தளிர் - 20
தென்றலோ எதையோ யோசித்தபடி வேலை செய்து கொண்டிருக்க . அடுப்பில் இருந்த பாலோ பொங்கி வழிய.
அவள் பாட்டியோ வெளியில் இருந்து வீட்டின் உள் வந்தவரோ அடுப்பில் பால் வழிவதை கண்டு அடுப்பை நிறுத்தியவரோ .
தென்றல் என்று குரல் உயர்த்தி அழைக்க .
தென்றலுக்கோ அப்போது தான் நிதர்சனம் உரைத்து பாட்டியை பார்க்க.
அவரோ அடுப்பை கண்காட்ட. அதை கண்டவளோ அய்யோ என்று பதறியபடி பாட்டியை பார்க்க.
அவரோ உன் கவனம் எல்லாம் எங்க இருக்கு , நீ கொஞ்ச நாளா சரி இல்லை தென்றல் என கண்டிக்கும் குரலில் கூற .
அவளோ எதுவும் சொல்லாமல் அடுப்பை துடைக்க.
அவரோ அவள் தோளைத்தொட்டு தன் பக்கம் திருப்ப.
அவள் கண்களோ கலங்கி போய் இருக்க .
அதில் பதறிய அவரோ , என்ன ஆச்சு ஏன் அழுகுற என்று அவள் கண்ணை துடைத்து விட .
அவளோ நான் பண்றது சரியா பாட்டி , எனக்கு என்னுமோ அப்படி இருக்காதுன்னு தோணுது என்று அழுகையுடன் கூற .
அவரோ அவளை தன்னோடு அணைத்து பிடித்துக் கொண்டவரோ அவள் முதுகை தட்டி கொடுக்க.
அந்த மனுசன் என்ன பார்த்து நீயும் என்னை விட்டிட்டு போய்ட மாட்டியேன்னு கேட்டாரு பாரு அந்த இடத்துல நான் நொருங்கி போய்ட்டேன் பாட்டி என்று ஓவென்று கதறி அழுக .
அவருக்கும் அவளின் அழுகையில் மனம் வருந்தியவரோ எதுவும் சொல்லாமல் அவளை அணைத்தபடி சிறிது நேரம் இருக்க .
அவள் அழுகை அடங்கி இயல்பு நிலைக்கு திரும்பிய தென்றலோ என்ன ஆனாலும் சரி இதை நான் செய்யாம விடப் போறது இல்லை , ஆனா என்னால முடியல பாட்டி என்றபடி அவர் மடியில் முகம் புதைத்துக் கொண்டவளோ , அப்படியே உறங்கியும் போனால் .
இதோ அதோ என்று அவர்கள் காதலிக்க தொடங்கி ஒருவாரம் கடந்து இருக்கும் .இந்த ஒருவார காலம் அவளுக்கு எப்படியோ அவனுக்குதான் பொன்னான காலம் .
அதுவும் காலையில் இருந்து மாலை வரை அவளை அட்டை போல் ஒட்டிக்கொண்டே திரிவான், தென்றலுக்குத்தான் அவனை சமாளிப்பது பெரும்பாடு ஆகிப்போகும் .
இன்று எப்போதும் வீட்டின் உள் நுழைந்தவளோ அவனுக்கான காபியை எடுத்துக் கொண்டு மாடி ஏறிச் சென்றவளோ , அறையில் அவன் இல்லை என்பதை உணர்ந்தவளோ , எப்படியும் மேல் மாடியில் தான் இருப்பான் என்றுணர்ந்தவளோ மேல் ஏறிச் சென்றவள் கண்களோ ஒருகணம் வியப்பில் விரிந்து கொண்டது .
பாண்டியனோ வெறும் ஒரு டிராக் பேண்ட் மட்டும் அணிந்த , சட்டை அணியாமல் காலை நேர உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்க .
தென்றலோ அவன் உடற்பயிற்சி செய்வதையே வாயை பிளந்த படி பார்த்துக் கொண்டிருக்க . அவள் விழிகளோ அவன் மடக்கி விரிக்கும் கை புஜத்தின் மேலே நிலைகொண்டு இருக்க .
பின் பக்கம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தென்றலை கண்டு கொண்டவனோ
ஏன்டி டெய்லியும் தான பார்க்கிற , ஏதோ புதுசா பார்க்கிறது போலவே பார்த்து வைக்கிற என்றபடி தன் கையில் இருக்கும் டம்புள்ஸை கீழே வைத்தபடி அவள் அருகில் வர .
தென்றலோ அவன் சொன்னதில் தன்னையே நினைத்து தலையில் அடித்துக் கொண்டவளோ , அவன் கையில் காபியை கொடுக்க.
பாண்டியனோ அதனை வாங்காமல் இல்லை என்பது போல் தலையாட்டியவனோ அவள் அருகில் நெருங்கி நின்று மாராப்பு சேலையில் நெற்றி வேர்வையை துடைத்தவனோ , அதன் பின்பே அவளிடம் இருந்த காபியை வாங்கியபடி அங்கிருந்த கல்மேடையில் அமர .
தென்றலோ அவன் அருகில் அமர்ந்தபடி அவன் தோளை வருடியபடி இருக்க .
பாண்டியனோ அது என்னடி உனக்கு மட்டும் வித்தியாசமான டேஸ்ட் , என் கைமேல இப்படி ஒரு ஆசை என்று அவள் இடையோடு கைபோட்டு தன்னோடு அணைத்தபடி கேட்டபடி காபியை குடிக்க .
அவளோ அது என்னுமோ தெரியல என்றவளோ நரம்போடிய கையில் இருந்த காப்பை மேல் ஏற்றிவிட்டு அவன் கையோடு கைகோர்த்தபடி அவன் தோள் மேல் சாய்ந்து கொள்ள .
அவனோ அப்படி என்னடி இந்த கையில் இருக்கு என்று கிண்டலுடன் கேட்க .
அவளோ என்ன இல்லை இதோ இப்படி பாதுகாப்பா என் கையை உங்க கைக்குள்ள பொத்தி வச்சிருக்கீங்களே . இது யாருக்கு கிடைக்கும் , ஒரு பொண்ணுக்கு ஒரு ஆணோட கையை பிடிச்சு இருக்கும் போது அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு வரனும் , அது எனக்கு இந்த கையை பிடிக்கும் போது வருது .
அது ஒரு விதமான உணர்வுங்க , உங்க கையை பிடிக்கும் போது எனக்கே தெரியாம எனக்குள்ள வர ஒரு சந்தோஷம் என்றவளோ அவன் கண்ணோடு கண் பார்க்க.
பாண்டியனோ சிரித்தபடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவனோ எனக்கு தினம் தினம் புதுசா தெரியரடி .
உனக்கு தெரிஞ்சது இதுதான் ஆனா தெரியாத விஷயம் நான் ஒன்னு சொல்லட்டா என்றவனோ அவள் காது அருகில் குனிந்து என்ன சொன்னானோ அவள் முகமோ செங்காந்தளாக சிவந்து , காது இரண்டு வெட்கத்தில் கூசி விட .
தென்றலோ சீச்சீ சீச்சீ என்று சிணுங்கியவளோ அவன் தோளில் அடித்துவிட்டு அவனிடம் இருந்து எழந்தோட பார்க்க.
பாண்டியனோ அடியே இதுக்கே சிணுங்குன இன்னும் எவ்வளவோ இருக்கேடி என்று அவளை விடாமல் இழுத்து பிடிக்க .
தென்றலோ அதுலாம் எனக்கு வேண்டாம் நான் போறேன் என்றவளோ அவனிடம் இருந்து ஓடிவிட .
பாண்டியனோ எங்க போனாலும் இங்க வந்துதான்டி ஆகனும் என்று குரல் கொடுக்க.
இப்படியாக இருவரது காதலும் வளர்த்தொடங்கியது.
அன்று ஒருநாள் இருவரும் சேர்ந்தபடி கடைக்கு செல்ல . துணி கடைக்குள் இருவரும் நுழைய .
தென்றலோ கடையை சுற்றி பார்த்தபடி இருக்க .
பாண்டியனோ வா உனக்கு எதாவது எடுத்துக்கோ என்று அவளுக்கான ஆடை இருக்கும் பகுதிக்கு அவளை அழைத்து செல்ல.
அவளோ அதான் என்கிட்ட டிரஸ் இருக்கே எனக்கு எதுவும் வேண்டாங்க என்றவளோ தயங்கியபடி விலகி நிற்க .
பாண்டியனோ என்ன அந்த வெளுத்து போன நாலு புடவையும் , நாலு சுடிதாருமா , என்று அவளை முறைக்க .
அவன் கேட்டதில் முகம் சுருக்கி அவனை பார்த்தவளோ வேலைக்காரிகிட்ட அவ்வளவு தான் இருக்கும் , நீங்க வேணா நல்லா டிரஸ் போடுற பொண்ணா பார்த்துக்கோங்க என்று அங்கிருந்த செல்ல பார்க்க.
பாண்டியனோ அவள் கையை பிடித்து தன்பக்கம் இழுத்தவனோ அடியே உன்னை கஷ்டப்படுத்த நான் அப்படி கேட்கல , உன் கலருக்கு அதுலாம் நல்லா இல்லடி , அதுக்குமிச்சம் இந்த பாண்டியன் பொண்டாட்டி எப்பவும் அழகா இருக்கனும் என்று அவள் கன்னம் கிள்ளி ஆசையாக முத்தம் வைக்க .
தென்றலுக்கோ அவன் பொண்டாட்டி என்றதில் ஜிவென்று ஒரு உணர்வு தோன்றி மறைந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டவளோ .
பொண்டாட்டியா யாருக்கு யார் பொண்டாட்டி இன்னும் நமக்கு கல்யாணமே ஆகல சார் அதை மறந்துடாதீங்க என்று கிண்டலுடன் கூற .
பாண்டியனோ கல்யாணம் ஆனால்தான் பொண்டாட்டி யோ என்னைக்கு நீ என் மனசுல வந்தியோ அப்பவே நீ என் சொந்தம்டி என்றவனோ விழிகளில் ஒரு அழுத்தத்துடன் கூற.
அவன் விழிப்பார்வையை கண்டவளுக்கு மனதில் ஏதோ உறுத்தல் ஏற்படத்தொடங்க. அதை எல்லாம் புறம் தள்ளி வைத்தவளோ .
சரிதான் என்றபடி துணிகளை பார்க்க .
அவளோ அவளின் கலருக்கும் எடுக்கும் நிறத்திற்கும் எதுவும் பொறுத்தமில்லாமல் எடுக்க .
அதை கண்ட பாண்டியவனோ ஏன்டி உன் டேஸ்ட் இப்படி இருக்கு என்க .
தென்றலோ முகத்தை பாவமாக வைத்து கொண்டவளோ ஏன் நல்லா இல்லையா என்க .
பாண்டியனோ அவள் முகம் போன போக்கை கண்டவனோ அவள் எடுத்த உடைகளை இருந்த இடத்தில் வைத்துவிட்டு , அவளுக்கு ஏற்றார் போல் விதவிதமாக எடுக்க.
தென்றலோ ஏங்க இதுலாம் நான் போட மாட்டேன் என்று அவன் எடுத்த ஜீன்ஸ் , டிசர்ட்டை கைகாட்ட.
அவனோ அவள் சொன்னதை எங்கு காதில் கேட்டான் , ஒரு செட் ஆடையை அவள் கையில் எடுத்து கொடுத்தவனோ டிரயல் ரூம் உள்ளே வலுக்கட்டாயமாக அவளை அனுப்பி வைக்க .
தென்றலோ சிணுங்களுடன் என்னங்க இதுலாம் வேண்டாம்ங்க எனக்கு போட்டு பழக்கம் இல்லைங்க என்று கூற .
பாண்டியனோ அடியே இதுலாம் போட்டு பழகுடி ஏன் இப்படி இருக்க , உனக்கு போட்டா நல்லா இருக்கும் என்க .
அவளோ அவனையே பார்த்தபடி இருக்க .
பாண்டியனோ ஏன் டிரஸ் பிடிக்கலையா என்க .
தென்றலோ அப்படி இல்லை பிடிச்சு இருக்குதான் ஆனா என்று இழுக்க .
பாண்டியனோ பிடிச்சு இருக்குள்ள அவ்ளோதான் என்றவனோ அவள் அறையின் உள்ளே தள்ளி கதவை மூட .
சிறிது நேரம் கழித்து வந்த பாண்டியனோ கதவை தட்டி அவளிடம் ஒரு பாக்சை நீட்ட .
தென்றலுக்கோ அவன் கொண்டு வந்து கொடுத்த பாக்சை கண்டவுடன் வெட்கம் வர .
அவளோ சட்டென கதவை அடைத்துக் கொள்ள .
உள்ளிருந்த தென்றலுக்கோ அய்யோ இந்த மனுசனை என்ன சொல்ல என்று கையில் இருந்த பெண்கள் அணியும் உள்ளாடை இருக்கும் பெட்டியை வெட்கத்துடன் பார்க்க.
அதன் பின் சிறிது நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்த பாண்டியனோ அவளையே பார்த்தபடி இருக்க .
தென்றலோ தயங்கி தயங்கி அவன் அருகில் வந்தவளோ நல்லா இருக்கா என்று சிறு வெட்கத்துடன் கேட்க .
அதன் பின்னே தன்னிலைக்கு வந்த பாண்டியனோ குரலை செருமியபடி
சூப்பரா இருக்கு என்று அவளை மேல் இருந்து கீழாக பார்க்க.
தென்றலோ அவன் பார்வையில் வெட்கி சிவக்க .
பாண்டியனோ ஏன்டி இப்படி சிவந்து போற, என்று அவள் கன்னம் தொட வர .
அவளோ சுற்றியும் ஆட்கள் இருப்பதை பார்த்து விலகி நிற்க.
சுற்றியும் பார்த்த பாண்டியனோ அவ்வளவாக ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொண்டவனோ அங்கிருந்த நிலைக்கண்ணாடி முன் அவளை நிறுத்தி , அவள் பின் பக்கம் நின்றபடி இடையில் ஒருகையை படவிட்டு, அவள் தோள் வளைவில் தன்நாடியை பதித்தவனோ இருவரையும் சேர்த்தார் போல் ஒரு போட்டோ எடுக்க .
தென்றலோ அவனையே விழி எடுக்காமல் பார்க்க.
அதை கவனித்த பாண்டியனோ ஏன்டி இப்படி திங்கிற மாதிரி பாக்குற , இது வீடா மட்டும் இருந்து இருந்தது நடக்கிறதே வேற என்று சற்று கரகரப்பான குரலில் கூற .
தென்றலுக்குதான் அவனை இப்படி தவிக்க விட்டு பார்ப்பதில் அலாதி இன்பம் .
சிரிப்பை அடக்கியவளோ என்ன பண்ணுவீங்களாம் என்று வேண்டும் என்றே அவனை சீண்ட .
பாண்டியனோ சுற்றியும் ஒரு பார்வை பார்த்தபடி அதே டிரயல் ரூமில் தள்ளி சென்றவனோ அவள் இதழ் என்னும் தாளில் அவன் இதழ் என்னும் எழுதுகோல் கொண்டு சிவந்து போகும் அளவு கவிதை எழுதியே அவளை விடுவித்தான் அவன்.
அவளோ அவனை விலகி வெளியே சென்றுவிட.
அதன் பின் இருவரும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட சென்று ஒரு டேபிளில் அமர .
பாண்டியனுக்கோ போன் வர அதை எடுத்து பேசியபடி அவள் இருக்கும் இடத்தில் இருந்து சற்று விலகி சென்று பேசியபடி இருக்க .
அப்போது தென்றல் முன் இருந்த இருக்கையில் யாரோ அமர்வது போல் இருக்க.
தென்றலுக்கோ தன் முன் இருக்கும் நபரை கண்டவளுக்கோ தூக்கிவாரிப்போட்டது .
அவளோ அதிர்வுடன் நீங்க என்று கேட்க .
தொடரும் ....
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்க .updates சீக்கிரம் வரும் .
Review please 🙏
