15
மின்விளக்கு கம்பிகளில் ஆனந்தமாக சயனம் கொண்டிருந்தவனை பார்த்த வில்லியமுக்கு அப்படி ஒரு திகைப்பு!!
"ஓ மை ஜீசஸ்!! ஓ மை ஜீசஸ்!!" என்று இவன் அலறி தவித்து கொண்டு இருக்க அங்கே ஜெர்ரியோ நம் ஸ்ரீரங்கநாதனை போல ஆனந்த சயனத்தில் தான் இருந்தான்.
முகத்தில் அப்படி ஒரு பரவச நிலை!! கண்களிலோ காதல் மழை!!
"ஜெர்ரி!! ஜெர்ரி!!" என்று வில்லியம் கத்த..
அவனோ புன்னகையுடன் வில்லியம்-ஐ பார்த்து கையசைத்தான் "ஐ அம் ஓகே" என்று!!
"என்ன மேன் பண்ணி வச்சிருக்க? எப்படி இப்போ அதிலிருந்து வெளியில் உன்னை கூட்டிட்டு வர்றது? எனக்கு ஒன்னுமே புரியலையே! இரு யாரையாவது கூட்டிட்டு வரேன்" என்று அவன் நகர போக..
"வேண்டாம்! வேண்டாம் வில்!! நானே வந்துடுவேன்" என்று மெதுமெதுவாக அங்கிருந்த கயிறுகளை பிடித்தபடி தத்தித்தத்தி நடந்து அந்த குன்றின் முகப்புக்கு வர மேலிருந்து வில்லியம் கை கொடுத்து அவனை இழுத்தான்.
கொஞ்சம் உடல் பருமனாக இருந்தாலும் ஜெர்ரியை தம்கட்டி தான் இழுக்க முடிந்தது வில்லியமால், பிடித்து மேலே இழுத்ததும் இரண்டு பேரும் சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டனர். பெரிய பெரிய மூச்சுகளை விட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
பின் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டார்கள்.
"நீ சொல்லிட்டியா?" என்று வில்லியம் பார்த்து ஜெர்ரி கேட்க, "சொன்னேன்! சொன்னேன்!! ஆனா அவ அவசரத்துல ஓடி போய்ட்டா" என்றான்.
"என்னது அவசரத்துல ஓடிப் போயிட்டாளா?" புரியாமல் ஜெர்ரி கேட்க, "ஆமாம் நான் ப்ரொபோஸ் பண்ண இடம் பாத்ரூம்!!" என்று வெட்கத்தோடு சொன்னான் வில்லியம். அடுத்த கணம் இன்னும் விழுந்து விழுந்து சிரித்தான் ஜெர்ரி.
"நாத்தம் புடிச்ச லவ்வுயா உன் லவ்வு!!" என்று கிண்டல் பண்ண மெல்லிய வருத்தம் வில்லியம் மனதினில்...
"சீயர் அப் மேன்!! உன் ஆளாவது பரவாயில்லை.. அவசரத்துக்கு ஓடிடுச்சு என் ஆளை பார்த்தியா? என்னை அந்தரத்தில் தொங்கவிட்டுடிச்சு" என்று ஜெர்ரி சொன்னவுடன் தான், "ஆமாம்ல என்ன நடந்தது? நீ ஏன் இப்படி தொங்கின? நெஜமாக அந்த பொண்ணு தான் உன்னை பிடித்து தள்ளி விட்டுட்டா?" என்று கேள்விகளை அடுக்கினான் இவன்.
மென் சிரிப்புடன் அவர்கள் இருவருக்குமான அந்த உரையாடலை நினைவுகூர்ந்து நண்பனிடம் பகிர்ந்தான் ஜெர்ரி.
ஜெர்ரி அங்கு செல்லுகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இடத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. ஆனால் முகத்திலோ அதை ரசிப்பதற்கான எந்த ஒரு பாவனையும் இல்லை. இறுக்கமாக தான் இருந்தது.
"இவள் ஏன் எப்போதும் ஏதோ ஒரு யோசனையை தத்தெடுத்த மாதிரியே இருக்கிறா? அப்படி என்னதான் பிரச்சினை இருக்கும்?" என்று தன்னவளின் துயர் நீக்க துடித்தான் இந்த காதலன்.
தன் முன்னால் வசீகர சிரிப்புடன் நின்றிருந்த ஆண்மகனை சற்றும் விழி உயர்த்தி பார்க்கவே இல்லை அந்த கயல்விழியாள்!!
"இவ்வளவு ஹாண்ட்சமா ஒரு பையன் உன் முன்னாடி நிற்கிறேன்.. நீ கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கவில்லையே டாம்" சத்தமாக சொல்லியவனின் குரலில் மெல்ல விழிகளை மட்டும் திரும்பி பார்த்தாள் காரிகை.
'இந்த மட்டும் பார்த்தாளே!' என்று நினைத்துக் கொண்டு, அவளுக்கு எதிரே சற்று முன் ரெக்ஸி அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து முன்னிருந்த டேபிளில் இரு கைகளால் தாடையை தாங்கியவாறு, இமைக்க மறந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் பார்வை வீச்சு அவளை தாக்கவில்லை என்றாலும் லேசாக உள்ளுக்குள் குறுகுறுக்க தான் செய்தது தாமரைக்கு.
"எதுக்கு இந்த லுக்? வேற வேலை இல்லையா உனக்கு?" கோபமாக பேசவில்லை ஆனால் வார்த்தைகளை பற்களுக்கு இடையே கடித்து துப்பினாள் அவள்.
"இப்போதைக்கு உன்னை பார்ப்பதைத் தவிர வேறு எந்த முக்கியமான வேலையும் இல்லை!" என்றால் அவளை விழிகளால் விழுங்கியபடி..
"முதல்ல இங்கிருந்து கிளம்பு! உன்னுடைய இந்த மாதிரி பிகேவிர்யஸ் எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. என்கிட்ட வேண்டாம்!" என்று அனல் தெறித்தது அவளது வார்த்தைகளில்..
"என்ன மாதிரி பிகேவிர்யஸ் உன் கிட்ட காட்டினேன்? சொல்லு! இந்த உன் கைய புடிச்சு இழுத்தேன இல்ல கிஸ் பண்ணுனேனா? இல்ல மிஸ்பிகேவ் தான் பண்ணுனேனா?" என்று வார்த்தைகள் இறுக்கமாக வந்து விழுந்தாலும் அவனது முகம் அமைதியாகத்தான் இருந்தது.
"ஒருவேளை இதெல்லாம் நான் உன்கிட்ட பண்ணலை தான் உன்னோட கோபமோ?" நக்கல் தெறித்தது இப்போது அவன் குரலில்..
அதுவரை இருந்த பொறுமை சற்று பறக்க "வாட் டூ யூ வாண்ட் ஜெர்ரி? எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற? அப்படி என்ன உன் ஊரு பொண்ணு கிட்ட இல்லாததை என்கிட்ட பாத்துட்டேனு.. நீ என் பின்னாடி சுத்துற?" என்று சீற்றத்துடன் அவள்!!
"எங்க ஊரு பொண்ணை விட நீ என்ன ஸ்பெஷலுனு உன்னை பார்த்தால் தானே தெரியும்?" என்று அவளை அங்கம் அங்கமாக வைத்தது அவனது பார்வைகள்.
அந்தப் பார்வையை வெறுத்தவளாக "டூ யூ வானா ஷேர் மை பெட்? இதுக்குதான அலையுறியா?" என்று இம்முறை அவள் நேரடியாகவே கேட்டு விட..
அப்படி ஒரு கோபம் ஜெர்ரிக்கு! 'என்னுடைய தேவை உடம்பு தான் என்றால்.. அவளைவிட அழகிகள் நிறையபேர் இருக்கிறார்கள். இவளுக்காக நாம் என்னென்ன எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். இவழ் என்னவென்றால் உடம்பு வேண்டுமா? என்று நேரடியாக கேட்கிறா! எவ்வளவு பெரிய இழுக்கு என் காதலுக்கு?' என்று நினைத்தவனின் நெஞ்சுக்குள் பாரம் ஏறிய உணர்வு.
"நீ எப்படா உன் காதலை அவகிட்ட சொன்ன? புரிய வைத்த? அவ உன்னை புரிந்து கொள்வதற்கு? வந்ததில் இருந்து விதவிதமான டயலாக் மட்டும் பேசுறியே லவ்வை சொன்னியா டா?" என்று கற்பனை உருவில் அங்கு வந்து மிரட்ட...
"ஆமாம் இல்ல! நான் இன்னும்ன்ன ப்ரொபோஸ் பண்ணல. அதான் அப்படி தப்பு தப்பா நினைக்கிறா. ப்ரோப்போஸ் பண்ணிட்டா என்னை பத்தி முழுசா புரிஞ்சுக்குவா!" என்று நினைத்தவனின் முகம் மிளிர.. அதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலையை பின்னுக்குத்தள்ளி தனது காதலை சொல்லிவிடு துணிந்தான்.
"நீ சொன்ன மாதிரி எனக்கு உன் கூட ஷேர் பண்ணிக்க ஆசை தான். ஆனால் உன் உடம்பை மட்டும் கிடையாது உன் ஃபீலிங்ஸையும். இப்படி எப்போதும் எதையோ வருத்தமாக இருக்கிற உன் பார்வை என் மீது மட்டும் காதலாக பார்க்க வேணும். அழுத்தமாக இறுக்கும் மூடி இருக்கிற உன் உதடுகளில் எப்போதும் என்னை பார்க்கும் போது வெட்கப் புன்னகை சிந்த வேணும்.. என்னைப் பார்த்தால் அனல் தெறிக்கும் உனது கண்களில் காதல் மழை பொழிய வேணும்.. இறுக்கி முறுக்கி கொண்டு இருக்கும் உனது உடல் என்னை பார்க்கும் வேளையில் வெட்கி கனிந்து குழைய வேணும்.. இப்படி நிறைய வேணும் எனக்கு உன்னிடத்தில்!!" என்று அவன் பேசிக் கொண்டே செல்ல விழிவிரித்து அவனைப் பார்த்தாள் பெண்.
'ஏதோ ஒரு அட்ராக்ஷனில் பின்னால் சுற்றுகிறான். மேக்ஸிமம் டேட்டிங் போக கேட்பானாக இருக்கும் அவர்களின் வழக்கத்தின்படி!' என்று அவள் நினைத்து இருக்க.. அவற்றை எல்லாம் தவிடு பொடி செய்து அவன் தனது காதலை அவ்வளவு அழகாக அவளிடம் உணர்த்தினான்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து சிலையென அமர்ந்திருந்தாள் தாமரை.
"என் காதலை ஏற்றுக் கொள்கிறாயா டாம்?" என்று தன்முன் கண்களில் மட்டும் அல்ல முகத்திலும் காதலைத் தேக்கி கேட்பவனிடம் மறுக்க மட்டுமே முடிந்தது அவளால்.
மகேஷ் மட்டுமல்ல அவளது குடும்பமும் கண்முன்னே தோன்றி மறைய.. சற்று நேரம் அவனது காதல் சொன்ன வார்த்தைகளில் மென்மையாக இருந்த அவளது முகம் சட்டென்று இறுக்கத்தைத் தத்த்தெடுத்தது. "அல்ரெடி எனக்கு வீட்ல மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணிட்டாங்க! அதுமட்டுமில்லாமல் உங்களோட பழக்கவழக்கம் இதெல்லாம் என்னோட பழக்கவழக்கத்துக்கு ஒத்துவராது. இதோட எல்லாத்தையும் முடிச்சிட்டு நீங்க கிளம்புங்க" என்று அவள் கட்டளையாக கை விரல் நீட்டி பத்திரம் கூற..
அந்த ஒற்றை விரலை தன் விரல் கொண்டு தாவிப் பிடித்தவன் "பழகி பார்க்காமல் எப்படிப் பிரிந்து போக சொல்ற டாம். பழக்கவழக்கம் இதெல்லாம் மனசுல காதல் வந்துட்டா எல்லாம் மறைந்து பறந்து விடும் டாம்" என்று விடாமல் கேட்பவனை பார்த்தவளுக்கு கோபம்தான் பற்றிக்கொண்டு வந்தது.
"சும்மா காதல் காதல் வந்து பின்னாடியே வெறுப்பேத்தாத.. உங்க காதலுக்கு பின்னாடி இருக்கிறது எல்லாம் வெறும் அட்ராக்சன்?! பிசிகல் அட்டிராக்சன் மட்டுமே!!" என்று அவள் கத்த...
"லவ்வுன்னா என்ன டாம்? அன்பை மட்டும் இருவருக்குள் இருந்தா அது பிரெண்ட்ஷிப்!! அன்போடு காதல் மோகம் கலந்ததுதான் காதல்!! கண்ணம்மா.." என்று அவன் மோகன புன்னகை சிந்த..
"எனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்ல.. இதுக்கு மேல எதுவும் நீ பேசாதே!! போ இங்கிருந்து" என்று அவள் கட்டளையிட,
"அப்படி எல்லாம் போக முடியாது. ஒருமுறை என் காதலில் கலந்து பார் மரணத்தை வென்ற வாழ்வை நாம் வாழ்வோம்.. காதலால்!!" என்று இவன் அவளிடம் நெருங்கி கூற.. "அப்போ நீ செத்துப் போய் வாழு உன் காதலில்!!" என்று அவனை தள்ளிவிட்டவள் திரும்ப பார்க்க, அவன் கால் இடரி அந்த மலை முகட்டில் இருந்து கம்பிகளில் விழுந்தான்.
முதலில் அதிரிபுதிரி எவனுக்கு என்ன ஆயிற்று என்று பயத்தில் எட்டிப் பார்த்தவள் அங்கே அவன் பள்ளி கொண்டு இருப்பதை பார்த்து அவனுக்கு பெரிதாக எந்த ஆபத்தும் இல்லை என்று எண்ணிய கீழே சென்றாள்.
நண்பன் தன்னிடம் பகிர்ந்தவற்றை கேட்ட வில்லியம் "ஏன் பாஸ் இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்காங்க? காதலில் உருகி வழிகிற நம்மகிட்ட ஓகே சொல்ல மாட்டேங்குறாங்க. என் நிலைமை பரவாயில்லை எப்படியாவது என் உடம்பை குறைத்து ரெக்ஸியிடம் என் காதலை சொல்லி விடுவேன். ஆனால் உன்னை நினைத்து தான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு நண்பா!!" என்றான்.
"ஒய்! ஒய்! நீயே உடம்பு குறைச்சி லவ் சொல்லும் போது.. ஆல்ரெடி சிக்ஸ்பேக் வச்சியிருக்கும் நான் என் ஆளு கிட்ட லவ்வை கொண்டு வர மாட்டேனா?" என்று சிலிர்த்துக் கொண்டு பேசினான் ஜெர்ரி.
"இங்க மேட்டர் நீ சிக்ஸ் பேக்கா? இல்ல எயிட் பேக்கா? இல்ல ஸ்கூல் பேக்கா என்பதைப்பற்றி எல்லாம் கிடையாது ஜெர்ரி. உன் ஆள் ப்ரம் இந்தியா! அங்க மோஸ்ட்லி அரேஞ்ச் மேரேஜ் தான் நடக்கும். பெரும்பாலும் வீட்டுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பாங்க. அதிலும் அந்த பொண்ணுக்கு ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்கன்னு சொல்ற. அதிலயிருந்து அந்த பொண்ணை உன் பக்கம் திருப்புவது ரொம்ப ரொம்ப கஷ்டம். காதல் இல்லைன்னு சொல்ற பொண்ணுகிட்ட கூட காதலை வரவைக்க முடியும்! ஆனால் குடும்ப தளைகளால் கட்டுப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணிடம் நீ காதலை மலர வைத்தாலும் அதை அவள் ஒத்துக் கொள்வது ரொம்பவே கஷ்டம்" என்ற வில்லியம் ஐ ஆச்சரியத்தோடு பார்த்தான் ஜெர்ரி.
"உனக்கு எப்படி இவ்வளவு டீடைல்ஸ் எல்லாம் தெரிந்து இருக்கு?" என்றான் ஆச்சரியத்துடன்!!
"கொஞ்ச நாள் சென்னையில வொர்க் பண்ணுனேன். அப்ப அங்கே உள்ளவங்கள பாத்து தெரிஞ்சுகிட்டது தான்" என்று கூறியபடியே எழுந்த வில்லியம், ஜெர்ரிக்கு கை கொடுக்க.. அவன் கையைப் பிடித்து எழுந்தான் ஜெர்ரி. இருவரும் அதற்கு பின் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் காதல் கைகூட என்ன செய்யலாம் என்று யோசித்தப்படியே அவர்கள் வந்து சேர.. அதற்குள் மற்றவர்கள் எல்லாம் ஒன்று திரட்டி இருந்தான் பீட்டர்.
"ஓகே கைய்ஸ்!! இன்னிக்கு நம்மளுடைய ட்ரிப் ரொம்ப நல்ல விதமாக முடிந்திருக்கு. நீங்க எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பீங்கனு நினைக்கிறேன். இப்போ பேக் டூ ஹோம்" என்றவன் அனைவரும் இருக்கிறார்களா? என்று ஒரு முறை சரிபார்த்து விட்டு ஏறினான். அவனை தொடர்ந்து அந்த ஆடம்பர சொகுசு பஸ்ஸில் அனைவரும் ஏறிக்கொள்ள அது அவர்கள் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தது.
அலுவலகத்திலிருந்து கிளம்பிய தாமரையின் பின்னால் வந்த ஜெர்ரியை அவள் கண்டுகொண்டாள் இல்லை. அவர்கள் வீடு போய் சேரும் வரை அவனும் அவளிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக தான் வந்து கொண்டிருந்தான்.
அவள் வீட்டு கதவை திறக்கும் அந்த நொடி "ஒன் மினிட் டாம்" என்று அவள் அருகில் நெருங்கிச் சென்றான் அவளை கூர்ந்து பார்த்தப்படி..
அவனது அந்தப்பார்வை தாமரையின் மனதில் ஏதோ செய்தது.
"இவன் ஏன் இப்போது என்ன பார்த்துகிட்டு நெருங்கி வரான்?" தாமரையின் மனம் அலறியது.
இவர்களுக்கிடையே மனதளவில் பல நூறு மைல்கள் இடைவெளி இருந்தாலும் உடலளவில் ஒரு அடி தூரம் மட்டுமே!! அவ்வளவு நெருக்கமாக நெருங்கி இருந்தான்.
அவனோ இமை சிமிட்டும் நேரம் கூட வீண் என்று இமைக்காமல் அவளை பார்வையால் விழுங்கியப்படி அடிமேல் அடிவைத்து நெருங்கி வந்தான்.
இதுவரை இல்லாத அளவுக்கு தாமரையின் இதயம் ட்ரம்ஸ் வாசித்தது. அவ்வொலி மிக நன்றாகவே கேட்டது தாமரையின் காதுகளுக்கு. 'நெருங்கி வருபவனின் காதுகளுக்கு கூட கேட்கும் போலவே நம் இதயத் துடிப்பு!' என்று சட்டென்று வலது கையை இதய பகுதியை மேல் வைத்துக் கொண்டாள்.
நெருக்கமாக நின்றவனின் ரோகங்கள் ஓடிய கை அவளின் மென்மையான கையோடு உரசி சென்றது. ஆழ்ந்து அவளைப் பார்த்தவன் "குட் நைட்!!" என்றான்.
அவள் "ஹான்.. ஆஹான்!!" என்று புரியாத மொழியைக் கேட்ட பிள்ளை போல திருதிருவென்று விழித்தாள்.
அந்த திருதிரு விழி அசைவுகளில் விழ துடிக்கும் இதயத்தை இறுக்கிப் பிடித்து, முகிழ்த்த சிரிப்பை மீசை அடியில் மடித்து வைத்துக் கொண்டு "அதான் அந்த குட் நைட்!! குட் நைட்!!" என்றான்.
இப்போது தான் அவளுக்கு புரிந்தது போல "என்ன? குட் நைட்டா?" என்று கேட்க..
"ம்ம்ம்!!" என்று தோளை குலுக்கியவன்
அவளது கன்னங்களை வருடிவிட்டு அடுத்த நொடி அவ்விடம் விட்டு சென்றான்.
அவன் ஏதும் தன் காதலுக்கு சமாதானம் கூறுகள் சொல்லுவான் இல்லை அவனின் காதலை வலியுறுத்துவான் என்று இவள் நினைத்திருக்க... அதையெல்லாம் கூறாமல், வெறும் குட் நைட்டோடு சென்றவனை பார்த்து குழம்பி நின்றாள் கோதை!!
மகன் காதலை சொன்னானா? அந்த பெண் அதற்கு என்ன பதில் சொன்னாள்? என்ற யோசனையுடனே அரங்கநாதன் நேரத்தையும் போனையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
லூசியோ ஆழ்ந்த உறக்கத்தில்..
ஜெர்ரியின் அன்றிருந்த மனநிலையில் தந்தையிடம் பேசவே இல்லை.
மறுநாள் காலையில் யோசனை முழுக்க தாமரை சுற்றியே இருக்க.. வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டே இருந்தான் சட்டை பட்டனை போடும்போது சட்டென்று அவனுக்கு ஒரு ஐடியா தோன்ற "ஹூரேக்!!" என்று கத்திக்கொண்டு...
"மாட்டுனடி தாமரை மாமன் கிட்ட!!" என்றான் சந்தோஷத்தில்.
மாமன் உபயம் எல்லாம் அரங்கநாதன்.
அடுத்த நொடி அப்பாவுக்கு அழைத்தான். மகனின் முகத்தை அவர் ஆராய்ந்து பார்த்து அதில் சந்தோஷம் மட்டுமே தெரிய, "என்ன டா இவ்வளவு சீக்கிரம் உன் காதலை தாமரை ஒத்துக்கிட்டாளா?" என்று அவர் சந்தேகத்துடன் கேட்க..
"ஏம்பா ஏன்? என்னையெல்லாம் லவ் பண்ண ஒத்துக்க மாட்டாளா?" என்று சோகத்துடன் கேட்ட மகனை பார்த்து "அதில்ல டா மகனே!! நீ அந்த பொண்ண பத்தி சொன்னதிலிருந்து என்னோட கணிப்பு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டா என்கிறது தான்! அதான் கேட்டேன் உன்னை குறைச்சு சொல்லலை" என்று மகனை சமாதானப்படுத்தினார்.
"யு ஆர் ரைட் பா!! டாம் ஒத்துக்கவே இல்ல. அதுக்கு தான் வேற ஒரு
அதிரடி திட்டத்தோட இப்போ அவளை பார்க்க போகிறேன். பாய் அங்கு! உங்க மிஸஸ் கிட்டயும் சொல்லிடுங்க" என்றவன் போனை அணைத்து விட்டு விசில் அடித்தபடியே அலுவலகத்தை நோக்கி சென்றான்.
