10
தமிழ முதல்ல படி அப்புறம் காதல் படி!!" என்று தந்தை கூற..
"என்னது தமிழ் கத்துக்கணுமா?" என்று பயத்தோடு எச்சில் விழுங்கினான் ஜெர்ரிக் ஜோன்ஸ்.
மறுநாள் காலை மனைவிக்கு முன் சீக்கிரம் எழுந்த அரங்கநாதன், தன் மனைவிக்கு பிடித்து உணவுகளை நளனாக மாறி அசத்திக் கொண்டிருந்தார். சமையலறை.. லிவிங் ரூம் தாண்டி படுக்கை அறைக்குள் நுழைந்தது அவர் சமைத்த உணவின் மணம். அப்போதுதான் காலைக்கடன்களை முடித்து முகத்தை துடைத்துக் கொண்டிருந்த லூசிக்கு அந்த வாசனை சொன்னது என்னவோ தன் கணவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று!!
27 வயது மகனுக்கு அம்மா என்று சொன்னால் நம்பமுடியாத இளமையோடு இருந்தார் லூசி. ஒருவர் இளமையோடு இருப்பதற்கும் மனதுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டாம். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் அதன் பிரதிபலிப்பு முகத்தில் தெரியுமாம்.
என்ன ஜியா? இதெல்லாம் நம்பும் படியாவா இருக்கு? என்று கேட்பவர்களுக்கு சங்க காலப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையாரை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
இறக்கும் தருவாயில் கூட ஒற்றை முடி நரைக்காமல் இருந்தாராம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது இதுதான்!!
அரங்கநாதன்!! லூசியின் செல்ல அங்கு அவர்!! என்னதான் மனைவிக்காக மதம் மாறினாலும் பெயரில் பின்பகுதி மட்டுமே அவர் சேர்த்துக் கொண்டார். அவர் பெயரோ லூசியின் வாய்க்குள் ததிங்கிணத்தோம் ஆட.. அதனாலே இந்த செல்ல பெயர்.
"அங்கு டியர்!! என்ன காலையிலே பயங்கர சந்தோஷத்தில் இருக்கீங்க போல?" என்றவாறு அவர் சமைத்த இறாலை சுவைத்துப் படி கேட்டார்.
"எப்படி இருக்கு லூலு?" என்றார் அரங்கநாதன், "டோண்ட் கால் மீ லூலு அங்கு. எனக்கு அது லூசு மாதிரியே கேட்குது" என்றார் சிணுங்கலோடு.
அவரது சிணுங்கலில் அங்குவுக்குள்ளும் காதல் பெருக.. அவரது இடை வளைத்து நெற்றியில் முத்தமிட்டார் மென்மையாக.
லூசியும் இப்போது தான் அங்கு முதன் முதலில் முத்தமிட்டது போலவே, நாணங்கொண்டு அவரது நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டார்.
யார் சொன்னது இளமையில் தான் காதல் பெருகும் என்று!!
இளமையில் காம தேடலே அதிகம் இருக்கும். ஆனால் முதுமையில் வருவதோ, காமத்தை கடந்த அன்பின் தேடல்!! பாசத்தின் தேடல்!! பரஸ்பர நட்பின் தேடல்!!
"அய்யோ லூலு... மறந்தே போயிட்டேன் பாரு.. நான் ஏன் சந்தோஷமா இருக்கேன் என்று கேட்ட தானே? காரணம் காதல்!!" என்றார்.
"காதல்??!!" என்று ஆச்சிரியத்துடன் லூசி கேட்க..
"ஆமாம்.. என்னுடைய வாழ்நாள் மகிழ்ச்சி மனநிறைவுக்கு காரணம் நம்முடைய காதல் என்றால், இப்போதைய சந்தோஷமான மனநிலைக்கு காரணம் ஜெர்ரியின் காதல்!!" என்ற சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் பரப்பியபடி..
"வாட்?? ஜெர்ரிக் காதல் பண்றானா?" கணவனுக்கு குறையாத ஆச்சரியத்துடன் மனைவி கேட்க.. ஆமாம் என்று சிரிப்புடன் தலையசைத்த அரங்கநாதன், நேற்று மகன் தன்னிடம் ஒப்பித்ததை ஒரு வார்த்தை மாறாமல் மனைவியிடம் கூறினார்.
இருவர் சம்பாஷணையையும் அவர் கூறி முடிக்க லூசியோ.. "என்ன அங்கு டியர்.. டிட் ஃபார் டாட் ஆ?" என்றார் முறைத்தப்படி..
ஹா ஹா வாய்விட்டு சிரித்த அரங்கநாதன் "கொஞ்சமே கொஞ்சம் லூலு" என்றார்.
கணவனை முறைக்க முயன்று தோற்ற லூசி தொற்று கிளியாக அவரது தோளில் தொற்றிக் கொண்டவர், "நெக்ஸ்ட் என்ன ப்ளான் அங்கு?" என்றார்.
"நெக்ஸ்ட் ரெஸ்ட்.. அதுக்கப்புறம் உன் பையனுக்கு தமிழ் கிளாஸ் எடுக்க ஃபுல் செடியூல் போட்டு வச்சிருக்கேன். இடையிடையே நம்முடைய காதல் கதை எல்லாம்" என்றார் காலையில் சோபையாக தெரிந்த மனைவியின் முகத்தை ரசித்தபடி.
"அப்போ தமிழ் ப்ளல் லவ் க்ளாஸா!!" என்றவரிடம், "அதே!! அதே!!" என்றார் புன்னகை மாறாமல் அரங்கநாதன்.
மனைவியிடம் பேசி முடித்தவர் இதோ காலையில் மகனை எழுப்பி விட்டு கொண்டிருந்தார். வேற எதுக்கு? தமிழ் கிளாஸ் எடுக்க தான்!!
தூக்க கலக்கத்திலேயே "குட் மார்னிங் பா" என்றவனிடம், "காலை வணக்கம் மகனே!!" என்று அவர் தூய தமிழில் ஆரம்பிக்க.. அரண்டு புரண்டு எழுந்து உட்கார்ந்தான் நம் ஜெர்ரிக் ஜோன்ஸ்.
பெரும்பாலும் மகனிடம் தங்களது மொழியை இருவருமே திணிக்கவில்லை. எது அவனுக்கு வருகிறதோ.. அதே மொழியில் மகனிடம் தங்கள் சம்பாஷணையை தொடர்ந்தார்கள் அரங்கநாதனும் லூசியும்.
அவர்கள் இருந்தது பிரான்ஸ் என்பதாலும், இருவருக்கும் பொதுவான மொழி பிரெஞ்சு என்பதாலும் கூடவே இருந்த மற்றும் குடும்பங்களும் அதே மொழியை பேசுவதாலும் பெரும்பாலும் ஜெர்ரிக்கு வருவது ஃப்ரெஞ்ச் தான். ஆங்கிலம் அவன் பள்ளி கல்லூரியில் கற்று கொண்டது. ஆனால் தன்னை அழைக்க "அப்பா" என்று தமிழில் தான் சொல்லிக் கொடுத்தார் அரங்கநாதன். அதில் மட்டும் சற்று கெடுபிடிதான் தமிழாசிரியர் ஆகிப் போன அரங்கநாதன்.
"ஏன் பா இப்படி? காலங்காத்தால?? அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலங்காத்தால??" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டு முகத்தை மட்டும் எட்டி பார்த்தான்.
"இதே மாதிரி ஒரு டவலுக்குள் உன்ன சுத்தி என் கையில் கொடுத்த நாள் ஞாபகம் வருகிறது டா மகனே!!" என்று அச்சுபிசகாமல் தமிழில் அவர் கூற மேலும் ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டே "பிரஞ்சு!! பிரஞ்சு!!" என்று இவன் கூற..
"உனக்கு தாமரை வேணுமா? வேணாமா?" என்று கேட்க..
"வேணும்.. வேணும்.. வேணும்.. டாம் மட்டுமே வேணும்!!" என்று தலையை வேக வேகமாக ஆட்டினான்.
"அது என்ன கன்றாவியா டாம்மு.. பாம்முனு சொல்லிக்கிட்டு அழகா தாமரைனு கூப்பிடுடா" என்றவரிடம் "அதெல்லாம் வராது பா. எது வருதோ அதை மட்டும் சொல்லிக் கொடு" என்று அவன் முறுக்கிக்கிட்டு அமர்ந்தான்.
"சரி சரி ஒரு கோபிக்காத.. இப்ப நான் உனக்கு ஆத்திச்சூடி சொல்லித் தரேன்" என்றவர் அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பிக்க..
"ஏன் பா.. இப்போ நீ சொல்லிக் கொடுக்குறதுக்கும் லவ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? அது என்ன சொன்னா ஆட்டிச்சூடியா??" என்று கூகுள் செய்து பார்த்து அதனுடைய அர்த்தத்தை ஆங்கிலத்தில் பார்த்தவன், தலையில் வேகமாக அடித்துக் கொண்டான்.
"இங்க பாரு பா.. அவ கிட்ட பேசுறதுக்கு மட்டும் ஒன்னு ரெண்டு வார்த்தை தமிழ்ல சொல்லிக் கொடு போதும்.." என்றவனிடம், "அதெப்படி போதும் ஜெர்ரிக்? தமிழ்ல பத்தின பொது அறிவு வேண்டாமா?" என்று சந்தேகமாக கேட்க..
"நான் அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற அளவு எனக்கு தமிழ் தெரிஞ்சா போதும்... ஆனா நீ என்னை தமிழ் டீச்சர் ஆக்குறத்துக்கு தமிழ் சொல்லிக் கொடுக்குற.. நான் உன்னை கேட்டனா அதெல்லாம்?" என்று அவன் கடுகடுக்க..
"அப்படியெல்லாம் விட முடியாது டா உன்னை" என்று அவர் முறைக்க..
"இங்க பாரு பா.. நீ சொல்லிக் கொடுக்கலைன்னா எனக்கு இருக்குவே இருக்கு கூகுள்.. அதுல நான் தெரிஞ்சுக்குவேன் மேன்" என்று கெத்தாக கூற..
"எங்க நான் சொல்லுற ஒரு வாக்கியத்தை கூகுள் கிட்ட கேட்டுச் சொல்லு பார்ப்போம்" என்றவர் அந்த வாக்கியத்தை கூற.. அவனும் அதே கூகுளிடம் கேட்க.. கேட்ட கூகுளோ அலறியடித்து ஆஃப் ஆனது.
அப்படி என்ன வாக்கியமாக இருக்கும். தெரிந்தால்?? சொல்லுங்க மக்களே!!
கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்!!
குளித்துவிட்டு ஒற்றை டவலோடு வந்தவன், கண்ணாடியில் தன் தலையை கோதிக் கொள்ளும்போது சட்டென்று அவனது கண்கள் நேற்றைய இரவின் இதழணைப்பை எண்ணிப் பார்த்தது!!
மெல்ல தன் இதழ்களை ஒற்றை விரலால் வருடியவனுக்கு நேற்று இந்த இதழ்களோடு ஒட்டி உறவாடிய மென் இதழ்களின் ஸ்பரிசம் மீண்டும் வேண்டும் என்பதாய் மனம் தூள்ளாட்டம் போட்டது!!
காதல் வந்ததால் இதழ்கள் இணைந்ததுவா?? இல்லை இதழ்கள் இணைந்ததால் காதல் மலர்ந்ததா? பட்டிமன்றத்திற்கு மிகப் பொருத்தமான தலைப்பு!!
அப்படியென்ன?? ஒற்றை இதழணைப்பில் இந்த முரட்டு சிங்கிளின் உள்ளம் தடுமாறுகிறது!!
ஆம்!! காதல் திருமணம் என்றாலும் அல்லது பெற்றவர்களாக பார்த்து வைத்த திருமணம் என்றாலும் மெய் தீண்டலுக்கு பிறகு உரிமையா
னது இமயம் வரை வளர்ந்து விடும்.
என்னவள்!! என்னவன்!! என்ற உரிமையின் அளவை!! நெருக்கத்தின் உணர்வை!!
