தளிர் - 24
செல்வச் செழிப்பில் அழகாக மின்னிக் கொண்டிருந்தது அந்த வீடு . பார்த்தாலே தெரிந்து விடும் வீட்டின் உரிமையாளன் செல்வச் செழிப்பானவன் என .
வீட்டின் முன் வந்து நின்றது ஒரு கார் . அதில் இருந்து இறங்கினான். அவனோ கடும் கோபத்துடன் மற்றொரு பக்கம் சென்றவனோ கதவை திறந்து அவளின் கையை பிடித்து இழுக்க . அவளோ நான் வர மாட்டேன் என்பது போல் அடம் பிடிக்க.
செழியனோ இதழை காரில் இருந்து இழுத்துக் கொண்டு சென்றவனோ வீட்டின் உள் தள்ள . அவளோ அவன் பிடித்ததால் கையில் உண்டான வலியால் தன் கையை தடவியபடி இருக்க .
கதவை அடித்து சாத்தியவனோ. அவள் கைப்பற்றியபடி மேல் இருக்கும் தனது அறை நோக்கி நடக்க.
இதழோ"
" என்ன விடுங்க , என் கைய விடுங்க "
என்று அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க போராட .
அவனோ அவள் பேசுவதை எதையும் காதில் வாங்காமல் அறையின் உள் அவளை இழுத்து சென்றவனோ அவளை உள் தள்ளி கதவை அடித்து சாத்த .
இதழோ அவன் தள்ளி விட்டதில் தரையில் கால் தடுமாறி விழ .
அவனோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனோ அவளையே விழி எடுக்காமல் பார்க்க.
இதழோ தட்டுத்தடுமாறி எழுந்தபடி கதவை நோக்கி நடக்க .
கதவின் கை வைக்க கதவில் இருந்து மின்சாரம் பாய்வது போல் இருக்க . பட்டென தன் கையை அதில் இருந்து எடுத்தவளோ , செழியனை திரும்பி அதிர்வுடன் பார்க்க.
அவனோ தன் கையில் இருக்கும் ரிமோட்டை காட்டியபடி
" கதவை நான் திறந்தா மட்டும் தான் திறக்க முடியும்"
என்று இதழை நோக்கி எழுந்து நடந்துவர .
அவளோ அவன் பார்வை மாற்றத்தையும் , அவன் கண்ணில் இருக்கும் உணர்வும் அவளை பயம் கொள்ளச் செய்ய .
அவளோ பயந்தபடி பின் நோக்கி நகர .
அவனோ அவளை நோக்கி நடந்து வந்தவனோ அவளை சுவரோடு சுவராக தள்ளி நிறித்தியவனோ . அவள் மேல் தன் முழு உடலும் ஒட்டி உரசும் படி நின்றவனோ அவள் இருபக்கமும் தன் கையை வைத்து அணை கட்டியவனோ , அவள் கண்ணோடு கண் பார்த்தபடி
"என்ன உரிமை இருக்குன்னு இப்போ நான் காட்டவா "
என்று அவளை மேல் இருந்து கீழாக பார்க்க.
அவளுக்கோ அவன் சொன்னதை செய்து விடுவது போல் இருக்க .
அவளோ அவன் கையை இறக்க பார்க்க.
அவனோ மேலும் அவளிடம் நெருங்கி நின்றவனோ அவள் முகம் நோக்கி குனிய .
இதழோ அவன் நெருக்கத்தில் மயங்கினாலும் , அதன் பின் அவன் கேட்கும் விஷ வார்த்தையை எண்ணியவளோ அவனை தன்னிடம் இருந்து விலக்க பார்க்க.
"என்னடி திமிரா "? என்று அதட்ட .
"இதழோ ஆமா திமிரு தான். ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இப்படி பண்றீங்களே உங்களுக்கு இது தப்பா தெரியலயா ? "
என்று கோபத்தில் சீற .
செழியனோ அவளையே அழுத்தமாக பார்த்தவனோ பட்டென அவளிடம் இருந்து விலகி கொள்ள .
இதழோ அவன் விலகியதால் சற்று ஆசுவாசம் அடைந்தாவளோ அங்கிருந்து செல்ல பார்க்க.
செழியனோ வேற பொண்ண தான் கூட்டிட்டு வந்து தான் இப்படி பண்ணக் கூடாது , ஆனா உரிமை உள்ள பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்கலாம் இல்லை என்று அவள் பின்னோடு வந்தவனோ
பின்னிருந்து அணைத்தபடி முதுகில் முகம் புதைக்க .
இதழுக்கோ ஒரு கணம் திடுகிட்டாலும் , அவன் கையை தன்னை விட்டு பிரிக்க பார்க்க .
அவனோ அவளை பசை போல் ஒட்டிக் கொள்ள .
ஒருகட்டத்திற்கு மேல் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றுவிட .
செழயனோ அவள் மேனியில் வாசம் பிடித்தபடி , முத்தம் பதித்தபடி கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறிது நேரம் நின்றவனோ .
பட்டென அவளை தன்னை நோக்கி திருப்ப .
அவளோ அதிர்ந்து அவன் முகம் பார்க்க.
செழியனோ அவள் கன்னம் தாங்கி இதழோடு இதழ் பதித்தபடி படுக்கையை நோக்கி நகர்த்தி சென்றவனோ இருவரும் தடுமாறி விழ .
இதழுக்கோ அவன் இதழ் முத்ததில் மூச்சு வாங்க , அவன் மார்பில் கைவைத்து தள்ள பார்க்க.
செழியனோ அவள் எதிர்ப்பை எல்லாம் தன் வசம் கொண்டுவந்தவனோ , அவள் பிஞ்சு விரலோடு தன் முரட்டு விரலை கோர்த்தபடி மெத்தையோடு மெத்தையாக வைத்து அழுத்திக் கொள்ள .
மூச்சு முட்ட முத்தமிட்டவனோ முகம் நிமிர்த்தி அவள் முகம் பார்க்க.
அவளோ மூச்சு வாங்க , கண்கள் இரண்டும் கலங்கி , உதடு சிவந்து , தலையெல்லாம் கலைந்து தவிப்பாக அவன் முகம் தாங்கியவளோ அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட .
செழியனோ அவள் முத்தத்தை கண் மூடி வாங்கிகொண்டவனோ அவள் கழுத்தில் அழுந்த முத்தமிட்டு அங்கு மறைந்து கிடந்த தாலியை தன் பல் கொண்டு மெல்லமாக வெளியே இழுத்தவனோ அதை அவள் மார்பில் வந்து விழச் செய்ய .
இதழோ அவனையே பார்த்தபடி இருக்க
செழயனும் அவளையே பார்த்தபடி இருக்க.
அவள் கன்னம் , கழுத்து , என்று அவன் முத்த கணக்கு நீண்டு கொண்டே போக . ஒரு கட்டத்தில் அவனது கைகளோ அவளது புடவையில் கைவைக்க .
அவளோ அவனை தடுக்க . அவள் விழிகளை அழுத்தமாக பார்க்க.
அதில் என்ன கண்டாளோ தானாக இறங்கிய கைகளோ அவனை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டது .
அதன் பின் நடந்தது அனைத்தும் அவர்களின் காதலின் பரிமாற்றமே.
அனைத்தும் முடிந்து விலகி படுத்தவனோ அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக் கொண்டவனோ. அவள் தலையை தடவி கொடுத்தவனோ அவள் உச்சியில் முத்தமிட்டவனோ, முதுகை வருடி கொடுத்தவனோ
"ரொம்ப கஷ்டப்படுத்திடேனா"
என்று அவள் தோளில் இருந்த காயத்தை பார்த்தபடி கேட்க .
அவன் வெற்று மார்பில் முகம் புதைத்துபடி இருந்தவளோ அவன் முகம் பார்த்து
" நான் பண்ணதை விட இது ஒன்னும் பெருசு இல்லை"
என்று அவன் உள்ளங்கையில் முத்தமிட்டவளோ , மீண்டும் படுத்துக் கொள்ள .
செழியனோ அவள் உடல் முழுவதும் வருடி கொடுத்தபடி இருக்க . அவள் கையை பார்க்க அதுவோ அவன் அழுத்தி பிடித்ததால் நன்கு சிவந்து போய் இருக்க .
"ஏன்டா இப்படி அரக்கன் போல இருக்க"
என்று அவன் மனதே அவனை திட்ட .
அதை மென்மையாக வருடி கொடுத்தவனோ தன் தோளைச் சுற்றி போட்டுக் கொண்டவனோ , தன்னோடு மேலும் அவளை தன்னோடு அணைத்துக் கொள்ள .
இதழோ நன்றாக அவனை அணைத்தபடி உறங்க . இருவரும் ஒருவர் மேல் இருக்கும் கோபம் அனைத்தும் மறந்து உறங்கத் தொடங்கினர் .
சிறிது நேரத்தில் போன் அடிக்கும் சத்தத்தில் கண் விழித்த செழியனோ
தன்மேல் முழுவதும் படர்ந்தபடி தலையெல்லாம் கலைந்து , முகம் சிவந்து , வாயை சிறிதாக மீன் குஞ்சு போல் திறந்தபடி உறங்கி கொண்டிருந்த இதழே தென்பட .
செழியனோ அவள் முகம் மறைத்த முடியை விலக்கி விட்டவனோ முகம் பார்க்க.
உறங்கும் போது ஒருவரின் உண்மை முகம் தெரியும் என்பார்கள் . இதோ உறங்கும் போது தெரிகிறதே குழந்தை போல் உறங்கி கொண்டிருக்கிறாள் அல்லவா . ஆனால் ஏன் என்ற கேள்வி அவன் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது அல்லவா ?.
சிறிது நேரத்தில் கண் முழித்த இதழோ நிமிர்ந்து அவன் முகம் பார்க்க. அதன் பின்னே புரிந்தது தான் எங்கு இருக்கிறோம் என்று பட்டென அவனிடம் இருந்து விலக பார்க்க.
செழியனோ அவளை தன்னை விட்டு பிரிய விடாமல் அணைத்து பிடிக்க . அவளோ அவனை விலக்க.
"இப்போ தெரியுதா என் உரிமை என்னன்னு"
என்று அவள் முகம் பார்த்தபடி கூற .
அவன் அவ்வாறு கூறியதும் பட்டென அவனை விலக்கி தள்ளவிட்டவளோ .
அவனை முறைத்தபடி எழுந்தவளோ சிதறி கிடந்த உடைகளை எடுத்தவளோ அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொள்ள .
"செழியனோ ஆஆஆ ........."
படுக்கையை ஓங்கி குத்தியவனோ அவனும் எழுந்து தனது உடைகளை அணிந்து கொள்ள .
அறையின் உள் இருந்த இதழுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க . அதை துடைத்தபடி உடையை அணிந்து கொண்டவளோ அறையை விட்டு வெளியே வர .
செழியனோ போன் பேசியபடி ஜன்னல் ஓரம் நிற்க .
அவனையே விழிகளில் ஒரு வலியுடன் பார்த்தவளோ அங்கிருந்து இறங்கி செல்ல .
செழியனோ போன் பேசி முடித்துவிட்டு வந்தவனோ அவளை அறையில் தேட .
அவள் இல்லை என்பதை அறிந்தவனோ
"இவள ......
என்று பல்லை கடித்தபடி கீழ் இறங்க .
இதழோ நடந்து சென்று கொண்டிருக்க .
அவள் முன் காரை கொண்டு நிறுத்தியவனோ
அவளை ஏறு என்பது போல் பார்க்க. அவளோ எதுவும் சொல்லாமல் ஏறிக் கொள்ள . கார் அவனது அலுவலகம் நோக்கி செல்லத் தொடங்கியது . இருவரிடமும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை , காரில் அமைதியே நிலவியது .
அலுவலகம் முன் வந்து நின்ற காரை விட்டு இறங்க பார்த்த இதழின் கையை பிடித்த செழியனோ அவள் முகம் பார்க்க.
அவளோ என்ன என்பது போல் அவனை பார்க்க.
அந்த அஸ்வின் என்ன வேற எவனாவது வந்து பேசுனான் என்று அவள் முகத்தை அழுத்தமாக பார்க்க.
அவன் பார்வையில் என்ன கண்டாளோ , எதுவும் சொல்லாமல் இறங்கி சென்றுவிட .
அவள் வந்தது , அலுவலகம் உள் நுழைந்தது என அனைத்தையும் அங்கு வேலை செய்யும் நபர்கள் பார்த்தபடி தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொள்ள .
அதை கண்டும் காணாமலும் அவள் வேலையும் செய்யும் இடம் நோக்கி சென்றுவிட .
செழியனோ அவர்களது பார்வையின் அர்த்தம் புரிந்தவனோ
"என்ன "
என்று ஒரு கர்ஜனை கொடுக்க .
அவன் அதட்டலில் அனைவரும் தங்களது வேலையில் கவனமாகி விட .
செழியனோ இதே வேலை இவங்களுக்கு என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி தனது அறை நோக்கி நடக்கத் தொடங்க .
தனது தலையை சரி செய்தபடி ,போனில் எதையோ பார்த்தவாறு அறையின் உள் நுழைய .
அங்கு கதிரோ ஒரு பக்கம் தலையில் கைவைத்தபடி அமர்ந்து இருக்க .
செழியனோ தனது போனை டேபிள் மீது வைத்தவனோ தனது இருக்கையில் அமர்ந்தவனோ கதிரை என்ன என்பது போல் பார்க்க.
"கதிரோ வாடா ராசா காலையில் இருந்து உனக்கு எவ்வளோ போன் , எவ்ளோ மெஸ்ஸேஜ் ஒன்னுக்காவது பதில் சொன்னியாடா? "...
என்று அவனிடம் காய .
செழியனோ
" உனக்கு இப்போ என்ன பிரச்சனை முதல்ல அத சொல்லுடா?"
என்று கடுப்பாக கூற .
கதிரோ
" எதுக்குடா அந்த அஸ்வின் கிட்ட பிரச்சனை பண்ண "
என்று கேட்க.
செழியனோ
" என்ன பண்ணேன் , என்ன பிரச்சனை"
என்று எதுவும் தெரியாதவன் போல் வினவ .
"அடேய் நீ எதுவும் பண்ணல"
என்று அவனை ஆழ்ந்து பார்க்க.
செழியனோ,
" ஆமாடா அவன நாலு தட்டு தட்டினேன் இப்போ என்னாங்கிற"
என்று சீற .
கதிரோ
" அதான் எதுக்குடா "
என்று பாவம் போல் வினவ .
செழியனோ "எதுக்கோ பண்ணேன் விடேன் , இதுதானா இல்லை வேற எதாவது இருக்கா"
என்று தன் முன் இருந்த லேப்டாப்பை ஆன் பண்ண .
கதிரோ "கம்பெனியில இருந்த ஷேர் எல்லாம் வேண்டாம் சொல்றான் டா"
என்று புலம்ப .
"வேணாம்னா விடுடா இவன் இல்லைன்னா இன்னொரு கிளைண்ட்"
என்றவனோ தனது வேலைக்கு தாவி விட .
இதற்கு மேல் இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த கதிரோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய படி அங்கிருந்து சென்று விட .
இங்கு கேன்டீன் உள் நுழைந்த இதழோ தன் அன்றாட வேலைக்கு தாவி விட .
அவள் வந்ததையே அனைவரும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருக்க . அவளோ எதையும் கவனியாமல் தன் வேலைக்கு தாவி விட .
கனகாவோ அவளிடம் வந்தவரோ இதழ் என்று அவள் தோளைத் தொட .
இதழோ என்னக்கா என்று அன்றைய மெனுவை சரிபார்த்தபடி இருக்க .
கனகாவோ
"ஏன் உன் முகம் இப்படி இருக்கு"
என்று சிவந்து போய் இருந்த முகத்தை சுட்டி காட்டியபடி கேட்க .
இதழோ இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழுத்தவளோ.
"அது கொஞ்சம் நைட் தூங்கல, அதோடு கொசு கடி என்று ஏதோ சொல்லி சமாளித்தவளோ."
அவரை அங்கிருந்து அனுப்ப பார்க்க.
கனகாவோ அவளையே பார்த்தபடி
"நீ கொஞ்ச நாளா சரி இல்லை இதழ், இந்த ஆபீஸ் ல ஏதோ ஏதோ சொல்றாங்க , நீ பார்த்து இரு "
என்றபடி அவர் அங்கிருந்து சென்றுவிட .
இதழுக்கும் இங்கு நடக்கும் அனைத்தும் தெரியும் தானே . ஒரு கடை நிலை ஊழியர் கம்பெனி முதலாளியுடன் நெருக்கமாக இருந்தாள் என்னென்ன பேசுவார்கள் என்று தெரியும் அல்லவா . அதை எல்லாம் கடந்து தானே அவள் சென்று கொண்டிருக்கிறாள் .
அவளும் என்ன செய்வாள் அவளுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் அல்லவா .
தொடரும் ....
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா.
Review please 🙏...
