Share:
Notifications
Clear all

காமன் 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 4

 

 

 

இன்றைய காலகட்டத்தில் நாகரீக உலகத்தில் நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை தான் அதிகம் பின்பற்றுகிறோம் என்கிற நிலையில்.. அவர்களுக்கு நிகராக நம்முடன் ஒருவன் நடந்து வருவதை அவர்களுடன் கலந்துரையாடுவதை ஒரு ரசிப்பு தன்மையோடு பார்த்திருந்தால் ரதி.

 

 

 

“சரி சரி அவன் யாருன்னு தெரியுமா?” என்று ரத்னா கேட்க..

 

 

 

“இதை கூட கெஸ் பண்ண முடியாதா? ஆள பார்த்தாலே தெரியுதே அவன் பெரிய பிசினஸ் மேக்னெட்டுனு.. ஏதாவது கம்பெனியோட சிஇஓவா இருப்பான். இந்த மாதிரி ஹோட்டல்ஸ்ல தான் அந்த மாதிரி மீட்டிங்ஸ்லாம் நிறைய நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதிலும் ஃபாரின் கொலாபிரேஷன்ஸ் நிறைய நடக்கும்” என்றாள் ரதி தோள்களை குலுக்கி அலட்சியமாக..

 

 

 

“சிஇஓ அவரா? சரிதான் போ..” என்று சிரித்த ரத்னா..

 

 

 

“அவரு பிஸ்னஸ் மேக்னெட் இல்லடி சிஇஓவும் இல்ல.. அவங்களுக்கே அட்வைஸ் கொடுக்கிற லாயர்..! லீகல் அட்வைசர் பல கம்பெனிக்கு அவர்தான் லீகல் அட்வைசர் நாம் தேடி வந்த கதிர்காமன்” என்றாள் ரத்னா, சற்றே பெருமையாக..!

 

 

 

“என்ன? என்ன? நாம பார்க்க வந்த த லீடிங் லோயர் ஆஃப் மும்பை கதிர்காமனா இவன்?” என்று கண்கள் அந்த ஷணத்திலே உறைய அப்படியே அவனை பார்த்தே நின்றாள் ரதி.

 

 

 

“போச்சு‌.. போ.. என்னடி இப்படி அவரை பார்த்துட்டு சிலையா நிக்கிற? பார்த்திவ் வரான் டி. நான் போய் அவனை ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்” என்றவள்,

 

 

 

பார்த்திவ்வை பார்த்து கண்களாலேயே தன் இருப்பை காட்டி சற்று தள்ளி நின்றாள் ரத்னா. பார்த்திவ்வும் அவளை கண்டு கொண்டது போல சிறிய தலையசைப்பைக் கொடுத்தான்.

 

 

 

வேக நடையோடு வந்துக் கொண்டிருந்த அந்த நெடியவனோ பார்த்திவ்வுடன் ஏதோ ஒரு தகவலை காட்டி புன்னகையோடு பேசியவனை விட்டு ரதியால் தன் விழிகளை பிரிக்கவே முடியவில்லை போலவே..

 

 

 

அப்படியே அவன் மேனரிஸத்தை பார்த்தே இருந்தாள்.

 

 

 

அவன் ஏதோ உந்த.. சட்டென திரும்பிப் அவளைப் பார்க்க..

 

 

 

இவளுக்கோ அப்படி அவன் திடுமென பார்ப்பான் சிறு ஊகம் இல்லாமல்.. தன் விழிகளை அவனிடம் இருந்து விலக்க முடியாமல் திகைத்து விட்டாள்.

 

 

 

இவளது கண்களை கவ்விய அவனது கண்களோ பின்பு இவளது மேனியில் ஒரு முறை ஏறி இறங்கியது அதில் அவள் உடம்பு விதிர்விதிர்த்து சிலிர்த்தது.

 

 

 

சட்டென அவளுள் ஒரு தடுமாற்றம் அதை மறைக்க முகத்தை வேறு பக்கம் அவள் திருப்பிக் கொண்டாலும்..

 

 

 

காதோரம் ஒரு துளி வியர்வையும் கண் இமைகளின் படபடப்பையும் அவ்வப்போது பிசைந்துக் கொள்ளும் அவளது கைகளையும் கண்டவனுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் தான்..!

 

 

 

“ம்ஹும்.. அன்டர்ரேட்டட் கேர்ள்ஸ்” என்று உதடு வளைத்தவன் பின்பு பார்த்திவ்வோடு பேச ஆரம்பித்தான்.

 

 

 

“ஐயோ ஐயோ ரதி என்ன மடத்தனம் பண்ற? நீயோ அவர்கிட்ட உதவி கேட்க வந்து இருக்க.. அவன் முன்னால போய் நிற்கும்போது தன்னை பார்வையாலே விழுங்கிய பெண் இவள் தானேனு கண்டுபிடிக்க மாட்டானா? அதுவும் அவன் லீடிங் லாயர் வேற..” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவளுக்கு புதிதாய் ஏதோ முதுகுத்தண்டில் ஓடியது.

 

 

 

ஒருவித அவஸ்தையும் கூடவே ஒரு ரகசியமான ஒரு நூதன புல்லரிப்பும் அவள் உடலில்..!

 

 

 

“ஏய் என்ன டி? கண்ணை திறந்துக்கிட்டே கனவு காண்கிறியா?” என்று அவள் முன் சொடுக்கிட்டு ரத்னாவின் பேச்சில்.. தன் கனவுலகத்தில் இல்லையில்லை ரகசிய ரசிப்பு உலகில் இருந்து இறங்கி அசட்டு சிரிப்போடு “இல்ல டி” என்றாள் ரதி.

 

 

 

“சரி வா வா.. நம்மள அந்த ரூம்ல வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க” என்று அவளை அழைத்துக்கொண்டு அந்த பெரிய ஹோட்டலில் இருக்கும் ஒரு சூட் அறைக்குள் நுழைந்தாள் ரத்னா.

 

 

 

“அம்மாடியோ..!!! எங்க வீட்டையே இந்த சூட் ரூம்ல அடக்கிடலாம் போலவே?? அவ்ளோ பெருசா இருக்கு ” என்று வியந்த ரத்னாவின் கைப்பிடித்தபடி உள்ளே சென்றாள் ரதி.

 

 

 

அவளது மனதோ அங்கிருந்த செல்வ செழிப்பையும் அலங்கார ஆடம்பரங்களையும் கண்டு படப்படத்தது..!

 

 

 

ஏதோ விழுங்க முடியாத அவஸ்தையை விழுங்க போராடும் மனநிலையில் இருந்தாள் அவள்..!

 

 

 

“டி… இங்கேயே வெயிட் பண்ணு.. நான் பார்த்திவ் பார்த்திட்டு வந்திடுறேன்” என்று ரத்னா செல்ல..

 

 

 

“ஏய்.. என்னடி என்னை தனியா விட்டு போறேன்னு சொல்ற? இந்த ஆம்பியன்ஸ் எனக்கு ஒரு மாதிரி அமானுஷ்யமாக இருக்கு டி” ரத்னாவின் கையை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் ரதி.

 

 

 

"இங்கெல்லாம் ஒன்னும் பயம் கிடையாது. சுத்தி பாரு செக்யூரிட்டி கேமராஸ் இருக்கு. அதுவும் இல்லாம இது கதிர்காமன் சாரோட எக்ஸ்க்ளுயுஸிவ் சூட்..! யாரும் வந்து விட மாட்டாங்க. ஒரு பத்து நிமிஷம் டி கொஞ்சம் லவ்ஸ் பண்ணிட்டு வந்துடறேன் டி” என்று கண்களில் குறும்பையும் காதலையும் தேக்கி கேட்ட தோழியை தடுக்க மனம் வராமல் “போய் தொலை சனியனே..” என்று திட்டினாள் ரதி.

 

 

 

“டேங்க் யூ செல்லக்குட்டி” என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்து வைத்தவள், வேகமாக கதவு திறந்து ஓடிய நண்பியை பார்த்து சிரித்த ரதி, அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

 

 

 

திரும்பவும் அந்த அறையின் உள் அலங்காரங்களை பார்த்து அவளுக்கு ஏதோ அரண்மனை படம் போல பீதியைக் கொடுக்க..

 

 

 

“அய்யோ ரதி வேணாம் அதெல்லாம் நினைக்காத..!” அவசரமாக தன் கைப்பேசியை எடுத்து அதில் முகத்தை மூழ்கியவள் பின் தன்னையும் அதிலேயே மூழ்கிக் கொண்டாள்.

 

 

 

“எந்த கம்பெனி உன்னை அனுப்பிச்சது?” என்று ஹிந்தியில் கேட்ட அதிகாரமாக வார்த்தையில் அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள் ரதி.

 

 

 

அவள் எதிரே தன் கோட்டை கழட்டி கையில் வைத்தப்படி வெண்ணிற சட்டை மட்டும் கருநிற பேண்டில் ஆளுமையாக நின்றிருந்தான் கதிர்காமன்!

 

 

 

அவனின் வேலை பளுவால் ஏற்பட்ட சோர்வு கூட அவனின் வசீகரத்தை குறைக்கவில்லை என்பதை அவளது ரசிகை மனம் குறித்துக் கொண்டது.

 

 

 

“ஹே போலோ..” என்று அவன் அதட்ட..

 

 

 

‘நாம வேற ஏதோ கம்பெனியிலிருந்து வந்த கிளைன்ட்னு நினைச்சு பேசுறாரு போல’ என்று நினைத்தவள்,

 

 

 

“இல்ல.. இல்ல சார்.. எந்த கம்பெனியும் என்னை அனுப்பல நான்.. நானா தான்..” என்று அவளும் ஹிந்தியிலேயே கூறி முடிக்கும் முன், அவளை இழுத்து தன் அறைக்குள் தள்ளி தாழிட்டவன்,

 

 

 

“ஹாஃப் அன் ஹவர் தான் டைம்.. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு கிளம்பு” என்றவன் தன் ஆடைகளை களைய..

 

 

 

“எதே?” அதிர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

 

 

 

“ஹே.. கமான் பேப்.. கெட்டிங் லேட்.. அடுத்த கான்பஃரன்ஸ் வேற ஒன்னு இருக்கு. இவனுங்க வேற பேசி பேசியே எனக்கு தலைவலி கொண்டு வரானுங்க. கமான் பேப்.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மீ..” என்று அந்த நீள் இருக்கையில் இரு கைகளையும் விரித்தப்படி அவன் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தான்.

 

 

 

அவனின் பேச்சிலேயே அவளுக்கு உள்ளுக்குள் ரயில் வண்டி போல இதயம் படபடத்தது‌..! அவள் தளிர் மேனியோ அவனின் வெளிப்படையான பேச்சில் நடுங்கியது.‌.!

 

 

 

மூடிய கைகளின் இடுக்கு வழியே அவனை பார்க்க.. அவனோ வெறும் பாக்ஸரோடு இருக்கையில் இருக்க..

 

 

 

“என்னது‌… இவர் உட்கார்ந்து இருக்கிற போஸே சரியில்லையே?” என்று நடுங்கியது அவளது

 

உதடுகள்.

 

 

 

அரச தோரணையில் அமர்ந்திருந்தவனோ.. அவளை அடிமை ஊழியம் செய்ய அழைத்தான்..!

 

 

 

கணை தொடரும்‌..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top