Share:
Notifications
Clear all

காதல் சகி 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

21

 

 

திங்கட்கிழமை காலை வழக்கம்போல விடிந்தது சென்னை மாநகரத்திற்கு.. சற்றே சோம்பலாய்.. சற்றே அலுப்பாய்!! நேற்று முடிந்த விடுமுறையின் எச்சங்களை மிச்சங்களை வம்படியாக வேண்டுமென கேட்கும் சிறுபிள்ளை மனதை எல்லாம் போ! போ!! போ!! என்று ஒதுக்கி விட்டு, ஓடும் சென்னை நகரவாசிகளோடு ஒன்றாக கலந்து விட்டாள் நம் தாமரை செல்வி!!

 

புது இடம் எல்லாம் இல்லை ஏற்கனவே சான்பிரான்சிஸ்கோ செல்லும் முன் இங்கே 6 மாதம் வேலை பார்த்தவள் தான்! ஆனால் அப்போது பார்த்த முகங்கள் எல்லாம் இப்போது இல்லை. இவளது பிராஜக்ட் இங்கே மாற்றி வந்தாலும் பெரும்பான்மையான நேரம் அந்த குழுவோடு சேர்ந்து தான் இவள் வேலை செய்ய நேரிடும். அந்த வேளைகளில் எல்லாம் திக்கி திணறி போவாள். 'எங்கேயாவது அந்த முகம் கண்ணில் பட்டு விடுவோமோ?' என்று ஒரு மனம் தவித்தாலும்.. மற்றொரு மனமோ 'கண்ணில் பட வேண்டுமே!' என்று ஏங்கவும் செய்யும். இப்படியாகத்தான் சென்றது ஆறு மாதமும் 6 யுகங்களாக தாமரைக்கு!!

 

 

வந்து அமர்ந்தவுடன், லாகின் செய்துவிட்டு இன்றைய அவளது வேலைக்கான உத்தரவைகளை பார்த்துக் கொண்டு, கூடவே ஹெட் இடமிருந்து ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா என்று அதையும் செக் செய்து விட்டு தான் நிமிர்ந்து சுற்றியுள்ளவர்களை பார்ப்பாள்.

 

 

இங்கே பலர் அவளிடம் நட்பாக முயன்றாலும் இவள் வழக்கம்போல் தள்ளியே தான் இருப்பாள். பெரும்பாலும் ஒரு புன்னகை மட்டுமே.

 

 

சிலபேர் இவள் ப்ராஜெக்டில் வென்றதால் கர்வத்தோடு நடந்து கொள்கிறாள் என்று முதுகுக்குப் பின்னே பேசினாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளும் மன நிலையில் அவள் இல்லை! ஏன்? மனமே இங்கு இல்லை!!

 

 அவள் அருகே அமர்ந்திருக்கும் ஸ்டீபன் அவள் பேசினாலும் பேசாவிட்டாலும் நட்போடு தான் அவளிடம் பழகுவான். அவனின் அந்த நட்பில் ரெக்ஸியை இவள் கண்டாலும், இவள் அளவோடு நிறுத்திக் கொள்வாள். ஊர் வாய்க்கு அவல் ஆகாமல்!!

 

"குட் மார்னிங் தாமரை.. காலையில என்ன டிபன்!" என்று சீட்டில் அரைவட்டம் அடித்தபடியே ஸ்டீபன் கேட்க..

 

"குட் மார்னிங்! இன்னைக்கு சத்துமாவு கஞ்சி! கொஞ்சம் டீசண்டா சொல்லணும்னா ஹெல்த் போரிட்ஜ்" என்றாள் சிறு புன்னகையுடன்..

 

 

"ஏன் இன்னிக்கு லேட் ஆயிடுச்சா நீங்க கிளம்ப?" என்று அவளின் இத்தனை நாள் நடவடிக்கைகளில் வைத்து உணவு பழக்கத்தையும் வைத்து அவன் கேட்க.. இதுவரை பேசியதே அதிகம் என்று அவனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகையை சிந்திவிட்டு மானிடருக்குள் தலையை விட்டுக் கொண்டாள்.

 

 

அவனோ நீ பேசவில்லை என்றாலும் நான் பேசுவேன் பேசிக்கொண்டே இருப்பேன் என்ற ரீதியில்.. "நீங்க சொன்னது உண்மைதான்! இப்போதெல்லாம் கஞ்சி என்று சொல்வதைவிட போரிட்ஜ்ன்னு சொன்னா தான் எதோ நம்மல மதிப்பா மிதப்பா பாக்குறாங்க.. எங்க அம்மா இன்னைக்கு காலையில நல்ல குண்டு குண்டா குஷ்பு இட்லியும் கொத்தமல்லி சட்னி கூடவே காரச்சட்னி செய்தாங்க. நான் சாப்பாட்டில் பாரபட்சம் எல்லாம் பார்க்கவே மாட்டேன்! நல்ல ஏழு இட்லிய உள்ள தள்ளிட்டு தெம்பா வந்து உட்கார்ந்து இருக்கேன்" என்றான் அவளிடமிருந்து பதில் வராது என்று தெரிந்தும்..

 

இதுவும் ஒருவகையில் நட்பு தான்! நட்பை முழுதாக புரிந்து கொண்ட நட்பு இது! அவள் அப்படித்தான் ஆனாலும் என் நட்பு மாறாது என்று!!

 

அவன் அம்மா என்று சொன்னவுடன் தான் கணேஷ் சொன்ன அம்மா ஞாபகம் வர, தயக்கத்துடன் ஸ்டீபனை பார்த்தாள் இவனிடம் எப்படி கேட்பது என்று..

 

 

எப்பொழுதும் தனக்கு சேமிப்பு என்று ஒன்றை வைத்திருப்பாள் தாமரை. ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் அதில் போட்டு விடுவாள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அதை எடுக்கவே மாட்டாள். இருக்கிறதை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்வாள். வாழ்க்கை நமக்கு என்ன வைத்து காத்திருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் சேமிப்பாவது இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தான்!

 

 

நேற்று இரவில் இருந்து பெரும் குழப்பம் அந்த பணத்தில் இருந்து கொடுக்கலாமா? அல்லது யாரிடமாவது கேட்கலாமா? யாரிடம் கேட்பது வித்யா ஸ்டீபனை தவிர வேறு நெருங்கிய நட்பு இங்கு அலுவலகத்தில் யாரும் கிடையாது.

 

 

வித்யாவுக்கு வாங்கும் சம்பளம் எல்லாம் பாக்கெட் மணி போல. பெங்களூரில் அவள் அப்பா பெரிய நகைக் கடை வைத்திருக்கிறார். இவள் படித்த படிப்பிற்காக வந்து இங்கேயே தங்கி வேலை செய்கிறாள். அதனால் கேட்டால் கொடுப்பாள் தான்!! ஆனால் ஏனோ கேட்க மனம் வரவில்லை. ஸ்டீபன் இவளின் தயங்கிய முகத்தை பார்த்துவிட்டு "என் கிட்ட ஏதாவது கேட்கணுமா தாமரை?" என்றான். அவள் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்த..

 

"இதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நீங்க என்கிட்ட வாயால பேசினது விட உங்க முகத்தால பேசினது தான் அதிகம்! லைக் ஸ்மைலி! அதிலிருந்து நான் நீங்க என்ன நினைக்கிறீங்கனு கண்டுபிடித்து விடுவேன்" என்றவனை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தாள் பெண்.

 

 

ஆனால் அவளின் குணாதிசியத்திற்கு இப்படி ஒருவரிடம் பணம் கேட்பது என்பது இதுவே முதல் முறை! கடவுளே இதுவே கடைசி முறையாகவும் இருக்கட்டும் என்று எண்ணியவள், "எனக்கு ஒரு பிப்டி தவுசன் தேவைப்படுது ஸ்டீபன். சேலரி வந்ததும் தந்திடுறேன். ஒரு மெடிகல் எமர்ஜன்ஸி! கிடைக்குமா?" என்றாள்.

 

 

ஸ்டீபனும் யாருக்கு? எதற்கு? என்ன? என்று ஒரு கேள்வி கேட்காமல் "உங்களுக்கு ஜிபே இருக்கா தாமரை? அதுல ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடவா?" என்றான் நல்ல நண்பனாய்!!

 

 

சரி என்று அவள் தலையை அசைத்து விட அடுத்த நிமிடம் டிங் டாங் என்ற மெசேஜில் அவள் நம்பிக்கையை உறுதி செய்திருந்தான் ஸ்டீபன். இவள் திரும்பி தேங்க்ஸ் என்று மொழிய, முகம் திருப்பிக் கொண்டவனிடம், "ப்ரைடே லஞ்ச் என்னோடது" என்றதும் பிரகாசித்தது அவன் முகம். 

 

 

அதன்பின் கணினியே கண் கண்ட தெய்வம் என்பது போல அதனுடனே மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி.

 

 

மதியம் உணவு வரும்போது கணேஷுக்கு அழைத்தவள் "பணத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?" என்று கேட்டாள். ஒருவேளை சித்தியின் டெபிட் கார்டு அவன் கையில் இல்லை என்றால் கஷ்டம் தானே அவனுக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டாளே ஒழியே வெளியில் எதுவும் சொல்லவில்லை. 

 

 

நேற்று கேட்ட உடனே அக்கா இன்று ஏற்பாடு செய்துவிட்டாள் என்பதே அவனுக்கு பெரும் நிம்மதியாக இருக்க "நீங்க வழக்கம்போல அம்மாவுக்கே போட்டு விடுங்க அக்கா. அம்மாவுடைய கார்ட் என்கிட்ட தான் இருக்கு. நான் அதிலிருந்து எடுத்துக்கிறேன். நாள பின்ன அவங்க கேட்டா காட்ட எனக்கும் வசதியாக இருக்கும்" என்றான்.

 

 

அவனின் இந்த புரிதலில் சற்றே ஒற்றை புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொண்டவள் "சரி வைக்கிறேன்" என்று விட்டு அவன் சொன்னபடியே சித்தியின் அக்கவுண்டிற்கு அறுபதாயிரத்தை அனுப்பி வைத்தாள். அவளிடமிருந்து மிச்ச சொச்சத்தையும் போட்டு.‌.

 

 

அடுத்த ஒரு வாரமும் வழக்கம் போலவே ஓடியது. அதே பணி.. அருகில் அதே ஸ்டீபனின் வளவள பேச்சுக்கள்.. வீட்டில் வித்யா உடனான ஒருசில பேச்சுக்கள்.. இரவில் மொத்தமாய் ஆட்கொள்ளும் அந்த காதல் அரக்கனின் நினைவுகள் என்று பலவித உணர்வுகளோடு சென்றது!!

 

 

வெள்ளிக்கிழமை கேஸ்வல் டே.. எப்பொழுதும் போல டிப்டாப்பாக ஆபீஷியல் உடையில் வரவேண்டும் என்று அவசியம் இல்லாமல் இலகுவான உடையில் வரலாம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடமாட்டாள் தாமரை. 

 

பெரும்பாலும் அன்று பிஸ்மில்லாபாத் என்று சாம்பார் சாதத்தை இவள் ஹாட் பாக்ஸில் எடுத்து வர, அதை திறந்ததுமே அருகில் வந்து அமர்ந்து கொள்வான் ஸ்டீபன். முதலில் சற்று தயங்கினாலும் அதன் பின் அவனுக்கு கொடுத்துவிட்டு கேண்டீனில் வாங்கிக் கொள்வாள். அவன் "என்னுடைய லஞ்ச் எடுத்துக்க மாட்டீங்களா?" என்று ஒரு முறை கேட்ட போது தான் "நான் நான்-வெஜ் சாப்பிட மாட்டேன்" என்றாள்.

 

 

பொதுவாக ஸ்டீபன் கலாரசிகன்! ஊர்வன பறப்பன எதையும் விட மாட்டான் அது பெரும்பாலான நாட்களில் அவன் டிபன் பாக்ஸில் தங்கள் உயிரை மாய்த்துக் கிடக்கும். 

 

 

சில நேரங்களில் அவனுக்கு தனியாக ஒரு குட்டி டிபன் பாக்ஸில் எடுத்து வந்து தருவாள். அதேபோல் இன்று அவனுக்காக கூடுதலாக சமைத்து கூடவே உருளைக்கிழங்கு மசால் அப்பளம் ஊறுகாய் என்று எடுத்து வந்திருந்தாள்.

 

 

மதியம் சாப்பாட்டை டேபிளில் வைத்துவிட்டு இவள் அமர்ந்து தனக்கு பரிமாறிக்கொண்டு வாயில் வைக்க போக, சட்டென்று அவள் அருகில் வந்த ஒரு உருவம் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பிடி சாதத்தை தன் வாயில் திணித்துக் கொண்டு.. "செம டேஸ்ட்" என்றது.

 

 

இவள் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க அதற்குள் அவளை பார்த்து கண் சிமிட்டலுடன் சென்று விட, அங்கே நடந்ததை பார்க்க தான் யாருமில்லை.

 

ஸ்டீபன் அப்போதுதான் வாஷ் ரூமில் இருந்து வந்தவன் அவள் தனக்காக காத்து இருக்கிறாள் என்று நினைத்து, அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தவளிடம் "நீங்க சாப்பிட வேண்டியதானே தாமரை" என்றவாறு அவன் பங்கை ரசித்து ருசித்து உண்டான்.

 

 

இவளோ சென்றவனின் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அவள் முன் சொடுக்கிட்டு "சாப்பிடுங்க தாமரை! டைம் ஆகுது" என்றான் அவள் நிலை அறியாமல் ஸ்டீபன்.

 

 

தான் காண்பது கனவா? இல்லை நினைவா? என்று ஒன்றும் புரியாமல் தன் கையை பார்க்க அதிலிருந்து அவனது உமிழ்நீரில் சுவையும் உதட்டு ஸ்பரிசமும் சொன்னது நினைவே என்று!!

 

 

சிறுது நேரம் ஒன்றும் புரியாமல் வலது கையை பார்த்துக் கொண்டு இருந்தவள் ஒரு புன்னகையோடு அதே கையால் உணவை உண்டு முடித்தாள். வேலை முடியும்வரை கண்களால் எவ்வளவு தேடியும் காணவில்லை அவனை!! மாயமாய் வந்து மறைந்து போனான் மாயவன்!! 

 

மாலை நேரத்தில், அவள் வீட்டுக்கு திரும்ப ‌பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே ஈரக் காற்றடித்து உடல் நடுங்கியது. மரங்கள் சலசலத்து லேசாக மழை தூரத் தொடங்கி விட்டது. அவளின் பயணம் முடிந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது மழைக் காற்று ஈரமாக தழுவிய போது உடல் சிலிர்த்தது பெண்ணவளுக்கு!!

வேண்டாத நினைவுகளும் கூடவே தோன்ற.. தலையை சிலிப்பிக் கொண்டாள் வேகமாய்!!

 

 

தாமரை உடலின் மென் மயிர்கள் சிலிர்த்தெழ லேசான மழையில் நனைந்து கொண்டே சிறிது தூரம் நடந்தாள். ஏனோ இந்த லேசான மழை அவள் மனதை லேசாக்கியது‌.

 

அவள் உடைகள் கொஞ்சம் நனைந்து ஈரமாகியது. அதை ரசித்துக் கொண்டே எங்கும் நிற்காமல் சென்று கொண்டிருந்தபோது திடுமெனக் காற்று சுழன்றடித்து அதிகமாக.. மழைத் துளிகளும் காற்றுடன் இணைந்து பட படவென பெரியதாக விழத் தொடங்கியது.

 

மழையின் துளிகளில் நன்றாக நனையத் தொடங்கிய போதும் நடையை நிறுத்தாமல், மழையில் நனைந்துக் கொண்டே அவளின் அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தாள்.

 

திடீர் மழையின் உபயத்தால் பார்க்கிங்கில் கரண்ட் கட்டாகி விட அங்கங்கே ஒன்றிரண்டு விளக்குகள் தான் எரிந்து கொண்டிருந்தன.

 

லிஃப்ட் வழக்கம்போல கரண்ட் இல்லை என்று லீவு எடுத்துக் கொண்டது. அதுவும் தான் பாவம் ஓயாமல் உழைக்கிறது அல்லவா? என்று மெல்லப் புன்னகைத்துக் கொண்டே படிகளில் நடக்கலானாள் பெண்!!

 

 

இவள் வீடு இருக்கும் தளத்திற்கு வந்து சேரவே கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேலானது அவளுக்கு..

மெல்ல மூச்சிரைத்தபடி அந்த தளத்தின் லிஃப்டை ஒட்டி இருந்த பால்கனியில் நின்று மூச்சு வாங்கினாள். வெளியில் மழை நன்றாக பிளந்து கட்டிக் கொண்டிருந்தது.

அவ்வப்போது மின்னலும் இடியும் மழைக்கு ஜதி சேர்த்தது.

 

 

சட்டென்று அவளது இடை இழுக்கப்பட்டு

முரட்டு உதடுகள் அவளின் கன்னங்களையும், கழுத்துச் சரிவையும் முத்தமிட்டன. அதிர்ந்து சிலிர்த்துக் கொண்டவளின் பெண்மை அடித்து கூறியது அது அவன் தான்!! அவனே தான் என்று!! 

 

அவள் சுதாரித்து விலகும் முன், இதழ்களை கொய்த்த கோமகனோ.. அவளை ஆரத் தழுவி ஆலிங்கனம் கொள்ள.. அச்சம் நாணமெல்லாம் பெண்ணிடமிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. அவள் பெண்ணென சமைந்த கணத்தில் இருந்து அவளுக்குள் அரும்பிய காதல் உணர்வுகள் அம்முத்தத்தால் தூண்டப்பட்டு, அவள் உடலின் வழியாக 

பிரவாகமென இப்போது வெளிப்படத் தொடங்கியது.

 

அப்பிரவாக உணர்வு குவியலில் அடித்து செல்லப்பட்டு கண் மூடிக் கிறங்கியவளின் மெல்லிய உதடுகளை அவனின் வன் உதடுகள் முத்தமிட்டு முத்தமிட்டு சுவைத்து கொத்தித் தின்னத் தொடங்கின கொஞ்சமும் இரக்கம் இல்லா அரக்கனாய்!!

 

 

வெளியே படபடவென விழுந்து பொழியும் மழைத் துளிகளின் ஓசையும் சுழன்றடிக்கும் காற்றின் ஓசையும் அவ்விடம் எங்கும் நிறைந்திருக்க..

அவனின் கைகளிரண்டும் அவளின் இடையை இறுக்கியப்படி.. தான் விரும்பியபடி.. சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தன கோவை இதழ்களை வெகு நாட்கள் கழித்து!! விட முடியாத தாபமாய்!! இன்னும் இன்னும் வேண்டும் என்பதாய்!!

 

அவள் விழிகள் அவ்விருட்டில் அவன் விழிகளை காண முடியாமல் அங்காங்கே பொருளற்ற பார்வையுடன் சுழன்றன. மூச்சிரைக்க தன் இதழ் யுத்தத்தை நிறுத்தினான் ஜெர்ரிக் ஜோன்ஸ்!!

 

 

மூச்சு வாங்க மொசு மொசுவென அவன் மீது இன்னும் கோபம் பெருக அப்படியே சரிந்து அமர்ந்தாள் தாமரை. அவனும் அவளை இடித்தப்படியே அருகில் உட்கார்ந்தான். அவள் அவனை முறைத்து பார்க்க..

 

"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

நாம் இருவரல்ல ஒருவர் என்று புரியுமா?"

 

என்று அட்சரம் பிசகாமல் அழகு தமிழில் பாடி கண் சிமிட்டினான் ஜெர்ரி!!

 

தாமரையின் நினைவு ஆறு மாதங்களுக்கு முன்னால் சென்றது..

 

 

காலை சூரியன் உச்சிக்கு வந்திருந்த நேரம்.. ஆனாலும் அந்த குளிர் பிரதேசத்தில் ஆதவன் அவனின் அனல் தெறிக்கும் முகம் காணக் கிடைக்கவில்லை!!

 

கதிரவன் வரவில்லை என்றாலும் காலை கடந்து விட்டதை உணர்ந்து மெல்ல கண்களை சோபையாக திறந்தாள் தாமரை!!

 

நெஞ்சினில் ஏதோ பாரமாக தோன்ற குனிந்து பார்க்க அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கி தலையை அவளது மார்பினில் புதைத்து சுகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜெர்ரி!!

 

அவர்கள் இருந்த நிலையை நேற்று இரவின் களியாட்டத்தை பறைசாற்ற அவன் தோளை பற்றி உலுக்கி "ஜெர்ரி!!!" என்று கத்தினாள் தாமரை.

 

அவள் சத்தத்தில் தான் அரண்டு புரண்டு எழுந்தவன், அவள் கன்னத்தை வருடி மறு கன்னத்தை லேசாக முத்தமிட்டு "குட்மார்னிங் பேபி" என்று மீண்டும் துயில்கொள்ள முனைய, அவனை உலுக்கி மார்பினிலே அடித்தாள் பட்டு பட்டு என்று!!

 

எதுவும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்தான் அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு..

 

அவள் கண்கள் நிச்சலமாயிருந்தன. நேற்று இருந்த காதல் மோகம் ஆசை என்று அதிலிருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்போதும் வலது கையால் அவளின் கன்னத்தை வருடினான். கலைந்து புரண்ட முடியை ஒதுக்கினான். பின் அவள் மூக்கையும், உதட்டையும் வருடினான். 

 

"வாட் டாம்? வொய் ஷௌடிங்?" என்றான் அறியாதவனாய்..

 

''போடா.. பொறுக்கி" என்று வசை பாடினாள். 

 

"ச்சோ ஸ்வீட்"

 

"பிராடு.. யூ.. ப்ளடி ராஸ்கல்!!"

 

"தாங்க் யூ!!"

 

"என்னை என்னடா செஞ்ச.. பொறுக்கி?"

என்று அவனது தோளை பற்றி உலுக்கினாள்.

 

"வழக்கமா இந்த மாதிரி ஒரு பொண்ணும் பையனும் தனியாய் இருந்தால்.. அதுவும் ஆல்கஹால் உச்சத்தில் இருந்தால்.. என்ன நடக்குமோ? அதுதான் நடந்தது!!" என்றான் தோள்களை குலுக்கிக்கொண்டு..

 

பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள் கோபமாக. அவனோ சிரித்தான். 

 

"பொறுக்கி.. பொறுக்கி.. என்னை ஏன்டா இப்படி பண்ண? எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்குடா?" என்றாள் கண்கள் கலங்க..

 

"எப்படி பண்ணேன்? எல்லா பொண்ணுகள் கிட்டேயும் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிய ஆள் நான்!!"

 

"அப்ப.. என்னை மட்டும் ஏன்.. ஏன் டா பாவி?"

 

"பிகாஸ்.. நீயும் என்னை லவ் பண்ணின.. சோ"

 

"நான் லவ் பண்ணல உன்னை. யூ லையர்!!"

 

"அடிப்பாவி.. நேத்து நீ தானடி இங்கே வந்துட்ட..இங்கே வந்துட்ட.. சொல்லி சொல்லியே லவ் மேகிங் பண்ண தூண்டின?" என்று அவள் இதயத்தின் பக்கம் தொட்டுக் காட்டினான்.

 

''நோ.. நோ.. நோ வே!! யூ லையர்.. ச்சீட்டர்!!" என்றாள் கோபமாக!!

 

"ஐ லவ் யூ சொன்ன டாம்?"

 

"என்னை மயங்கி இருந்த சமயம், ஏமாத்தி இப்படி பண்ணிட்டு, நான் ஐ லவ் யூ சொன்னேன் பொய் சொல்றியா இடியட்!!" என்று கத்தினாள்.

 

"ச்சே.. நான் மயக்கல உன்னை. உன் அழகுல நான்தான் மயங்கி கிறங்கி இருக்கிறேன் டாம்" என்றான் காதலாக..

 

"நேத்து நான் கொஞ்சம் ஹையா இருந்தேன். அந்த நேரத்துல நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்ட இல்ல.. யூ ப்ளடி சீட்!!" என்றாள் சீற்றத்தோடு.

 

"என்ன செய்ய டாம்? உன் அழகு என்னை பைத்தியமாக்கிருச்சு" என்று மொத்த பழியையும் தன் மீது போட்டுக் கொண்டான்.

 

அவன் கன்னத்தைப் பிடித்து வலிக்கக் கிள்ளி அடித்து அழுது கரைந்தாள்.

 

 

"பொறுக்கி.. பிராடு.. என்னமோ பெரிய இவனாட்டாம் பேசின?"

 

"எவனாட்டாம் பேசினேன்? என்ன பேசினேன்?" என்றான் புரியாமல்..

 

"பொறுக்கி.. ராஸ்கல் ப்ரண்டா இருக்கலாம் என்று சொல்லிவிட்டு இப்போ.. என் இயலாமையை பயன்படுத்தி என்னை நாசம் பண்ணிட்ட இல்ல" என்றவள், அவன் மீது பாய்ந்து,

அவனை அடித்து பின் கைகளை முதுகிலும் கழுத்திலும் போட்டு வளைத்து இறுக்க.. அந்த கண்ணனோ அதையும் வகையாக பயன்படுத்தி அவள் முகமெங்கும் ஆசையாக முத்தமிட்டான்.

அவன் சிரித்தபடி அருகில் சரிந்து படுத்து அவள் இடுப்பை வளைத்து இறுக்கி அணைத்து கன்னத்தை முகர்ந்தான். 

 

"போடா பிராடு.. என்னை தொடாத" என்று அவன் கையை விலக்கித் தள்ளி விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.

 

"இங்க பாரு பேபி.. விருப்ப படாத பெண்ணின் விரல் நகத்தை கூட சீண்ட மாட்டான் இந்த ஜெர்ரி!! நேத்து உன் மனசை திறந்து நான் அங்கு எந்த இடத்தில் இருக்கேன் சொன்னது நீ!! அதுக்கப்புறம் தான் எல்லாம் நடந்தது. அதுக்காக நடந்ததை நியாயப்படுத்த நான் விரும்பலை.. இது லவ்வர்ஸ்குள்ள நடக்கிற ஒரு சாதாரண விஷயம் தானே இதுக்கு ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிற?" என்று கேட்டான் வெளிநாட்டு பழக்கத்தில்..

 

 

"சாதாரண விஷயமா? எதுடா சாதாரண விஷயம்?" என்று அவளிடம் கத்தியவள் "தாம்பத்தியத்திற்கான புனிதம் என்னனு உனக்கு தெரியுமா? என்றாள் சீற்றத்துடன், பின் "உனக்கு எப்படி தெரியும்? எல்லாத்துக்கும் காரணம் நான் தான்!! எல்லாமே என் தப்பு!!" என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

 

 

சுற்றுமுற்றும் பார்க்க அவளது உடைகளை தேடுகிறாள் என்று புரிந்தவன் "உன் டிரஸ்ல நேத்து வாமிட் பண்ணிட்ட பேபி" என்றதும் அருகில் கிடந்த அவனது பேண்டை எடுத்து அவசரமாக போட்டுக்கொண்டு தன்னுடைய கிளட்சை தேடிக் கண்டுபிடித்து அவள் வீட்டுக்கு ஓட்டமாக ஓடினாள்.

 

 

இரண்டு மூன்று நாட்கள் அவளை தொல்லை செய்யாமல் விட்டுப் பிடிக்கலாம் என்று ஜெர்ரி நினைத்திருக்க..

அவனை உறுதியாக விட்டு பிரிந்தாள் தாமரை!!

 

 

இவள் எங்கே சென்று இருப்பாள் என்று ஓரளவு அவன் யூகித்து இருந்தாலும், உடனே அவளைத் தேடி பின் செல்லவில்லை. நேராக இவன் சென்றது என்னவோ தன் தந்தை அரங்கநாதன் இடம்தான்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top