தளிர் - 19
இளம் காலை நேர வெய்யில் மெதுவாக அவள் முகத்தில் பட . அதனால் அவளது முகமோ தங்கமென மின்ன . அதை புன்முறுவலுடன் காலை சூரியன் மேல் எழும்புவதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தால் தென்றல் . அவளது மனமோ அன்று பாண்டியன் சொன்னதிலே நிலைத்து இருந்தது .
அவளை ஊஞ்சலில் அமர வைத்தவனோ அங்கு முன் இருந்த கல்லில் அமர்ந்தபடி அவளையே பார்த்தபடி இருக்க.
அவளோ என்ன என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க .
பாண்டியனோ என்ன ஏன் உனக்கு பிடிச்சது என்று கேட்க.
அவளோ பிடிக்கிறதுக்கு காரணம் தேவையா என்ன ?
சிரித்த பாண்டியனோ காரணம் தேவையில்லை தான் ஆனா என்னை போல ஒருத்தனை பிடிக்க காரணம் தேவைதான் என்க .
அவளோ அதுலாம் தெரியாது எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு என்று திட்ட வட்டமாக கூற .
பாண்டியனோ அவள் வெற்று இடையில் கைகொடுத்து தன்னோடு நெருக்கி கொண்டவனோ .
என்னடி , நான் சொன்னதை எனக்கே சொல்றியா என்று அவள் மூக்கை நுனி பல் கொண்டு மெல்ல கடிக்க .
தென்றலோ அவன் கடித்ததில் முகம் சுருக்கி அவனை முறைத்தவளோ ஆமா அப்படித்தான்.
சரி சொல்லுங்க ஏன் என்னை விரட்டி விடறதுலேயே குறியா இருந்தீங்க என்று அவனை சற்று கண்டிப்பு குரலில் கேட்க .
அவனோ அவள் கேட்டதில் சற்று முகமாறினாலும அதை சமாளித்து கொண்டபடி .
என் வாழ்க்கையில பார்த்த எல்லாரும் என்னை ஒருகட்டத்துல என்னை விட்டிட்டு போய்டுவாங்க இல்லை ஏமாத்திட்டு போய்டுவாங்க , அதான் யாரையும் நம்ப தோணல , யாரையும் நெருங்கவும் விடல என்றவனின் குரலோ ஏதோ இனம் புரியாத சோகம் .
தென்றலோ அவனையே விழி எடுக்காமல் பார்க்க.
எனக்கும் எல்லாரும் மாதிரி அம்மா , அப்பா , ஒரு குட்டி தங்கச்சி என்றவனின் கண்களிலோ அவ்வளவு சந்தோஷம் . எங்களுக்குன்னு ஒரு குட்டி உலகம் , நாங்க அவ்வளவு சந்தோஷமா இருந்தோம் . ஆனா அது அந்த கடவுளுக்கு கூட பொறுக்கல போல .
அன்று நடந்ததை நினைவு கூர்ந்தான் .
அவன் குடும்பம் ஒரு நாள் ஊட்டி செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்று கொண்டிருந்த நேரம் அது .
அவன் தங்கையோ ஏதோ பாட்டு பாடியபடி வர , அவனும் அவளோடு விளையாடியபடி வர . மலை என்பதால் மெதுவாக தான் சென்று கொண்டிருந்தனர் . அப்போது பாண்டியனோ அப்பா அப்பா அந்த இடம் சூப்பரா இருக்கு அங்க காரை நிறுத்துங்க என்றபடி காரில் இருந்து இறங்க ஓட .
அவனது அம்மாவோ டேய் மெதுவாக போடா என்று சத்தமிட .
அவனோ சரிம்மா என்றவனோ அந்த இடத்தை ஒரு போட்டோ எடுத்தபடி இருக்க .
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கனரக வாகனம் அவர்கள் இருந்த காரை அடித்து தூக்கி பள்ளத்தில் வீசியது .
பாண்டியனோ போட்டோ எடுத்துக் கொண்டிருந்தவன் பின் பக்கம் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்க்க.
அவனுக்கு தெரிந்தது காருடன் அவன் குடும்பம் பள்ளத்தில் உருண்டது மட்டுமே .
அவனோ அம்மா அப்பா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அலற .
அதை இப்போதும் கண்டது போல் அவன் அலற அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டால் தென்றல் .
அவளுக்கும் கண்கள் கலங்கித்தான் போனது . யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது அல்லவா , தன் கண் முன்னால் அன்புக்குரியவர்கள் இறந்து போவதை கண்டால் யாரால் தான் தாங்கி கொள்ள முடியும் .
பாண்டியனோ அழுகையுடன் அவளை இறுக அணைத்துக் கொண்டவனோ எல்லாத்துக்கும் நான் தான் காரணம் , நான் மட்டும் அடம்பிடிக்காம இருந்து இருந்தா என் அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் உயிரோட இருந்து இருப்பாங்க தானே , எல்லாத்துக்கும் நான் தான் காரணம் , எல்லாம் என்னால தான் அவங்க செத்து போனாங்க என்று அவன் ஓவென்று கதறி அழுக .
தென்றலுக்கோ என்ன செய்வதென்றே புரியா நிலை . என்ன செய்வேன் நான் என்று அவளும் கண்ணீருடன் இறுக அணைத்துக் கொண்டவளோ நீங்க எந்த தப்பும் பண்ணல , அது ஒரு விபத்துங்க , நீங்க காரணம் இல்லை என்று அவனை சமாதானப்படுத்த முயல .
அவனோ சிறிது நேரம் அப்படியே இருந்தவனோ மீண்டும் தொடர்ந்து சொல்லத் தொடங்கினான்.
அதுக்கப்புறம் என் அத்தை தான் எல்லாமே . அவங்களும் கொஞ்ச நாள் நல்லா தான் இருந்தாங்க .
நான் என் அத்தை மாமா எல்லாரும் ஒரு கோவிலுக்கு போக ட்ரெயின் ஏறுனோம் ,அதுக்கு அப்புறம் நான் ட்ரெயின்ல தூங்கி போய்ட்டேன் .
கண் முழிச்சு பார்த்தா நான் மட்டும் இருக்கேன் ஆனா என் அத்தை மாமா யாரையும் காணல.
அந்த இரயில்வே ஸ்டேஷன்ல அவ்வளவு கூட்டத்துல எங்க போய் என் அத்தைய தேட , யாரை கேட்க , எதுவும் தெரியல , அழுகை , பயம் மட்டும் தான் .
நான் எங்க இருக்கேன் அது எந்த ஊர் ,எதுவும் தெரியாம ஸ்டேஷன் விட்டு வெளிய வந்தேன் . பேர் தெரியாத ஊர்ல நாய் மாதிரி அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு திரிஞ்சு. பசி வேற ஒரு பக்கம் . ஒரு கடையில தெரியாம திருடி மாட்டி அவங்க என்ன நாய அடிக்கிற மாதிரி அடிச்சு துறத்தினாங்க.
அதுலாம் இன்னைக்கு நினைச்சா கூட ஏதோ நேத்து நடந்த மாதிரி இருக்கு என்று சொன்னவனின் கண்களோ கலங்கித்தான் போனது .
அதுக்கு அப்புறம் வளர்ந்தது எல்லாம் ஒரு ஆஸ்ரமம் தான் , அப்புறம் இரண்டு பிரண்ட்ஸ் அவ்வளவு தான் .
அதுக்கு அப்புறம் காலேஜ் , என்னோட இரண்டு நண்பர்கள் அவளோதான் . நான் அன்பு வைக்கிற எல்லாரும் ஒன்னு என்னை விட்டு போய்டுவாங்க , இல்லை என்னை ஏமாத்திடுவாங்க .
அப்பறம் தான் வளர வளர தெரிஞ்சது தான் என் அத்தை என்னை என் சொத்துக்காக கூட இருக்க வச்சிருக்காங்கன்னு, ஒரு கட்டத்துக்கு மேல யாரையும் நம்பாத எல்லாரும் சுயநலவாதியாக அப்படின்ற எண்ணம் அதிகமாச்சு.
அதான் என்னோட வட்டத்தை நானே குறைச்சு யாரையும் உள்ள விடல . அதையும் மீறி வந்தவங்க தான் என்னோட இரண்டு நண்பர்கள் .
அவங்களுக்கு அப்புறம் நீ , ஆனா உன்னையும் என்னால ஏத்துக்க முடியல . காரணம் எங்க நான் உன்மேல அன்பு வச்சு நீயும் ஒரு இடத்தில் என்னை விட்டிட்டு போய்டுவியோ , இல்லை நான் அன்பு கொடுத்து உனக்கு ஏதாவது ஆகிடுமோ அப்படிங்கிற பயமே என்கிட்ட உன்னை நெருங்க விடாம, வார்த்தை கொண்டு வதச்சது .
எனக்குள்ளவே நான் போட்டுகிட்ட வட்டம் யாரையும் உள்ள விடாம செஞ்சுடுச்சு என்று அனைத்தையும் கொட்டி தீர்க்க.
தென்றலோ அப்போ அந்த பொண்ணுங்க என்று அப்போதும் அவளது தட்டுத்தடுமாறி தன் சந்தேகத்தை கேட்க .
பாண்டியனோ அது என் டென்சன் குறைக்க டாக்டர் சொன்ன ஒரு ரீலிப் மெடிசன் , ஏன்னா சில மாசம் எனக்கு தூக்கமே வராது என் கண் முன்னாடி அவங்க இறந்து போன சம்பவமும் , நான் அனாதையாக நடு ரோட்டுல நின்றதும் தான் அடிக்கடி கனவா வந்து கொல்லும் . அதுனால என்னோட சராசரி வாழ்கை பாதிக்கப்பட்டது . சரியா வேலை செய்ய முடியாது , சாப்பிட முடியாது இப்படி பல பிரச்சனை .
இதை சரியா விட்டா சரிவராது டாக்டர் கன்சல் பண்ணேன் அவரும் மெடிசன் கொடுத்தாரு ஆனா எனக்கு எதுவும் சரி ஆகல . யோகா மெடிடேசன் இந்த மாதிரி நிறையா பண்ண சொன்னாரு ஆனா எதுவும் செட் ஆகல .
இன்னும் தான் என் உடம்பு பாதிக்கப்பட்டுச்சு, அதுக்கு அப்புறம் டாக்டர் சொன்ன விஷயம் தான் intimate with women. அதுக்காக தான் அவங்களோட இருந்தது . இந்த விஷயம் யாருக்கும் தெரியாது . என் பிரண்ட்ஸ் கூட நான் பொண்ணுங்கள யூஸ் பண்றதா நினைப்பாங்க. ஆனா எனக்கு மட்டும் தான் அது ஒரு மெடிசன் , மெடிடேசன் மாதிரி . I am not womanizer தென்றல் என்று ஒரு வலி நிறைந்த குரலில் கூற . அவள் வயிற்றில் முகம் புதைத்தபடி அணைத்தையும் அழுது தீர்க்க .
இவ்வாறு அனைத்தையும் சொல்லி முடித்து .அவள் முகம் பார்த்து அவள் கையை பற்றியவனோ
'நீயும் என்னை விட்டிட்டு போய்ட மாட்டியே ' என்று தவிப்பாக அவள் முகம் பார்க்க.
என்ன சொல்வேன் நான் என்று அவன் முகம் தாங்கியவளோ , அழுகையுடன் கண்களில் கண்ணீர் வழிய .
என்ன ஆனாலும் சரி நான் உங்கள என்னைக்கும் விட்டுட்டு போக மாட்டேன் என்றவளோ அதனை உறுதி படுத்தும் விதமாக அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட.
அவள் நினைவை கலைத்தது போன் அடிக்கும் சத்தம் அதில் அழைத்தது யார் என்று பார்த்தவளுக்கு உள்ளூர ஏதோ ஒரு உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது .
போனை எடுக்காமல் அந்த அழைப்பை தவிர்த்தவளோ, புன்னகை முகமாக அவன் வீடு நோக்கி புள்ளி மான் போல துள்ளி ஓடத் தொடங்கினால் .
அவள் வீட்டில் நுழைந்த நேரம் வீடே இருட்டாக இருக்க . அவளோ எப்போதும் வீட்டில் உள் நுழைந்து விளக்கை போட்டபடி கிச்சன் உள் நுழைந்து அன்றாட பணிகளை செய்யத் தொடங்க .
அப்போதும் நரம்போடிய வலிய கரம் ஒன்று இடையில் அழுந்த பதிந்தது. அவள் வெற்று முதுகில் அழுந்த முத்தமிட .
முத்தமிட்டது யார் என்று அறிந்து கொண்ட தென்றலின் இதழிலோ மெல்லிய புன்னகை .
அவளோ என்ன சார் இந்த பக்கம் காத்து அடிக்குது என்று அவன் தலை வருடியவளே . பக்கவாட்டாக அவன் கன்னத்தில் மெல்லிய முத்தமிட .
அவனோ எதுவும் சொல்லாமல் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தபடி இருக்க .
தென்றலோ அப்படியே காபி போட்டு அவனை எழுப்ப .
அவனோ முகம் நிமிர்த்தி காபியை வாங்கி கொண்டவனோ சமையல் திண்டில் அமர்ந்தபடி குடிக்கத் தொடங்க .
அவளோ சமையலுக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க .
ஆமா உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன் என்று காபியை ஒரு மிடறு மிடறாக குடிக்கத் தொடங்க .
அவன் கேட்ட கேள்வியில் சற்று தடுமாறிய தென்றலோ எனக்கு ஒரு பாட்டி மட்டும் தான் என்றவளோ வேறு பேச்சுக்கு தாவிவிட .
அவனும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட .
அவள் சமைக்கும் வரை அவளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அவளிடம் செல்லச் சேட்டையில் ஈடுபட .
ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் தென்றலோ, இப்போ நீங்க போறீங்களா இல்லை நான் போகவா என்று கத்தியை காட்டி மிரட்ட .
அவனோ ஏன்டி நான் என்ன பண்றேன் என்று மீண்டும் அவளை அணைக்க வர .
அவளோ ஒரு அடி தள்ளி நின்று , நீங்க பண்ணதே போதும் சாமி போங்க, என்று அவனை கிச்சனை விட்டு வெளியே தள்ளிவிட .
அவனோ அவள் தள்ளி விட்ட வேகத்தில் மீண்டும் ஓடி வந்தவனோ அவளை பின்பக்கமாக தூக்கி ஒரு சுற்று சுற்றி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு வெளியே ஓடிவிட .
தொடரும் ....
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா , updates சீக்கிரம் வரும் .
Review please 🙏
