தளிர் - 21
தன் முன் அமர்ந்து இருந்த நபரை கண்ட தென்றலுக்கோ அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை .
அந்த நபரோ என்ன தென்றல் எப்படி இருக்க என்று அழுத்தமாக கேட்க .
அவளோ எதுவும் சொல்லாமல் அவரையே பார்க்க.
அவரோ ஆமா ஏன் போன் பண்ணா எடுக்காம இருக்க என்று அவளை பார்வையால் ஊடுருவியபடி கேட்க .
அவளோ அது அது நான் வேலையா இருந்தேன் அதான் எடுக்கல என்க .
வேலையா இருந்தியா இல்லை அவனோட இருந்தியா என்று அங்கு நின்ற பாண்டியனை பார்த்தபடி கேட்க .
அவளோ அது அது என்று தடுமாற .
அவரோ ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது வந்த வேலைய நல்லாவே செய்றீங்க தென்றல் என்று நக்கல் இழையோட கூற .
தென்றலோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்க்க.
மேசை மீது இருந்த அவள் கையை பிடித்தவனோ , வந்த வேலைய மறந்துடாத தென்றல் அவனால நாம ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கோம் என்று அங்கு நின்ற பாண்டியனை பார்த்தபடி கூற .
தென்றலோ அவர் அப்படி பண்ணி இருக்க மாட்டாருன்னு தோணுது என்று தடுமாறி அவரை பார்த்தபடி கூற .
அந்த நபரோ அப்போ நாம பார்த்தது எல்லாம் பொய்யா என்று கோபத்தில் சீற .
பின் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு பாண்டியன் வருவதை கண்டவனோ அங்கிருந்து சென்றார் .
போகும் அந்த நபரையே பார்த்துக்கொண்டிருந்த தென்றலின் தோளை ஒரு கைதொட .
அவளோ விலுக்கென அவனை பார்க்க.
பாண்டியனோ ஏய் என்ன ஆச்சு ஏன் இப்படி உனக்கு வேர்த்து போய் இருக்கு என்றபடி டேபிள் மேல் இருந்த கர்சீப் எடுத்து அவள் முகம் துடைத்து விட .
அவளோ அவனையே விழி எடுக்காமல் பார்க்க.
பாண்டியனோ அவள் அருகில் அமர்ந்தவனோ என்ன ஆச்சுடி ஏதோ பேய பார்த்தது போல இப்படி பயந்து போய் இருக்க .
அவளோ அது அது வெயில்ல சுத்திட்டு வந்தோம் இல்லை அதான் இப்படி இருக்கு என்று தடுமாறியபடி கூற .
அவனோ சரி என்ன சாப்பிடலாம் ஏதாவது பார்த்து வச்சிருக்கியா ? என்று மெனு கார்டை எடுக்க .
அவளோ சொல்லாமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க .
பாண்டியனோ ஏய் தென்றல் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க .
அவளோ ஏங்க கிளம்பலாமா எனக்கு தலை வலிக்குது என்று தலையை பிடித்தபடி கூற .
பாண்டியனும் ஹேய் are you ok என்று அவள் கையை பிடிக்க.
அவளோ நான் ஓகே தான் என்றபடி கிளம்பலாம் என்பது போல் பார்க்க.
அவனோ சரி வா என்றபடி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் .
அப்போதும் தென்றலின் முகம் சரியில்லாமல் இருக்க .
அதை கவனித்த பாண்டியனோ என்னம்மா எதாவது பண்ணுதா , ஹாஸ்பிட்டல் போலாமா கனிவாக கேட்க .
அவளோ அதுலாம் இல்லைங்க , நான் நல்லா தான் இருக்கேன் என்று சிரித்தபடி கூற .
அவனோ சரி என்பது போல் வீட்டின் கதவை திறந்து உள் நுழைய .
தென்றலோ என்னங்க என்றழைக்க .
அவனோ என்ன என்பது போல் பார்க்க.
அவளோ இருக்கையை விரித்து வா என்று அழைக்க.
பாண்டியனோ இதழில் புன்னகையுடன் அவள் அருகில் வந்தவனோ என்ன ஆச்சு இன்னைக்கு என் கண்ணம்மா வுக்கு என்றபடி அவளை அணைத்துக் கொள்ள .
தென்றலோ அவன் மார்பில் அழுந்த முகம் புதைத்து காற்று புகாதபடி அவனை இறுக அணைத்துக் கொள்ள .
பாண்டியனோ அணைத்தபடி தன் உயரத்திற்கு அவளை தூக்கி கொள்ள .
சிறிது நேரம் அப்படியே இருக்க . பின் தென்றலோ பாண்டியன் முகம் பார்க்க.
அவனோ அவள் முகத்தை மறைத்த முடியை விலக்கி விட்டவனோ என்ன என்று பார்வையால் வினவ .
அவளோ ஒன்னும் இல்லை சரி என்ன சமைக்க என்றபடி கிச்சன் உள் நுழைய .
அவனோ ஏய் இப்போ தான் தலை வலிக்குது வாங்க போகலாம் சாப்பிடாம கொல்லாம அங்கிருந்து வந்தோம் , இப்போ இங்க வந்து என்ன சமைக்கன்னு கேட்கிற என அவளை குழப்பத்துடன் கேட்க.
அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவளோ அது இப்போ சரி ஆகிடுச்சு , உங்களுக்கு என்ன வேணும் என்றபடி அறையின் உள் நுழைந்து கொண்டால் .
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனோ இன்னைக்கு என்னுமோ ஆகிடுச்சு இவளுக்கு என்றபடி அவனும் மேல் உள்ள அறைக்கு சென்றுவிட .
இப்படியாக அவர்களது காதல் உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது .
அன்று எப்போதும் போல் இருவரும் மாமரத்தடியில் ஊஞ்சலில் தென்றலும் , அவன் அருகில் இருந்த கல் மேடையில் அமர்ந்த படி லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க .
அவளோ ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்த படி அவள் கால் நுனி விரலை அவன் கைகள் வருடியபடி இருக்க .
தென்றலோ ஏங்க நீங்க இதுக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா என்று அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி கேட்க .
பாண்டியனோ எதற்கு இந்த கேள்வி என்பது போல் அவளை நோக்க .
தென்றலோ சொல்லுங்க என்றபடி ஊஞ்சலில் மெதுவாக ஆடியபடி கேட்க .
அவனோ இல்லை என்பது போல் தலையாட்டியவனோ மீண்டும் லேப்ட்டாப்பில் தலையை விட்டு கொள்ள .
தென்றலோ நிஜமா யாரையும் நீங்க லவ் பண்ணலயா என்று மீண்டும் சந்தேகமாக கேட்க .
பாண்டியனோ இப்ப எதுக்குடி மறுபடி மறுபடி அதையே கேட்கிற என்று சலிப்பாக அவன் குரல் வர .
தென்றலோ சும்மா தான் என்று சமாளிக்க .
சரி என்ன இவ்ளோ கேள்வி கேட்கிறீயே நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா என்று லேப்டாப்பில் இருந்து பார்வையை அவள் பக்கம் திருப்ப
தென்றலோ ஹலோ நாங்க யாரையும் லவ் பண்ணல என்று திமிராக கூற .
பாண்டியனோ சிரிப்புடன் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவனோ , தன் வேலையில் மூழ்கி விட .
தென்றலோ சிறிது நேரம் ஊஞ்சலில் ஆடியபடி இருந்தவளோ , இறங்கி அவன் அருகில் சென்றமர்ந்தவளோ.
அப்படி என்னதான் பண்றீங்க என்று லேப்டாப்பை பார்க்க.
பாண்டியனோ எதுவும் சொல்லாமல் வேலை பார்த்தபடி இருக்க .
தென்றலோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து செல்ல பார்க்க.
பாண்டியனோ அவளை பார்க்காமலே அவள் கையை பிடிக்க.
அவளோ என்ன என்று பார்க்க.
அவனோ தன் அருகில் இருக்கும் இடத்தை கண்காட்ட .
அவளோ நீங்க வேலை பார்க்கறீங்க ,நான் என்னங்க பண்ணட்டும் என்க .
அவனோ இவ்ளோ நேரம் மேடம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க கேட்க .
அவளோ , என்ன பண்ணேன் சும்மா தான் இருந்தேன் .
பாண்டியனோ அதையே பண்ணு என்று அவன் அருகில் அமர்த்திக் கொள்ள .
தென்றலோ சிறிது நேரம் அவன் அருகிலும் , பின் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்தபடி இருக்க .
அவளோ ஏங்க எவ்ளோ நேரம் தான் நான் இப்படியே இருக்க குரலோ சோர்ந்து வர .
ஏன்டி நான் என்ன வேலை பார்க்கிறேன் , நான் எங்க இருந்து வரேன் எதுவுமே இதுவரைக்கும் நீ கேட்டதே இல்லை என்று கேட்க .
தென்றலோ நீங்க என்ன வேலை பார்த்தா என்ன , எங்க இருந்து வந்தா என்ன இதோ இப்போ என் கண் முன்னாடி இருக்கீங்களே அதுவே போதும் என்று கண் மூடியபடி அவன் தோளில் சாய்ந்து கொள்ள .
பாண்டியனோ ஒரு வேலை நான் தீவிரவாதியா இல்ல வேற எதாவது தப்பான தொழில் ல இருந்த என்ன பண்ணுவ என்று ஒரு கேலியுடன் கேட்க .
விலுக்கென நிமிர்ந்து அவன் முகத்தை ஒருநொடி பார்த்தவளோ மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொள்ள .
என்னடி பதிலே காணோம் என்று அவள் முகம் பார்க்க .
தென்றலோ அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை , நீங்க அவ்ளோ பெரிய ஆளு எல்லாம் இல்லை என்று கிண்டலுடன் கூற .
ஒருவேளை அப்படி இருந்தா என்னடி பண்ணுவ ஒரு கேலி குரலுடன் கேட்க .
அவளோ அதான் நீங்க இல்லைன்னு தெரியுமே என்று அவளோ உறுதியாக கூற .
ஒரு வேளை உன்ன ஏமாத்திட்டு போய்ட்டா என்ன பண்ணுவ என்று நக்கலுடன் கேட்டபடி லேப்டாப்பை மூடி வைத்தவனோ அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர.
தென்றலோ அவன் விழியோடு விழி பார்த்தவளோ அதுக்கும் வாய்ப்பு இல்லை என ஆழ்ந்த குரலில் கூற .
அவள் விழி பார்வையில் மயங்கியவனோ , அது எப்படி நீ சொல்லலாம் உன்ன ஏமாத்தின என்ன பண்ணுவ .
தென்றலோ நீங்க என்ன ஏமாத்த மாட்டீங்க , அப்டி ஏமாத்துனா இதோ உங்க கண்ணே எனக்கு காட்டி கொடுத்துடும் என்றவளோ பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள .
தொடர்ந்த தென்றலோ சரி நான் உங்கள ஏமாத்திட்டு போனா என்ன பண்ணுவீங்க என்று அவன் கேட்டது போல் கிண்டலுடன் கேட்க .
பாண்டியன் முகமோ சட்டென மாறத்தொடங்க.
அதை கண்ட தென்றலோ ஹே என்னப்பா நான் சும்மா தான கேட்டேன் என்க .
அவனோ சும்மா கூட அப்டி சொல்லாதா நீ என்னை விட்டு போனா நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று கடுமையான குரலில் கூற .
தென்றலோ என்னங்க என்று அதிர்ச்சியுடன் அவனை பார்க்க.
அவள் அதிர்ந்த முகத்தை பார்த்த பாண்டியனோ சிரித்தபடி அப்டி எல்லாம் நான் பண்ண மாட்டேன், நீ அப்படி பண்ணா அது உனக்கு தான் ரொம்ப ஆபத்தா முடியும் தென்றல் என்றவனோ அவள் கன்னம் தட்ட .
தென்றலுக்குத்தான் அவன் முகம் பார்க்க சற்று பயம் எடுக்கத் தொடங்கியது .
அவன் கண்கள் சொன்ன செய்தி வேறு அல்லவா .
உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் என்றல்லவா சொல்லாமல் சொல்கிறான் .
அவளோ ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்க .
பாண்டியனோ ஏய் என்னடி அப்டியே சிலையாகிட்ட நீ என்ன என்னை ஏமாத்தவா போற என்றபடி எழுந்தவனோ வீட்டின் உள் நுழைந்துவிட .
போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தென்றலின் முகமோ ஒரு வித அழுத்தத்தை தத்தெடுத்துக் கொண்டது .
தொடரும் ....
