6
“ஓஹ் நோ.. இங்க இல்ல அவ. நீங்க காமிச்சீங்களே.. இங்கதான் சார் வருவாங்கனு.. அந்த சூட்டிலேயே அங்க அவளை வெயிட் பண்ண சொல்லிட்டு நான் வந்துட்டேன் உங்கள பார்க்க” என்றாள்.
“அவளை ஏன் அங்க விட்ட?” என்று சாதாரணமாக கேட்டவன் அதற்கு அப்புறம் தான் கதிர்காமன் ஃபோனில் கத்தியது ஞாபகத்துக்கு வர.. இரண்டு இரண்டு நான்கு என்று கணக்கிட்டவன்..
“அய்யய்யோ ரதி..” என்ற தலை தெறிக்க வேகமாக ஓடினான்.
“இவரு எதுக்கு தலை தெறிக்க ஓடுறாரு.. இப்போ” என்று புரியாமல் ரத்னாவும் “பார்த்திவ் நில்லு.. நில்லு பார்த்திவ்..” என்று அவன் பின்னாலேயே ஓடினாள்.
மூச்சிறைக்க அந்த சூட்டுக்கு வந்து நின்றவன் அங்கிருந்து வரவேற்பு அறையை பார்க்க.. அங்கு ரதி இல்லை.
“ஓஹ் ஷிட்..!” என்று நெற்றியில் கை வைத்துக் கொண்டவனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ரதி தன் காதலியின் தோழி என்பதை காட்டிலும் ஒரு நல்ல குடும்பத்துப் பெண்.
“இந்த பாஸ் என்ன பண்ணி தொலைஞ்சாருன்னு தெரியலையே? என்ன பேசி வச்சாருன்னு தெரியலையே?” என்று அவனுக்கு பயந்து வந்தது.
அதுக்கு மேல “என்னை இப்படி தனியாக கூட்டி வந்தது உன் முதலாளிக்கு படையல் போடத்தானா நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? மாமா வேலை பார்க்குற?” என்று ரதி ஒரு வார்த்தை கேட்டு விட்டால்??
அவ்வளவுதான் மொத்தமும் போய்விடும் நல்ல பெயர் அவன் காதலியிடம்..!
அவன் அறையை திறந்து செல்லவா வேண்டாமா என்று சிறு நடுக்கம் அவனுக்கு. இதுவரை நேரில் பார்க்காத அத்தனை கடவுள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டவன் கதவைத் திறக்க செல்ல..
அந்நேரம் பார்த்து “எதுக்கு என்னை விட்டுட்டு இப்படி ஓடிவந்தீங்க?” என்று பின்னால் நின்ற ரத்னா முறைப்பாக கேட்க..
அவனோ “இவ வேற? நேரம் காலம் தெரியாம..!” என்று முணுமுணுத்தவன்,
ரத்னாவுக்கு எது தெரிந்து விடக்கூடாது என்று நினைத்து “ஒன்னும் இல்ல ரதி சார் கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா போல.. ஏதோ பிரச்சனை அதான் என்னன்னு பார்க்க போறேன். நீ இங்கேயே வெயிட் பண்ணு” என்று அவளை இழுத்து வந்து முதலில் ரதி அமர்ந்திருந்த அதே சோபாவில் அமர வைத்தான்.
“ஏதோ பிரச்சனைனு சொல்ற? உன் பாஸ் கோபப்பட்டு கை நீட்டிட்டாருனா.. அவ வேற கொஞ்சம் பயந்த சுபாவி. நானும் வரேனே..” என்று அவளும் எழுந்து அவன் கையை பிடித்துக்கொண்டு நடக்க முயல..
“கெட்டுச்சு போ..! இந்த குள்ளச்சிய உள்ள கூட்டிட்டு போனா.. அங்க இருக்குற நிலைமை பார்த்து என்னை குனிய வச்சு கும்மு கும்முன்னு கும்மிடுவா.. அத்தோடு எனக்கு சம்சாரி லைஃப் ஹோகையா.. சாமியார் லைஃப் ஆஹையா..!” என்று வருங்காலத்திடம் வருங்காலத்தை எண்ணி பயந்தவன்,
“என் பாஸ் அப்படி எல்லாம் கிடையாது. நான் பார்த்து எதா இருந்தாலும் பக்குவமா பேசி ரதி பிரச்சனையை அவர் காதுக்குள்ள போட்டுட்டு வரேன். நீயும் என்னை டென்ஷன் ஏத்தாத.. அவர் ஏற்கனவே எனக்கு ஃபோன் பண்ணிட்டார். தயவு செய்து கொஞ்ச நேரம் இங்கே அமைதியா உட்காரு” என்று அழுத்தமாக அவளை பிடித்து அமர வைத்தவன்,
ஒரு பெருமூச்சு இழுத்துக் கொண்டும் கதவை தட்டி விட்டு “சார்..” என்று உள்ளே நுழைய..
கதிர்காமனோ அதுவரை இருந்த காமதேவனின் அவதாரத்தை மாற்றி, அந்த பாக்ஸர் மேலே ஒரு ஓவர் கோட்டை அணிந்திருந்தான் இத்தனை நேரத்தில்..!
பார்த்திவ்வை கண்டதும் தான் ரதிக்கு உயிரே வந்தது.
வேகமாக அவன் அருகே வந்தவள், “அண்ணா..” என்று கலக்கத்துடன் தமிழில் அழைக்க..
நெற்றி சுருங்க அவளை கதிர்காமன் பார்க்க..
முதலாளியின் மன்மத தோற்றத்தை பார்த்து அங்கே என்ன நடந்திருக்கும் என்று புரிந்துக் கொண்டவன் “கொஞ்சம் இருமா..! பயப்படாதே.!” என்று அவள் கையை தட்டி விட்டு கதிர்காமன் முன் நின்று,
“சாரி பாஸ்.. இவங்கள நான் வெளியில் தான் வெயிட் பண்ண சொன்னேன். பட் இவங்க இங்க வந்து வெயிட் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியாது. ஆக்சுவலி இவங்க என் கசின் ரத்னாவோட காலேஜ் மெட்” என்றான் பவ்யமாக ஆங்கிலத்தில்.
‘தான் கல்லூரியில் படிப்பவள் என்று தெரிந்தாவது சிறு குற்ற உணர்ச்சியோடு தன்னை பார்த்து மன்னிப்பு கூறுவான்’ என்று நப்பாசை ரதி மனதில்..!
“ஓஹ்..??!!” என்றவன் இப்போது அவளை பார்த்திவ் முன்னே உச்சாதி பாதம் பார்க்க.. சட்டென ரதியோ பார்த்திவ் பின்னால் மறைந்துக் கொண்டாள்.
“இவங்க ஒரு ஹெல்ப் கேட்டு ஆக்சுவலி வந்தாங்க சார்” என்றதும்
“பிளடி இடியட்..! யாரை எங்க வெயிட் பண்ண வைக்கணும்னு உனக்கு அறிவில்ல? இங்க எந்த மாதிரி கேஸ் எல்லாம் நான் பார்ப்பேன்னு உனக்கு தெரியாது?" என்றவன் ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டிருக்க..
பார்த்திவ்வோ “சாரி சார்.. சாரி சார்.. இட் வோண்ட் ஹேப்பன் அகெய்ன் சார்.!” என்று மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.
‘ஒரு பொண்ணு எதுக்கு வந்து இருக்கா ஏன் வந்திருக்கானு தெரியாம அவகிட்ட பலான பலான விஷயத்தை பேசுவானாம்.. ஆனா அதுக்கு மன்னிப்பு கேட்க மாட்டானாம். ஆனா தப்பு செய்யாத உன்னை நல்லா திட்டுவானாம். இருக்குடா உங்க பஞ்சாயத்து’ என்று மனதோடு இவள் நொடித்துக் கொள்ள மட்டும்தான் முடிந்தது.
அதற்குள் அந்த மன்மதனை என்ன சொல்லி மலை இறக்கினான் என்று தெரியாது பார்த்திவ்.
“நாளைக்கு ஆஃபீஸ் கூட்டிட்டு வா” என்றான் அதிகார தோரணையில்.
“தேங்க்யூ சார்..!” என்று அவனிடம் பார்த்திவ் நன்றி கூறியது கேட்டது ரதிக்கு.
“ரதி நாளைக்கு சார் வர சொல்லி இருக்காரு. வா.. போலாம்” என்று ரதியிடம் மென் குரலில் கூறிக்கொண்டு அவன் முன்னே செல்ல.
ரதியோ சரியென தலையாட்டி விட்டு கதவை திறக்க சற்றென்று அவளுக்கும் கதவுக்கும் இடையில் வந்த நின்றான் கதிர்காமன்.
“நீ காலேஜ்ல படிக்கிறேனு தெரிஞ்சா நான் கில்ட்டி ஃபீல் ஆகணுமா என்ன? இன்ஃபேக்ட் காலேஜ் கேர்ள்ஸூம் பார்ட் டைம் ஜாப் போல வராங்க தெரியு
மா உனக்கு?” என்றவன்,
“பட்.. மே பீ ஐ மிஸ்ட் நவ்..! நாட் எவர்..!” என்றவனின் பேச்சில் பேய் அறைந்தது போல அவ்வறையில் இருந்து வெளியேறினாள் ரதி..!
