உயிரே 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 221
Thread starter  

31

வீராவும் வேண்டுமென்றே அவளை கார்னர் செய்ய எண்ணவில்லை. அந்த நேர உந்துதல் மட்டுமே!!

 

அவளின் அந்த இகழ்ச்சியான பேச்சு.. முகச்சுழிப்பு.. சுழித்து வளைந்த அந்த செவ்விதழ்கள் இவையே காரணம்!!

 

அது மட்டுமே வா காரணம்?? என்ற மனசாட்சி கேள்விக்கு.. அது.. அது.. என்று உள்ளுக்குள் தவித்தவன் அந்த அது என்ற காதல் என்று உணர்ந்து தான் இருந்தான். ஆனாலும் அவளின் வயது, இரு குடும்பத்து இடையேயான மனக்கசப்பு இன்னும் பல காரணிகள் அவனின் காதலுக்கு தடை போட்டு அணிவகுத்து நின்றன.. 

 

மூச்சுக்கு தவித்தவளை இடைவிட்டான் வீரா. வேக வேகமாய் மூச்சு விட்டாள் தீரா. மேலும் கீழும் மூச்சு இழுத்து விட்டவளின் மார்புகள் விம்மி தணிய மிக அருகிலிருந்து பார்த்தவனின் கண்கள் பிறை நிலவில் கொஞ்சமே கொஞ்சம் சலனப்பட, சட்டென்று முகத்தைத் திருப்பி சிகையை கோதிக் கொண்டான் வீரா.

 

அதற்குள் தன்னை நிலைப்படுத்தி கொண்டவள், அவனை வெட்டும் பார்வை பார்க்க.. அவனோ "ஓய்.. என்னடி ரொம்ப முறைக்குறவ? அப்படியே முழிய நோண்டி கையில கொடுத்திபுடுவேன்.. என்ன முறைப்பு?? ஓடிப் போ.. ஓடுடி!!" என்று தன் தவறை மறைக்க அவள் மீது காண்டானான் வீரா.

 

"செய்யுறதெல்லாம் நீங்க செஞ்சுட்டு யேன்கிட்ட கத்துறீக.. இருங்க இருங்க இப்பவே போய் உங்கள யேன் அப்பாட்ட சொல்லி... கையோட கூட்டிட்டு வந்து.. வந்து.."

 

"வந்து.. வந்து…. என்ன செய்வாரு உன் அப்பாரு.." என்றவன் அவளது இதழ்களை தன் விரல்களுக்கிடையே பிடித்து இருக்க.. அஸ்திராவால் அதற்கு மேல் பேச முடியாமல் போனது.

 

"இங்கன பாரு.. இதுதான் உனக்கு கடைசி!! இனிமேல் என்னை பார்த்ததும் மூஞ்சி சுழிக்கிறது.. உதட்ட இப்படி கோணலா கொண்டு போறது.. வெடுக்கு வெடுக்குனு வெட்டுறதுனு ஏதாவது பண்ண.. இப்ப தனியே பண்ணுனுத.. எல்லாருக்கும் முன்ன இழுத்து வைச்சு செஞ்சிடுவேன்! புரிஞ்சுதா?? போடி! போ..!!" என்று அவன் விரட்ட ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தவள் உதடுகள் இன்னும் அவன் விரல்கள் சிறையில் இருப்பதை பார்த்து கண்களால் அதை சுட்டிக்காட்ட.. அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. ஆனாலும் விட மனமில்லை அந்த மென்மையான இளசான இதழ்களை..

 

"என்ன??" என்று முறைப்போடு அவன் கேட்க..

 

'போடா லூசு.. உதட்டை உன் கிட்ட குடுத்துட்டா ஓடமுடியும்! விட்டு தொலையேண்டா! ஏன்டா இப்படி படுத்தி எடுக்கிற?' என்று வார்த்தைக்கு ஒரு டா போட்டு மனதில் அவனை கொத்துக்கறி போட்டு கொண்டு இருந்தாள்.

எல்லாம் மனதோடுதான் திரும்பவும் அவனிடம் வாயைக் கொடுத்து.. அவள் வாய் அவன் வாயோடு மாட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

 

மீண்டும் கண்களாலேயே உதட்டை சுட்டிக்காட்டு அவள் கூற.. கள்ளப் புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது வீராவின் முரட்டு இதழ்களில்.

 

"என்னடி மாமன விட்டு போக முடியலையாக்கும்?" என்று குழைவாக கேட்டவன் அவளை நெருங்கி வந்து "இன்னொரு தடவ வேணுமா?" என்று அவள் கண்களை பார்த்து கேட்க, அந்த கண்களில் வழிந்த சரசமும் சிரிப்பும் அவன் உண்மையாக கேட்கிறானா விளையாடுக்கு கேட்கிறானா என்று புரியாமல் விழித்தாள் பேதை.

 

அவசரமாக இருபக்கமும் தலையாட்டி வேண்டாம் என்று அவள் கூற, "என்ன வேணாம்? நானா? இல்லை யேன் முத்தமா?" என்று அவன் மீண்டும் நெருக்கமாக நெருங்கி நின்று குழைவாக கேட்டான்.

 

"இரண்டுமே..!!" என்று அவள் திக்கி திணற..

 

"ஏன் டி?" என்றவனின் குரலில் வழிந்த தாபம் முதன் முறையாக நங்கையவளின் மனதை தடுமாற வைத்தது. அதுவும் அவனின் அந்த தாபம் நிறைந்த கண்கள் அவள் இதயத்துக்குள் ட்ரம்ஸ் வாசிக்க.. அவனை விலக்கும் பொருட்டு வழக்கம் போல யோசியாமல் வாயை விட்டாள்.

 

"இப்படி பிடிக்காத பொண்ணுமேலே வந்து விழுறியே.. உன்னைய பெத்தவுக இப்படித்தேன் வளத்தாகளா?" என்று அவள் கூற.. அவனுக்குள் ஆத்திரம் ஆறாக பெருகியது. ஆனாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டவன், 

"ஏன் உன் ஆத்தா போல வளரத்திருக்கும்னு நினைக்கிறியோ? இதுதான் கடைசி தடவ.. இன்னொரு தடவை உன் வாயிலிருந்து என்னையப் பெத்தவக பத்தி பேச்சு வந்தது.. அந்த வாய இருக்காது!!" என்று குரலை உயர்த்தவில்லை.. கோபப்படவில்லை!! ஆனால் அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு பயத்தில் முதுகை சில்லிட வைத்தது.

 

இன்னும் அவளை நெருக்கமாக நெருங்கி.. ஒரு விரலால் அவளது முக வடிவை அளந்தான். சில நொடிகள் விருப்பமும் எதிர்ப்புமாய் சில அசைவுகள்... 

அவனின் தீண்டல்கள்... 

நடுங்க வைக்கும் தொடுகைகள்... 

 

பின் அவனின் விரல் அவளின் மேலுதட்டை பற்றி இழுத்தது. அவன் தொட்ட அந்த இடம் நெருப்பாக சுட்டது அவளை!! அவனோ கட்டை விரலால் வருடினான் அவள் செவ்விதழை!! அஸ்திரா சட்டென்று அவனது விரலைப் பிடித்து தன் விரலால் நெறித்தாள். 

 

"உனக்கு அவளோ தைரியமாடி!! யேன் மயிலு.. ம்ம்ம்!!" என்று ஒற்றைக் கையால் அவளது இருகைகளையும் மேலே சிறைப்பிடித்தான்.

 

"வேணாம் டா வீரா.. என்னைய பத்தி தெரியாது? ஒழுங்கா விட்டுடு.." என்று அவள் பேச முடியாமல் பேச..

 

"ம்ம்ம்?? நான் அப்பவே ஒன்னைய விட்டேன் தானே.. நீயே தேன் ஆரம்பிச்ச.. ஏன்??" என்றான் கேள்வியுடனே..

 

"தப்பு பண்ற.. ரொம்ப ரொம்ப பெரிய தப்பு இது.." என்று அவர்களின் நெருக்கத்தை கண்களால் சுட்டிக்காட்டினாள். அதிலும் அவளின் செழுமையான இளமைகள் அவன் முரட்டு நெஞ்சில் முட்டி நிற்க.. அவளுக்கோ பதைபதைப்பு!!

 

"அப்படியா?? ம்ம்ம்.. தப்பா இது?? பாரேன் எனக்கு தெரியல.. உனக்கு எல்லாம்ம்ம் தெரியுதே!!" என்றான் எல்லாமில் அழுத்தம் கூட்டி.. ஒற்றை புருவத்தை உயர்த்தி.. போலியான ஆச்சரியத்தை முகத்தில் காட்டி..

 

அதன் அர்த்தம் புரிந்து அவள் அவனை முறைக்க.. அவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்களை ஆழ்ந்து ஒரு நொடி பார்த்து விட்டு, அவளின் மேலுதட்டை பார்த்தபடி, அவனின் கற்றை மீசையால் உரச.. உரச.. அவளோ இவனின் இந்த இம்சைகளை தாங்க முடியாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்துவிட்டு நகர்ந்தான். 

 

அவள் மூடிய கண்களை திறக்கும் போது எதிரில் நின்றிருந்தவன் அங்கே இல்லை.

 

"அப்பாடி போய்விடியான்!!" என்று நிம்மதியோடு அஸ்திரா இடத்திலிருந்து ஓடி தன் தோழிகளோடு சேர்ந்து கொண்டாள். ஆனால் வீரா எதிர்பாராதது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அம்பலவாணன் பார்த்து விட்டார் என்பதை..

 

அவருக்கு நெஞ்சம் பொறுக்கவில்லை. 'யார் என்று குடும்பத்தை வன்மம் வைத்து பழிதீர்க்க காத்திருந்தாரோ.. அவரது குடும்பத்தில் வந்த ஒருவன் தன் மகளிடம் நெருங்குவதா? அவளை காதலிப்பதா? அப்படியே அவளைக் கல்யாணம் செய்தால்.. மாப்பிள்ளை என்ற மரியாதையை நாம் அல்லவா அவனுக்கு கொடுக்க வேண்டும்? முடியாது! முடியவே முடியாது!! இது நடக்கவே கூடாது!! நடக்க விடுவானா இந்த அம்பலவாணன்? நான் அம்பலவாணன் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறேன் பாரு டா உன் காதலை?' என்று தனக்குள் சபதம் கொண்டவர், மற்றவர்களிடம் இதை பகிரவில்லை. எங்கே இதை யாரிடமும் சொன்னால்.. பேனை பெரிதாக்கி பெருச்சாளியை ஆக்கி.. பெருச்சாளியை பெருமாளாக விடுவார்களோ என்று கொஞ்சம் பயந்துதான் போனார். ஏனென்றால் பெண்ணல்லவா??

 

இவர்களெல்லாம் ஊரில் உள்ள பெண்களை தான் தன் இஷ்டத்திற்கு பேசுவார்கள்.. அடிப்பார்கள்.. ஆள நினைப்பார்கள். ஆனால் தன் வீட்டுப் பெண் என்று வந்ததும் கூட்டுக்குள் வைத்து அடைகாப்பார்கள். தங்கள் சிறகு எனும் பெரிய பொதிக்குள் அவர்களை பத்திரமாக பாதுகாப்பாக!! என்ன நியாயமோ இவர்களது நியாயம்?

 

பெண் என்றால் பெண் தான்!! அது யார் வீட்டு பெண்ணாகத்தான் இருந்தாலென்ன? இவரைப் போல அவளுக்கும் பெற்ற தந்தை.. கூடப்பிறந்த அண்ணன்.. அவளை போற்றிப் பாதுகாக்கும் சுற்றமும் இருக்கும்தானே.. அது எல்லாம் இந்த வெறி பிடித்த.. அதுவும் சாதிவெறி பிடித்த ஆண்களுக்கு எல்லாம் தெரிவதில்லை.

 

அன்றைய நாள் அத்தோடு முடியவில்லை அஸ்திராவுக்கு. இன்னும் பல அதிர்ச்சிகளை தன்னுள் வைத்து இருந்தது போலும்.

 

அதைப்போல தான் அம்பலவாணனுக்கும் இன்னும் பல அதிர்ச்சிகளை கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் வைத்துக் காத்துக் கொண்டிருந்தது.

 

மெல்ல வீரா அங்கு உள்ளவர்களை எல்லாம் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு தன் நண்பர்களை தேடிக் கொண்டு வந்தான். அவர்கள் என்னவோ பத்திரமாக இருக்கத்தான் செய்தார்கள். இவன் தான் அஸ்திராவை தன் வஸ்திரமாக்கும் எண்ணத்தோடு அவர்களை விட்டுப் பிரிந்து வந்தது. இப்போது தேடிக் கொண்டிருந்தவன் முன்னே வந்த அம்பலவாணன் அவன் கண்ணை காட்டி "உன் கூட பேசனும்.. சற்றுத்தள்ளி வா!" என்று கூற..

 

'என்னமோ டாவடிக்கிற பொண்ணு தனியா தள்ளியிட்டு போற மாதிரி இல்ல கூப்பிடுறாரு மனுஷன்.. இவர் பொண்ணு கூப்பிட்டு இருந்தா பரவாயில்ல.. ஆமா. இவரு ஏன் கூப்பிடுறாரு?' என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவன் வெளியே இறுக்கமான முகத்தோடு அவரை பின்தொடர்ந்தான்.

 

"உன் குடும்பத்துக்கும் யேன் குடும்பத்துக்கும் ஆகாது இல்ல டா.. அப்புறம் எதுக்கு டா யேன் பொண்ணு பின்னால நீயி சுத்திகிட்டு இருக்க?" என்று எடுத்த எடுத்தில் அவர் கோபமாக கேட்க..

 

"உம்ம பொண்ணு என்ன பெரிய ரதி தேவியோ.. அவ பின்னால சுத்த" என்று இவனும் இடக்காக பேச..

 

"ஆமா டே!! யேன் பொண்ணு ரதி தேன்!! இந்த ஊர் உலகத்தில் இல்லாத அளவு அழகிலும் சரி.. படிப்பிலும் சரி.. அந்தஸ்திலும் சரி எல்லாம் உனக்கு எட்டாத தூரத்தில் இருக்குறவ!! நீயி எல்லாம் எட்டிப்பிடிக்கும் முடிந்தாலும் உன்னால் முடியாது. ஒழுங்கா யேன் பொண்ணு பின்னால சுத்துறது நிறுத்திட்டு உன் வழியை பாரு.." என்று அவர் மிரட்ட..

 

அவனும் அவர் மிரட்ட அவரை அலட்சியமாக பார்த்து சிரித்தான். அந்த அலட்சிய சிரிப்பு அவரின் கோபத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு பெருகியது.

 

"என்னடா சிரிக்குறவன்? அவ்வளவு அலட்சியமா? நல்லா கேட்டுக்கோ யேன் பொண்ணு யேன் தங்கச்சி பையனுக்கு கூட கட்டி வச்சாலும் கட்டி வைப்பனே தவிர.. உன்ன மாதிரி ஒரு ஆளுக்கு எல்லாம் காட்டிருவேனு நினைக்காத டா.. இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்தில் நீயி யேன் பொண்ணு பக்கம் கூட வரமுடியாது. அவ சுவாசிச்ச காத்த கூட நீ சுவாசிக்க கூடாது!! அவ கைப்பட்ட ஆத்து தண்ணீல கூட உன் கை படக் கூடாது!!" என்று அவர் ஆறு மலை கடல் என்று அடுக்கிக்கொண்டே போக..

 

அதுவரை இது காதலா ஈர்ப்பா என்று தெரியாமல் ஒருவித ஆக்சிலேஷனில் எல்லா பக்கமும் சுற்றி வந்து கொண்டிருந்தவன் மனது சட்டென்று ஓரிடத்தில் நிலைத்து நின்றது. அது காதல்!! ஆம் அவள் மீது எனக்கு இருப்பது காதல்.. காதல் மட்டுமே!! என்று உணர்ந்த தருணம். பின்னே அஸ்திராவை சஞ்சயனுடன் சேர்த்து பேசும் பொழுது அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

 

யார் யாருக்கோ.. எப்படி எப்படி எல்லாமோ தங்கள் காதலை உணர்ந்த தருணம் உன்னதமாக இருக்க.. நம் வீராவுக்கோ அவனின் மாமனார் அவனை பிடித்து மிரட்டும் இந்த சமயத்தில்.. அவள் மீது தனக்கு வந்தது ஈர்ப்போ சலனமோ இல்லை காதல் தான் என்று நெற்றியில் அடித்தாற் போல புரிய.. இன்னும் கொள்ளை கொள்ளையாய் நேசம் பிறந்தது அவள் மீது

 

 

யார் யாருக்கோ.. எப்படி எப்படி எல்லாமோ தங்கள் காதலை உணர்ந்த தருணம் உன்னதமாக இருக்க.. நம் வீராவுக்கோ அவனின் மாமனார் அவனை பிடித்து மிரட்டும் இந்த சமயத்தில்.. அவள் மீது தனக்கு வந்தது ஈர்ப்போ சலனமோ இல்லை காதல் தான் என்று நெற்றியில் அடித்தாற் போல புரிய.. இன்னும் கொள்ளை கொள்ளையாய் நேசம் பிறந்தது அவள் மீது!!

 

ஆனால் அது எதையும் அப்போது அவன் முகத்தில் கூட காட்டிக்கொள்ளவில்லை. அவளுக்கும் வயது இருக்கிறது அதை விட இந்த லூசு மெண்டல் நாம் ஏதாவது சொல்ல போக வேணும்னு ஏதாவது செய்து விடுவானோ என்று அமைதி காத்தான்.

 

ஆனால் அவனின் அமைதியை கூறூ போடும் விதத்தில் அவர் பேசிய சொற்கள் அமைந்தது. "எக்காலத்தில் நீயி யேன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட முடியாது டே!! உன் கையால அவ கழுத்துல தாலி ஏறி இருந்தா கூட.. அதை அறுத்துட்டு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து தான் நான் யேன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டி வைப்பேன்!! இத எப்போதும் மறக்காதே!! இனி உன் ஜென்மத்தில் யேன் பொண்ணு இருக்குற திசையக்கு கூட திரும்பி பார்க்கக் கூடாது!! புரியுதா??" என்று அவர் அவனைப் பார்த்து விரலை உயர்த்தி குரலை உயர்த்த…

 

அவனோ மிக சாதாரணமாக இரு கைகளையும் மேலே தூக்கி நெட்டி முறித்தவன்.. "அப்புறம் மாம்ஸூ.. இவ்வளோ நேரம் நீரு சொன்னதுல எனக்கு ஒன்னு மட்டுந்தேன் தெளிவா புரிஞ்சது.. அது என்னான்னா நான் உங்க பொண்ணு மேல கன்னாபின்னான்னு காதலா இருக்கேன்!! அதை நீரு என்ன? எந்த கொம்பன் வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. முடிஞ்சா செஞ்சு தேன் பாரும்!!" என்று கூறியவனை எரித்து விடுவதை போல அவர் பார்க்க..

 

"இதுவரை உம்ம பொண்ணு கிட்ட மேன் காதல சொல்லவே இல்ல.. எனக்குமே பெரிய டவுட் தேன். இது காதலா? இல்ல வெறும்.. காமமானு??" என்றதும் அவர் பாய்ந்து வந்து வீராவின் சட்டையை பிடிக்க..

 

"டேய்..!!"

 

"அட.. இருக.. மாம்ஸூ.. அது தேன் டவுட் தானா சொன்னேன். உம்ம புண்ணியத்தில் டவுட் இப்போ கிளியர் ஆகிடுச்சு.. இப்போ காதலோ.. காதல் தான்!!" என்றான் மந்தகாச புன்னகையோடு!!

 

அம்பலவாணன் கோபம் இன்னும் அதிகரித்ததே ஒழிய குறையவே காணோம். அவரின் ஒரு மனதோ 'சும்மா இருந்தவன நாமதேன் சொரிந்து விட்டு விட்டோமோ?' என்று காலம் கடந்து ஞானோதயம் தோன்றியது அவருக்கு.

 

"அப்புறம் மாம்ஸ்.. என்னைய ஆசிர்வாதம் பண்ணுக.. உங்க பொண்ணுகிட்ட போய் முதன்முறையாக லவ்வ சொல்ல போறேன்!!" என்று வெட்கச்சிரிப்புடன் அவன் மீசையை நீவி கொள்ள.. ஆண்களுக்கு கூட வெட்கம் வரும் என்று அம்பலவாணன் புரிந்த தருணம்!!

 

ஹேங் என்று பார்க்க மட்டும் தான் அவரால் முடிந்தது.

 

அதன் பின்னே அவளைத் தேடி சென்றான் தன் காதலை அழுத்தமாகச் சொல்ல…

 

மீண்டும் அவளை மடக்கினான்..‌ அந்த ஆலமரத்து வேர்களுக்கிடையில்…

 

அய்யய்யோ மறுபடியுமா???

 

ஆமா.. பா… ஆமா.. இந்த முறை அவனுள் புரண்டு பொங்கி வந்த காதலை அவளுக்குள் மடை மாற்ற.. ஆனால் அதில் தான் எத்தனை தடை.. எத்தனை மடை.. எத்தனை படை இடைஞ்சல் செய்ய.. 

 

எல்லாம் அவன் வருங்கால மாமனாரின் நிகழ்காலச் சதிகள்!!

 

சதிகள் எல்லவற்றையும் முறியடித்து அவன் சதியின் கையை பற்றினான் காதலை சொல்ல..

 

அதே நேரம்… அய்யோ.. என்று அலறல் சத்தம் திருவிழா நடைபெறும் இ

டத்தில் இருந்து..

 

தீருமோ தாகம்!!

This thread was modified 2 days ago by Jiya Janavi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top