Share:
Notifications
Clear all

காதல் சகி 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

11

நேற்று போதையில் அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்றும் இருப்பதாக உணர்ந்து கொண்டே இருந்தது அவனது இதழ்கள். 

அப்போது உள்ளுக்குள் நரம்புகளில் மின்னலாய் பாய்ந்த சிலிர்ப்பும்.. 
உச்சி முதல் பாதம் வரை உணர்ந்த உணர்வும்.. 
அது தந்த மன நிறைவும்.. 
அவளின் கோபத்தில் உண்டான சிரிப்பும்.. 
அவளது அதிரடியில் அரண்ட மனமும்.. மொத்தமாக சொன்ன கதை என்னவோ அவன் காதலில் விழுந்து விட்டான் என்று!!

இருப்பத்தியேழு அந்நிய நாட்டு இளைஞன் இன்னும் கன்னி பையனாய் எல்லாம் இருப்பான் என்று எதிர்பார்ப்பது இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு கொண்டாடுவதை போல!! அதெல்லாம் ஏதோ ஒரு தேவை என்று எப்பொழுதோ இரண்டு முறை நடந்து முடிந்தது அவன் வாழ்வில்.. ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்தால், தன் பெற்றோரை போல அவளுக்கு மட்டுமே உண்மையாக.. அந்நியோன்யமாக.. பித்தாக அவள் மேல் காதல் கொண்டு வாழ வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவு. 

அவளை முதல் முறை பார்த்த போது இல்லாத அந்த நினைப்பு.. இப்போ பார்க்க பார்க்க முதலில் இதயத்தை தாக்கி மூளை வரை பாய்ந்து தேகம் முழுக்க தேங்கி நின்று ஒவ்வொரு அணுவும் அவள் தான் வேண்டும் என்று கூக்குரலிட்டது.

அவள் வீட்டுக்கு முன் நின்று கதவை தட்ட கை ஓங்கிவதும் பின் கீழே கையை இறக்குவதும், சிகையை இடைப்பட்ட நேரத்தில் கோதிக் கொள்வதுமாக இரண்டு மூன்று முறை செய்தான் ஜெர்ரிக். பின்பு தன்னை ஒரு முறை நிதானப்படுத்தி, தொண்டையை செருமி ஒருவழியாக கதவை தட்டி விட்டான்.
தாமரையைப் போலவே அவள் வீட்டின் கதவும் மிக இறுக்கமாகவே மூடியிருந்தது. எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல்!!

அடுத்த முறை அவனது கை கதவை தட்டவில்லை.. போனில் அவள் நம்பரை தட்டியது!!

எத்தனை முறை தட்டினாலும் அவள் திறக்க மாட்டாள் என்பது அவனுக்கு திண்ணம்!!

இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்து அவள் எடுக்கவில்லை என்ற உடனே ஒரு பதற்றம் பற்றிக்கொண்டது அவனுக்கு.
இந்த முறை வேக வேகமாக கதவை அவன் தட்ட மெதுவாக கதவைத் திறந்தவளின் முகம் சோர்ந்து தெரிந்தது. அதை விட இமைகளும் கண்களும் அழுததற்கு அறிகுறியாக சிவந்து வீங்கியிருந்தது. 

இப்போது இவளிடம் சென்று என்னை மன்னித்துவிடு இல்லை காதல் சொல்கிறேன் என்று ஏதாவது உளறினால் கண்டிப்பாக அவள் இருக்கும் நிலையில் இன்னும் வயலெண்டாக பிகேவ் செய்வாள் என்று நினைத்தவன், "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டாம்" என்று உள்ளே வர முயல சட்டென்று கதவை பாதி மறைத்தாற் போல் வைத்து அவனை தடுத்து நிறுத்தினாள்.

"முன்னெச்சரிக்கையாக்கும்!! நான் நினைத்தால் மட்டுமே என்னை தடுக்க முடியும்!!" என்று மனதுக்குள் சிரித்தவன் கைகளை கட்டிக்கொண்டு மறு கதவில் சாய்ந்தவாறு அவளை பார்த்து "உன்னை ரேப் பண்ற எந்த ஐடியாவும் இப்போது எனக்கு இல்லை" என்று சொன்னதுதான் தாமதம், கதவை சட்டென்று அறைந்து சாத்த முயன்றாள். அதை எதிர்பார்த்திருந்த ஜெர்ரிக் தனது கைகளால் அதை தடுத்தவன், "எனக்கு பேசிய ஆகணும் டாம்" என்றான் அதிகார தோரணையில்..

"நான் இந்த வீட்டுல தனியா இருக்கேன் உன்ன மாதிரி ஆள் எல்லாம் அடிக்கடி உள்ள விடுவதில்லை" அவளும் பதிலுக்கு வார்த்தைகளை கடித்து துப்ப..

"என்னை மாதிரி ஆளுனா என்ன அர்த்தம்?" என்று அழுத்தமாக கேட்டவனின் விடைத்த மூக்கும்.. சிவந்த கண்களும்.. கடித்த உதடுகளும் அவன் அந்நியனாக மாறிக் கொண்டு இருக்கிறான் என்பதை உணர்த்தியது.

அவளோ பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொள்ள, "இங்க பாரு டாம் டூ வீக்ஸ் ஓடிப்போச்சு.. ப்ராஜெக்ட் இந்த வாரத்துக்குள் ரெடி பண்ணி ஆகணும். அதைப் பற்றி பேசுவதற்கு தான் வந்தேன்" என்று அவனும் உன்னை பார்க்க நான் ஏங்கிக் கிடக்கவில்லை என்பதாய் உடல் மொழியில் அலட்சியம் காட்ட..

"பக்கத்துல இருக்குற காபி ஷாப்புக்கு வரேன்" என்றவள் வினாடியும் தாமதிக்காமல் கதவடைத்து சென்றுவிட.. அதுவரை கெத்து காட்டியவன், "எப்பா அரங்கநாதா!! எப்படி இவளை வழிக்கு கொண்டு வருவேனு தெரிலையே" என்று புலம்பியவாறு அவள் சொன்ன அந்த காபி ஷாப் நோக்கி நடந்தான்.

வழக்கமான ஜீன்ஸ் குர்த்தி அதன் மேல் ஓவர்கோட் போட்டுக்கொண்டு நடந்து அந்த ஐந்தடி பனிச் சிற்பத்தை தான் விழியாகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெர்ரிக்.

வந்தவள் அவன் எதிரே அமர்ந்து பிளாக் டி ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு மறுபக்கம் தலையைத் திருப்பி அமரந்தவளை பார்த்தவன், "உன் கிட்ட சாரி கேக்குற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை" என்றான் இதழ்களில் பூத்த புன்னகையை மீசைக்குள் மறைத்தவாறு..

"ஜெர்ரிக் ஜோன்ஸ்!!" கோபத்தில் அவள்!!

"யாப்.. இட்ஸ் மீ!!" என்று நிதானமாக அவன்!!

"நேத்து நீ பண்ணுன காரியத்துக்கு, எனக்கு வர்ற கோவத்துக்கு கைல இருக்குற டீயை அப்படியே சுட சுட உன் முகத்துல ஊத்தணும் போல வெறியா வருது. ஆனால் இருக்கிற இடமும் சுற்றுச்சூழலும் அதை தடுக்குது" என்றாள் அழுத்தமாய்..

"வித் ப்ளஷர்.. கோ கெட்!! ஆனா என் முகத்திலிருந்து அந்த சூடான டீயை உன் ஈர உதடுகளால் தான் துடைக்க வைப்பேன் உனக்கு சம்மதம் என்றால் எனக்கும்.." என்றான் தோள்களை குலுக்கி கொண்டே...

"தட்ஸ் யுவர் லிமிட்.. சும்மா சும்மா சீண்டிக்கொண்டே இருந்த என்றால் வாயை பொத்தி கிட்டு வேடிக்கை பார்க்கிற பொண்ணு நான் இல்லை!! என் அணுகுமுறையே அடுத்த முறை வேற மாதிரி தான் இருக்கும்" என்று குரலை உயர்த்தாமல் அசால்ட்டாக அவனை மிரட்டியவளை பார்த்தவனுக்கு புன்னகை தான் வந்தது.

"அந்த அணுகுமுறையை பார்க்க.. ஐ அம் வெயிட்டிங்!! நானா அந்த விஷயங்களை எல்லாம் பேச வேண்டாம் சும்மா இருந்தாலும் நீ வாயை கொடுத்து வாங்கி கட்டுகிட்டே இருப்ப போலிருக்கே" என்று அவன் தன் இதழ்களை ஒரு மாதிரியாக வருடி கொடுக்க.. அதில் அடக்க முடியா கோபம் தாமரைக்கு பொத்துக் கொண்டு வர அவனைப் பார்த்து முறைத்தாள்.

டேபிளில் இருந்து சற்று எக்கி அவள் புறம் குனிந்தவன், "சும்மா சும்மா ஏதோ உன்னை ஹாரஸ்மெண்ட் பண்றவன் மாதிரி பேசாதே!! ஜஸ்ட் ஏதோ போதையில் கிஸ் பண்ணிட்டேன். உன்ன விட எனக்கு 'இதுல' அனுபவம் ஜாஸ்தி.. எல்லாத்தையும் பார்த்தவன் தான், விருப்பமில்லா பொண்ணு கிட்ட கூட போக மாட்டேன்" என்று முடித்தவனின்‌ வார்த்தைகளில் 'இதுல' என்பது எதுவென்று சற்று நேரம் சென்றே புரிந்தது 'அதுல' டியூப் லைட்டான நம் தாமரைக்கு.

அதில் முகம் சட்டென்று சூடாக ஜன்னல் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அதைப் பற்றி பேசுவோமா?" என்று இவன் நக்கல் குரலில் கேட்க.. அவள் மூக்கு விடைக்க அவன் புறம் திரும்ப..

"ப்ராஜெக்ட்.. ப்ராஜெக்ட்" என்றான் இரு கைகளையும் மேலே உயர்த்தி..

அதன்பின் இரண்டு க்ரீன் டீ.. கொஞ்சம் ஸ்நாக்ஸ் என்று உள்ளே போய்க் கொண்டே இருக்க இரண்டு மணி நேரம் அவர்கள் ப்ராஜக்டை பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

இந்தியாவின் தென் மூலை தமிழ்நாட்டில் ஒரு கிராமத்திலிருந்து வந்த பெண்ணுக்குள் இவ்வளவு திறமையா என்று அவன் வியக்க!!

குறும்பும் சேட்டைகளும் வாயாடித்தனமும் இருந்தாலும் சாப்ட்வேரில் அவனது அறிவை கண்டவளுக்கும் ஆச்சரியமே!!

மெல்ல ஒரு தலையசைப்புடன் அவள் விடை பெற, "என்னமோ பத்து கிலோமீட்டர் அந்தாண்ட இருக்கிற ஊருக்கு போறது மாதிரிதான் தலையாட்டிட்டு போறா.. இரண்டு பேரும் இருக்கிறது ஒரே அபார்ட்மெண்ட்.. ஒரே ப்ளோருல.. இத்தனை மீட்டர் டிஸ்டன்ஸ் வேற!!" என்று தனக்கு முன்னே 10 மீட்டர் தொலைவில் வேக வேகமாக சென்று கொண்டிருந்தவளை பார்த்து முணுமுணுத்துக் கொண்டே பின்னே சென்றான் ஜெர்ரிக்!!

அவனுடன் சேர்ந்து நடப்பதை தவிர்க்க வேகவேகமாக அவனை அர்சித்துக்கொண்டே நடந்தவளின் கவனம் முழுகக் ஜெர்ரிக்கை திட்டுவதுலேயே இருக்க.. பாதையில் பாவையின் கவனம் தவறி முன்னே விழப்போனவளை பாய்ந்து வந்து, இடையை இறுக்கி அணைத்து பிடித்து நிறுத்தினான் ஜெர்ரிக்.

"நல்ல வேளை விழுகல.. அசிங்கமாக போயிருக்கும்" என்று எண்ணியவள், அவனை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டு "தேங்க்ஸ்!!" என்ற முணுமுணுப்போடு கலை மானாக துள்ளி ஓடியது இந்த டாம்.!!

அவள் இடையைப் பற்றிய தன் கையை பார்த்தவாறே வீட்டை நோக்கி எட்டு போட்டான் ஜெர்ரி!!

அன்று இரவு அப்பாவை வீடியோ காலில் பிடித்தவன், அன்று காபி ஷாப்பில் வைத்து தாமரை பேசியதே எல்லாம் கூறியவன் "பொண்ணுங்கள கிட்ட எப்படிதான் பேசுறது? அவ பேச பேச எனக்கு கோபம் கோபமா வருது பா!! நாலு அறை விட்டு நான் உன்னை காதலிக்கிறேனு சத்தமாக கத்தி சொல்லணும் போல இருக்கு பா" என்று தலையை பிடித்து உட்கார்ந்திருந்த மகனை பார்த்து கடகடவென கடோத்கஜனை போல சிரித்தார் அரங்கநாதன்!!

"மகனே பொண்ணுங்க தோழியாய் இருக்கிற வரைக்கும் அவங்க கிட்ட பேசி பழகுவது எல்லாம் ரொம்ப சுலபம்!! அதுவே அவர்களை காதலியா மாற்ற முயற்சிக்கிறது கஷ்டம்னா.. அதே காதலி மனைவியா வந்ததுக்கு அப்புறம் நாம வாயே திறக்கக் கூடாது" என்று தாம்பத்தியத்தின் அரிச்சுவடியை ஆரம்பித்தார் அவர்.

"போ பா இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை!!" என்று அவன் அலுத்துக் கொள்ள..

"பொண்ணுங்கள புரிஞ்சிக்கிறது கஷ்டம்னா.. இந்திய பொண்ணுங்களை குறிப்பா தமிழ் பொண்ணுங்களை புரிஞ்சுக்கிறது இன்னுமே கஷ்டம்!!" என்ற தந்தையை அவன் கலவரமாக பார்க்க..

"பொண்ணுங்களை புரிஞ்சிக்க தான் கஷ்டம் என்று சொன்னேன். ஆனா அவங்க கிட்ட அன்பு காட்டுறது காதலோடு இருக்கிறது ரொம்ப ரொம்ப ஈஸி.. அதை முயன்று பாரு.. சீக்கிரமே நீ சிங்கிள் இருந்து மிங்கிள் ஆகிடுவ" என்று சிரித்தார்.

"இது எல்லாத்துக்கும் முன்னாடி நீ போட்டுட்டு இருக்கிற ஆண் என்ற கர்வம் ஈகோ இது எல்லாத்தையும் கழட்டி போடு.. அன்போடு காதலோடு அவளை நெருங்கு.. காதலும் உன் வசம்!! காதலியும் உன் வசம்!!" என்றார் அனுபவஸ்தனாய் அரங்கநாதன்!!

"இனி பாருங்க என் பர்பாமன்ஸை!!" என்று கண்ணடித்து சிரித்த மகனை நிறைவோடு பார்த்தார் தந்தை!!

தாமரையோடு தானாக சாய்ந்த சந்தர்ப்பத்தை எண்ணி.. கனவில் டாமோடு டூயட் ஜெர்ரி!!

மறுநாள் காலை...

தன்னை முற்றிலுமாக மாற்றிய அந்த டாமை வேட்டையாட காதலோடு கிளம்பியது இந்த ஜெர்ரி!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top