Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 22

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 30
Thread starter  

தளிர் - 22

 

பதினெட்டு .....

 

பத்தொன்பது ....

 

இருபது ....

 

இருபத்தி ஒன்னு ...

 

என்று ஒரு பக்கம் தென்றல் எண்ணியபடி இருக்க.

 

பாண்டியனோ ஒரு கையை ஊன்றி ,மறுகையை தன் முதுகு பின்னால் வைத்தபடி படுத்தவாக்கில் தண்டால் எடுத்து கொண்டிருக்க .

 

தென்றலோ அவன் எடுப்பதை எண்ணிக் கொண்டருக்க .

 

ஒருகட்டத்திற்கு மேல் மூச்சு வாங்க அவன் தளர்ந்து படுத்திவிட .

 

அவன் காதை வந்தடைந்தது தென்றலின் சிரிப்பு சத்தம் .

 

நிமிர்ந்து அவள் முகம் பார்க்க. 

 

அவள் ச்ச்ச்.. ச்ச்ச .. என்று உச்சு கொட்டியபடி அவன் முன் அமர்ந்தவளோ 

 

நான் தான் சொன்னேன் இல்லை. உங்களால , ஒரு கையால ஐம்பது தண்டால் எடுக்க முடியாதுன்னு . நீங்க தான் நான் எடுப்பேன் சொன்னீங்க என்றபடி அவனுக்காக கொண்டு வந்த சத்துபானத்தை நீட்ட .

 

பாண்டியனோ அதை வாங்கி பருகியபடி எழுந்து அமர்ந்தவனோ அதான் எடுத்துட்டேன் இல்லை அப்புறம் என்னடி , வியர்த்த தன் முகத்தை அவள் முந்தாணை சேலையில் துடைக்க .

 

தென்றலோ எங்க எடுத்தீங்க 49 தான் வந்து இருக்கு ,இன்னும் ஒன்னு மிஸ்ஸிங் சார் என்று கிண்டலுடன் கூற .

 

அடியே நீ தப்பா எண்ணியோனு தோணுதே என்று சந்தேகமாக ஒற்றை புருவத்தை ஏற்றியபடி அவளை பார்க்க. 

 

தென்றலோ அய்யோ கண்டு கொண்டானோ என்று திரு திரு என்று முழிக்க .

 

என்னடி ஆந்த முழி முழிக்கிற அப்போ மேடம் தப்பா தான் எண்ணி இருக்கீங்க என்று ஒரு மார்க்கமாக கேட்க .

 

அவளோ அதுலாம் இல்லையே நான் கரெக்ட்டா தான் எண்ணுனேன் நீங்க தான் தப்பா சொல்றீங்க என்று எழுந்து கொள்ள பார்க்க. 

 

பாண்டியனோ சட்டென அவள் கைபிடித்து மீண்டும் தன் அருகில் அமர்த்திக் கொண்டவனோ .

 

நான் சொன்னதை செஞ்சுட்டேன் நீங்க சொன்னது செய்ங்க என்று கூற .

 

தென்றலோ ஏங்க அதுலாம் வேண்டாங்க , நான் அதுக்குலாம் சரிபட்டு வரமாட்டேன் என்று பயந்தபடி கூற .

 

பாண்டியனோ அதுலாம் தெரியாது வா என்று வம்படியாக அவளை இழுத்து சென்றவனோ அவளை ஆடை மாற்ற வைத்து வண்டியின் அமர வைத்து ஒரு காலி இடத்திற்கு அழைத்து சென்று வண்டியில் இருந்து இறங்கி கொண்டவனோ அவளை முன்பக்கம் அமர்த்தி , அவன் பின் பக்கம் அமர்ந்து கொள்ள .

 

அவளோ பயத்தில் ஏங்க இப்படி பண்றீங்க , நான் விளையாட்டுக்கு சொன்னேன் , எனக்கு இதுலாம் வராது , நான் வண்டி ஓட்டுனா எங்கையாவது இரண்டு பேரும் விழுந்து வைப்போம் என்று கூற. 

 

பாண்டியனோ விழுந்தா அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க ஓட்டுங்க , என்று வண்டியை ஸ்டார்ட் செய்து அவளிடம் மெதுவாக எப்படி ஓட்ட வேண்டும் என்று ஒவ்வொன்றாக எடுத்து கூற .

 

தென்றலோ ஏங்க நல்லா யோசிச்சுகோங்க என்று பக்கவாட்டாக அவன் முகம் பார்க்க. 

 

பாண்டியனோ அதுலாம் யோசிச்சாச்சு வாய் பேசாம வண்டிய ஓட்டுடி என்று குரல் உயர்த்த . அது ஒரு ராயல் என்பீல்டு பைக் , அன்று ஒரு நாள் நான் ஓட்டவா என்று கேட்டதற்கு தான் இன்று இந்த பயிற்சி . அவனோ விடாப்பிடியாக ஓட்டியே ஆக வேண்டும் என்க .

அவளோ பயத்தில் இல்லை இல்லை என்று பின்வாங்கியவளோ, அவன் விடமாட்டான் என்பதை உணர்ந்து அவனிடம் ஒற்றை கையால் தண்டால் எடுக்க சொல்ல .

 

பாண்டியனோ கோணலாக இதழ் வளைத்தபடி தப்பி பண்ணிட்டீங்க தென்றல் என்று அதை எடுத்தும் விட்டான் . 

 

தென்றலோ எனக்கு என்ன வந்தது , என்றபடி ஆக்சிலேட்டரை முறுக்க , 

 

அவனோ ஏய் மெதுவா முறுக்குடி சரியா என்றபடி அவள் கையோடு கைகொடுத்து எப்படி என்பதை சொல்லி கொடுக்க .

 

அவளோ அவன் சொல்வது போல் மெதுவாக வண்டியை இயக்க அதுவோ நகரத்தொடங்க. 

 

தென்றலோ ஏங்க வண்டி நகருதுங்க என்று ஆச்சரியத்தில் கூற .

 

பாண்டியனோ ஓட்டுனா நகரத்தான்டி செய்யும் என்னை பாக்காம ரோட்டை பாருடி என்று அவள் முகத்தை முன் பக்கம் திருப்ப.

 

அவளுக்கோ சந்தோஷம் ஒரு வழியாக ரோட்டில் வந்து கொண்டிருக்க .

 

அதே நேரம் வயலில் வேலை செய்தபடி இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த ஊர் பெண்கள் .

 

அதில் இருந்த ஒரு வயதான பாட்டி ஒன்றோ ஏன்டி அந்த வண்டியல போற யாருடி என்று தன் கண்ணிற்கு யாரு என்று தெரியாமல் பக்கத்தில் இருக்கும் மற்றொரு பாட்டியிடம் கேட்க .

 

அதுவோ நன்றாக உற்று பார்த்துவிட்டு அது நம்ம மாரியம்மா பேத்திடி என்று மீண்டும் வயலில் குனிந்து வேலை பார்க்க தொடங்க .

 

அந்த கூட இருக்கிறது யாருடி , என்னுமோ அந்த புள்ளை அவனோட ஒட்டி உரசிட்டு போகுது என்று குரலில் ஒரு ஏற்ற இறக்கத்துடன் கூற .

 

பக்கத்தில் இருந்த மற்றொரு பாட்டியோ அந்த பையன் நம்ம தோப்பு வீட்ட புதுசா வாங்கின பையனாம், அந்த வீட்டுக்குத்தான் அந்த புள்ள சமைக்கிற வேலைக்கு போச்சு , இப்போ என்னவோ பையனுக்கு அந்த புள்ளைய புடிச்சிருக்காம் வயலில் பிடிங்கிய புள்ளை எல்லாம் ஒரு பக்கம் எடுத்து போட்டபடி கூற .

 

அவரோ அது எப்படிடி இவன் இந்த ஊருக்கு புதுசா வந்தவன் , அவளுக்கும் அவன் யாருன்னே தெரியாது எப்படி பிடிச்சுதாம் என்று ஒரு வித இளக்காரமான குரலில் வினவ .

 

அதே நேரம் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு பெண்ணோ யாருக்கு ,யாரை பிடிச்சா உனக்கு என்ன கிழவி , அவ வாழ்க்கை அவ யாரோட வாழனும் அப்படிங்கிறத அவ தான் முடிவு எடுக்கனும் என்று அவர்கள் பேச்சிற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கடிய. 

 

அதுவோ மீண்டும் அடங்காமல் நான் என்னடி அம்மா சொல்லிட்டேன் ஊர் பேர் தெரியாத யாரோ ஒருத்தன் நாள பின்ன அந்த புள்ளைய ஏமாத்திட்டு போய்ட்டா என்ன பண்றது அதுதான் நான் அப்படி சொன்னேன் ஒரு இழுவை குரலில் கூற .

 

அவளோ அது அவ பாத்துக்குவா, அந்த பையன பார்த்தா அப்படி ஒன்னும் தெரியல , நீ உன் வேலைய பாரு பாட்டி என்று கடிய .

 

 

அதன் பின் அடுத்த கதைக்கு அவர்கள் தாவிவிட. 

 

இதை எல்லாம் சற்று தள்ளி வேலை செய்து கொண்டிருந்த தென்றலின் பாட்டியின் காதிலும் விழத்தான் செய்தது . அவரோ அதை எல்லாம் காதில் வாங்காமல் தன் வேலையில் கவனமாக இருக்க .

 

இங்கு பாண்டயனோ அவள் பின் பக்கம் இருந்தபடி தென்றலின் வயிற்றில் ஒருகையை படரவிட்டு அவள் தடுமாறும் நேரம் தாங்கி பிடிக்க .

 

அவளோ வண்டி ஓட்டும் குஷியில் இருக்க . பாண்டியனோ ஏய் ஏய் மெதுவா என்று வேகத்தடையை பார்த்தபடி கூற .

 

அதை எல்லாம் அவள் எங்கு கண்டாள் ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் .

 

பாண்டியனோ என்ன எப்படி இருந்தது ,இதுக்கு போய் பயந்து இருக்க பாரு என்று அவள் தலையை 

மெல்ல தட்ட .

 

தென்றலோ சிரிப்புடன் முதல் தடவை இல்லை அதான் கொஞ்சம் பயம் என்க .

 

பாண்டியனோ பயந்தா எதுக்கும் வேலைக்கு ஆகாது ஒரு டைம் அது என்ன அப்படின்னு face பண்ணிட்டா , உன்னோட பயம் இல்லாம போய்டும் சரியா , அதோட ஒரு விஷயத்தை கத்துக்கணும் ஆர்வம் மட்டும் தான் இருக்கனும் அதுமேல உனக்கு பயம் வரக்கூடாது . அதே போல இப்போ வண்டி ஓட்டும் போது விழுந்துடுவோம் நினைச்சா விழுந்துடுவோம் , அதுவே இப்படி நினைச்சு பாரு விழுந்தா என்ன எழுந்துக்கலாம், அதோட அந்த இடத்துல உன்னோட வண்டி ஓட்டுனா விழுந்துடுவோம் அப்படிங்கிற பயம் உன்ன விட்டு ஓடி போய்டும் என்க .

 

தென்றலோ அப்போ சரி நாளைக்கும் சொல்லி தாங்க என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்க. 

 

அவனோ இந்த ஒருவாரம் சொல்லி தரேன் அதுக்கு அப்புறம் நீதான் ஓட்டனும் என்று கண்டிப்பாக கூற .

 

அவளோ நானா ? தனியாவா ? என்று வாயை பிளக்க .

 

அவனோ ஆமா என்றவனோ கன்னத்தை கிள்ளி முத்தமிட்டபடி வீட்டின் உள் சென்றுவிட .

 

தென்றலுக்குத்தான் அல்லுவிட்டது தனியா ஓட்டனுமா என்பதிலே நிலைத்து இருந்தது .

 

அதன் பின்னான நாட்கள் அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது .

 

தென்றலோ சிரிப்புடன் வீட்டில் நுழைய அவளை கண்ட அவளது பாட்டியோ தென்றல் என்று அழைக்க .

 

அவளோ என்ன என்பது போல் அவர் அருகில் சென்றமர. 

 

அவரோ அவளையே விழி எடுக்காமல் பார்க்க. 

 

அவளோ அவர் முகம் முன் கை ஆட்டியவளோ என்ன பாட்டி கண்ணை திறந்துட்டே கனவு எதாவது காண்றீயா ? என்று சிரிப்புடன் கேட்க. 

 

அவரோ நீ எதுவும் கனவு காணல இல்லை என்று அவளை பார்வையால் ஊடுருவியபடி வினவ .

 

அவளோ புரியாமல் குழப்பத்துடன் என்ன சொல்ற பாட்டி என்க .

 

அவரோ நீ பண்றது சரியா தென்றல் , அந்த பையன பார்த்தா அப்படி பண்ணி இருக்க வாய்ப்பு இருக்குமா ? நீயும் இவ்ளோ நாள் பழகுற இல்லை உனக்கு அது தெரியலையா என்க .

 

அவளோ எதுவும் சொல்லாமல் தரையை பார்த்தபடி இருக்க .

 

தொடர்ந்த அவரோ இப்போ நீயும் அவன விரும்புற அப்படிங்கிறது உன் கண்ணே காட்டி கொடுக்குது , இதுனால அவன விட அதிகமாக பாதிக்கப்பட போறது நீதான் என்றவரோ அங்கிருந்து செல்ல பார்க்க. 

 

தென்றலோ எல்லாம் சரிதான் பாட்டி ஆனா நடந்த விஷயம் எல்லாம் அவர தான குற்றவாளியா ? காட்டுது என்க .

 

பாட்டியோ ஒருவேளை அது எல்லாம் பொய்யா இருந்தா ? என்று கேட்க .

 

தென்றலோ ஒரு அசட்டு சிரிப்புடன் நீயே சொல்றீயே பொய்யா இருந்தா தான்னு அப்போ அது பொய் இல்லை எல்லாம் உண்மை தான் என்றவள் கண்களோ அவ்வளவு அழுத்தம் .

 

அவரோ அதை எல்லாம் விடு நீ அவரை விரும்புற தான என்று அவள் கண்களை பார்த்தபடி கேட்க .

 

அவளோ எதுவும் சொல்லாமல் அவரையே பார்க்க. 

 

சொல்லு என்று அழுத்தி கேட்க. 

 

தென்றலுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆமா விரும்பத்தான் செய்றேன். இப்போ என்ன பண்ண சொல்ற என்று அழுகையுடன் அவரிடம் சத்தமிட .

 

சிரிப்புடன் அவள் அருகில் வந்தவரோ நான் எதுவும் சொல்லல நீயே உன் மனசு கேட்டு பாரு அது சொல்லும் என்று அவள் கண்ணீரை துடைத்தவரோ அங்கிருந்து சென்றுவிட .

 

தென்றலுக்குத்தான் அனைத்தையும் நினைத்து மனதிலோ பாரம் ஏறத் தொடங்கியது.

 

தொடரும் .

 

படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்க , updates சீக்கிரம் வரும் .

 

Review please 🙏

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top