Share:
Notifications
Clear all

காமன்‌ 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

8

 

 

 

இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அக்காவை கண்ட ராகவ்,

 

 

 

“நேத்து நைட் நீ சரியா சாப்பிடலையா? வெளியில சாப்பிட்டதா சொன்ன? பசிக்குதா ரதி? பால் இருக்கும் குடிச்சிட்டு படுக்குறியா?" என்று கேட்ட தம்பியினை கண்டவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது..! தொண்டை அடைத்தது..!

 

 

 

எத்தனை ஆண்கள் உலகத்தில் இம்மாதிரி பொறுக்கித்தனம் செய்தாலும், என் தம்பி போல நல்லவர்களும் உண்டு தான் என்று நினைத்துக் கொண்டவள்,

 

 

 

“இல்லடா பசிக்கல. நாளைக்கு அவரை பார்க்க போறேன்னு சொன்னேன்ல.. அதான் ஒரே டென்ஷனா இருக்கு. சரியா தூக்கம் வரல” என்றாள் தொண்டை அடைக்க,

 

 

 

அவனோ அவளை நம்பாது அவளை கூர்ந்து பார்த்தவன்,

 

 

 

“அம்மாவை வேண்டிட்டு தூங்கு. தூக்கம் தன்னால வரும்” என்றான்.

 

 

 

அது போலவே கண்களை மூடி மனதில் அன்னையை நினைத்து தியானித்தாள்.

 

 

 

“ம்மா.. எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து விடுவிச்சிடுச்சு. உங்களோட சொத்துக்காக நான் போராடல.. உங்களோட பாசம் சுவாசம் நிறைந்த இந்த வீட்டை எக்காலத்திலும் யாருக்கும் கொடுக்க நாங்க பிரியப்படவில்லை..‌ நீங்கதான் எங்க கூட இல்ல, அட்லீஸ்ட் நீங்க வாழ்ந்த நினைவுகள் உள்ள வீடாவது எங்களுக்கு வேணும் மா” என்று மனதில் அன்னையை தியானித்து அதன் பின் உறங்கினாள்.

 

 

 

ஒரு பெரிய அழகிய அறை..‌ அந்த அறை முழுவதும் அலங்கார பொருட்களால் நிரம்பி இருந்தது. அதன் உள் அலங்காரங்கள் தேவலோகத்து அறையை ஒத்து இருந்தது.

 

 

 

இருவரும் நெருங்கி நின்று இருந்தனர். வேறு யார் நம்ம ரதியும் அவளின் காமனும்தான்..!

 

 

 

அதாங்க கதிர்காமன்.

 

 

 

அவன் பார்வையில் வழக்கத்திற்கு மாறாக கடுமை மறைந்து அவள் மீதான மோகம் தெரிந்தது.

 

 

 

அவள் அழகினை அவனை ரசித்துக் கொண்டிருக்கிறான் அதில் தன்னை அறியாமல் மூழ்கிக் கொண்டிருந்தான் என்று அவன் கண்களின் மையல் சொன்னது.

 

 

 

அவனின் ஒரு கரமோ மெல்ல நீண்டு அவளது இடையை பற்றி இறுக்க.. மற்றொரு கரமோ அவளது கன்னத்தை பற்றி இருந்தது. அவளது வெண்ணிற கன்னங்களின் மென்மையை அறிய விழைந்தவனோ, மெல்ல ஒற்றை விரல் கொண்டு மென்மையாக வருடினான்.

 

 

 

அக்கன்னத்தின் மென்மை அவனுள் அனலடிக்க.. அவளை அதை விட மென்மையாக கையாள நினைத்தான். அவளின் கன்னங்களில் மென்முத்தம் பதித்து விலகியவன்,

 

 

 

“சோ சாஃப்ட்” என்று புகழ.. அவளோ அதிர்ந்து அவனை பார்த்தவள், அவன் இதழ் பதித்த தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.

 

 

 

அதில் கோபம் முகிழ்த்த கோமகனோ..

 

 

 

"டோண்ட் யூ வாண்ட் யுவர் ஹவுஸ்?” என்று கேட்டிருந்தான். அவளோ அவனை வியர்த்து பார்த்தவாறு இருக்க..

 

 

 

"சே எஸ் ஆர் நோ" என்றவன் குரலில் மென்மை குறைந்து கடுமை எட்டி பார்த்தது.

 

 

 

அதில் அதிர்ந்தவளோ "எஸ்.. எஸ்.. எனக்கு வேணும். எங்க அம்மா எங்களுக்காக விட்டுப் போனது அது மட்டும் தான். அது கண்டிப்பா எங்களுக்கு வேணும். எங்க அம்மாவோட சுவாசம் நிறைந்து இருக்கிற அந்த வீடு கண்டிப்பா எங்களுக்கு வேணும்” என்றாள் கலங்கியக் குரலில்...

 

 

 

மெல்ல புன்னகைத்தவன் "குட் குட்..! அந்த வீடு உனக்கு எவ்வளவு முக்கியம்?” என்று கேட்டான் நல்லவனாய்.

 

 

 

‘இப்ப தானே டா சொன்னேன் மடையா? எனக்கு அந்த வீடு ரொம்ப முக்கியம்னு’ என்று முணுமுணுத்தவள்,

 

 

 

“ரொம்ப ரொம்ப முக்கியம் கதிர்காமன் சார்” என்றாள் அழுத்தமாக.

 

 

 

“தென் ப்ரூவ் இட்" என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி..

 

 

 

"எப்படி.. எப்படி ப்ரூவ் பண்ணனும்? இவ்வளவு நாளா அந்த பெரிய கார்ப்பரேட் கம்பெனி எதிர்த்து நான் போராடிட்டு இருக்கிறதே அதற்கான ப்ரூவ் தான்” என்றாள் சற்றே ஆவேசமாக..

 

 

 

இல்லை என்று தலையசைத்தான் அவன் மிக நல்லவனாய்..!

 

 

 

“வேற எப்படி?” என்று அவள் கேட்க..

 

 

 

அவன் கண்கள் இப்போது நிறம் மாறியது. அதில் கண்ணியம் மறைந்தது.. கருணை மறைந்தது..! கள்ளம் மலர்ந்தது..!

 

 

 

“இப்படி..!” என்று தன் அறையில் இருந்த கட்டிலை காட்டினான் மிக மிக நல்லவனாய்..!

 

 

 

“என்னது?” என்று அதிர்ந்தவள்,

 

 

 

“நோ… நோ…” என்று கத்த..

 

 

 

“ஹேய் ரதி.. என்னாச்சு.. என்னாச்சு டி ரதி? எழுந்திரு.. எழுந்திரு” என்று ராகவ் அவளை தட்டி எழுப்ப..

 

 

 

“ஹான்.. ஹான்..” என்று திரு திருவென்று முழித்தவளுக்கோ வியர்வை ஆறாக பெருகியது.

 

 

 

“என்னாச்சு.. ஏன் இப்படி கத்துன?” என்று ராகவ் விசாரிக்க..

 

 

 

“அது.. அது.. ஏதோ கெட்ட கனவு போல டா.. எனக்கே எதுவுமே சரியா ஞாபகத்துல இல்ல” என்று மழுப்பிவிட்டாள்.

 

 

 

“சரி.. சரி.. தண்ணிய குடிச்சிட்டு தூங்கு” என்றவன் படுத்து விட்டான்.

 

 

 

“சரி" என்றவள் தண்ணீர் அருந்திவிட்டு படுத்துக் கண்களை மூட.. அவளின் இமைகளுக்குள் வந்து கணைத்தொடுத்தான் காமனவன் ரதியவள் மீது..!

 

 

 

“முருகா..! என்ன இது இப்படி கனவு?” என்று அதிர்ந்து எழுந்தவளுக்கு தூக்கம் தூரம் போனது.

 

 

 

‘கண்களை மூடினா கனவிலும் நீதானே..!’ என்பது போல.. கண்களை மூடவே பயந்து போனாள் பாவை.

 

 

 

“அம்மாடி.. இவன் என்ன கனவுல வந்து தொல்லை பண்றானே.. எப்படித்தான் இந்த பார்த்திவ் அண்ணன் இவனோட குப்பை கொட்டுறாரோ தெரியல?” என்று மீண்டும் உறங்கச் சென்றவள்,

 

 

 

சட்டென்று எழுந்து கண்களை முடி நன்றாக கடவுளை வேண்டி விட்டு பூஜை அறையில் இருந்த திருநீற்றை நெற்றி நிறைய பூசிக்கொண்டவள்

 

 

 

“முருகா.. முருகா.. இந்த கெட்ட கனவு இனிமே தொடரக்கூடாது முருகா” என்று வேண்டிய படியே படுத்துக் கொண்டாள்.

 

 

 

ஆனால் சில எண்ணங்களின் வடிவமே கனவுகளாக வரும் என்றும்.. சில செயல்கள் மனதிற்கு தப்பாக படும்போது அதை உணர்த்தும் விதமாக இவ்வாறு கனவுகளாக தோன்றி நம்மை எச்சரிக்கை என்றும் எங்கோ படித்து ஞாபகம் ரதிக்கு.

 

 

 

“அடியே ரதி.. எங்கேயோ எப்போதோ படிச்சதெல்லாம் இப்பவா ஞாபகத்துக்கு வரணும்? இன்னைக்கு சார் நடத்துனது எங்கேயாவது உனக்கு ஞாபகம் வந்துச்சா டி? அதெல்லாம் வராதே உனக்கு..! தேவையில்லாம உனக்கு ஞாபகம் வரும்.. தூங்கு டி..!” என்று தன்னையே கடிந்துக் கொண்டு உறங்க முயன்றாள் ரதி. ‌

 

 

 

ஆனால் அவள் கனவின் தாக்கத்தை கன

வின் நாயகன் காமன் நிஜமாக கேட்பான் என்று கனவிலும் கருதவில்லை காரிகை..!

 

 

 

ஆம்.. அதே வார்த்தையை அச்சு பிசகாமல் அப்படியே கூறிக் கொண்டிருந்தான் கதிர்காமன் அவளிடம் மறுநாள்.

 

தொடரும்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top