Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 27

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 30
Thread starter  

தளிர் - 27 

 

அந்தி மாலை நேரம் மேற்கை சூரியன் சிவக்க வைத்து உலகிடம் இருந்து விடைபெற்று சென்றுவிட . 

 

தென்றலோ ஏதோ ஒரு யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவளை கலைத்தது அவளின் போனின் சத்தம் . அதை பார்த்தவளுக்கோ சற்று பதட்டம் கூடிப்போனது . அதை சமாளித்தவளோ 

போனை எடுத்து பேசத் தொடங்க .

 

அந்த பக்கம் இருந்த நபரோ 

 

என்ன தென்றல் அங்க எப்படி இருக்கு என்று கடுமையான ஒரு குரல் வர .

 

தென்றலோ

 

" ஹான் எல்லாம் சரியா இருக்கு "

 

என்று ஏதோ சொல்லி சமாளிக்க. 

 

நபரோ

 

"சரி இனிமே நீ அங்க இருக்க தேவையில்லை , கூடிய சீக்கிரம் வந்து சேரு"

 

என்று சிறிது நேரம் பேச .

 

தென்றலோ சற்று தடுமாறியபடி 

 

"இல்ல நாம கொஞ்சம் யோசிக்கலாம் இல்லை , எனக்கு என்னுமோ இது தப்பா இருக்க மாதிரி தெரியுது "....

 

என்று கூற . 

 

நபரோ

 

" என்ன இப்போ அவன் பக்கம் எல்லாம் பேச தொடங்கியாச்சா ?" 

 

என்றவரது குரலோ சற்று உயர்த்தி வர .

 

தென்றலோ இல்ல இல்ல அப்படிலாம் இல்லை என்று தடுமாற . நபரோ சரியா இருந்தா நல்லது தான் ...

 

 

அன்றைய தினத்திற்கு பின் தென்றல் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து விலகி செல்லத் தொடங்க . 

 

அவனும் கண்டு காணாமல் இருந்தாலும் அதன் பின் இதை இப்படியே விட்டால் சரியாகாது என்று எண்ணி அதை முடிக்க நினைக்க . 

 

அவனும் கவனித்து கொண்டுதானே இருக்கிறான் சில நாள்களாக அவளது நடவடிக்கையில் சில மாற்றங்கள் தென்பட்டன அல்லவா . அவன் நெருங்கி சென்றால் கூட அவள் அவனிடம் இருந்து விலகி சென்றால் . இதே போல் சில நாட்கள் வீட்டிற்கு வராமல் அவனை தவிர்க்க பார்க்க.  

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பாண்டியனோ அன்று வீட்டிற்கு வந்த தென்றலின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க .

 

அவளோ

 

" என் கையை விடுங்க ஏன் இப்படி பண்றீங்க "

 

என்று அவனிடம் இருந்து கையை விலக்க போராட .

 

அவனோ

 

"நான் என்னடி பண்றேன் நீதான்டி ஒரு மாதிரி நடந்துட்டு இருக்க, உனக்கு என்னடி ஆச்சு "

 

என்று அவள் கையை அழுத்தி பிடிக்க.

 

தென்றலோ

 

" எனக்கு என்ன வந்தது நான் நல்லாதான் இருக்கேன் முதல்ல கையை விடுறீங்களா"

 

என்று கையை அவனிடம் இருந்து விலக்கிக்கொள்ள. 

 

பாண்டியனோ

 

" இப்போ என்னடி உன் பிரச்சனை ஏன் இப்படி விலகி விலகி போற "

 

என்று கவலைக்குரலில் கேட்க. 

 

தென்றலோ அவன் குரலில் தெரிந்த கவலையில் சற்று தடுமாறினாலும் தன்னை சமாளித்துக்கொண்ட தென்றலோ 

 

"அதான் விலகுறேன் தெரியுதுல்ல அப்புறம் ஏன் நெருங்கி வர்றீங்க , நீங்களும் விலகி போக வேண்டியது தானே "....

 

என்றவளின் குரலோ ஒரு வித கடுப்புடன் வர. 

 

பாண்டியனோ

 

" உனக்கு என்னடி ஆச்சு ,ஏன்டி இப்படிலாம் பண்ற ....

 

என்று தவிப்பாக அவள் முகம் பார்க்க 

 

தென்றலோ

 

" எனக்குலாம் எதுவும் இல்லை இப்போ ஏன் இப்படி கடுப்பை கிளப்பிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க , முதல்ல நகருங்க நான் போய் வேலை பார்க்கனும்"

 

என்று உள் நுழைய பார்க்க. 

 

பாண்டியனோ அவள் சொன்ன வார்த்தையை ஏற்று கொள்ள முடியாமல் அப்படி நிற்க . மீண்டும் தன்னிலைக்கு வந்தவனோ அவளை தேடி கிச்சன் உள் நுழைய 

 

தென்றலோ சமைப்பதற்கு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க . அவள் பின் பக்கம் வந்து நின்றவனோ ஒரு கையை கழுத்தை சுற்றியும் , மற்றொரு கையை இடையை சுற்றியும் அணைத்துக் கொண்டவனோ அவள் தோள் வளைவில் நாடியை வைத்து கொண்டவனோ , 

 

"இப்போ எதுக்குடி இப்படி சிடுசிடு ன்னு இருக்க , நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா"

 

என்று தன்மையாக கேட்க. 

 

அவளோ அவன் நெருக்கத்தில் சற்று மயங்கினாலும்

 

"முதல்ல என்ன விடுறீங்களா எப்போ பாரு வந்து இப்படி ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டே இருக்கீங்க "

 

என்று எரிச்சலாக அவனிடம் கத்த .

 

பாண்டியனோ தென்றலை தன்னை நோக்கி திருப்பியவனோ அவள் முகம் பார்க்க. 

 

அவளோ அவன் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்ள .

 

அவனோ அவள் முகத்தை தன்னை நோக்கி பார்க்க செய்ய . அவளோ அவன் கையை தட்டி விட்டவளோ அங்கிருந்து அகல .

 

பாண்டியனோ ஒன்றும் புரியாமல் இவளுக்கு என்ன ஆச்சு என்றபடி அவள் பின்னே செல்ல .

 

தென்றலோ அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி இருக்க .

 

பாண்டியனோ அவள் முன் சென்று நின்றவனோ 

 

"இப்போ என்ன தாண்டி ஆச்சு ,நானும் கொஞ்ச நாள் பாத்துட்டு தானே இருக்கேன் , ஏதோ வித்தியாசமா நடந்துக்கிற, "

 

என்று அவனும் சற்று கோபம் மேலிட அவளிடம் கேட்க .

 

தென்றலோ

 

"தெரியுது இல்லை அப்புறம் ஏன் மறுபடி மறுபடி அதையே கேட்கிறீங்க"

 

என்று அவளும் அவனிடம் கோபத்தில் சீற .

 

பாண்டியனோ "அதுதான் என்ன தான்டி ஆச்சு ஏன் இப்படி நடந்துக்கிற , எதாவது பிரச்சனையா?...

 

என்று தன்மையாக வினவ .

 

தென்றலோ

 

"ஆமா பிரச்சனை தான் , சொன்னா பிரச்சனையை தீர்த்து வச்சுடுவீங்களா?..

 

என்றபடி தண்ணீரை பைப்பை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து அகல .

 

பிரச்சனையா ? என்று யோசித்தவனோ என்ன என்று அவளிடம் கேட்க. 

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவளோ 

 

"நீ நீ தான் பிரச்சனை போதுமா "

 

என்று அந்த இடமே அதிர சத்தமிட .

 

பாண்டியனுக்கோ ஒன்றும் புரியா நிலை இவள் என்ன சொல்ல வருகிறாள். 

 

"புரியல நான் பிரச்சனையா "

 

என்று ஒரு வித குழப்பமான குரலில் கேட்க. 

 

தென்றலோ

 

"ஆமா நீ தான் பிரச்சனை உன்ன போல ஒருத்தனை காதலிச்சேன் பாரு அதான் நான் பண்ண பெரிய தப்பு"....

 

என்று வார்த்தைகள் சூடாக வந்து விழ .

 

பாண்டியனோ அவள் வார்த்தையில் சற்று திகைத்து போய் இருக்க . 

 

அவனோ நீ என்ன சொல்ற என்றவனது குரலோ சற்று உஷ்ணத்துடன் வர .

 

தென்றலோ

 

"ஆமா நீ தான் என் பிரச்சனை , உன்னைப் போல டெய்லியும் ஒரு பொண்ணோட இருக்க உன்னை போய் காதலிச்சேன் பாரு என்னை தான் சொல்லனும்"

 

என்று அவளது குரலும் சற்று கடுமையாக வந்து விழ ...

 

அவனோ அவள் முழங்கையை நெருக்கி பிடித்து தன்னை நோக்கி திருப்பியவனோ 

 

" ஏய் இது எல்லாம் தெரிஞ்சு தானடி காதலிச்ச , இப்போ என்னுமோ புதுசா வந்து காரணம் சொல்ற .....

 

 

அவளோ ஒரு இளக்கார குரலில்  

 

"அப்போ தெரியல ஆனா இப்போ தானே என் புத்திக்கு தெரியுது , ஏன்டா இப்படி ஒருத்தன போய் காதலிச்சோம் யோசிக்க வைக்குது . "

  

என்று தலையில் அடித்துக் கொள்ள .

 

அவள் கூறும் வார்த்தைகளை ஏற்க முடியாது பாண்டியனோ , கோபத்தில் கண்கள் இரண்டையும் அழுந்த மூடியபடி 

 

"இப்போ என்னடி சொல்ல"....

 

வர என்றவனது குரலோ கோபத்தின் வெளிப்பாடாக இருக்க .

 

தென்றலுக்கோ அவன் குரலின் மாற்றமே சொன்னது அவனின் கோபத்தை 

 

"அவளோ முடிவா நீ எனக்கு வேண்டாம்"...

 

என்று தன் மனதில் இருந்ததை போட்டு உடைத்து விட .

 

அவனிற்கு தான் கேட்டது உண்மையா ? என்று ஏற்று கொள்ளவே சற்று நேரம் எடுத்தது .

 

தென்றலோ 

 

" எனக்கு நீ வேண்டாம் , எனக்கு உன்னை பிடிக்கல, சரியா , இப்போ தெரியுதா நான் ஏன் உன்னை விலகி போறேன்னு, போதுமா தயவு செஞ்சு என்னை விட்ரு , உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல "....

 

என்று எரிச்சலில் கத்தி விட்டு அங்கிருந்து செல்ல பார்க்க. 

 

பாண்டியனோ என்ன சொல்கிறாள் இவள் , ஏன் இவ்வாறு சொல்கிறாள் என்று எதுவுமே புரியாமல் சிறிது நேரம் அப்படியே நின்றவனோ .

 

" என்னடி ஆச்சு , யாராவது எதாவது சொன்னாங்களா , இவ்ளோ நாள் நல்லா தான இருந்த , என்ன பத்தி எல்லாம் உனக்கு தெரியும் தானடி..... அப்புறம் ஏன்டி இப்படி எல்லாம் பண்ற,"  

 

அவள் கூறியதை தாங்க முடியாமல் அவன் குரலோ தவித்து போய் வர  

 

தென்றலோ அவன் சொல்வது எதையும் கருத்தில் கொள்ளாமல் 

 

" ஆமா தெரிஞ்சு தான் இருந்தேன் , ஆனா இப்போ எனக்கு பிடிக்கல என்ன பண்ண சொல்ற , எனக்கு நீ வேண்டாம் "...

 

என்றபோதே அவளது போன் அடிக்கும் சத்தம் வர . 

 

அதை எடுத்தவளோ புன்னகையுடன் 

 

"ஹலோ" என்று ஆசையுடன் அழைக்க.

 

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ , தென்றலின் முகமோ சிரித்தமேனியாக மாறிவிட .

 

தென்றலோ "ஆமா இங்க இருந்து கிளம்பிடுவேன், எல்லாம் சொல்லிட்டேன் "..

 

என்று தன் முன் அவள் முகத்தையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தபடி கூற .

 

அவளோ சரி சரி வை வரேன் சரியா என்று ஆசையுடன் பேசியவளோ போனை வைத்து விட்டு பாண்டியனை பார்த்தவளோ 

 

" என்ன அப்படி பாக்கிற நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு , இன்னும் இரண்டு மாசத்துல எங்களுக்கு கல்யாணம் அதான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் ."...

இப்போ சொல்லிட்டேன் நான் வரேன் 

 

என்றபடி அங்கிருந்து நடக்கத் தொடங்க .

 

பாண்டியனுக்கோ இது அனைத்தும் கனவாக இருந்து விட கூடாதா? அவள் சொல்வது அனைத்தும் பொய் , நான் விளையாட்டுக்கு கூறினேன் என்று சொல்லிவிட மாட்டாளா என்று அவளையே பார்த்தவனோ 

 

அவள் பின்னோடு ஓடியபடி 

 

" ஏய் தென்றல் இது எல்லாம் பொய் தான , நீ என்கிட்ட விளையாடுற தான ,".. 

 

என்றவனது குரலோ சற்று உடைந்து போய் வர .

 

" அவளோ நான் ஏன் விளையாடனும் , நான் ஏன் பொய் சொல்லனும் , அதான் சொல்ல வேண்டிய உண்மைய எல்லாம் சொல்லிட்டேனே வேற என்ன சொல்லனும் .....

 

" இனிமே உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை , அதோட என்னை தேடி என் வீட்டுக்கு எல்லாம் நீ போகாத , இனி நான் அங்க இருக்கவும் மாட்டேன் , சரியா "....

 

என்றவளோ அவன் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டு அங்கிருந்து நடக்க .

 

பாண்டியனோ தவிப்புடன் அவள் கைப்பிடித்தவனோ 

 

" ஏய் இப்படி எல்லாம் பண்ணாதடி , நீ இல்லாம என்னால இருக்க முடியாது .... "அதான் அதை எல்லாம் நான் எப்பவே விட்டாச்சு இல்லை , அதை எல்லாம் இப்ப வந்து பேசுற "

 

என்று கெஞ்ச தொடங்க .

 

தென்றலோ

 

" முதல்ல என் கைய விடு, நீ விட்டா என்ன ,விடாம போனா என்ன , இனி நீ எப்படி வேணா இரு , எனக்கு அது பிரச்சனை இல்லை , இதோட நாம இதை முடிச்சுக்கலாம் "

 

என்றவளோ அங்கிருந்து வேக வேகமாக நடக்கத் தொடங்க . 

 

அவள் பின்னோடு ஓடி வந்தவனோ 

கைப்பிடித்து தன்னை நோக்கி திருப்பியவனோ 

 

ஏய் என்ன பண்ணி இருந்தாலும் சாரிடி , நீயும் என்னை விட்டு போகாதா , என்னால தாங்க முடியாது என்றவனது கண்களோ சற்று கலங்கித்தான் போனது ..

 

அவளோ கல்நெஞ்சம் கொண்டவளாயிற்றே 

 

" ச்ச்சீ முதல்ல என்ன தொடாதீங்க , உன்னை எனக்கு பாக்க பாக்க அசிங்கமா இருக்கு , உன்னை போல ஒருத்தனோட இருந்து இருக்கேன் நினைக்கும் போதே எனக்கு அருவருப்பா இருக்கு , என்று முகம் சுழிக்க கூறியவளோ 

 

அவன் கையை உதறித்தள்ளிவிட்டு அப்போது அங்கு வந்து நின்ற காரில் ஏறியவளோ அங்கிருந்து சென்று விட .

 

பாண்டியனுக்கோ சகலமும் நின்ற உணர்வு , அவள் தன்னோடு இருந்தது அனைத்தும் பொய்யா ? அவள் காட்டிய அன்பு பொய்யா ? காதல் பொய்யா ? என் நினைக்க நினைக்க அவனுக்கு மனதிலோ பெரும் வலிதான் கூடிப்போனது . 

 

அவள் தானே தன்னை நெருங்கினால் , அவள் தானே காதல் என்றால் இப்போது அனைத்தும் பொய் என்று கூறிவிட்டு செல்கிறால். 

 

உடைக்கப் போகிறேன் என்று தெரிந்து அவளும் , உடைபடப்போகிறேன் என தெரியாமல் அவனும் இருந்து இருக்கிறார்கள் அல்லவா . 

 

காரில் இருந்த படி பாண்டியனை பார்த்த தென்றலுக்கோ 

 

அழுகை வெடித்து கொண்டு வந்தது , இப்போதே இறங்கி சென்று அவனை அணைத்துக்கொண்டு இது அனைத்தும் உண்மை இல்லை என்று கத்தி கதற வேண்டும் போல் இருக்க . அதை எல்லாம் கட்டுப்படுத்தியபடி அமர்ந்து இருந்தால் அவள் . மனமோ நீ செய்தது சரியா என்று ஈட்டியாக கேள்விகளை இறக்க . 

 

அவளோ அவன் செய்தது மட்டும் சரியா ? என்று அவளும் கேள்விகளை அடுக்க . 

 

வலிதான் என்று தெரிந்தும் சென்று விழுந்தாள் தான் . அதன் காரணமாகத்தானே இப்போது வலியை சுமந்து கொண்டு அங்கிருந்து செல்கிறாள் . 

 

தொடரும் ....

 

படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா 

 

Review please 🙏

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top