தளிர் - 28
அன்று எப்போதும் போல் காலை வேலை அலுவலக கேண்டீனில் தொடங்கியது . இதழோ அன்றைய பணிகள் கண்காணித்து கொண்டிருக்க . அப்போது கேன்டீன் உள் நுழைந்த நபர்களோ தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருக்க .
இதழோ அதை கண்டும் காணாமல் இருக்க . அவள் காதையும் வந்தடைந்தது அவர்கள் பேசும் கிசுகிசுப்பு .
அவர்களோ
" ஏய் உனக்கு தெரியுமா நம்ம சாருக்கு அந்த பொண்ணுகூட கல்யாணம் ஆகப் போகுதாம்,.."
அவரோ
" எந்த பொண்ணு கூட "
என்று வேலை பார்த்தபடி கேட்க .
"அதான் இப்போ கொஞ்ச நாளா ஒரு பொண்ணு நல்லா சிவப்பா ,அழகா வருதே அந்த பொண்ணு தான்....
" அது அவரோட பார்ட்னர் பெண்ணாம் , அவரும் எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டாராம் , இன்னும் கொஞ்ச நாள்ல நிச்சயமா , அப்புறம் கல்யாணமா ... "
என்று தங்களுக்கு தெரிந்ததை பேசியபடி இருக்க.
தென்றலோ அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்தாலும் அவள் கண்டும் காணாமல் தன் வேலையை செய்து கொண்டிருக்க. அவளும் கவனித்து கொண்டுதான் இருக்கிறாள் அல்லவா . இதோ இப்போது கூட அவளுடன் அவன் சிரித்து பேசி சென்று கொண்டிருக்கிறான் தான் ஆனால் அவளால் என்ன செய்துவிட முடியும் . அவளும் ஒரு பார்வையுடன் அனைத்தையும் கடந்து செல்ல .
அவள் முகமாற்றத்தை கண்ட கனகாவோ
இதழ் என்று அவள் தோளை தொட
அவளோ சட்டென தன் முகத்தை மாற்றி கொண்டவளோ
"என்ன அக்கா "
என்று தன் வலியை சிரிப்பில் மறைத்தபடி கேட்க .
அவரோ
" ஏன் இதழ் இப்படி இருக்க , நீ கொஞ்ச நாளா சரியே இல்லை "
என்று கவலையுடன் கேட்க .
அவளோ
" எதுவும் இல்லை அக்கா , கொஞ்சம் தலைவலி அதான்"
என்று சமாளிக்க முயல .
அவரோ
" தலைவலியாக இல்லை வேற வலியா "
என்று சரியாக அவள் நாடி பிடித்து கேட்க .
இதழோ எதுவும் சொல்லாமல் அவரை ஒரு பார்வை பார்த்தபடி அங்கிருந்த அகல .
போகும் அவளையே ஒரு வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவர் .
மெதுவாக நடந்து சென்ற இதழோ கேன்டீன் பின் பக்கம் சென்று சிறு இடத்தில் சென்று அமர்ந்தவளோ
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருக்க.
அவளது மனசாட்சியின் பிம்பமமோ அவள் முன் கைகட்டி நிற்க .
இதழோ
" நிமிர்ந்து பார்த்தவளோ என்ன நீயும் என்ன உன் பங்குக்கு காயப்படுத்த போறீயா "
என்று விரக்தி குரலில் வினவ .
அதுவோ
" ஹஹஹா என்று சிரித்தபடி நான் ஏன் உன்னை காயப்படுத்துனும் அதான் நீயே காயப்பட்டு இதோ இப்போ இங்க இருக்கியே "
என்று அவள் அருகில் வந்தமர .
அவளின் உதட்டில் ஒரு விரக்தி புன்னகை
" இதழோ நீ சொல்றதும் சரிதான் காயப்பட்டு தான் உட்கார்ந்து இருக்கேன்"
என்று கூற.
மனமோ " பேசாம அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம் இல்லை "
என்று கேட்க.
இதழோ
" என்னத்தை சொல்ல சொல்ற , அதான் தெள்ளத் தெளிவா எல்லாம் இருக்கே இனிமே கேட்க பண்ண என்ன இருக்கு"
என்று சற்று குரலில் கடினம் கூடி வர .
"அதுவோ நீ அப்படி நடந்து இருக்கும் நினைக்கிறீயா? "...
என்று கேள்வி எழுப்ப .
இதழோ எதுவும் சொல்லாமல் மெளனம் சாதிக்க .
" சரி அதை விடு இப்போ நடக்கிறதாவது தெரியுதா இல்லையா அவருக்கு கல்யாணம் ஆகப் போகுதாம் , இப்போ என்ன பண்ண போற " ....
இதழோ
" எனக்கு ரொம்ப சந்தோஷம் , என்னால அவரு பாதிக்கப்பட்டது போதும் , வேற ஒரு வாழ்க்கை அமையுது அப்படின்னா எனக்கு ரொம்ப சந்தோஷம் "
என்றவளது குரலோ சற்று உள் ஒடுங்கி வர .
மனமோ
" அப்போ உண்மையா உனக்கு இதுல சந்தோஷம் தான் இல்லையா ? அப்போ அன்னைக்கு அவர் வீட்டுல நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தீங்களே அதுக்கு என்ன சொல்ல போற"
என்று அவளையே ஆழ்ந்து நோக்க .
இதழோ அது அது ஏதோ தெரியாம நடந்தது தடுமாறியபடி கூற .
அதுவோ
" தெரியாம நடந்ததா ? இல்லை உன் விருப்பப்படி நடந்ததா ? ஏன்னா அவரை நீ எப்படி வேணாலும் உன்கிட்ட இருந்து விலகி இருக்கலாம் , ஆனா நீ விலக்கலயே ஏன் ? "என்று கேள்வி கேட்க.
அவளோ "
ஆமா விலக்குல தான் என்ன பண்ண சொல்ற , அவரு செஞ்சது தப்புன்னாலும் என் மனசுக்கு அவரை வெறுக்க தோணலயே "
என்றவளுக்கோ கண்ணீர் வழிந்தோட .
மனமோ அப்போ இன்னும் உன் மனசுல அவரு இருக்காரு அப்படித்தான என்று கேள்வி எழுப்ப .
" இதழோ ஆமா ஆமா ஆமா இருக்காரு இருக்காரு , இப்பவும் ,எப்பவும் அவரு மட்டும் தான் , அதான் அந்த மனுசனால ஒரு உயிரே போயிருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் நான் அவர வெறுக்கல , வெறுக்கவும் முடியாது ,
"போதும் அவருக்கான தண்டனைய நான் போதுங்கிற அளவு கொடுத்துட்டேன் .
இனியாவது அவரு சந்தோஷமா இருக்கட்டும் , நான் இனிமே அவருக்கு வேண்டாம் ..."
என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து எடுக்க .
மனமோ
" அதான் தண்டனை கொடுத்தாச்சு இல்லை அப்புறம் மறுபடியும் ஏன் நீ சேர்ந்து வாழக் கூடாது"...
என்று வினவ .
இதழோ வலி நிறைந்த ஒரு சிரிப்பை உதிர்த்தவளோ அங்கிருந்த எழுந்து செல்ல .
அதன் பின் செழியனும் சரி , இதழும் சரி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்பதை பார்த்துக் கொள்ள இருவரும் விரும்பவில்லை என்றே கூற வேண்டும் .
அன்று எப்போதும் போல் வேலை முடிந்து மாலை தனது வீட்டிற்கு செல்லும் பேருந்துக்காக காத்திருக்க ,மழை வருவது போல் வானம் உருட்டிக் கொண்டிருக்க . இதழோ சற்று பதட்டத்துடன் பஸ் வரும் சாலையை பார்த்தபடி இருக்க . அந்த இடத்தில் அவளை தவிர வேறும் யாரும் இல்லை காரணம் அனைவரும் நாளை விடுமுறை என்பதால் நேரமாக கிளம்பி சென்று இருக்க . இதழ் மட்டுமே மற்ற பணிகள் அனைத்தும் முடித்து கிளம்ப இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது .
மழையும் கொட்டத் தொடங்க அவளோ அங்கிருந்த நிழற்கூடத்தின் உள் நுழைந்து நின்று கொள்ள .
அப்போது ஒரு கார் அவள் முன் வந்து நிற்க அவளோ யார் என்பது போல் பார்க்க. உள் இருந்து சில முகமூடி அணிந்த நபர்கள் இறங்கி வர . இதழுக்கோ சற்று பயம் ஏற்பட . வந்தவர்களோ அவள் என்ன என உணரும் முன் அவள் முகத்தில் மயக்க மருந்து கொண்ட துணியை மூஞ்சில் வைத்து அழுத்த . இதழோ மயங்கி சரிய . அவர்களோ அவளை தூக்கி தாங்கள் வந்த காரில் கிடத்தி அங்கிருந்து பறக்கத் தொடங்க .
சிறிது நேரம் கழித்து கண்விழித்த இதழோ தான் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் சற்று பயத்துடன் சுற்றியும் பார்வையை சுழலவிட .
அப்போதும் ஒரு காலடி சத்தம் கேட்க . அங்கு வந்த நபரை கண்டவளோ அதிர்ச்சியுடன் நீயா என்பது போல் பார்க்க.
அவனோ ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் அவள் அருகில் வந்தவனோ அவள் முன் இருந்த இருக்கையில் அமர .
இதழோ
" ஏய் இப்போ எதுக்கு என்னை இங்க கொண்டு வந்து வச்சிருக்க"
என்று கோபத்தில் சீற.
அவனோ ஹாஹா ஹாஹா என்ற சிரிப்புடன் வேற எதுக்கு எல்லாம் அதுக்குத்தான் என்று கண்ணடிக்க.
இதழோ அவன் முகத்தை பார்க்க முடியாமல் ச்ச்சீ என்று திருப்பிக் கொள்ள .
முக மாற்றத்தை கண்ட அவளது சித்தியின் தம்பியான பாலனோ
" என்னடி முகத்தை சுளிக்கிற, என்னுமோ நீ மட்டும் தான் இந்த ஊர்ல இருக்க பொண்ணு மாதிரி அந்த கம்பெனி முதலாளி , ஹான் அவன் பேர் என்ன செழியன் உன்னை அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல கைப்பிடிச்சதுக்கே என் கையை உடைச்சுட்டான் , இப்போ உன்னை முழுசா தொட போறேன் இப்போ என்னடி பண்ணுவான"
என்று சீற .
இதழுக்கோ இந்த செய்தி புதிது தான் , அன்றைய தினத்திற்கு பிறகு இவன் அவள் கண்ணில் படவே இல்லை , அவள் சித்தி கூட அவனை காணாமல் போனை போட்டு எடுக்கவில்லை என்று திட்டிக்கொண்டிருந்தாள் அல்லவா . அதற்கான காரணம் இப்போது தானே விளங்குகிறது .
பாலனோ " என்னடி உன்னை தொட்டா அவனுக்கு என்ன வந்தது , என்னுமோ அன்னைக்கு ஒவ்வொரு அடியும் அடிக்கும் போது அவளை தொடுவியா ? அவ பக்கம் போவியா ? சொல்லி சொல்லி அடிக்கிறான் , அதுக்குதான் இவ்ளோ நாள் காத்திருந்து உன்னை தூக்கினது.
என்றபடி வெறியுடன் அவளின் புடவையில் கைவைக்க.
இதழோ கைகள் கட்டி இருப்பதால் எதுவும் செய்ய முடியாமல் அவன் முகத்தில் காறி தூதூ என்று துப்பியவளோ.
கால்களால் ஓங்கி அடிவயிற்றில் ஒரு மிதி மிதித்து தள்ளியவளோ , மெதுவாக எழுந்து கொள்ள .
அவனோ அவள் உதைத்தால் அடிவயிற்றை பிடித்தபடி வலியில் கீழே விழுந்து விட .
இதழோ தன் கையை அசைத்து அசைத்து கைகட்டை கழட்டியவளோ , அங்கு வலியில் துடித்துக் கொண்டிருந்த பாலன் அருகில் சென்றவளோ
அவன் சட்டையை இழுத்து எடுத்து
நானே உன் கையை உடைச்சு எடுத்து இருப்பேன் , போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஓவரா போற , கொன்னு புதைச்சுடுவேன்டா நாயே என்று பெண் சிங்கமாக கர்ஜிக்க .
அவனை கீழே தள்ளியபடி நிமிர்ந்து பார்க்க அவள் முன் மேலும் இரண்டு நபர்கள் அவளையே பார்த்தபடி இருக்க . இதழுக்கோ சற்று அதிர்வு தான் என்றாலும் தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவளோ அவர்களை நோக்கி திமிரான பார்வை பார்க்க.
கீழே வலியில் துடித்துக் கொண்டிருந்த பாலனோ
"டேய் அவள பிடிச்சு கட்டி போடுங்கடா ,என்ன பார்த்திட்டு இருக்கீங்க "
என்று கத்த . அதன் பின்னே அவர்கள் இதழின் அருகில் வர .
" ஏய் கிட்ட வந்தீங்க , அவ்வளவு தான் என்றபடி சுற்றி ஏதாவது அடிக்க இருக்கிறதா"
என்றபடி ஆராய .
அவளை நோக்கி வந்தவர்களோ கையை எட்டி பிடிக்க .
இதழோ பிடித்தவன் கையை சுழற்றி அவன் முதுகு பக்கம் கொண்டு வந்து அவன் முதுகில் ஓங்கி நாலு குத்து வைத்தவளோ அவன் முதுகில் ஒரு உதை உதைத்து கீழே தள்ளி விட .
மற்றவனை பார்க்க அவனும் சற்று அரண்டு போய் இருந்தாலும் அவளை பிடிக்க வர அப்போது எங்கிருந்தோ வந்த கட்டை ஒன்று அவன் தலையை பதம் பார்க்க.
அவனோ ஆஆஆ என்ற அலறலுடன் தரையில் விழ.
தென்றலோ திரும்பி யார் என்று பார்க்க அங்கு நின்று இருந்தது என்னவோ செழியனும் கதிரும் தான் . செழியனும் கதியும் அப்போதுதான் அலுவலகம் முடிந்து இருவரும் காரில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்திருக்க அப்போது பஸ்ஸடாப்பில் இருந்த இதழை யாரோ நான்கு பேர் தூக்கி செல்வதை கண்ட செழியனோ அவர்களை தொடர்ந்து வந்தனர் .
கதிரோ வாயை பிளந்தபடி இதழை பார்த்துக் கொண்டிருக்க .
செழியனோ அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி அங்கிருந்த செல்ல .
கதிரரோ மனதில் இந்த பொண்ணுக்கு என்னா தைரியம் அசால்ட்டா அவனை அடிச்சு போட்டிருச்சு என்று அங்கு இன்னும் வலியில் சுருண்டு கிடந்தவனை பார்த்தபடி. நினைக்க .
செழியனோ டேய் என்று கதிரை அழைக்க .
கதிரோ என்ன என்பது போல் பார்க்க.
அவனோ இதழை பார்க்க.
அவன் சொல்ல வருவது புரிந்த கதிரோ .அங்கு செழியனை பார்த்தபடி இருந்த இதழிடம் சென்றவனோ
எம்மா இப்போ நீ ஓகே தான என்று அவளை ஆராய்ந்தபடி கேட்க .
இதழோ ஆம் என்பது போல் தலையாட்டியவளோ அங்கிருந்து நடக்கத் தொடங்க.
கதிரோ இது உனக்கு தேவையா ? பாரு அந்த பொண்ணு கூட இதுக்கு மேல உனக்கு பதில் சொல்ல முடியாதுடா போய்டுச்சு என்று அவன் மனசாட்சி காறி துப்ப.
இதழோ செழியனின் காரை கடந்து செல்ல , அவள் கைபிடித்து தன்னை நோக்கி இழுக்க.
இதழோ திடுக்கிட்டு அவனை பார்க்க.
செழியனோ கார் ல ஏறு என்று கூற .
இதழோ
" எனக்கு போக தெரியும் சார் ,நீங்க போங்க என்று கடுப்புடன் கூறியவளோ ...
அவன் கையில் இருந்து தன் கையை உருவி எடுத்து அங்கிருந்து நடக்கத் தொடங்க .
செழியனோ கோபத்தில் பல்லை கடித்தபடி , அவள் பின்னே சென்றவனோ அவள் இடையில் கைகொடுத்து தூக்கி காரில் போட்டபடி காரை எடுக்க போக .
கதிரோ " டேய் டேய் இருடா .....
என்றபடி ஓடும் காரில் அவசர அவசரமாக ஏறிக் கொண்டவனோ , இருவரையும் மாறி மாறி பார்த்தபடி வர .
அவள் வீடு வந்ததும் அவள் இறங்கி சென்றுவிட .
கதிரோ காரை ஓட்டியபடி இருந்த செழியனை கண்டவனோ
" ஆமா அந்த பொண்ணுக்கு கராத்தே தெரியும் அப்படிங்கிறது உனக்கு எப்படிடா தெரியும் "
என்று தன் சந்தேகத்தை கேட்க .
செழியனோ "
அவளுக்கு சொல்லி கொடுத்தது நான் தான்டா "
என்றபடி கேட்டை தான்டி வீட்டின் உள் கார் நுழைய .
கதிருக்கோ இது அதிர்ச்சியை கொடுக்க .அதன் பின் எதுவும் கூறாமல் அவன் உள்ளே சென்று விட .
அடுத்த நாள் எப்போதும் போல் விடிந்தது . அன்று வேலைகள் முடித்த பின்னர் எப்போதும் அலுவலகம் செல்லத் தயாராகி சென்றுவிட .
அவளது சித்தி வள்ளியோ எப்போதும் போல் அவள் செய்த வைத்த உணவினை முழுதாக தின்று தீர்த்துவிட்டு எப்போதும் போல் அடுத்த வீட்டுடன் அரட்டை அடிக்க சென்று விட .
அப்போது அங்கிருந்த அண்டை வீட்டு பெண்களோ அங்கிருந்த ஒரு வீட்டின் முன் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க .
" ஏன்டி கமலா இந்த வள்ளி வீட்டுல இருக்காலே அவ பேரு என்ன"
என்று கேட்க .
அவளோ " அவ பேரு ஏதோ இதழோ இதழினியோ செல்விக்கா ஏன் கேட்குற" .
அந்த செல்வியோ
" அதுவாடி அவ இருக்காளே தினமும் ஒருத்தனோட வந்து இறங்கிறாடி , தினமும் ஒரு கார் வருது , அவள கூட்டிட்டு போகுது , அன்னைக்கு கூட யாரோ ஒருத்தன் சிரிச்சு சிரிச்சு அவகிட்ட பேசிட்டு இருந்தான் , அவளும் அப்படி பல்லை காட்டி காட்டி பேசுறா "
என்று இல்லாத இரண்டு பிட்டையும் சேர்த்து போட .
கமலாவோ
" என்னக்கா சொல்ற , அவ அப்படிலாம் கிடையாதே , அப்டி இருந்தாலும் நம்ம வள்ளி சும்மா இருக்காதே" என்று கூற .
செல்வியோ " அட நீ ஏன்டி இது எல்லாம் அவளுக்கு தெரிஞ்சா நடக்கும் தெரியாம தானே இது எல்லாம் நடந்து இருக்கும் , என்று சொல்லி முடிக்கும் முன் அங்கு வந்த வள்ளியோ
என்ன நடந்து இருக்கும் என்றபடி வள்ளி அவர்களின் கூட்டணியில் வந்த அமர .
செல்வியோ என்ன வள்ளி அக்கா உங்க வீட்டுல நடக்கிறது எதுவும் உனக்கு தெரியல போல இருக்கே என்று ஒரு நக்கல் கலந்து குரலில் கேட்க .
வள்ளியோ என்ன செல்வி சொல்ற கொஞ்சம் புரியும் படியா சொல்லேன் என்று கூற .
கமலாவோ நான் சொல்றேன் வள்ளி என்று செல்வியிடம் கூறியதை விட மேலும் இரண்டு விஷயங்களை சேர்த்து ஒன்றுக்கு இரண்டாக திரித்து கூற .
வள்ளிக்கோ கடும் சினத்துடன் , கடும் கோபம் கொப்பளிக்க
அவ இன்னைக்கு வரட்டும் அவளுக்கு இருக்கு கச்சேரி , அவ இப்படி மினுக்கிட்டு போறது எல்லாம் இதுக்குதானா என்று பல்லை கடித்தபடி அங்கிருந்து செல்ல .
போகும் அவரை பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இன்றைய பங்கு முடிந்தது என்பது போல் அடுத்த வீட்டின் பேச்சிற்கு தாவிவிட .
தொடரும் ...
படிக்கிறவங்க follow me please ☺️ 🙏 🙂
Review please 🙏
