தளிர் -29
மாலை நேர சூரியன் மறைந்து இரவின் பணி இனிதே துவங்கி விட , இதழோ பணி முடிந்து வீட்டின் உள் நுழைய.
அவளை கண்ட அவளது சித்தி வள்ளியோ
வாடி , வாடி எவன் கூட ஊர் மேஞ்ட்டு வர என வந்த உடனே ஏக வசனத்தில் தனது அர்ச்சனைகளை ஆரம்பிக்க .
இதழோ சித்தி என்ன சொல்றீங்க என்று எதுவும் புரியாமல் அவள் கேட்க .
அவரோ என்னடி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற , அதான் நீ மினுக்கிட்டு எவன் எவன் கூடயோ போறது , வரது எல்லாம் இந்த தெரு முழுக்க தெரிஞ்சு போச்சே , இன்னும் என்னடி மறைக்க பாக்கிற என்று கத்த .
இதழோ சித்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை , யாரோ எதுவோ சொன்னாங்க அப்படிங்கிறதுக்காக நீங்க இப்படி கேட்கலாமா ? என்ன பத்தி உங்களுக்கு தெரியாத சித்தி என்றவளது குரலோ சற்று வருத்த்தோடு வர .
வள்ளியோ அதுதான்டி எனக்கு தெரியல இத்தனை நாளா நீ வேலைக்கு போறேன் போறேன் , எவன் கூட ஊர் மேஞ்சிட்டு வந்தியோ எவனுக்கு தெரியும் , இனிமே நீ இங்க இருக்க கூடாது கிளம்பு என்று அவளை வீட்டை விட்டு துரத்த பார்க்க.
அப்போது காலேஜ் முடிந்து வீட்டின் உள் நுழைந்த தமழோ
அம்மா இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க, நீ போடுற சத்தம் அந்த தெரு வைக்கும் கேட்குது என்று உள்ளே வர .
வள்ளியோ நீ கம்முன்னு இரு , என்றவரோ இதழ் பக்கம் திரும்பியவரோ முதல்ல நீ இங்க இருந்து வெளிய போடி என்று அவள் கையை பிடித்து இழுக்க .
தமிழோ அம்மா உனக்கு என்ன பைத்தியமா ? ஏன் இப்படி பண்ற , எதுக்கு அக்காவ வீட்டை விட்டு அனுப்ப பாக்கிற என்று இதழின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க .
வள்ளியோ தமிழு இதுக்குள்ள நீ வராத, இப்போ தான் இவள பத்தி எனக்கு எல்லாம் தெரிஞ்சுது , இவ இங்க இருந்தா நம்மளுக்குதான் அசிங்கம் என்று சீற .
தமிழோ அம்மா என்ன தெரிஞ்சுது உனக்கு , என்று கேட்க .
அவரோ அனைத்தையும் கூற .
தமழோ அம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா , யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா? அதுங்க எல்லாம் எப்ப யார் குடும்பத்தை கெடுக்கலாம் பார்த்துட்டு இருக்க கேஸ்ங்க அதுங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நீயும் நம்பி அக்காவ வந்து இப்படி பேசிட்டு இருக்க என்று அவள் கோபத்தில் கத்திக் கொண்டு இருக்க .
வள்ளியோ ஆமாடி ஆமா அவங்க சொல்றது எல்லாம் பொய்ன்னா இதோ இப்போ கூட ஒருத்தன் கூட கார்ல வந்து இறங்கினாலே அதுக்கு என்ன பதில் சொல்ல போற .
இதழோ எதுவும் சொல்ல முடியாமல் தவிக்க .
தமிழோ அம்மா அது அவ கூட வேலை செய்றவங்க யாராவது இருக்க மாட்டாங்களா , ஏன் அம்மா உன் புத்தி இப்படி போகுது என்று அவரை ஒரு பக்கம் சாட .
அதுலாம் எனக்கு தெரியாது அவ இப்போ இங்க இருந்து போய் தான் ஆகனும் என்று விடாப்பிடியாக இருந்தவரோ அவளை வெளியே தள்ளி கதவை அடித்து சாத்த .
இதழுக்கோ ஒன்றும் புரியா நிலை , என்ன செய்தேன் நான் , ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை , தன் குடும்பம் என்று நினைத்தவர்கள் இன்று துச்சமாக தூக்கி எறிந்துவிட்டார்களே என்று நினைக்க நினைக்க மனதில் ஏதோ இனம் புரியாத வலி ஏற்பட . அந்த வீட்டையே சிறிது நேரம் வெறித்தபடி இருந்தவளோ வீட்டின் உள் தழிழ் அவரிடம் சண்டையிடுவதும் அவர் அதற்கு அவளிடம் அவர் மல்லுக்கட்ட.
வெளியில் இருந்த இதழுக்கு அனைத்தும் உடைந்த உணர்வு இருந்த ஒரு பாதுக்காப்பான இடமும் கைவிட்டு போனது , இனி அடுத்து எங்கு செல்வது என்று யோசித்தபடி கண்களில் கண்ணீர் வழிய இருட்டில் மெதுவாக நடந்து சென்றவளோ அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து கொள்ள .
அவள் எண்ணம் முழுவதும் அடுத்து எங்கு செல்வது என்று உழன்று கொண்டு இருக்க . அப்போது அருகில் யாரோ அமர்வது போல் இருக்க .
சட்டென திரும்பி யார் என பார்க்க . அருகில் செழியனோ கையில் போனை பார்த்தபடி அமர்ந்து இருக்க .
அவளோ அவனை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்க . அவள் கையை சட்டென தன்னை நோக்கி இழுத்தவனோ காரை நோக்கி கண் காட்ட .
அவளோ முதல்ல கைய விடுறீங்களா , எதுக்கு இப்படி பண்றீங்க என்று அவனிடம் இருந்து விடுபட போராட.
செழியனோ இப்போ எதுக்குடி ரொம்ப பண்ற , வா வந்து கார்ல ஏறு என்று தரதரவென இழுத்து சென்று காரின் உள் தள்ளியவனோ காரை வேகமாக எடுக்க .
இதழோ இப்போ எங்க கூட்டிட்டு போறீங்க , என்று அவனிடம் சீற .
செழியனோ இப்போ எதுக்குடி கத்திட்டு இருக்க , வேற எங்க வீட்டுக்குத்தான் என்றபடி காரை வீட்டை நோக்கி செலுத்த.
இதழோ நான் எங்கயும் வரல , முதல்ல காரை நிறுத்துங்க , உங்கள பார்க்கவே எனக்கு பிடிக்கல, என்று ஏதே ஏதோ அவள் அவனிடம் பேச .
ஏய்ய்ய்ய்ய்ய் .............. என்று ஒரு அதட்டல் அவனிடம் இருந்து வர .
அவளோ அவன் அதட்டலில் சற்று பயந்து அவன் பக்கம் திரும்ப .
செழியனோ மூச் இனி வாய் பேசுன அவ்வளவு தான் என்றபடி கார் ஓட்ட .
இதழோ அதன் வாயை திறக்காமல் அமைதியாக அமர்ந்து கொள்ள .
சிறிது நேரம் கழித்து அவன் வீடும் வந்துவிட . இதழோ இறங்காமல் காரில் அமர்ந்து இருக்க .
செழியனோ இப்போ இறங்கி வரப்போறீயா இல்ல என்று குரலில் ஒரு அழுத்தம் கூட்ட.
இதழோ அவனை முறைத்தபடி இறங்கி கொண்டவளோ வீட்டை நோக்கி நடக்கத் தொடங்க .
செழியனோ அவளையே ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி வீட்டின் உள் நுழைய.
உள் நுழைந்தவளோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள .
செழியனோ சாப்பிட்டியா இல்லையாடி எதாவது வாங்கிட்டு வர சொல்லவா என்று போனை எடுக்க.
இதழோ ஆமா கொஞ்ச விஷம் வாங்கிட்டு வர சொல்லு குடிச்சிட்டு நான் ஒரே அடியாக செத்து போறேன் என்று கோபத்தில் அவனிடம் கத்த .
செழியனோ நீ மேல் சொல் என்பது போல் அவளையே அழுத்தமாக பார்க்க.
இதழோ உங்களாலத்தான் இப்போ நான் நடுத்தெருவில நிக்கிறேன் , ஏன் இப்படி ,நான் நிம்மதியாவே இருக்க கூடாது அப்படிதான் இல்லை என்று அழுகை வெடிக்க தயாராக.
செழியனோ ஆமாடி நான் தான் காரணம் ,உன் சித்தி உன்னை வீட்டை விட்டு அனுப்ப நான் தான் காரணம் , என்று கூற.
இதழோ அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்க்க.
ஹாஹாஹா ....
என்ற சிரிப்புடன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவனோ
ஆமா உன்னை வீட்டை விட்டு துரத்தலனா நீங்க அந்த வீட்டுல இருக்க முடியாது சொன்னேன் அதே போல செஞ்சுட்டாங்க என்று அவள் தோளை சுற்றி கைகளை போட .
அவளோ ச்ச்சீ உங்களுக்கு இது அசிங்கமா இல்லையா , இப்படி பண்றதுக்கு என்று சீற .
செழியனோ நான் ஏன்டி அசிங்க படனும் , நான் இப்படிதான் பண்ணுவேன் என்று அவளிடம் நெருங்கி வர .
இதழோ அவனை உதறி தள்ளியவளோ அங்கிருந்த வெளியே செல்ல பார்க்க
ஹலோ மேடம் நீ எங்க போனாலும் இது தான் நடக்கும் என்று அமர்த்தலாக கூற .
இதழோ ஒரு கடுப்புடன் அங்கிருந்த ஒரு அறையில் நுழைந்து கதவை அடைத்து கொள்ள .
போகும் அவளையே ஒரு நக்கல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த செழியனோ கதிருக்கு போன் போட .
என்னடா ஆச்சு இப்போ எதுக்கு இதழோட சித்தியை போலீஸ்ல பிடிச்சு குடுக்க சொன்ன என்று கேட்க.
செழியனோ அதுலாம் ஒரு காரணமாதான் என்று கூற .
அவனோ அதுதான் என்ன காரணம் சொல்லி தொலையேன் என்று கடுப்புடன் கேட்க.
செழியனோ பின்ன என் பொண்டாட்டிய தப்பா பயன்படுத்த பாத்தா நான் சும்மா இருப்பேனா அதான் அதை பிடிச்சு மெரட்டி விட்டேன் . இதுக்கு மேல் இவளை வீட்டுல வச்சிருந்த நாம மாட்டிப்போம் பயந்துட்டு ஏதே ஏதோ சொல்லி அவளை விரட்டி விட்ருச்சு , நானும் இதுதான் சமயம் பார்த்து போலீஸ் ல பிடிச்சு கொடுக்க சொல்லிட்டேன் என்று கோபத்துடன் கூற .
கதிரோ என்னது பொண்டாட்டியா இது என்னடா புது கதை என்று அதிர்ச்சி மேலிட கேட்க.
செழியனோ அதுலாம் பழைய கதை , அதை விடு , முதல்ல அந்த வேலைய முடிச்சிட்டு அந்த பொண்ணு தமிழ் எதாவது ஹாஸ்டல் பார்த்து சேர்த்து விட்ரு என்று போனை வைக்க போக .
கதிரோ அதுலாம் சரிடா இது எப்படி உனக்கு தெரிஞ்சது என்று கேள்வி எழுப்ப ..
செழியனோ அதுலாம் அப்படிதான் அவள சுத்தி என் பார்வை எப்பவும் இருந்துட்டே இருக்கும் , என்றவனோ அவள் இருக்கும் அறையை பார்த்தபடி கூற.
கதிரோ அப்போ அவங்க தங்கச்சியும் உன் கூடவே கூட்டிட்டு போய்ட வேண்டியது தான என்று கேட்க வரும் முன் போன் கட்டாகி விட .
கதிரோ ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டு இருக்க .
அவன் அருகில் இருந்த தமழோ அழுது கொண்டிருக்க , அவளை பார்க்கவும் சற்று பாவமாகத்தான் இருந்தது . எந்த பெண்ணால் தாங்கி கொள்ள முடியும் ஒரு தாய் இப்படி ஒரு ஈனச் செயலை செய்திருக்கிறார் என்று .
கதிரோ எம்மா உனக்கு பிரண்ட்ஸ் இந்த மாதிரி யாராவது , இல்ல வேற சொந்த பந்தம் யாராவது இருக்காங்களா என்று கேட்க .
அவளோ இல்லை என்று அழுதபடி தலையாட்ட . அவனுக்கோ அழுது அழுது முகம் சிவந்து போய் இருந்த தமிழை பார்க்க பாவமாக இருக்க .
என்ன நினைத்தானோ சட்டென அவளை தன் மார்போடு அணைத்து கொள்ள .
தமிழுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டதோ என்னவோ அவளும் அவனோடு ஒன்றுவிட.
ஹாரன் அடிக்கும் சத்தத்தில் தான் இருவரும் பதறி விலக .
கதிரோ அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி நின்று கொள்ள .
தமிழோ தலையை குனிந்து கொள்ள .
பின் தன்னை சமாளித்துக் கொண்டவனோ
எதாவது ஹாஸ்டல் பார்க்கவா என்று கேட்க.
அவளும் தலையை குனிந்தபடி சரி என்பது போல் தலையாட்ட. இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர் .
தொடரும் ...
