5
கதிர்காமன்...
அப்பா ரத்னவேலு, அம்மா பார்கவி..!
தஞ்சாவூரை அடுத்துள்ள ஒரு ஜமீன் பரம்பரையை சார்ந்தவர்கள். அனேக விவசாய நிலங்களும் அதை சார்ந்த தொழில்களும் சர்க்கரை ஆலை, மில்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று பல தொழில்களை நடத்தி வருகிறார்.
ஆனால் இவனுக்கு என்னவோ அதில் எல்லாம் நாட்டமில்லை. அதேசமயம் அப்பாவின் பெரும்பாலான தொழில்களில் இவன் தான் சட்ட ஆலோசகர். அவனுக்கு பிடித்ததெல்லாம் வழக்காடுவது தான்.. அதற்காக மும்பை வந்து படித்தவன், இப்பொழுது மும்பையில் முதன்மை வழக்கறிஞராக திகழ்கிறான்.
சுருக்கமாக சொல்லப்போனால் “எலைட் லாயர்”..!
அதுவும் இல்லாமல் “எலிஜிபில் பேச்சுலர்..!”
இப்படி பல தகுதிகளை தன்னுள்ளே வைத்துக் கொண்டு
அதி ஆணவமாக..
பெரும் கர்வமாக..
குறையா திமிராக..
உலா வருபவன் தான் நம் நாயகன் கதிர்காமன்..!
அதிலும் பல கார்ப்பரேட் கம்பெனிகளே சட்டங்களையும் சட்டத்தின் ஓட்டைகளையும் அசால்ட்டாக அள்ளித் தரும் லீகல் அட்வைசர் இவன்.
சற்று முன்னால் நடந்தது கூட மும்பையில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அயல்நாட்டில் உள்ள நிறுவனத்தோடு கொலாபிரேட் செய்ய.. இரு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்த.. அங்கே லீகல் அட்வைசராக கதிர்காமனின் இருப்பு அவசியமான ஒன்று..!
அவனின் அனுமதி பெறாது அவன் சார்ந்துள்ள நிறுவனங்கள் எதுவும் ஒற்றை தலையசைப்பை கூட கொடுக்காது.
இப்படி நாளும் பொழுதும் தன்னை
பிஸியாகவே வைத்திருப்பவனின் ரிலாக்சேஷன் என்னவாக இருந்திடப் போவது மாதுவையன்றி??
மது, அவனை கட்டுப்படுத்துகிறது என்பதால் அதனிடம் அவன் தன்னை ஒப்புக்கொடுக்கவே மாட்டான். ஏதோ அவ்வப்போது சோசியல் டிரிங் என்ற பெயரில் இரண்டு சிப்போடு சரி..!
ஆனால் மாது…
மாதுவும் ஒரு போதை தானே?
அழகும் அலங்காரமும்..
இளமையும் வௌனமும்..
சரிவும் வளைவும்..
ஆண்களை அசத்தும் அடிமைப்படுத்தும் போதை தான்..!
ஆனால் தன்னை அடிமைப்படுத்தும் அந்த மாதுவை தான் அடிமைப்படுத்தி பார்ப்பதில் ஏக மனது திருப்தி.. சந்தோசம் அவனுக்கு..!
அதுபோலவே.. “தன்னை களைப்பாற்று.. அமைதிப்படுத்து..” என்றவனின் அதிகாரமான ஆணையில் அரண்டு போனாள் பாவை அவள்..!
“கமான் க்விக்” என்று அவனின் அதட்டலில்.. சர்வமும் நடுங்கி போனது பெண்ணவளுக்கு.
‘அடியே ரத்னா.. குரங்கே.. பிசாசே.. இப்படியொரு காம பிசாசுக்கிட்ட என்னை கோர்த்து விட்டு போய்டியே டி.. இரு டி.. வந்து இருக்கு உனக்கு’ என்று ரத்னாவை நினைத்து பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவளால் தற்சமயம்.
“என்ன யோசனை? வித் ட்ரஸ் ஆர் வித் அவுட்?? தட்ஸ் யுவர் சாய்ஸ்” என்று சாய்ஸ் கொடுப்பவனை கண்டு பயங்கர பீதியானது அவளுக்கு.
‘அடியே ரதி.. போச்சு போ..! நீ இன்னைக்கு கற்போட வெளியில் போன மாதிரிதான்’ என்று தனக்குள் பயந்தவள்,
“சார்.. ஐ நாட் தட் டைப் ஆஃப் கேர்ள்.. ஆக்ட்சுவலி.. ஐ அம்..” அவள் முடிக்கும் முன்..
“என் சூட் ரூம்முக்கு வந்தா.. அது தான் அர்த்தம். எக்ஸ்ட்ரா பேமெண்ட் வேணும்னா கேட்டு வாங்கிட்டு போ.. இப்படி பத்தினி மாதிரி டிராமா பண்ணாத..!” என்றவனின் அலட்சிய பேச்சில் அவன் மீதிருந்த அந்த பிம்பம் உடைந்தது அவளுள்..!
‘இவரை எங்க வைச்சிருந்தேன் என் மனசுல.. என்னோட ரோல் மாடலா வச்சிருந்தேன்.. என்னோட அட்மையரா..’ என்று அவள் மனம் அவனின் இந்த முரண்பாட்டால் வருந்த..
‘அடிப்போடி.. இவளே.. அவன் அப்படி வச்சிருந்தேன்.. இப்படி வச்சிருந்தேனு சொல்லிக்கிட்டு நில்லு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே உன்னை வச்சிக்க போறான் பாரு..! போ.. ஓடி போ.. அதை விட்டுட்டு இப்ப தான் மைண்ட் வாய்ஸ்ல ஃபீல் பண்றா எரும’ என்று அறிவு அவளை மானங்கண்ணியாக பேச..
‘ஆமாமில்ல.. ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்..! அது இந்த வளர்ந்த வக்கீலுக்கு புரிய வைக்கிறேன்' என்று நிமிர்ந்து அவனை பார்த்தவள், தன்னுள் மீண்ட நிமிர்வோடு..
“ஐ அம் ரியலி வெரி சாரி.. உங்க எக்ஸ்பட்டேஷனை என்னால பூர்த்தி பண்ண முடியாது. நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல” என்று அவளின் பார்வை அவன் கண்களை விட்டு இஞ்ச் கூட நகரவில்லை.
அவன் தான் வா.. வா.. வந்து என்னைப் பார்.. என் அழகைப் பார் என்று ஏகாந்தமாக அமர்ந்திருக்கிறானே???
அவளின் முக மாறுதல்களை தான் வந்தது முதல் அவதானித்துக் கொண்டிருந்தான் கதிர்காமன் ஒரு வழக்கறிஞராய்..!
முதலில் அவளிடம் தென்பட்ட அந்த முதல் கட்ட அதிர்ச்சி.. பயம் அதன்பின் தான் அப்படி இல்லை என்ற நடுக்கம்.. கடைசியில் அவளிடம் தோன்றிய அந்த நிமிர்வு என்று அவள் அந்த மாதிரி பெண் இல்லை என்று அவனுக்கு கட்டியம் கூறியது அவனது அறிவு.
“ஆனாலும்.. அவளின் இந்த ஸ்டெர்க்சர்.. வளைவு நெளிவு.. அவ்ளோ அப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்..” என்று மனம் விழைய..
“ஓஹ்..! இதுவரைக்கும் அப்படி இல்லன்னா.. என்ன? இனி என்னிலிருந்து தொடங்கிக்கோ... இல்லையேல் என்னிடம் மட்டும் தொடங்கு..!” என்றவனின் ஆணவப் பேச்சில் பெண்ணாக அவளது மனம் அடிப்பட்டது.
எத்தனை பெரிய உயரிய பதிவில் இருந்தாலும்.. எத்தனை எத்தனை நல்ல பெயர் தொழிலில் எடுத்தாலும்.. வெளி உலகில் ஒயிட் கலராக திரியும் இம்மாதிரி ஆண்கள் நிஜத்தில் ஒரு பெண்ணை அவர்களின் காம இச்சைக்கு பலியிடத் தான் நினைக்கிறார்கள்..!
ஆண் என்ற ஆணவம்..! கர்வம்..!
என்று அவனைப் பற்றி இவள் மனதுக்குள்ளயே தாளித்து வறுத்துக் கொண்டிருக்க..
“ஹே.. பாகல் பார்த்தா.. என்ன மேன் பொண்ண அனுப்பி இருக்க நீ? என் டென்ஷனை குறைக்க சொன்னா.. எனக்கு பிபி ஏத்திட்டு இருக்கா வந்து இவளை இழுத்துட்டு போ மேன்” என்று கத்தினான் ஃபோனில்..!
அதுவரை காதல் மோகத்தில் தன்னை மறந்து.. தன் வாழும் இந்தப் பால்வெளி மண்டலத்தை மறந்து.. ஏன் தன் பாஸையும் மறந்து ஒரே ஸ்ட்ராபெரி ஸ்மூத்தில் இரண்டு ஸ்ட்ரா போட்டு கண்களாலேயே காதல் செய்துக் கொண்டிருந்த ரத்னாவும் பார்த்திவும் அதன் பின் தான் நிஜ உலகத்தில் வந்து அரண்டு சுற்றி முற்றி பார்த்தனர்.
“அச்சோ.. கொஞ்ச நேரம் லவ்ஸ் பண்ண விட மாட்டேங்குறாரே” என்று புலம்பினான்.
“ஆமா ரதி எங்க?” என்று ரத்னா பார்த்திவ்விடம் கேட்க..
“ஏய்.. நீ வரும்போது தனியாத்தானே வந்த.. ரதிய கூட்டிட்டு வந்து அவளை எங்கயாவது இந்த ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ண சொல்லி இருக்கியா என்ன?” என்று அந்த ஹோட்டலோடு இணைந்து இருந்த ரெஸ்டாரண்ட்டை கண்களால் பார்த்திவ் துழாவ..
அப்பொழுதுதான் அவளுக்கு கதிர்காமன் அந்த சூட் அறையில் ரதியை தனியாக விட்டு வந்தது உரைத்தது.
