Share:
Notifications
Clear all

காதல் சகி 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 190
Thread starter  

14

 

அனைவரும் அவரது ஆபீஸில் ஆஜராகி விட அவர்களை அழைத்து செல்ல என்று ஒரு சொகுசு பஸ் காத்திருந்தது. வழக்கம்போல தாமரை ரெக்ஸியுடன் அமர்ந்துவிட, அவர்களுக்குப் பின் பக்கம் அமர வந்த ஜெர்ரியை முந்திக்கொண்டு வில்லியம் இடம் பிடித்துக் கொண்டான்.

 

 

அதன் பிறகு ஜெர்ரி அவர்களுக்கு பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான். "அடுத்த வாரத்தோடு இவர்களது இந்த ட்ரெயினிங் முடிய உள்ளது. அதனால் எந்த இருக்கும் நாட்களில் சந்தோசமாகவும் நட்பாகவும் இருப்போம்" என்று வழக்கம்போல் மைக் பிடிக்காமலேயே பேசித் தள்ள, அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

 

அதன்பிறகு இடையிடையே பாட்டு ஜோக் கேலிகள் என்று அமர்க்களப்பட்டது அந்த சொகுசு பேருந்து. பனிக்காலம் இன்னும் முடியாததால் அந்த அமியூஸ்மெண்ட் பார்க்கில் சிலவற்றுக்கு மட்டுமே அனுமதி அளித்து இருந்தனர்.

 

 

நண்பர்களுடன் அனைவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வர, ஜெர்ரியோ தன் காதலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். இடைக்கிடையே ரெக்ஸியும் தாமரையும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர்களிடம் பேசப் போகும் முன் இவனுக்கும் முந்திக்கொண்டு வில்லியம் அங்கே சென்று இருப்பான். போகும்போது ஒரு முறைப்பு வேறு இவனுக்கு பரிசாக கிடைத்திருக்கும்.

 

 

ஒருமுறை இருமுறை மட்டுமல்ல கிட்டத்தட்ட நான்கைந்து முறை இதே போல நடக்க.. அதன் பிறகுதான் இவன் வில்லியமை கூர்ந்து கவனித்தான். அவன் பார்வை தாமரையை பார்க்கிறதோ? என்று இவன் பயந்து அவனை நோட்டம் விட, வில்லியமின் கண்கள் ரெக்ஸியை தவிர இந்த அவனியில் ஒரு பெண்களே இல்லாத போது போலவே முகத்தில் காதலை சுமந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

"ஓ இந்த கம்ப்யூட்டருக்கு சாப்ட்வேர் அங்கு இருக்கோ" என்று நினைத்தவன் அதன்பின் ரெக்ஸியை பின் தொடரும் வில்லியமை தனியே பிடித்தான்.

 

 

"என்ன டூட், ரெக்ஸிய லவ் பண்றீங்களா?"

ஜெர்ரி நேரடியாக கேட்க.. வில்லியம் சற்று அதிர்ந்தாலும், "ஆமாம் உனக்கு எதுவும் அதுல எதுவும் வருத்தமா?" என்று கோபத்துடனே பதிலளித்தான்.

 

"சேச்சே.. இதுல நான் கோபப்பட என்ன இருக்கு. அவளுக்கு நீங்கதான் பெஸ்ட் மேட்ச்" என்றான் ஜெர்ரி. அவனை நம்ப பார்வை பார்த்த வில்லியமை "நம்பு டூட்.. நிஜமாகவே ரெக்ஸியோட குணத்துக்கும் உங்க குணத்தை தான் செட் ஆகும். நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃபேரா இருப்பீங்க" என்றான் உண்மையாக..

 

 

"ஆனால்!!" என்று தன் உடம்பை ஒருமுறை பார்த்தவன், ஜெர்ரியின் உடலமைப்பையும் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டான். "அழகு உடல் அமைப்பு இதெல்லாம் பார்த்து வருவதெல்லாம் காதலே இல்ல. உங்களோட காதல் உண்மை என்றால் கண்டிப்பாக ரெக்ஸியும் உங்க உடலமைப்பு எல்லாம் பார்க்க மாட்டாள்! நம்புங்க!!" என்றான்.

 

 

"ஆனா நான் ரிக்ஸியா காதலிக்கிறேன் நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்று சந்தேகம் தீராமல் வில்லியம் அவன் முகத்தை ஆராய்ச்சி பண்ண..

 

"பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல லவ் பண்ற எனக்கு இன்னொரு லவ் பண்றவனோட ஆக்டிவிட்டீஸ் அவன் முகம் இதெல்லாம் பார்த்தா தெரியாதா?" என்றான் சிரிப்புடன்.

 

 

"என்னது நீங்களும் லவ் பண்றீங்களா? ரிக்ஸியையா?" என்று இவன் பதற்றத்தோடு கேட்க..

 

 

"நோ.. நோ.. நான் லவ் பண்ணுறது டாம்" என்று தாமரைச்செல்வியை அவன் சுட்டிக்காட்டினான். அதன்பிறகு தோழிகள் இருவரையும் ஒரு தலையாக காதலிக்கும் இந்த காளைகள் இருவரும் தங்களுக்குள் நண்பர்களானார்கள்.

 

 

இதுவரை தனித்தனியே சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள், இப்பொழுது திட்டமிட்டு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள தயாராகினர்.

 

 

சிறுசிறு குன்றுகள் போல் அமைக்கப்பட்டு அதில் அமர்ந்து மொத்த விளையாட்டு தளத்தையும் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருந்தது அந்த பார்க்கில்.

 

 

மதிய உணவை அனைவரும் சேர்ந்து முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு அதன் பின் மாலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பி விடலாம்.. என்று பீட்டர் கூறிவிட, அனைவரும் ஒவ்வொரு இடத்தில் ஓய்வெடுத்தனர். 

 

 

சிலர் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர் கேம் மற்றும் இன்டோர் கேம் பகுதிகளுக்குச் சென்று விட, முதலில் சுவாரஸ்யத்தோடு சுற்றி வந்த ரெக்ஸியும் தாமரையின் முக சுணக்கத்தை கவனித்து அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள்.

 

 

"என்ன பிரச்சனை டாம்? ஏன் இப்படி இருக்க?" என்று கேட்டுக்கொண்டே வந்த ரெக்ஸிக்கு வெறும் தலையசைத்து மட்டுமே பதிலளித்தாள்.

 

 

உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்ல வேண்டாம். ஆனால் உனக்குன்னு ஒரு ஆள்.. உன் மேல பாசத்தை அன்பை காட்ட ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கோ டாம். எனக்கு தெரிஞ்சு நீ நல்லா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. இடையில இப்போ இந்த ட்ரைனிங் ப்ரோக்ராம்ல ரெண்டு மூணு தடவ நீ நல்லா சிரிச்சு பார்த்தேன். அதுவும் ஜெர்ரினால. ஜெர்ரி கூட நல்ல சாய்ஸ் தான். யோசி டாம்" என்று அவள் கூற, திரும்பி அவளை முறைத்துவிட்டு பதிலளிக்காமல் நடந்தாள் தாமரை.

 

 

"சரி சரி அதுக்காக எப்பவும் இப்படி ஹாட்டவே இருக்காத. அந்த குன்று மாதிரி இருக்கு பாரு.. அதுல உட்காருவோம்" என்று இருவரும் அதன் மீது ஏறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வெளியிடங்களில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

பனி படர்ந்து வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் எங்கும் இருக்க.. இன்னும் சில இடங்களில் அதிலேயே ஒளி விளக்குகளால் அலங்கரித்து இருக்க அந்த இடமே அவ்வளவு அழகாக இருந்தது.

 

 

"டாம் நீ இங்கே இரு. எனக்கு அர்ஜென்ட்" என்று சுண்டு விரலை காட்டி விட்டு இவள் ஓய்வு அறை நோக்கி ஓட..

 

 

இருவரையும் தொடர்ந்து வந்த ஜெர்ரியும் வில்லியமும், "டூட் அந்தப் பக்கம் போகுது நீ ஆளு.. அவ பின்னால போய் ப்ரொபோஸ் பண்ணு. நான் என் ஆளு கிட்ட போறேன்" என்று இருவரும் கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிவிட்டு தங்களின் இணைகளின் பின்னே சென்றனர்.

 

ரெக்ஸி வேக வேகமாக நடக்க தனது உடம்பை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அவளின் பின்னே ஓடினான் வில்லியம். அவனது ஒரே டார்கெட் ரெக்ஸி மட்டுமே ஒழிய, அவள் எங்கே செல்கிறாள் எதற்காகச் சென்றாள் என்ற கவனமெல்லாம் அவனிடம் இல்லை, ஒரே பதட்டம் தன் காதலை சொன்னால் அவள் ஒத்துக் கொள்வாளா மாட்டாளா என்று!! 

 

 

வேகவேகமாக பெண்களுக்கான கழிவறை பகுதிகளுக்குள் நுழைந்து அதில் இருக்கும் வேறு ஒரு அறையை உபயோகத்திற்கு இவள் திறக்க, பின்னாடி வந்த வில்லியம் "ரெக்ஸி!!" என்று அழைக்க, அவளோ இவனை அங்கே பார்த்து முதலில் அலறியே விட்டாள்.

 

 

 

சட்டென்று ஓடி சென்று அவள் வாயை பொத்தியவன், "ரெக்ஸி தப்பான எண்ணத்தோட எல்லாம் வரல.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும் தான் வந்தேன்" என்றான்.

 

 

தன் வாயிலிருந்து அவனது கைகளை தள்ளி விட்டவள், சுற்றி இருந்த இடத்தை காண்பித்து "இதுதான் தனியா பேசுறதுக்கான இடமா?" என்று முறைக்க.. அப்போதுதான் அது என்ன இடம் என்று அவனது புத்தியில் உறைத்தது. ஷிட் என்றப்படியே வில்லியம் தனக்குத்தானே தலையிலடித்துக் கொண்டவன், அதற்காக வந்த விஷயத்தை சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.

 

 

இவ்வளவு தூரம் மனதுக்குள் உரு போட்டு, தைரியத்தை வளர்த்துக் கொண்டு வந்தவன், இது கழிவறை என்பதால் மட்டும் திரும்பி சென்று விடவா முடியும்? இனிமேல் இதுபோல் சமயம் அமையுமா என்று அவனுக்கு தெரியாது!!

 

 

அதனால் சுத்தம் கித்தம் பார்க்காமல் மிக சிரமப்பட்டு ஒற்றை காலை மடித்து அமர்ந்து, இரண்டு கைகளால் அவளது ஒரு கையை பிடித்து, "நான் உன்னை என் வாழ்க்கை துணையாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் ரெக்ஸி. என்னை ஏற்றுக் கொள்வாயா?" என்று முகம் முழுக்க காதலை தேக்கி அவன் கூற.. ஒருபுறமும் அவளுக்கு வயிறு முட்டிக்கொள்ள..

 

 

"டேய்!! முதல்ல நான் என் வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்" என்று அவனுக்கு பதில் அளிக்காமல் கழிவறைக்குள் ஓடி சென்று கதவை அடைத்து விட்டாள் காரிகை!!

 

 

முகம் முழுக்க தோல்வியின் சாயல் தெரிய கழிவறைகளில் வந்தவன் "நமக்குதான் ஊத்திக்கிச்சு.. நண்பனுக்கு என்ன ஆகுது பார்ப்போம்?" என்று அங்கே பார்க்க.. தாமரை வேகவேகமாக அப்போதுதான் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள். ஆனால் ஜெர்ரி அவள் பின்னால் வரவில்லை.

 

 

"எங்கு சென்றான் இவன்? இந்த பூனையை தேடி தானே அந்த எலி சென்றது?" என்று யோசித்துக்கொண்டே தாமரை நிறுத்தியவன், "வேர் இஸ் ஜெர்ரி, டாம்?" என்று கேட்க அவளோ கையை அங்கு சுட்டிக் காட்டி விட்டு சென்று விட்டாள்.

 

 

"அங்க இருக்கிற மாதிரியே தெரியலையே?" என்று தன் உடம்பை தூக்க முடியாமல் மெதுவாக தூக்கி அந்த குன்றின்மீது இவன் ஏற..

 

 

அந்த குன்றுக்கு அந்தப்பக்கம் சிறு சிறு கயிறுகளால் பிணைக்கப்பட்டு அதில் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த, அலங்காரத்தில் உடலெல்லாம் கயிறு சுற்றிக்கொண்டு.. ஆங்காங்கே பல்புகள் எரிந்து கொண்டிருக்க.. முகத்திலோ மந்தகாச புன்னகையோடு தொங்கிக் கொண்டிருந்தான் அந்தரத்தில் ஜெர்ரி!!

 

 

அரங்கநாதன் சொன்ன சுபமுகூர்த்த.. அமிர்தயோகம்.. முழு பவுர்ணமி அதையெல்லாம் விட அந்த நல்ல நேரம்.. எல்லாம் இவனுக்கு எதிர்புறமாக திரும்பி ராகு காலமாக மாறி காதல் சொன்னவன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான்.

 

 

டாம் அண்ட் ஜெர்ரி?? காதலாகுமா??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top