Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 25

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 30
Thread starter  

தளிர் - 25

 

கிழக்கை நோக்கி மேகம் என்ற படை வீரர்கள் படை எடுத்து செல்ல. மஞ்சள் வீரன் என்ற சூரியனோ தன் எதிரிகளை பொன்னிற வாள் கொண்டு வீழ்த்தியவனோ பூமியில் தன் ஆட்சியை இனிதாக தொடங்கினான் .

 

அலாரம் அடிக்கும் சத்தத்தில் கண் விழித்தான் பாண்டியன் . படுக்கையில் இருந்து எழுந்தபடி கண்களை நன்றாக தேய்த்தவனோ இறங்கி ஜன்னல் அருகே சென்று நிற்க . 

 

அங்கிருந்து வெளியில் தெரிந்த சூரிய உதயத்தை பார்த்தவனோ சிறிது நேரம் அதையே வெறித்தபடி இருக்க . அதன் பின் தன் காலை நேர வேலையை முடித்து விட்டு இறங்கி கீழே செல்ல . 

 

எப்போது இந்நேரம் எல்லாம் வந்து விடும் தென்றலோ இன்று இன்னும் வராமல் இருக்க . அவனோ சரி சில நாட்கள் நேரம் கழித்தும் வருவாள் அது போல் இன்றும் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தபடி அவன் உடற் பயிற்சி செய்ய மேல் சென்று விட . நேரம் ஆனதே தவிர அவள் வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருக்க . தனது கையில் இருந்த வெயிட்டை கீழே வைத்தவனோ 

 

தன் போனை எடுத்து அழைப்பு விடுக்க அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுத்த பாடில்லை . மீண்டும் முயற்சி செய்ய அதுவோ இப்போது சுவிட்ச் ஆப் என்று வர .

 

பாண்டியனுக்கோ என்ன என்று ஒன்றும் புரியா நிலை . மீண்டும் முயற்சி செய்ய அதையே திரும்பவும் சொல்ல . 

 

அடுத்து அவன் போய் நின்றது என்னவோ அவளது வீட்டின் முன்பு தான் . 

 

வீடோ பூட்டியபடி இருக்க . பாண்டியனுக்கோ எதுவும் புரியவில்லை .

 

எங்காவது செல்வது என்றாள் கண்டிப்பாக சொல்லி விட்டு தான் செய்வாள் ஆனால் இது போல் சொல்லாமல் கொல்லாமல் எங்கு சென்றாள் என்று அவனால் என்னாமல் இருக்க முடியவில்லை அல்லவா . 

 

 

அங்கிருந்தவர்களை விசாரிக்கலாம் என்றாள் இந்த ஊரில் அவளைத் தவிர வேறு யாரையும் அவனுக்கு தெரியாது என்பதை தவிர பழக்கம் இல்லை என்று சொன்னால் சரியாக இருக்கும் . 

 

வீடு வந்து சேர்ந்தவனோ மீண்டும் மீண்டும் போனில் முயற்சிக்க ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரத்தில் போனை தூக்கி சுவரில் ஓங்கி அடிக்க . 

 

அவன் கோபத்திற்கு பலியான போனோ சுக்கு நூறாக உடைய .

 

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவனோ வெறி பிடித்தவன் போல் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைக்க . 

 

அந்த ஹாலில் இருந்த பொருள் எல்லாம் சிறிது நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் உடைந்து போக .

 

அவன் காலடியில் உடைந்து கிடந்த ஒரு கண்ணாடியோ அவனை ஏளனம் செய்வது போல் இருக்க . 

 

அதையே சிறுது நேரம் உற்று பார்க்க 

 

அதில் இருந்த அவனது உருவமோ 

 

"என்னடா பாண்டியா அவளும் உன்னை விட்டிட்டு உன் சித்தி மாதிரியே சொல்லாம கொல்லாம இங்கிருந்து போய்ட்டா போல".....

 

என்று ஏளன சிரிப்பு சிரிக்க.

 

பாண்டியனோ "அவ அப்படி இல்லை , நீ முதல்ல இங்கிருந்து போ " ...

 

என்று ஆத்திரத்துடன் விரட்ட பார்க்க .

 

அவனது பிம்பமோ 

 

" அட என்ன பாண்டியா உண்மைய சொன்ன உனக்கு கோபம் வருதோ , அவ அப்படி இல்லைன்னா உன்கிட்ட சொல்லிட்டு போய் இருப்பா தான , ஆனா ஏன் சொல்லாம போனா " 

 

என்று புருவம் உயர்த்தி கேட்க. 

 

பாண்டியனோ 

 

" ஏதாவது அவசரமா கூட இருக்கலாம்" 

 

என்று சமாளிக்க முயல. 

 

அதுவோ "அப்படி என்னப்பா அவசரம் உன்கிட்ட கூட சொல்லாம போற அளவு" 

 

என்று குரலில் ஒரு நக்கலுடன் கேட்க. 

 

பாண்டியனோ எதுவும் சொல்லாமல் இருக்க .

 

அவன் பிம்பமோ

 

" அன்னைக்கே சொன்னேன் நீ கேட்டியா ? யாரையும் நம்பாத , எல்லாரும் ஒன்னுதான் , இப்போ பாரு மறுபடியும் நீ ஏமாந்து போய் தான் உட்கார்ந்து இருக்க "

 

என்று அவனை பார்த்து கைகொட்டி சிரிக்க ......

 

அதன் சிரிப்பொலி வீடு எங்கும் கேட்பது போல் இருக்க . ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவன் அந்த கண்ணாடியை ஓங்கி தன் கைகளால் குத்தி சுக்கு நூறாக உடைக்க .

 

கண்ணாடி கிழித்து அவன் கையோ இரத்தம் வழிந்த படி இருக்க . கைகளில் இரத்தம் வழிய தலையை குனிந்தபடி சோபாவில் அமர்ந்தவனோ சொட்டு சொட்டாக ஒழுகும் இரத்தத்தின் சத்தம் மட்டுமே அந்த அறையை நிறைத்து இருந்தது .

 

இமை சிமிட்டாமள் தென்றலை நினைத்தபடி வெறி பிடித்தவன் போல் அமர்ந்து இருக்க . அவன் மனதோ அவளும் அப்படித்தான் போல என்றுரைக்க.

 

பாண்டியன் பார்வை முழுவதும் உடைந்து கிடக்கும் கண்ணாடி மீதே நிலைத்து இருந்தது . காரணம் அவன் மனதும் அது போல் அல்லவா இருக்கிறது. 

 

இப்படியே நேரம் மதியம் கடந்து மாலையும் வந்து சேர்ந்தது . ஆனால் அவள் வந்தபாடில்லை 

 

 

அவள் சென்று இரண்டு தினங்கள் கடந்து இருக்கும் . ஆனால் பாண்டியனோ அப்படியே சிலை போல் அமர்ந்து இருந்தானே தவிர எழுந்த பாடில்லை .

 

அன்று காலை அவசர அவசரமாக கதவை திறந்து உள் நுழைந்த தென்றலுக்கோ அவன் நிலை கண்டு சற்று அதிர்வு தான் தோன்றியது .

 

அந்த ஹால் இருக்கும் நிலை கண்டதும் தெரிந்து கொண்டால் அவன் மனதில் இருக்கும் கோபத்தை . அவனது பார்வை முழுவதும் தரையை பார்த்தபடி இருக்க .

 

தென்றலோ மெதுவாக நடந்து வந்தவளோ 

 

அவன் தோளைத் தொட அவனோ நிமிர்ந்து அவள் முகம் பார்க்க. 

 

கண்கள் இரண்டும் சிவந்து , முகமோ தூக்கம் இல்லாததால் கருத்து போய் , கையில் இருந்த காயமோ இரத்தம் தேய்ந்து காய்ந்து காணாமலும் காணப்பட .

 

தென்றலோ பதட்டத்துடன் அவன் கையை பிடித்தவளோ 

 

என்ன ஆச்சு , எப்படி அடி பட்டுச்சு என்று கேட்க. 

 

பாண்டியனோ அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர பேசினான் இல்லை . 

 

தென்றலோ அவன் கையை பார்க்க பார்க்க வருத்தம் மேலிட . அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தவளோ கண்களில் வழியும் கண்ணீரை துடைத்த படி மருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அவன் அருகே வர .

 

அவனோ அவள் கையை விலக்கி விட்டவனோ அங்கிருந்து எழுந்து செல்ல . 

 

தென்றலோ அவன் பின்னோடு நடந்து சென்றவளோ 

 

"ஏங்க நில்லுங்க , கையில அடிபட்டு இருக்கு "

 

என்று அழுகையுடன் அவனிடம் கெஞ்சியபடிவர .

 

பாண்டியனோ எதுவும் சொல்லாமல் அவனது அறைக்குள் நுழைந்து தள்ளிட்டு கொள்ள .

 

அவளோ அவனது அறையை தட்டி பார்த்தவளோ மற்றொரு பக்கம் சென்று அவனது அறைக்குள் நுழைய .

 

பாண்டியனோ அங்கிருந்த படுக்கையில் அமர்ந்திருக்க .

 

அவன் அருகில் நெருங்கியவளோ அவன் கையை பிடிக்க 

 

அவனோ தட்டிவிட்டவனோ 

 

" எங்கடி ஏமாத்திட்டு போன "

 

என்று குரலோ கடும் சினத்துடன் வர

 

அவளுக்கோ அவன் சொல்ல வருவது புரிந்தாலும் எதுவும் சொல்லாமல் இருக்க .

 

அவனோ அவளையே கோபம் கொப்பளிக்க பார்க்க. 

 

அவளோ

 

" அது அது கொஞ்சம் அவசரம் அதான் எதுவும் சொல்ல முடியல "

 

என்று தட்டு தடுமாறி சமாளிக்க முயல. 

 

அவனோ

 

" முதல்ல இங்க இருந்து போ " 

 

என்று காட்டு கத்தாக கத்தி அவளை அங்கிருந்து விரட்ட பார்க்க. 

 

அவன் கையை பிடித்தவளோ மருந்து போட முயல . 

 

அவனோ கையை தட்டி விட்டு அங்கிருந்து செல்ல .

 

தென்றலோ

 

" நான் தெரியாம பண்ணிட்டேன் சாரி , இப்படி பண்ணாதீங்க "

 

என்று அழுகை குரலில் அவனிடம் வினவ .

 

அவனோ

 

" முதல்ல இங்கிருந்து போடி இல்லை வேற மாதிரி நடக்கும்"

 

என்று எரிந்து விழ .

 

அவளோ கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவளோ 

 

"நான் போறேன் முதல்ல மருந்து போடுங்க"

 

என்று அவன் கையை பிடித்து கண்ணீர் வழிந்தபடி கைக்கு மருந்து போட தொடங்க .

 

பாண்டியனோ அவள் கண்ணில் வழியும் கண்ணீரை பார்த்தபடி இருந்தவனோ என்ன நினைத்தானோ அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள .

 

அவளும் அழுகையுடன் அவனை அணைத்துக் கொண்டவளோ சிறிது நேரம் இருவரும் அப்படியே இருக்க .

 

தன்னிலை உணர்ந்த பாண்டியனோ அவளை தன்னை விட்டு பிரித்தவனோ அவள் முகம் பார்க்க. 

 

தென்றலுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க .

 

அவள் கண்ணீரை துடைத்து விட்டவனோ 

 

"எங்க போன என்கிட்ட சொல்லாம போற அளவு என்ன அவ்வளவு அவசரம்" என்று தவித்து போய் அவள் முகம் பார்க்க. ...

 

என்று கேட்க .

 

தென்றலோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தவளோ ......

 

" அது அது ஹான் எங்க சொந்தத்துல ஒருத்தங்க இறந்து போய்ட்டாங்க அதான் அவசரமா போக வேண்டியது ஆகிடுச்சு " 

 

என்று ஏதோ சொல்லி சமாளிக்க .

 

பாண்டியனோ

 

" உனக்கு பாட்டி மட்டும் தான் சொன்ன இப்போ என்ன புதுசா சொந்தம் "

 

என்று சந்தேகத்துடன் கேட்க. 

 

அவளோ

 

" அது தூரத்து சொந்தம் என்றவளோ ஆமா நீங்க சாப்பிட்டீங்களா?"....

 

  என்று பேச்சை மாற்ற. 

 

பாண்டியனோ இல்லை என்பது தலையாட்டியவனோ அவளை அணைத்து கொண்டு கட்டிலில் படுத்துக் கொள்ள .

 

அவளோ

 

" ஏங்க விடுங்க நீங்க இருக்க நிலைமைய பார்த்தா இரண்டு நாள் எதுவுமே சாப்பிடாத மாதிரி இருக்கு , நான் எதாவது செஞ்சு கொடுக்கிறேன்" 

 

என்று அவனிடம் இருந்து விலக பார்க்க. 

 

பாண்டியனோ 

 

" எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம் இப்போதைக்கு நீ மட்டும் தான் வேண்டும் ......" 

 

என்றவனோ அவளை தன்னோடு அணைத்தபடி உறக்கத்திற்கு கண் மூட .

 

தென்றலோ 

 

"ஒரு வேலை நான் இல்லைன்னா என்ன பண்ணுவீங்க ".....

 

என்று சற்று தயக்கத்துடன் வினவ. 

 

பாண்டியனோ " அப்படி போனா பாத்துக்கலாம் , உன்னால இரண்டு நாள் நான் தூங்கலடி" 

 

என்றவனோ சட்டையை கழட்டி எறிந்து விட்டு அவளை ஏதோ பொம்மையை குழந்தை அணைத்துக் கொள்ளுமே அதுபோல் யாரிடமும் உன்னை கொடுக்க மாட்டேன் என்பது போல் அணைத்து கொண்டு உறங்க. 

 

தென்றலோ உறங்கும் அவன் முகத்தை பார்த்தபடி அவன் தலையை கோதி விட .

 

பாண்டியனோ. ம்ம்ம்ம்........

 

என்ற முனகலுடன் நன்றாக அவள் இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனோ உறங்கத் தொடங்க .

 

சிறிது நேரம் அவன் தலையை கோதியபடி இருந்தவளோ அவனை மெதுவாக விட்டு எழுந்து .

 

ஒரு பார்வை பார்த்தபடி மெதுவாக சத்தம் வராமல் நடக்கத் தொடங்க .

 

அவளது புடவை முந்தானையோ அவன் கையில் சுருட்டியபடி உறங்கி கொண்டிருக்க . அவளோ முந்தானை இழுபடுவதை உணர்ந்து சலிப்பாக மீண்டும் அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டவளோ 

 

நான் இரண்டு நாள் இல்லாம போனதுக்கே இவ்ளோ கஷ்டப்படுறாறே , நான் இல்லாம போனா என்ன நடக்கும் , என்று நினைக்கவே அவளுக்கு சற்று பயத்தையும் , வேதனையும் தான் கொடுத்தது . 

 

ஏனென்றால் கீழ் இருக்கும் ஹாலின் நிலைமை அவ்வாறு இருந்தது அல்லவா . அதோடு கோபத்தில் கண்ணாடியை அடித்து உடைத்து கையை காயம் செய்து வைத்திருக்கிறான் . 

 

தென்றலுக்கோ அவனை ஏமாற்றுகிறோம் என்று நினைக்க நினைக்க மனமோ வேதனையை தத்தெடுத்துக் கொள்ள. கண்களிலோ ஈரம் கசியத் தொடங்க .

 

அதே நேரம் அவளது காதிலோ ஒரு குரல் 

 

" அவன் என்ன ஏமாத்திட்டான் ,தென்றல்"

 

 

என்ற ஒரு பெண்ணின் அழுகுரல்....

 

அவள் காதை தீண்ட .

 

தென்றலோ விலுக்கென நிமிர்ந்து பாண்டியனை பார்க்க. அவனோ நன்றாக உறங்கி கொண்டிருக்க . அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க . 

 

ஒரு கட்டத்திற்கு மேல் அமர முடியாமல் தென்றலும் அவன் மார்பில் தூங்கி விழ . 

 

பாண்டியனும் தூக்கத்திலேயே தன்மேல் அவளை குழந்தை போல் போட்டு இடையோடு சேர்த்தணைத்துக் கொள்ள .

 

ஏதோ கீழ் விழும் சத்தத்தில் தான் இருவரும் ஒரு சேர கண் விழித்தனர் .

 

அவளுக்கோ அப்போதுதான் ஒன்று உரைத்தது இருவரும் ஒன்றாக கட்டிக்கொண்டு கிடப்பது அவளோ அவனை விட்டு விலக பார்க்க.  

 

பாண்டியனோ

 

" ஏன்டி என்ன விட்டு போறதிலியே குறியா இருக்க "

 

என்று தன்னை விட்டு அகலாமல் பிடித்துக் கொள்ள .

 

தென்றலோ

 

" இப்படியேவா இருக்க முடியும் , முதல்ல விடுங்க கீழ வீட்டையே அந்த அளவு பண்ணி வச்சிருக்கீங்க...... 

 

என்றபடி அவனை விட்டு எழுந்தவளோ தனது புடவையை சரி செய்து கொள்ள .

 

 

படுக்கையில் படுத்த இருந்த பாண்டியனோ தலையை ஒரு கையில் தாங்கியபடி அவளையே பார்த்தபடி இருக்க .

 

தென்றலோ என்ன அப்படி பாக்கிறீங்க என்றபடி அவன் அருகில் அமர .

 

பாண்டியனோ அவள் சேலை மடிப்பை தன் விரல் கொண்டு நீவி விட . 

 

அவளோ அவன் விரல் பட்டும் படாமல் அவள் மார்பை தொட்டும் தொடாமல் செல்வதால் கூச்சம் ஏற்பட . 

 

அவன் கையை பிடித்தவளோ காயத்தை மென்மையாக வருடி விட .

 

தன்னால் தான் இது நினைக்க நினைக்கவே அவளுக்கு வேதனை மேலிட 

 

"வலி இருக்கா "

 

என்று கவலைக்குரலில் வினவ .

 

அவனோ இருந்தது இப்போ இல்லை என்று கூற. 

 

அவளோ

 

" சரி நீங்க ரெஸ்ட் எடுங்க நான் சமைச்சுட்டு வரேன்"

 

என்று அவள் கீழே சென்றுவிட 

 

பாண்டியனும் சிறிது நேரம் படுத்து இருந்தவன் ,அதற்கு மேல் முடியாமல் அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான் . 

 

தொடரும் ....

 

படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்க updates சீக்கிரம் வரும் .

 

Review please 🙏

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top