தளிர் - 23
பூவிமகளின் மீது ஆதவனுக்கு என்ன தான் கோபமோ அவன் உக்கிரத்தை எல்லாம் அவள் மீது இறக்கி கொண்டிருக்க .
இருவரும் அந்த காலி மைதானத்தின் ஓரத்தில் இருந்த புங்கை மரத்தினடியில் அமர்ந்து இருந்தனர் . காற்று சிலுசிலுவென அடித்தபடி இருக்க .
செழியனோ எதையோ வெறித்தபடி இருக்க .
கதிரோ
"அடேய் என்னடா ஆச்சு உனக்கு ஏன் இப்படி இருக்க "
என்று அவன் தோளைத் தொட .
அவனோ
"அவ ஏன்டா அவன் கிட்ட பேசனும் , அவன் எதுக்குடா அவளுக்கு போன் பண்ணனும்"
என்று கோபத்தில் மரத்தில் ஓங்கி அடிக்க .
"அடேய் ஏன்டா இப்படி தலையும் புரியாம காலும் புரியாம பேசுற ".
"இதோ காரை கொண்டு வந்து மரத்தில முட்டி வச்சி இருக்க ".
"லேசான அடியோட போச்சு , இல்லை என்ன ஆகி இருக்கும்" .
"இப்போ மறுபடியும் அதையே சொல்லிட்டு இருக்க" என்று அவனும் கோபத்தில் ஒரு பக்கம் கத்த .
செழியனோ மீண்டும் மீண்டும் மரத்தையே குத்தியபடி இருக்க . கையோ சிவந்து இரத்தம் வரும் அளவுக்கு சென்றுவிட.
அவன் போக்கை கண்ட கதிரோ பதறியபடி
டேய் !டேய் ! என்று அவன் கையை இழுத்து பிடிக்க .
செழியனோ அவன் கையை உதறி தள்ளிய படி அங்கிருந்து காரை எடுத்தவனோ புயல் வேகத்தில் சென்றுவிட .
கதிரோ
"டேய் டேய் நில்லுடா இப்படி மட்ட மதியானத்துல புலம்ப விட்டிட்டு போய்ட்டானே"
என்று அவன் போனில் யாருக்கோ அழைப்பு விடுக்க .
இங்கு அஸ்வின் கேர் ஹாஸ்பிட்டல் முன் நின்ற இதழோ அவசர அவசரமாக உள் நுழைய .
பதட்டமாக ஒரு அறையின் கதவை திறந்து உள் நுழைந்து அங்கு படுக்கையில் இருந்த நபரை பார்க்க.
அவரை சரி பார்த்துக்கொண்டிருந்த மருத்தவரோ வாங்க இதழினி என்றவரோ .
அந்த நபரின் கேஷ் பைலை பார்த்தபடி இருக்க .
இதழோ
" சார் எப்படி இருக்காங்க , ஏன் அவசரமா வர சொன்னீங்க"
என்று வியர்த்த தன் முகத்தை துடைத்தபடி கேட்க .
அவரோ பைலை மூடி வைத்தவரோ
அந்த நபரை பார்த்தபடி
"அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண் முழிச்சாங்க , அதான் உங்களுக்கு கால் பண்ணி வர வச்சோம், ஆனா மறுபடியும் சுயநினைவு போய்டுச்சு , ஆனா கூடிய விரைவில் சுயநினைவு வரலாம் "
என்றவரோ அறையை விட்டு வெளியே சென்றுவிட.
இதழோ அந்த நபரின் அருகில் அமர்ந்தபடி அவரின் கையை பிடித்தவளுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தோட . சிறிது நேரம் அவரையே பார்த்தபடி இருந்தவளோ அறையை விட்டு வெளியே வர .
அப்போது அங்கு வந்த செவிலியரோ மேடம் இந்த மாசத்தோட பில் , அப்புறம் போன மாசம் மிச்ச பாக்கியும் இருக்கு அதையும் சேர்த்து கட்டிடுங்க ,இல்லைன்னா நீங்க வேற ஹாஸ்பிட்டல் பாக்க வேண்டிவரும் என்று தன் பணி இனிதே முடிந்தது என்று அவள் சென்று விட .
இதழோ தன் கையில் இருக்கும் பேப்பரை பார்த்தபடி இருந்தவளோ அதற்கான பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினால் .
அங்கிருந்து காரை வேகமாக எடுத்தவனோ வந்து நின்றது என்னவோ தனது பீச் ஹவுசிற்கு தான் .
போனை எடுத்து யாருக்கோ அழைத்தவனோ .
"எனக்கு இப்பவே ஒரு பொண்ணு வேணும் "
என்று கட்டளை இட .
அந்த பக்கமோ
"சார் அது கதிர் சார் இனிமே யாரையும் அனுப்பக் கூடாது சொன்னாரு"
என்று தட்டுத்தடுமாறி கூறிவிட .
செழியினிற்கு கோபம் உச்சத்தை தொட்டது.
"ஏய் அவன் யாருடா அதை சொல்ல மூடிட்டு நான் சொல்றத கேளுடா"
என்று அவனை வாங்கு வாங்கு என்று வாங்கியவனோ .
அங்கிருந்த பிரிட்ஜ் திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்தவனோ ஒரே வாயில் அதை குடிக்க தொடங்க .
சிறிது நேரத்தில் அதை குடித்து முடித்தவனோ , அங்கிருந்த படுக்கையில் விட்டத்தை பார்த்தபடி படுத்துவிட .
அப்போது கதை தட்டும் சத்தம் கேட்க .
செழியனோ கதவை திறக்க. திறந்தவன் கண்களோ அந்த பெண் மீதே நிலைத்து இருக்க .
அவளோ தனக்கே உரிய அக்மார்க் மயக்கும் புன்னகையுடன் அவளை நெருங்கி அணைக்க வர .
அவனோ ஒரு விரல் கொண்டு அவளை தள்ளி நிறுத்தியவனோ
அவளையே அழுத்தமாக பார்த்தவனோ அவளை தன்னோடு சேர்த்தணைத்து கொள்ள .
அவளோ சிரிப்புடன் அவளும் அவனை அணைத்துக் கொள்ள .
அறையின் உள் அழைத்து சென்றவனோ அவள் இதழோடு இதழ் பதிக்க போக .
அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் , அதே போல் ஒரு பார்வை அவன் மனதில் வந்து உறுத்த .
அதை எல்லாம் தலை தட்டி சரிசெய்தவனோ மீண்டும் அப்பெண்ணை நெருங்க முயற்சி செய்ய .
அதற்கேற்றார் போல் அவளோ
நல்லா பெரிய ஆளுதான் போல எப்படியாவது இன்னைக்கு எதாவது இங்கிருந்து அள்ளிட்டு போய்டனும் என்றபடி அந்த வீட்டையும் , தன்னை அணைத்த படி இருக்கும் செழியனையும் பார்த்தபடி இருக்க .
அவளோ ஆளு செம்ம அழகுதான் என்றவளோ அவன் தோளை சுற்றி தன் கைகளை படர விட்டவளோ அவன் கன்னத்தில் முத்தம் வைக்க போக .
பட்டென கண்களை திறந்த செழியனோ அவள் கழுத்தை நெருக்கி பிடித்தவனோ
"ஏய் யாரை கேட்டுடி இங்க வந்த"
என்று அவள் கழுத்து நெருக்கி பிடிக்க.
அவளோ தன் கழுத்தில் இருந்த அவன் கையை விலக்க போராட .
அவனோ போதையில் அவள் கழுத்தை நெருக்கி பிடித்தவனோ
"உன்னால தான்டி நான் இப்படி இருக்கேன்" ,
"உன்னால தான் எல்லாம்"
என்று அவளின் நினைவில் இப்பெண்ணை அவன் வதைக்க .
அவளோ எப்படியோ அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டவளோ , லொக் லொக் இருமியவாறு தொண்டயை நீவியபடி அவனை பயந்த படி பார்க்க.
செழியனோ
ஏய் ....
என்று கோபத்துடன் மீண்டும் அவளிடம் நெருங்க .
அவளோ தட்டு தடுமாறி அந்த அறையை விட்டு வெளியேற பார்க்க.
செழியனோ
" ஏய் எங்கடி போற "
என்று அவள் சேலையை பிடித்து இழுக்க .
அவளோ
சார் சார் என்ன விட்ருங்க சார் , நான் நினைச்சது தப்பு தான் , என்ன விட்டுருங்க சார்
என்றபடி அங்கிருந்த ஓட பார்க்க .
செழியனோ
" ஏய் வாழ்க்கையே கெடுத்துட்டு நீ ஓடப்பாக்கிறீயா "...
என்று அவள் புடவையை இழுக்க .
"அவளோ சார் சார் நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்லை சார்" .
நீங்க வேற யாரையோ நினைச்சு பேசிட்டு இருக்கீங்க .
நான் சங்கர் சொன்ன பொண்ணு சார் , அவருதான் இங்க போக சொன்னார் , இப்போதான் நான் உங்கள் முதல் தடவை பார்க்கிறேன்.
என்று பயத்தில் அவனிடம் கெஞ்ச தொடங்க.
அவனிற்கு அது எல்லாம் எங்கு கேட்டது அவனோ மீண்டும் அந்த பெண்ணை அடிக்க கை ஓங்கிய நேரம் அவளோ எப்படியோ அவனை படுக்கையில் அவனை தள்ளி விட்டவளோ அங்கிருந்து வெளியே ஓடிவிட .
செழியனோ படுக்கையில் விழுந்தவனோ ஏதே ஏதோ புலம்பியபடி படுத்து கிடக்க . அவனது கண்களோ அந்த போதையிலும் கோபத்தை பிரதிபலித்த வண்ணம் இருக்க .
இங்கு வீட்டிற்கு வந்த இதழோ தன் போக்கில் அவளது வேலையை செய்தபடி இருக்க .
அவளது சித்தியோ
" ஏய் இதழ் இந்த மாசம் பணம் எங்க"
என்று கத்தி சத்தமிட .
அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவளோ
"சித்தி அடுத்த மாசம் கொடுத்துடுறேன்"
என்று சமாளிக்க முயல .
அவரோ" அதுலாம் எனக்கு தெரியாது இன்னும் ஒரு வாரம் தான் அதுக்குள்ள எனக்கு பணம் வரனும் இல்லை".
அங்க ஆஸ்பத்திரியில கிடக்கிற அதோட நீயும் போய்ட வேண்டியதுதான் என்றவரோ அறையின் உள் சென்றுவிட .
இதழுக்கோ தலை சுற்றிய உணர்வு என்ன செய்வாள் அவள் . ஒரு பக்கம் ஹாஸ்பிட்டல் , மறுபக்கம் இவர் என்று நினைக்க நினைக்க அவளுக்கோ அடுத்த என்ன செய்வதென்றே தெரியா நிலை .
காலை நேர கதிரவனோ அம்மாவிற்கு தெரியாமல் குழந்தை எதாவது தவறு செய்துவிட்டால் ஒளிந்து ஒளிந்து அவளிடம் அகப்படாமல் விளையாடுமே அதுபோல் மேகம் என்ற போர்வைக்குள் தன்னை மறைத்து கொண்டவனோ , ஒரு கட்டத்திற்கு முடியாமல் தாயிடம் அகப்பட்டுக்கொண்டவனோ முழுதாக அவள் மடி சாய்ந்துவிட .அவளோ புன்னகையுடன் அவனை ஆரத் தழுவிக் கொள்ள . இனிதே காலை நேரம் தொடங்கியது .
இதழோ அனைத்து வேலைகளையும் முடித்தவளோ தனது அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினால் .
அப்போது அவளை உரசுவது போல் ஒரு கார் ஒன்று வந்து நிற்க .
இதழுக்கோ ஒருகணம் தூக்கிவாரிப்போட . கண்களை மூடி தன்னை சரிசெய்து கொண்டவளோ .
யார் என்று அவள் பார்க்க .
செழியனோ கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்க்க.
அவளோ அவனை கண்ட பின் அங்கிருந்து கடந்து செல்ல .
அவனோ
ஏய் ....
என்று ஒரு அதட்டு அதட்ட .
அவளோ காதில் வாங்காமல் நடந்து செல்ல .
பல்லைகடித்த செழியனோ காரில் இருந்து இறங்கி அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க .
அவளோ அவனிடம் இருந்து தன் கையை விலக்க பார்க்க.
அவன் பிடி இறுகி கொண்டே போனதே தவிர கையை விட்ட பாடில்லை .
"என்னடி கூப்பிட்டா காது கேட்காத மாதிரி போற, என்ன திமிரா "
என்று பல்லைகடித்த படி அவளிடம் சீற .
"இதழோ முதல்ல கைய விடுறீங்களா நீங்க யாரு முதல்ல.நான் ஏன் உங்ககிட்ட பேசனும்"
என்றுஅவனை போலவே கோபத்தில் சீற .
செழியனோ அவளை காரோடு நெருக்கி பிடித்தவனோ .
நான் யாரா ? ஹான் யாரா சொல்லுடி ?
என்று கோபத்தில் சீற .
இதழோ அவன் அழுத்துவதால் உடலோ வலியை எடுக்க , கண்களோ வலியில் கலங்கி கொண்டு வர , சிவந்த விழியோடு அவனது எரிக்கும் விழியை பார்க்க .
அவனோ அதை எல்லாம் எங்கு கண்டான் அவளையே சூரியன் சுட்டெரிப்பது போல் விழி என்னும் சூரியன் கொண்டு சுட்டெரிக்க .
"இப்போ என்ன வேணும் ஏன் இப்படி தொல்லை பண்றீங்க ".
என்று எரிந்து விழ .
செழியனோ
அந்த அஸ்வின் எதுக்குடி உனக்கு போன் பண்றான் , அவனுக்கு எப்படிடி உன் நம்பர் தெரியும்"
என்று கைகளை அவள் அணிந்து இருந்த கண்ணாடி வளையளோடு அழுத்தி பிடிக்க .
இதழோ யார் எனக்கு போன் பண்ணா உங்களுக்கு என்ன , நான் யார் கூட வேணா பேசுவேன் அதை கேட்க நீங்க யாரு ? என்று
கோபத்தில் அவனிடம் சண்டையிட .
ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் பொறுமை காற்றில் பறக்க . கார் கதவை திறந்து அவளை வலுக்கட்டாயமாக பிடித்து உள் தள்ளியவனோ காரை புயல் வேகத்தில் அங்கிருந்து கிளப்ப .
இதழோ முதல்ல காரை நிறுத்த போறீங்களா இல்லையா என்று கதவை திறக்க பார்க்க.
செழியனோ முடியாதுடி என்ன பண்ணுவ உன்னால் முடிஞ்சத பண்ணிக்கோ , என்ன கேட்ட என்ன உரிமை இருக்குன்னு தான , கொஞ்ச நேரம் பொறு என்ன உரிமை இருக்குன்னு நான் காட்டுறேன் என்று சொன்னவனின் விழிகளோ சொன்னதை செய்தே தீருவேன் என்பதை போல் இருக்க.
இதழோ நீங்க பண்றது ரொம்ப தப்பு , ஏற்கனவே நிறைய தப்பு பண்ணிட்டீங்க ,மேலும் மேலும் அதிகமா தப்பு பண்ணாதீங்க என்று எச்சரிக்கை குரலில் அவனிடம் சீற .
செழியனோ அவள் கன்னத்தை அழுந்த பற்றி
யாருடி தப்பு பண்றா இப்போ தான்டி நான் சரியா எல்லாத்தையும் பண்றேன் என்றவன் கார் நின்றது என்னவோ அவனது வீட்டின் முன் தான் .
காரில் இருந்து இறங்கியவனோ , அவள் கைபிடித்து தர தர என்று இழுத்து சென்றவனோ வீட்டின் உள் தள்ளி கதவை அடைக்க .
தொடரும் ...
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா updates சீக்கிரம் வரும் .
Review please 🙏.
