7
ரதி கதிர்காமன் அறையில் இருந்து வெளிவரும் வரை அங்கே நின்றிருந்த பார்த்திவ் “சாரி ரதி, இது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான். அதனால என் பாஸ் அப்படி உன்கிட்ட நடந்துக்கிட்டார். மத்தபடி அவரு ரோக் எல்லாம் கிடையாது. இதை நீ ரத்னா கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்.. தெரிஞ்சுது.. அவ்ளோதான் என்னை வச்சு செஞ்சிட்டுவா அவ” என்று மெல்லிய குரலில் அவளிடம் யாசித்தவாறு வந்தவனை கண்டு மெல்ல தலையை மட்டும் அசைத்தாள் ரதி.
இவனை சொல்லியும் தப்பு கிடையாது. இவன் நல்லவன் இல்லையென்றால் இந்த அளவு தனக்காக உதவி செய்வானா காதலியின் தோழி என்று..!
ஒரு நிமிடம் நின்று அவனைக் கூர்ந்து பார்த்தவள் “நீங்களும் உங்க பாஸ் போல தானா அண்ணா?” என்று சற்று காட்டமாக வந்தது அவளது குரல், ஆனால் மெலிதாக..!
“அச்சோ.. நான் அப்படியெல்லாம் இல்ல ரதி..! பிராமிஸா.. நான் இன்னும் ப்யூர் வெர்ஜுன் தான்மா” என்று தன்னை அவள் நம்பவேண்டுமே என்று அதிர்ந்து பார்வையோடு அவன் பேச மெல்லிய சிரிப்பு ஒன்றை சிந்தியவள்,
“இதே போல.. எப்பவும் இருங்கண்ணா..!” என்றதும்,
“அது முடியாதே மா.. முடியாதே..!” என்று சிவாஜி போல கூறியவனின் சிரிப்பில் அவள் இப்பொழுது சினந்து முறைத்துப் பார்க்க..
“நீ வேற தப்பா நினைக்காத மா. நாளைக்கு உன் பிரண்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நான் எப்படி வெர்ஜினா இருக்குறதாம்? கல்யாணம் பண்றது அதுக்கு தானே?” என்றான் கண்ணடித்து உல்லாசமான குரலில்..
“யூ சச் எ நாட்டி அண்ணா..!” என்று அவன் தோளில் தட்டினாள் ரதி.
இருவரும் வெளியில் சென்றது முதல் அவர்கள் இடையே நடக்கும் சம்பாஷனையை கதவை லேசாக திறந்து வைத்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான் கதிர்காமன்.
ரதி அவள் காட்டமாக பேசுவதும்.. அவன் தாஜா பண்ணுவதும்.. பின்பு அவள் முறைப்பதும்.. ஏதோ அதட்டுவதும்.. இவன் பேசியதும் அவள் வெடித்து சிரிப்பதும்.. அவன் தோளில் இவள் தட்டுவதும்.. என்று அனைத்துமே பார்த்துக் கொண்டுதான் இருந்தான் கதிர்காமன் கண்களில் கனல் மின்ன…
“என்கிட்ட உள்ள அப்படியொரு பத்தினி வேஷம் போட்டா.. இப்போ இவங்கிட்ட இப்படி தொட்டு தடவி கொஞ்சி பேசி சிரிச்சிட்டே போறா.. இந்த கேர்ள்ஸ் எல்லாம் ஏன் இப்படி விசித்திர ஜந்துவாவே இருக்காங்க. ஆனாலும் ஐ பாயிண்ட் யூ ரதி..!” என்றவன் கதவை தன் ஆத்திரம் தீர அழுத்தமாக சாத்திவிட்டு உள்ளே சென்று விட்டான்.
பார்த்திவ்வும் ரதியும் சிரித்து பேசியபடி வந்ததை கண்டதும் தான் ரத்னாவுக்கு நிம்மதியாக இருந்தது.
“அப்பாடி..! எங்க உங்க பாஸ் திட்டினதும் இவ அழுதுக்கிட்டே வராளோ.. நாம தான் தொட்டில போட்டு தாலாட்டி சமாதானப்படுத்தணுமோனு பயந்திட்டே இருந்தேன்.. நல்ல வேளை அப்படி ஒன்னும் நடக்கல..! தாங்க் காட்..!” என்ற ரத்னாவின் தோளில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் ரதி.
ரத்னாவிடம் முழு உண்மையும் சொல்லாமல் “இவங்க பாஸ் என்னை பேசினதெல்லாம் உண்மைதான். ஆனா அண்ணா வந்து என்னை காப்பாத்திட்டாரு..” என்றாள் ரதி பார்த்திவ்வை சற்று பாசமாக பார்த்து..!
“பார்ரா.. பாசமலர்ஸ்..!” என்று தோழியை கிண்டல் அடித்த ரத்னா,
“ஏய் ரதி.. அவரு திட்டினாரு.. இவரு சமாதானப்படுத்தினாரு.. எல்லாம் ஓகே. நீ எதுக்காக அவரை பார்க்க வந்திருக்கிற விஷயத்தை அவர்கிட்ட சொன்னியா இல்லையா? அட்லீஸ்ட் நீங்களாவது சொன்னீங்களா இல்லையாங்க?” என்று ரத்னாவும் சற்று டென்ஷன் ஆகவே பார்த்திவ்விடம் கேட்க..
“அதெல்லாம் பக்கா..! ஐயா யாரு கில்லி..! பேச வேண்டிய இடத்துல பதம் பார்த்து பேசிருவேன். நாளைக்கு உங்க ரெண்டு பேரையும் ஆபீஸ் வந்து பார்க்க சொல்லி இருக்காரு.. ஐ மீன் ரதிய.. ஓகே?” என்று ரத்னாவை பார்த்து அவன் கேட்க,
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. எப்படியோ அவ பிரச்சனை தீர்ந்தால் சரி..” என்றாள் ரத்னா.
“சரி சரி வாங்க.. சாப்பிட்டுட்டு உங்களை நான் கேப் புக் பண்ணி அனுப்பி விடுறேன்” என்றான் பார்த்திவ்.
“இல்லயில்ல.. வேணாம். நாங்க ஆட்டோல போய்க்கிறோம்” என்றாள் ரதி தயக்கமாய்.
“ஹேய் ரதி.. மணி என்ன பாரு.. இதுக்கு மேல எல்லாம் வேணாம். ரெண்டு பேரும் பொண்ணுங்க அதுவும் அழகான பொண்ணுங்க, உங்கள ஆட்டோல அனுப்பி வைச்சிட்டு நான் இங்கே பக்கு பக்குன்னு இருக்கணும். இதுவே இங்க ஹோட்டல் கேப்னா ரொம்ப சேஃப்” என்றவன் அவர்களோடு உண்டு முடித்ததும் ஹோட்டல் கேபிலேயே அனுப்பி வைத்தான்.
வீட்டுக்குச் சென்றதும் ரதி ராகவ்விடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டாள்.
அவள் பகிர்ந்துக் கொண்டது, அங்கு நடந்த தனிப்பட்ட பேச்சுக்களை அல்ல..!
அதை ரதி சொல்லியிருந்தால் “வீடாவது ஒன்னாவது.. எனக்கு நீ தான் முக்கியம். நம்ம வாடகை வீட்டுக்கு போய்க்கலாம்” என்று ஒத்த காலில் நின்று அந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு முன்னால் இவனே அனைத்தையும் கையெழுத்து போட்டுக் கொடுத்து வந்திருப்பான் ராகவ் சந்தர். அத்தனை அக்கறை அன்பு அக்காவின் மீது அவளின் பத்திரத்தின் மீது..!
இறக்கும் முன் மகனிடம் அத்தனை சொல்லி சென்றாரே அவர்களது அன்னை..!
அதுவும் இல்லாமல் ஒரு பெண் தன்னிச்சையாக சுயமாக இங்கே இருந்தால்.. அது எந்த சமூகமாக இருந்தாலும்.. அவளை நிம்மதியாக இருக்க விடாது.
எப்போதும் ஒரு ஆணை சார்ந்து தான் ஒரு பெண்ணின் உலகம் சுற்றி சுழல வேண்டும் என்பது இந்த சமூகத்தின் எழுதப்படாத சட்டம்..!
அச்சட்டத்தை மீறி.. தடுப்புகளை உடைத்து ‘என் பிள்ளைகள் மட்டும் எனக்கு போதும். ஆண் என்ற எவனும் வேண்டாம்’ என்று எந்த பெண்ணும் தலை நிமிர்ந்து வாழ்ந்து விட்டால் அவர்களுக்கு ஆகாது..!
தன் நாவு என்னும் சவுக்கால் அவர்கள் மடிந்து வீழும் வரை வசவுகளை வீசிக்கொண்டே இருப்பார்கள்.
அதையும் தாண்டி ‘நீ எத்தனை பேசினாலும்.. வசை வீசினாலும்.. எனக்கு அது ஒரு பொருட்டே கிடையாது’ என்று சிலர் தான் வாழ்க்கையில் வெற்றி நோக்கி நடந்து ஜெயம் பெற்றிருக்கிறார்கள்.
அதில் ரதி மற்றும் ராகவ்சந்தரின் அன்னையும் ஒருத்தி..!
அதனால் எதை தம்பியிடம் சொல்ல வேண்டுமோ? அதை மட்டுமே சொல்லி, மற்றதை தன் நெஞ்சுக்குள்ளே மறைத்துக் கொண்டாள் அவள்..!
எந்த வயதிலும் சரி பேருந்திலோ பொது இடத்திலோ செல்லும் பொழுது சில வக்கிரம் கொண்ட ஆண்களின் சீண்டலும் தீண்டலும் அனுபவிக்காத பெண்கள் இந்த உலகத்திலேயே
கிடையாது..!
அப்படி சில நிகழ்வுகள் ரதிக்கும் நடந்திருக்கிறது..!
ஆனால் இந்த கழுசடைகள் அப்படித்தான் என்று அவற்றை வீட்டுக்குள் நுழையும் போதே கழட்டி விட்டு வந்துவிடுவாள். அதைப் பற்றி நினைக்கவே மாட்டாள்.
அந்த தருணத்தில் அந்த சில ஆண்களுக்கு என்ன மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்காமல் கொடுத்துவிட்டு தான் வருவாள்.
ஆனால் இன்று ஒருத்தன் தன்னை அத்தனை பேசியும் அவனை தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று சுயபச்சாதாபம் அவளுக்கு..!
அதை மற்றவர்களிடம் சொல்லியாவது அவனை வாயால் இரண்டு திட்டு திட்டக் கூட முடியவில்லையே என்று ஆற்றாமை பொங்கியது..!
தொடரும்...
