தளிர் - 30
இதழ் அவனோடு வந்து சேர்ந்து ஒரு வாரம் கடந்து இருக்கும் , எப்போதும் போல் அவனுடன் அலுவலகம் செல்வது , வருவது என்றிருக்க.
அன்று கேண்டீனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இதழுக்கு அழைப்பு விடுத்தவனோ அவளை அவனது அறைக்கு அழைக்க .
அவளோ இதே வேலையா போச்சு என்று தனக்குள் முணுமுணுத்தபடி அவள் செல்ல .
அங்கு அவனுடன் ஒரு பெண் சிரித்து சிரித்து பேசியபடி இருக்க .
இங்கு இதழுக்கோ கடுப்பு தான் கிளம்பியது . தன் கையில் இருந்த டீ டிரேவை அவனது டேபிள் மீது வைத்தவளோ அங்கிருந்து அகல பார்க்க.
செழியனோ ஹலோ என்று சொடக்கிட்டு அவளை அழைக்க .
அவளோ என்ன என்பது போல் அவனை திரும்பி பார்க்க.
என்ன நீபாட்டுக்கு வந்த , நீ பாட்டுக்கு போற , என்று கடுமையாக அவளிடம் சாட .
அவளோ இப்போ என்ன சார் பண்ணனும் என்று குரலோ ஒரு வித கோபம் கலந்து வர .
செழியனோ மேடம்க்கு டீயை சரியா கலந்து கொடு என்று இருக்கையில் சாய்வாக அமர்ந்தவனோ அவளையே பார்த்தபடி இருக்க.
அவன் முன் அமர்ந்து இருந்த அவனது தொழில் பங்குதாரரின் மகளான அகல்யாவோ அவனையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க .
இதழோ அவனை மனதில் திட்டிக்கொண்டே டீயை கலந்து கொடுக்க.
அகல்யாவின் பார்வை செழியனை நோக்கி இருக்க . இதழோ பாக்கிறா பாரு திங்கிற மாதிரி , மனுசனை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை என்று அவளுக்கு கலந்து கொடுத்தவளோ
ஹிஹிஹிஹி இந்தாங்க மேடம் என்று டொம் என்று டேபிள் மீது வைத்தவளோ. அவன் பக்கம் ஒரு கப்பை எடுத்து செல்ல .
செழியனுக்கோ அவள் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செய்கையிலும் சிரிப்புதான் வந்தது .
அதே நேரம் அகல்யாவிற்கு ஏதோ போன் கால் வர .
செழியனை கண்டவளோ அப்பா தான் செழியன் பேசிட்டு வரேன் என்று சற்று தள்ளி சென்றுவிட .
இதழோ அவன் பக்கம் சென்றவளோ டீயை வைத்து விட்டு நகரும் நேரம் .
அவள் இடையில் ஒரு கிள்ளு கிள்ளி விட .
இதழோ ஹவ் என்ற அலறலுடன் அவனை திரும்பி பார்க்க.
செழியனோ டீயை குடிப்பது போல் கப்பை கையில் எடுத்துக் கொள்ள .
இதழோ அவனை முறைத்தபடி அங்கிருந்து வெளியேற .
அவளை ஒரு பார்வை பார்த்தவனோ தனது போனை எடுத்து யாரோ ஒருவருக்கு அழைப்பு விட்டுக்க .
அந்த பக்கம் போனை எடுத்த நபரோ
சொல்லு செழியா என்று அவனது மற்றொரு நண்பனான ரகு கேட்க .
செழியனோ எங்க ரகு இருக்க என்க .
அவனோ நான் மும்பை ல இருக்கேன் செழியா சொல்லு என்ன விஷயம் என்று கேட்க.
இல்லை உன்னை பாக்கணும் நீ எப்போ வருவ என்றவன் குரலோ சற்று அழுத்தம் கூடி வர .
ரகுவோ இன்னும் ஒரு கொஞ்ச நாள் வந்துடுவேன் செழியா எதாவது முக்கியமான விஷயமா என்று கேட்க.
செழியனோ ஆமா ரொம்ப முக்கியம் நீ வா நான் சொல்றேன் என்று போனை வைத்தவன் கண்களோ கோபத்தில் சிவந்துதான் போனது .
அதே நேரம் அகல்யாவும் அவ்விடம் வர .
அகல்யாவோ ஏதோ சொல்ல வர . செழியனோ இன்னு ஒரு நாள் பேசிக்கலாம் அகல்யா எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு என்று கார் சாவியை எடுத்தபடி அவன் அறையை விட்டு வெளியேறிவிட .
அகல்யாவிற்கோ சப்பென்று ஆனது . போங்க செழியன் நீங்க எங்க போனாலும் எனக்குதான் என்றபடி அங்கிருந்து அகல .
வெளியில் வந்த செழியனோ கார் இருக்கும் இடம் நோக்கி நடந்தபடி இதழுக்கு போனை போட .
அவளோ அதை எடுக்காமல் தனது வேலையை கவனிக்க .
செழியனோ இவளுக்கு கொழுப்பு தான என்று கேன்டீன் உள் புயல் வேகத்தில் நுழைந்தவனோ அவளையே அழுத்தமாக பார்த்தபடி இருக்க .
அவளோ அக்கா இந்தாங்க மெனு , இதை சரி பார்த்துடுங்க என்று தன் வேலையில் கவனமாக இருக்க .
அவனோ
ஏய் இந்தாடி போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ என்று அவள் முன் வந்து நிற்க .
இதழோ சுற்றியும் இருப்பவர்கள் தங்களையே பார்ப்பது உணர்ந்து
எதுக்கு இப்படி கத்துறீங்க , உங்களுக்கு என்ன வேணும் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கோபத்தில் சீற .
நீ போன எடுத்தா நான் ஏன்டி கத்த போறேன் , இப்போ கிளம்பி என்னோட வா என்று அவள் கையை பிடிக்க .
இதழோ அவன் கையை தட்டி விட்டவளோ
நீங்க கூப்பிட்ட உடனே வர நான் ஒன்னும் நீங்க வச்ச ஆளு இல்லை என்றவளோ தன் வேலையில் கண்ணாக இருக்க .
தாடியை தடவியபடி அவளை அழுத்தமாக பார்த்தவனோ நான் வச்ச ஆளு இல்லை தான் ஆனா என் வீட்டுக்காரி தான என்றவனோ அவள் என்ன என உணரும் முன் கைகளில் தூக்கி கொள்ள .
இதழோ அவனிடம் இருந்து திமிறி இறங்க பார்க்க .
ஏய் அமைதியா வரியா இல்லை என்று அவள் முகம் நோக்கி குனிய.
அதன் பின் வாயை திறப்பாலா , அமைதியாகிவிட .
காரில் அவளை அமர வைத்தவனோ காரை எடுக்க .
அவன் புறம் திரும்பியவளோ
என்ன பத்தி யோசிக்கவே மாடிங்கள்ள என்றவளது குரலோ வலியுடன் வர .
செழியனோ நீ என்ன பத்தி யோசிச்சியா என்று அதே போல் அவனும் கேட்க .
சற்று தடுமாறியவளோ முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள .
அவர்கள் வந்து நின்றது என்னவோ ஒரு நகை கடை முன்பு தான் .
அவளோ இங்க எதுக்கு என்பது போல் அவனை பார்க்க.
செழியனோ காற்றில் கலைந்த முடியை சரி செய்தவனோ
என்ன பார்க்கிற , எனக்கு கல்யாணம் கேள்வி பட்டு இருப்பியே அதுக்கு தான் தாலி எடுக்க போறேன் என்று காரில் இருந்து இறங்க .
இதழோ நான் வரல , நீங்க போங்க என்று கோபத்துடன் கூற .
செழியனோ உன்னை யாரு கேட்ட , வாடி என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றவனோ , கடையில் உள் நுழைய .
அங்கிருந்த மேனேஜரோ
சார் சார் வாங்க வாங்க என்று அவனுக்கு ஏக வரவேற்பு கிடைக்க .
செழியனோ ஒரு தலையசைப்புடன் அங்கிருந்த இருக்கையில் அமர .
இதழோ எனக்கும் இதற்கு சம்மந்தம் இல்லை என்பது போல் அமர்ந்து இருக்க .
மேனேஜரோ சார் என்ன பார்க்கறீங்க என்று பவ்யமாக கேட்க .
செழியனோ தாலி பாக்கணும் என்று போனை எடுத்த இந்த டிசைன் வேணும் என்று அவன் காட்ட .
மேனேஜரோ அருகில் இருந்த வேலை செய்யும் பணியாளரை பார்க்க.
அவனோ ஒவ்வொன்றாக எடுத்து காட்ட.
செழியனோ இதழ் என்றழைக்க .
அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க .
இதழ் என்று அழுத்தமாக அழைக்க .
அதன் பின்பே அவள் அவனை திரும்பி பார்க்க.
செழியனோ தாலியை கண்களால் காட்ட .
அவளோ உங்க வருங்கால மனைவியை கேளுங்க சார் என்று வெடுக்கென்று மூஞ்சியை திருப்பி கொள்ள .
செழியனோ என் மனைவிகிட்ட தான் கேட்கிறேன் என்க.
அவளோ வெடுக்கென்று அவனை திரும்பி முறைக்க
செழியனோ அதாவது என் வருங்கால மனைவியை தான் கேட்டிட்டு வந்தேன் சொன்னேன் , நீங்களும் பாருங்க மேடம் என்று அவளிடம் காட்ட.
இதழோ அதுலாம் முடியாது என்றுவிட .
செழியனோ தன்னை குறுகுறு என பார்த்துக் கொண்டிருக்கும் மேனேஜரை பார்த்தவனோ
சார் நீங்க பாருங்க நான் பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று அங்கிருந்தவரை அனுப்பி வைக்க .
அவரும் ஓகே சார் , தம்பி நீயும் வா என்று பணியாளரையும் அழைத்து சென்று விட .
இப்போது இதழ் பக்கம் திரும்பி செழியனோ அவள் இருக்கையை தன் அருகில் இழுத்து போட்டு கொண்டவனோ , இடையை அழுந்த பற்ற .
இதழோ திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தவளோ
என்ன பண்றீங்க என்று சுற்றியும் பார்க்க.
செழியனோ இங்க யாரும் இல்லை , நான் சொல்ற வரை யாரும் வர மாட்டாங்க , இப்போ நாம பார்க்கலாமா என்று தாலியை கண் காட்ட .
அவளோ இவனிடம் மல்லுக்கட்ட முடியாது என்பதை உணர்ந்தவளோ
வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்க .
ஒரு தாலி அவளையும் அறியாமல் ஈர்த்து, தன்னை அறியாமல் எடுத்தும்விட .
செழியனோ இது ஓகே வா என்று அதை கையில் வாங்க .
இதழோ எடுத்து குடுக்க சொன்னீங்க எடுத்து கொடுத்துடேன் , இனிமே தொந்தரவு பண்ணாதீங்க என்று எழுந்து சென்று விட .
செழியனோ அதை வாங்கியபடி காரில் வந்து ஏற .
இருவரும் அடுத்து வந்து இறங்கியது ஒரு உணவகத்தின் முன்பு .
அவளோ எனக்கு பசிக்குல , தயவு செஞ்சு நீங்களே போறீங்களா என்று ஆத்திரம் மேலிட கூற.
அவனோ அதை எல்லாம் எங்கு கேட்டான் . எப்போதும் அவளை இழுத்து வந்து உணவு மேஜையில் அமர வைத்து உணவுகளை ஆர்டர் செய்ய .
இதழோ கையை கட்டியபடி அவனை முறைத்தவாறு அமர்ந்து இருக்க .
செழியனோ சாப்பாட்டை பிசைந்து முதல் வாய் எப்போதும் போல் அவளுக்கு ஊட்ட வர .
இதழோ அவனை முறைத்தபடி வாங்கி கொள்ள .
அதன் பின் இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வர .
மாலையும் நெருங்கி இருந்தது . இருவரும் வீடு வந்து சேர . இதழோ தன் அறையில் புகுந்து கொள்ள .
செழியனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி கதிருக்கு அழைத்தபடி பேசிக்கொண்டு இருக்க .
கதிரோ சொல்லுடா என்று பணி நிமித்தமாக பேசிவிட்டு போனை வைத்து விட .
கதிரின் எண்ணம் முழுவதும் இன்று காலை தமிழ் சொன்ன செய்தியிலயே நிலைத்து இருந்தது .
இருவரும் ஒரு காபி shop ல் அமர்ந்து இருக்க .
சொல்லுமா என்ன விஷயம் என்று கேட்க.
அவள் சொன்ன விஷயத்தை கேட்ட கதிருக்கோ அதிர்ச்சி ஏற்பட.
தொடரும் ....
