Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 26

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 30
Thread starter  

தளிர் - 26 

 

தென்றலோ ஏதோ யோசனையுடன் சமைத்து முடித்தவளோ அனைத்தையும் டேபிள் மீது எடுத்து வைத்துவிட்டு . அந்த ஹாலை சுற்றி பார்க்க அதுவோ நீ என்னை எப்படி பார்த்தாலும் நான் அலங்கோலமாகத்தான் தெரிவேன் என்பது போல் காட்சி கொடுக்க. 

 

பின் தன் புடவை இழுத்து சொருகியவளோ ஒவ்வொன்றாக எடுத்து வைத்து சுத்தம் செய்யத் தொடங்க .

 

என்னா கோவம் வருது இந்த மனுஷனுக்கு , எப்பா எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கி வச்சிருக்காரு , என்று முனங்கியபடி அவள் வேலை செய்ய . 

 

அவள் முனங்கியது அவனுக்கும் கேட்டுவிட .

 

அதுக்கு எல்லாம் காரணம் நீதான்டி , உன்னால தான் இது எல்லாம் என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர .

 

தென்றலோ நானா ?... நான் என்ன பண்ணேன் என்று ஒன்று தெரியாதவள் போல் கேட்டவளோ , தன் வேலையை பார்த்தபடி இருக்க .

 

பாண்டியனோ

 

" சொல்லாம கொல்லாம போனா இப்படி தான் நடக்கும்"

 

தென்றலோ

 

"சரி சாமி இது எல்லாம் என்னால தான் போதுமா நீங்க சாப்பிடுங்க "

 

என்றபடி அவள் கூட்டி பெருக்க தொடங்க .

 

பாண்டியனோ சாப்பாட்டை பிசைந்து முதல் வாய் அவளுக்கு கொடுத்தவனோ அவனும் சாப்பிட தொடங்க .

 

தென்றலோ போதும் நீங்க சாப்பிடுங்க என்றபடி வேலையை முடித்தவளோ , கை கால்களை கழுவி விட்டு வந்தமர .

 

பாண்டியனோ லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க .

 

தென்றலோ சரி நான் கிளம்பறேன் என்றபடி எழுந்து செல்ல தயாராக. 

 

அவனோ

 

" அதான் உன் பாட்டியும் ஊர்ல தான இருக்காங்க அங்க நீ தனியா இருந்து என்ன பண்ண போற , இங்கயே இருடி "

 

என்று கூற.

 

தென்றலோ சிறுது நேரம் யோசித்தவள் சரி என்பது போல் அவன் அருகில் அமர்ந்தவளோ. மீண்டும் அவனிடம் பேசத் தொடங்க.

 

"அதான் கையில அடிபட்டு இருக்குல்ல கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு வேலை செய்யலாம் இல்லை"

 

என்று அவன் ஒரு சில நேரம் வலியும் முகம் சுருக்குவதை கண்டு கூற .

 

பாண்டியனோ

 

"செய்யலாம் தான் ஆனா கொஞ்சம் அவசர வேலை நான் தான் முடிச்சாகனும்"

 

என்றபடி அவன் வேலைக்கு தாவிவிட . 

 

தென்றலோ சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் ஒரு கட்டத்தில் உடல் அசதியால் தூங்கி அவன் தோள் மேல் விழ .

 

பாண்டியனோ தன் தோள் மேல் விழுந்த தென்றலை கண்டவனோ சிரிப்புடன் நன்றாக சாய்த்துக் கொள்ள . 

 

அவன் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாது. சில நேரங்களில் வேலையின் நிமித்தமாக கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது கூட அவனே அவளை வார்த்தைகளால் திட்டு தீர்த்து இருக்கிறான் . சில நேரங்களில் அவளும் அவனுடன் சண்டையிடுவாள் . ஒரு சில நேரம் இருவரும் முகத்தை தூக்கி வைத்து கொண்டும் திரிவார்கள்.  

 

அவள் இருந்து விடுவாள் ஆனால் அவனால் தான் அவளிடம் பேசாமல் , அவள் ஸ்பரிசம் இல்லாமல் இருக்க முடியாது. அடுத்த கணமே யார் தவறு செய்து இருந்தால் என்ன என்பது போல் அவளிடம் கெஞ்சி , கொஞ்சி பேசி சரிகட்டி விடுவான் . 

 

இன்பமும் , துன்பமும் கலந்தது தானே காதல் காலம் . அது போலத்தான் அவர்கள் இருவரது காதலும் நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்தது . அந்த நீரோடையில் பெரும் வெள்ளம் வந்தால் இருவரது உள்ளமும் தாங்குமா ? ....

 

 

 

அன்றைய தினத்திற்கு பிறகு இருவரது நெருக்கமும் மேலும் கூடிப்போனது . எந்த அளவு என்றால் இருவரும் ஒரே அறையில் தங்கும் அளவு . 

 

அன்றும் அப்படித்தான் மதிய நேரம் இருக்கும் அவளோ மதிய உணவை சமைத்து டேபிள் மீது அடுக்கி கொண்டிருக்க.  

 

பாண்டியனோ லேப்டாப்பில் ஏதோ வேலை செய்தபடி இருக்க .

 

வேலை எல்லாம் முடிந்து அவன் அருகில் வந்தமர்ந்தவளோ அவனையே பார்த்தபடி இருக்க .

 

பாண்டியனோ" என்னடி ....

 

என்று பார்வை என்னவோ லேப்டாப்பில் தான் இருந்தது . ஆனால் கேள்வி அவளை நோக்கி இருக்க .

 

தென்றலோ எதுவும் இல்லை என்று தலையாட்ட. 

 

அவள் பக்கம் திரும்பிய பாண்டியனோ 

 

"நீ காரணம் இல்லாம இப்படி பார்க்க மாட்டியே என்னன்னு சொல்லுங்க மேடம்"

 

என்று லேப்டாப்பை அங்கிருந்த டேபிள் மீது வைக்க .

 

அவளோ

 

"அது அது இதுக்கு முன்னாடி உங்களுக்கு எதாவது காதல் , இல்லை யாராவது உங்களுக்கு புரபோஸ் இந்த மாதிரி எதாவது பண்ணி இருக்காங்களா "

 

என்றவளின் குரலோ ஒரு வித தவிப்புடன் வர .

 

பாண்டியனோ என்ன கேள்வி இது என்று புரியாமல் அவளையே பார்க்க .

 

"என்னடி கேள்வி இது , அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே அந்த மாதிரி எதுவும் இல்லன்னு அப்புறம் என்ன "

 

என்று கேட்க.

 

தென்றலோ 

 

"அதுலாம் ஒன்னும் இல்லை சும்மா கேட்டேன் , உங்களுக்கு என்ன எவ்ளோ பிடிக்கும்"

 

என்று ஆசையோடு அவன் கண்களை பார்க்க. 

 

பாண்டியனோ 

" உன்னையா ? ...

உன்ன எதுக்கு எனக்கு பிடிக்கனும்"  

 

என்று ஒரு கிண்டலுடன் அவளை பார்க்க. 

 

தென்றலின் முகமோ வாடிவிட. அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவனோ .

 

" இப்படி வார்த்தையாக எல்லாம் என்னால அளவெடுத்து காட்ட முடியாதுடி , என் கூட வாழ்ந்து தெரிஞ்சுக்கோ என்னோட காதல் அளவு என்னன்னு" 

 

என்று அவள் விழியோடு விழி கலந்தபடி கூற .

 

தென்றலோ எதுவும் சொல்லாமல் அவனை பார்த்தபடி அங்கிருந்து அகல .

 

சிறிது நேரம் கழித்து இருவரும் சாப்பிட அமர . 

 

தென்றலோ எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து அகல பார்க்க. 

 

பாண்டியனோ அவள் கைப்பிடிக்க. 

 

அவளோ என்ன என்பது போல் அவனை பார்க்க. 

 

அவனோ சாப்பிட்டியா ? என்று கேட்க.

 

தென்றலோ

 

" நான் அப்புறம் சாப்பிடுறேன் உள்ள கொஞ்சம் வேலை இருக்குங்க "

 

என்று செல்ல பார்க்க. 

 

பாண்டியனோ 

 

"அதுலாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல உட்கார்ந்து சாப்பிடுடி "

 

என்று தன் அருகில் அமர்த்திக் கொள்ள .

 

தென்றலோ

 

" இன்னும் கொஞ்ச நேரம் தான் நான் அப்புறம் சாப்பிடுறேன்" "ஏங்க இப்படி சாப்பாடு விஷயத்துல மட்டும் இவ்ளோ கண்டிப்பா இருக்கீங்க"

 

என்று சலிப்புடன் கேட்க .

 

 

 

  

 

பாண்டியனோ

 

"நான் அப்படித்தான் ,ஏன்னா சாப்பாட்டோட அருமை தெரிஞ்சவன் நான் , ஒரு நேரம் சாப்பாட்டுக்காக நாய் போல சுத்தி இருக்கேன்டி ,"

 

அதான் என்றவனோ பின் தன்னை சமாளித்துக் கொண்டவனோ தென்றலை நோக்கியபடி ஒரு அதட்டலுடன்  

 

" அப்படி ஒன்னும் நீ வேலை செஞ்சு கிழிக்க வேண்டாம் முதல்ல சாப்பிடுடி"

 

என்று அதட்டியவனோ 

 

சாப்பாட்டை பறிமாறத் தொடங்க. 

 

தென்றலோ

 

" ஏங்க எதுக்கு இவ்ளோ" என்றபடி 

 

அவன் மிரட்டி உருட்டி அனைத்தையும் உண்ட பின்பே அவளை விட்டான் .

 

இப்படியாக நாட்களும் நகர்ந்தது . 

 

இருள் சூழ்ந்த அந்த நடு இரவில் ஒரு உருவமோ மெல்ல மெல்ல நடந்து சென்று அங்கிருந்த அறையில் நுழைந்தது . அதன் கையிலோ ஒரு கேக்கும் அதன் மத்தியில் ஒரு மெழுகுவர்த்தியும் எரிந்தபடி இருக்க .

 

அந்த இருட்டு அறையின் மத்தியில் படுக்கையில் உறங்கி கொண்டிருந்தவனை நோக்கி சென்ற உருவமோ அங்கிருந்த டேபிள் மீது கேக்கை வைத்து விட்டு அவன் அருகில் சென்ற உருவமோ அவனை மெதுவாக தட்டி எழுப்ப .

 

அவனோ கண்கள் திறந்து தன் முன் இருந்த உருவத்தை பார்த்தவனோ 

 

"ஏய் இந்த நேரத்துல என்னடி பண்ற" 

 

என்று தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்தான் பாண்டியன் .

 

தென்றலோ அவன் முன் கேக்கை நீட்ட .

 

அவனோ புரியாமல் "என்னடி இது? கொட்டாவி விட்டபடி கேட்க .

 

தென்றலோ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று புன்னகை முகமாக கூற .

 

பாண்டியனுக்கோ அப்போதுதான் ஒன்று புரிந்தது இன்று தனது பிறந்த நாள் என்பதையே மறந்து போய்விட்டான் அல்லவா .

 

அவனோ ஆச்சர்யத்துடன் விழி அகலாமல் அவளையே பார்க்க. 

 

தென்றலோ

 

" என்ன அப்படி பாக்கிறீங்க , கேக் கட் பண்ணுங்க"

 

என்று அவனிடம் ஒரு கத்தியை நீட்ட .

 

பாண்டியனோ அவள் சொன்னது போல் கேக்கை வெட்ட போக .

 

அவளோ

 

"ஹேய் ஒரு நிமிஷம் முதல்ல மெழுகுவர்த்தியை மனசுல எதாவது நினைச்சுட்டு ஊதுங்க "

 

என்று கண்களில் ஆசையுடன் அவனிடம் கூற .

 

பாண்டியனோ ஒரு சிரிப்புடன் அவள் சொன்னது போல் செய்து விட்டு கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்ட போக .

 

தென்றலோ அதை வாங்கி அவனுக்கு திருப்பி ஊட்டியவளோ 

 

அவனை கட்டி அணைத்துக் கொண்டவளோ

 

"இதுவரைக்கும் உங்களுக்கு கிடைக்காத ஒன்னு இந்த பிறந்த நாளுக்கு அப்புறம் உங்களுக்கும் கிடைக்கும்" 

 

என்று வாழ்த்துக் கூற .

 

பாண்டியனுக்கோ மனதில் ஒரு சொல்ல முடியா உணர்வு , இதுவரை அவனுக்கு யாரும் இப்படி ஒரு பிறந்த நாள் கொண்டாடியது இல்லை அல்லவா ? . அவன் குடும்பத்துடன் இருந்த போது கொண்டாடியது . அதன் பின் இதோ இப்போது தான் . வளர்ந்த பின் அதன் மீது பெரிதாக எந்த ஒரு நாட்டமும் இல்லை . ஆசிரமத்தில் இருக்கும் போது கூட வாழ்த்துக்கள் மட்டுமே கிடைக்கும் . 

 

நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது அல்லவா .

 

பாண்டியனின் விழி என்னவோ தென்றலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது . 

 

அவளோ" என்ன அப்படி பாக்கிறீங்க கேக் பிடிக்கலையா ? அது அவசரத்தில் வாங்கிட்டு வந்தது அதான் நாளைக்கு வேற வாங்கிக்கலாம் "

 

என்று அவனிடம் சிறு கெஞ்சுலுடன் கூற.

 

அவனோ பிடிச்சிருக்கு , ரொம்ப பிடிச்சிருக்கு என்றவனின் குரலோ சற்று கரகரப்பாக வர . 

 

தென்றலோ அவன் முகத்தை பார்க்க அவனோ அவளிடம் தன் முகத்தை காட்டாமல் வேறு பக்கம் திருப்பி கொள்ள .

 

தென்றலோ

 

" ஏய் என்னப்பா ஆச்சு ஏன் குரல் ஒரு மாதிரி வருது "

 

என்று அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்ப பார்க்க. 

 

அவனோ அவள் முகத்தை பார்க்க முடியாமல் தவிர்க்க.  

 

இப்போ" என்ன ஆச்சு ஏன் இப்படி பண்றீங்க "

 

என்று சிறு கவலை நிறைந்த குரலுடன் அவனிடம் கேட்க .

 

பாண்டியனோ

 

 

"ஹேய் ஹேய் எதுவும் இல்லடி எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படி யாரும் பிறந்த நாள் கொண்டாடனது இல்லை .... 

 

அதான் கொஞ்சம் எமோஷ்னல் ஆகிட்டேன் வேற எதுவும் இல்லடி "

 

என்று அவள் முகம் பார்க்க. 

 

தென்றலுக்கோ அவன் அவ்வாறு கூறியதும் ஒரு மாதிரி ஆகி விட . தன்னை சமாளித்துக் கொண்டவளோ அவன் கை பிடித்து மற்றொரு கையால் அவன் கன்னம் தாங்கியவளோ 

 

"இனிமேல் நான் இருக்க வரைக்கும் கொண்டாடுவோம் "

 

என்று கேக்கை அவனுக்கு ஊட்ட .

 

அவனும் அவளுக்கு ஊட்ட அதே நேரம் வெளியே மழை பெய்யும் சத்தம் கேட்க .

 

தென்றலோ புன்னகையுடன் "பார்த்தீங்களா உங்களோட பிறந்த நாளுக்கு அந்த மழையே வாழ்த்து பாட வந்திருக்கு "

 

என்றபடி அந்த அறையின் மற்றொரு பக்கம் கதவை திறந்து மாடிபக்கம் செல்ல .

 

பாண்டியனும் அவளுடன் செல்ல . அங்கு தென்றலோ மழையில் நனையப் போக .

 

அவனோ அவள் கைப்பிடித்து

 

"எங்கடி ஓடுற ,நனைஞ்சா உடம்பு சரியில்லாம போய்டும்டி "

 

என்று தடுக்க பார்க்க. 

 

தென்றலோ 

 

"அதுலாம் எதுவும் ஆகாது நீங்களும் வாங்க"

 

என்று அவன் கையை பிடித்து இழுக்க. 

 

அவனோ

 

"நான் வரலடி நீ வேணா போ , ஆனா பத்து நிமிஷம் தான் "

 

என்றபடி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள .

 

தென்றலோ சிரிப்புடன் மழையில் விளையாடியபடி இருக்க. 

 

பாண்டியனோ அவளை ஒரு புன்னகையுடன் பார்த்தபடி தனது மனம் என்னும் பெட்டகத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைக்க . 

 

தென்றலோ மாடியில் தேங்கி இருந்த தண்ணீரில் குழந்தை போல் குதித்தும், மழை நீரை கைகளில் அள்ளி முகத்தில் தெளித்தும், கண்கள் மூடி கைகள் இரண்டையும் விரித்தபடி குதூகலமாக விளையாடி கொண்டிருக்க. 

 

அவள் அணிந்து இருந்த புடவையை மழை என்ற அரக்கனோ அவளை அப்பட்டமாக நீரில் நனைந்து அவளின் அழகை துகில் உரித்து காட்டிவிட.  

 

கண்கள் இரண்டையும் மூடியபடி இருந்தவளின் இடை சேலை விலகி மழைத்துளி பளிங்கு போன்ற இடையில் மின்னி வளைவில் வழிந்தோட . அதை தடுக்கும் வண்ணம் முரட்டு விரல்கள் ஐந்தும் இடையில் அழுந்த பதிய .

 

தென்றலோ திடுக்கிட்டு கண்கள் இரண்டையும் திறந்து அவனை பார்க்க.  

 

பாண்டியனோ முழுவதும் மழையில் நனைந்ததால் முடி கலைந்து அவள் முகத்தை பார்த்தபடி இருக்க . 

 

முகத்தில் வழிந்த நீரை நெற்றியில் இருந்து மேல் நோக்கி தள்ளியபடி அவளை விழிகளில் ஒரு வித மோகம் கலந்த காதல் ததும்ப ஒரு பார்வை பார்த்தபடி இருக்க .

 

தென்றலும் அவனை விழி எடுக்காமல் பார்க்க.  

 

பாண்டியனோ தன்னோடு நெருக்கி பிடித்து கொண்டவனோ அவள் முகம் மறைத்த முடியை ஓரம் தள்ளியவனோ தண்ணீரில் சிவந்த இருந்த கன்னத்தை தன் விரல் கொண்டு வருட .

 

தென்றலோ அவன் வருடலில் கன்னம் இரண்டும் கூச லேசாக இமை மூடி அவன் கையை விலக்கி விட .

 

பாண்டியனோ அவள் கன்னத்தில் மீசை முடி குத்தி கோலம் போட அழுந்த முத்தமிட. 

 

தென்றலோ அவன் முத்தத்தில் சிலிர்த்து அடங்கியவளோ அவன் கழுத்தை சுற்றி கைகளை மாலையாக கோர்த்துக் கொள்ள . 

 

இருவரும் ஒரு மயக்கம் நிலையில் இருக்க . திடீரென கேட்ட இடி சத்தத்தில் இருவரும் விலகி விட .

 

தென்றலுக்கோ அவன் முகம் பார்க்கவே வெட்கமாகி விட . முகம் சிவந்து அறையின் உள் ஓடி ஒளிந்து கொள்ள . 

 

பாண்டியனோ ராட்சசி என்று ஓடும் அவளை பார்த்தபடி மனதில் ஆசையாக திட்ட .

 

இங்கு அறையின் உள் நுழைந்த தென்றலுக்கோ மனமோ படபடவென அடித்துக் கொள்ள . தன் நெஞ்சில் கைவைத்தபடி தன் படபடப்பை குறைக்க முயல . 

 

அதே நேரம் பாண்டியனும் அறையின் உள் நுழைய . 

 

அவளோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலைபோல் நிற்க .

 

அவளை பார்த்தபடி வந்த பாண்டியனோ 

 

"என்னடி அப்டியே சிலை போல நிக்கிற" 

 

என்று அவளிடம் ஒரு டவலை எடுத்து நீட்ட .

 

தென்றலோ எதுவும் இல்லை என்பது போல் தலையாட்டியவளோ அங்கிருந்த பாத்ரூமில் நுழைந்து துணியை மாற்றத் தொடங்க . 

 

பாண்டியனும் தனது உடைகளை மாற்றியவனோ அவளுக்கும் ஒரு உடையை எடுத்து சென்று கதவை தட்டியவனோ அவளிடம் நீட்ட .

 

அவளோ அதை வாங்க முயல , அவனோ அதை கெடுக்காமல் அவளிடம் போக்கு காட்ட.

 

தென்றலோ

 

" என்னங்க நீங்க குடுங்க குளிருது" 

 

என்று சிணுங்க .

 

அவனோ

 

" சரி சரி நீ சிணுங்கி என்ன சீண்டாத நானே இப்போதான் சரியா இருக்கேன்"

 

என்றபடி அவளிடம் அதை நீட்டியவனோ அங்கிருந்து சென்றுவிட . 

 

சிறிது நேரம் கடந்த பின்னர் வெளியில் வந்த தென்றலோ தயங்கி தயங்கி அவன் முன் வர .

 

பாண்டியனோ போனில் எதையோ பார்த்தபடி இருந்தவனின் விழிகளில் விழுந்தது என்னவோ ஈரம் நனைந்த இரு பிஞ்சு பாதங்கள் மட்டுமே . மெது மெதுவாக விழி நிமிர்த்தி மேல் பார்க்க . 

 

தென்றலோ குளிரில் இருகைகளையும் மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு நடுங்கியபடி இருக்க . அவள் அணிந்து இருந்த மெல்லிய இரவு நேர உடையோ உடலோடு ஒட்டியபடி பெண்ணின் அழகினை வெளிச்சம் போட்டு காட்ட .

 

பாண்டியனோ விழி சிமிட்டாமள் பார்த்தபடி இருக்க. தன் எண்ணம் போகும் போக்கை அறிந்தவனோ தன்னை சமாளித்து கொண்டு 

 

"பேசாம நீ அந்த ரூம்ல படுத்துக்கோடி .....

 

என்றவனின் குரலோ கரகரத்து வர . 

 

தென்றலோ புரியாமல் ஏன் என்பது போல் பார்க்க. 

 

பாண்டியனோ என் அவஸ்தை புரியாம இப்போ தான் எல்லாத்தையும் கேட்கிறா? பாரேன் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவனோ .

 

என்ன சொல்வது என்று தெரியாமல் அவளையே பார்க்க. 

 

தென்றலோ

 

" எப்பவும் நான் இங்க தான இருப்பேன் இப்போ என்ன புதுசா வேற ரூமுக்கு போக சொல்றீங்க , என்றபடி படுக்கையின் ஒரு பக்கம் வந்தமர . 

 

பாண்டியனோ இவ நம்மள நல்லவனா இருக்க விட மாட்டா ? போல . என்று மனதில் நினைத்தவனோ  

 

இது சரிபட்டு வராது என்றபடி அங்கிருந்த சோபாவில் போய் அமர்ந்தவனோ சிறிது நேரம் லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருக்க .

 

தென்றலோ இந்நேரத்தில என்ன வேலை தூக்கம் வரலயா ? என்றபடி அவன் அருகில் நெருங்கி வர .

 

பாண்டியனோ இப்போ எதுக்கு இங்க வரா ? ....

 

அவன் அருகில் அமர்ந்தவளோ , அவன் மடியில் தன் கால் இரண்டையும் நீட்டிக்கொள்ள . அவள் அணிந்து இருந்த நைட்டியோ சற்று மேலேறி அவள் பச்சை நரம்போடிய பிஞ்சு கால்கள் அவன் கண்ணுக்கு விருந்தாக . 

 

பாண்டியனுக்குத்தான் உடலோ அனல் போல் கொதிக்கத் தொடங்கியது . 

 

அவள் என்னவோ இயல்யாகத்தான் இருந்தாள் . 

 

"ஏன்டி இப்படி என்ன இம்சை பண்ற , இது உனக்கே நல்லா இருக்கா , இப்படி ஒரு டிரஸ் ல அதுவும் இவ்ளோ நெருக்கமா உட்கார்ந்து மனுசன கொல்லாம கொன்னுட்டு இருக்க "

 

என்றபடி அவள் கால்களை வருடியவனோ இடையோடு கைபோட்டு தன் மடியில் அமர்த்திக் கொள்ள . 

 

அவளோ சிரித்தபடி அவன் தலையை கலைத்து விட்டவளோ 

 

கொல்லத்தான் போறேன் . இதோ இப்படித்தான் என்றபடி அவன் நெற்றி, கண் , மூக்கு , கன்னம் , என உதடு எண்ணும் தூரிகை கொண்டு முத்தம் என்னும் ஓவியம் வரைந்தபடி வர . உதட்டின் அருகில் வந்தவளோ சற்று தயங்கி நிற்க . 

 

பாண்டியனோ விழி முடி அவள் தரும் முத்தங்களை ரசித்தபடி இருக்க . அவள் தரும் ஓவ்வொரு முத்தத்திற்கு அவன் கையோ அவள் இடையில் அழுத்தத்தை கூட்டிக் கொண்டே போக .

 

அவள் தயக்கத்தை கண்டவனோ 

 

ஏன் என் உதடு என்ன பாவம் பண்ணிச்சு என்றவனோ அவள் கன்னத்தை அழுந்த பற்றி இவன் தனது இதழில் ஓவியம் வரையத் தொடங்க . 

 

முத்தமிட்டபடி படுக்கைக்கு தூக்கி சென்றவனோ அவளோடு சரிய . 

 

அதன் பின் நடந்தது அனைத்தும் சொல்ல முடியா இருவரது காதல் களியாட்டங்களே......

 

தொடரும் ....

 

படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா updates சீக்கிரம் வரும் . 

 

Review please 🙏

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top