் இந்த காதல்.. இந்த வயதிலும் அவர்களின் அன்னியோன்யம்.. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்த அவர்களின் புரிதல்.. இவையெல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு கண் முன்னால் இருந்த பெற்றோர்கள் மறைந்து அங்கே அவனும் அவளுமாய் தெரிந்தனர்.

 

 

"எனக்கு மருமகள் ஓட போட்டோ அனுப்பி வைடா" என்று அரங்கநாதன் கேட்டார்.

 

"என்ன அங்கு.. அதுக்குள்ள மருமகள்னு முடிவே பண்ணிட்டீங்களா? அந்த பொண்ணு இன்னும் சம்மதம் சொல்லவே இல்ல. உங்க பையன் ஒன் சைடா தான் லவ் பண்றான். ஞாபகம் வச்சுக்கோங்க" என்றார்.

 

"அவன் என் பையன் லூலு. அந்த பொண்ணு தான் என் மருமக!! நீ வேணும்னாலும் குறிச்சி வெச்சிக்கோ. அந்தக் காலத்திலேயே உன் பின்னால் அலைந்து திரிந்து காதல் சொல்லி, என் காதலில் உன்னையும் விழ வைக்கவில்லையா? அதே போல என் மகனும் செய்வான்" என்று பெருமையாக மார் தட்டினார் அரங்கநாதன்.

 

 

"கரெக்ட் பா. அவளை என் காதலியாக இல்லாமல் உங்கள் மருமகளாக தான் உங்ககிட்ட அறிமுகம் செய்து வைப்பேன். அதுவரைக்கும் நோ போட்டோ" என்றான் மகன் தந்தைக்கு சற்றும் குறையாமல். 

 

ஆனால் இந்த அரங்கநாதன் அறியவில்லை.. தாமரைச்செல்வி சாதாரண பெண் இல்லை. அவள் பாறை என்று!!

 

 

அந்தப் பாறைக்குள் ஊடுருவி பரவி விருட்சமாய் மாறுவானா ஜெர்ரி??

 

மறுநாள்.. ஞாயிற்றுக்கிழமை தன் காதலை டாமிடம் சொல்லி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது நம் ஜெர்ரி!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top