3
நெடு நெடு என்ற உயரத்துடன், அகண்ட திரண்ட மார்புடன், சற்றே ப்ரவுன் நிற கண்களால் குறும்பாக தன்னை பார்த்து சிரித்தபடி அந்த சிறு மேடையை நோக்கி வருபவனை தாமரை விழி அகலாமல் பார்க்க.. சட்டென்று அவளை பார்த்து கண்களை சிமிட்டியவன், அவள் அருகே சென்று நின்றுக் கொண்டான் பவ்யமாக..
"கன்க்ராட்ஸ் கைஸ்.. ஐ எக்செபெக்ட் யூ வில் பீ பெஸ்ட் ப்பேர் இன் எண்ட் ஆஃப் தி செக்ஷன்" என்று வழக்கம் போல் அனைவருக்கும் வாழ்த்துவதை போல வாழ்த்தினான் பீட்டர்.
அதை மென் தலையசைப்புடன் ஏற்று தன் இடம் சென்று அமர்ந்தாள்.. 'ஏன் என்னை பார்த்து இப்படி கண் சிமிட்டுறான்?' என்று யோசித்தபடியே..
தன்னருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவள் திகைத்து தான் போனாள். ஆம் ஜெர்ரிக் அவள் அருகே தான் நின்றுக் கொண்டிருந்தான்.
'பாட்னர்ன உடனே பக்கத்தில் உட்கார வந்துட்டான்' என்று நொடித்துக் கொண்டாலும் அவனை சட்டை செய்யாமல் அமைதியாக அவள் மேடையை கவனிக்க..
தாமரை தான் அவனை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள், ஆனால் அவள் அருகில் இருந்த ரெக்ஸி கண்கள் வெளியே தெறித்து விழுந்து விடும் அளவு ஜெர்ரியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹேய்.. ரெக்ஸி?!" என்று தாமரை உலுக்க..
"வாட்ட அ செக்ஸி!!" என்றவள் கண்களாலேயே ஜெர்ரிக்கை விழுங்கி கொண்டிருந்தாள்.
ரெக்ஸியின் பார்வையை உணர்ந்த ஜெர்ரியும் அவளருகே சென்று "ஹாய் ஸ்வீட்டி.. கேன் ஐ ஹாவ் திஸ் ப்ளேஸ்?"
புன்னகை முகத்துடன் கேட்க.. மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல தலையை வேகமாக ஆட்டியபடி, அதைவிட வேகமாக தன்னிடத்தில் எழுந்தது மற்றொரு காலியான இடத்தில் அமர்ந்தாள்.
மிதப்பான பார்வையும் குறும்பு புன்னகையும் முகத்தில் தவழ தாமரையைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு மிக இயல்பாக அவள் அருகில் அமர்ந்தான்.
அங்கே மேடையில் அடுத்தடுத்து ஜோடிகளை தேர்ந்தெடுக்கும்போது பீட்டரும் மற்றவர்களும் கிண்டலும் கேலியுமாக பேச.. அமர்ந்திருந்தவர்களும் ஆரவாரமாக கைதட்டி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த.. தாமரை மட்டும் கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
முகத்தில் எப்போதும் இருக்கும் மில்லிமீட்டர் மோனாலிசா புன்னகை மட்டுமே!!
ஆனால் ஜெர்ரியோ மேசையில் கைத்தட்டி சிரிப்பது.. எழுந்து நின்று கை தட்டுவது.. விசில் அடிப்பது.. உட்கார்ந்த இடத்திலிருந்து இதழ்களை குவித்து கிண்டல் செய்வது என்று அத்தனை சேட்டைகளையும் செய்து கொண்டிருந்தான்.
அவ்வப்போது தாமரையின் தோளோடு அவனின் அகண்ட தோள் உரசும் நேரங்களும்... சில சமயம் அவள் காதுகளில் தீண்டிச் செல்லும் அவனது கையின் முரட்டு ரோமங்களும்.. அவ்வப்போது இடித்துக்கொள்ளும் இருவரின் முட்டிகளும்.. தாமரைக்கு ஒரு வித அசூசையையும் கோபத்தையும் ஏற்படுத்த, திரும்பி அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பை பல சமயம் அவன் பார்க்கவே இல்லை, பார்த்தபோதும் எதற்காக முறைக்கிறாள் என புரிந்து கொள்ளாமல்.. ஏன் அது எல்லாம் மூளைக்கு எட்டாமல் அவன் இயல்பாக இருந்தான்.
அந்நாட்டவருக்கே உரித்தான இயல்பான நடவடிக்கையோடு தான் இருந்தான் ஜெர்ரிக். கூடவே அவனது சிறு சேட்டைகள் குறும்புத்தனங்கள் இருந்ததே அன்றி அவளை வெறுப்பேத்த வேண்டும் என்றோ.. சீண்ட வேண்டும் என்றோ அவன் நினைக்கவே இல்லை இது வரையிலும்!!
அவனது அந்த இயல்புத்தனம் இவளுக்கு அதிகப்பிரசங்கித் தனமாக தெரிந்தது.
ஒருவாராக ஐம்பது பேர்களும் இருபத்தி ஐந்து ஜோடிகளாக பிரித்து வைக்கப்பட்டனர். அதில் ஆண் பெண் கலந்தும், ஆண்கள் மட்டும், பெண்கள் மட்டுமே என்று பலவாறாக இருந்தது. தாமரைக்கு தான் வருத்தமாக இருந்தது. அவனுக்கு பதில் வேறு ஒரு பெண் வந்திருக்கக் கூடாதா? ஏன் ரெக்ஸி கூட வந்திருக்கக் கூடாதா? என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.
ஆனால் ரெக்ஸியோ மிக கோபத்தில் இருந்தாள். இடைப்பட்ட பத்து நிமிட டீ பிரேக்கில் பாய்ந்து ஓடி தாமரையிடம் வந்தவள் "தாமரை ஐ அம் ஜெலஸ் ஆன் யூ" என்று கூற..
ஏன் என்று புரியாமல் அவளைப் பார்த்தாள் தாமரை. "எனக்கும் தான் ப்பேர்னு ஒருத்தன போட்டிருக்காங்க.. தொந்தியும் தொப்பையுமாக கங்காருக்கு ஜெர்கின் போட்ட மாதிரி வந்து நிற்கிறான். உனக்கு.. உனக்கு பாரு.. ஹாட் ஸ்பைஸியா!!" என்று சற்று தள்ளி யாருடனோ பேசி சிரித்துக்கொண்டு இருந்த ஜெர்ரிகை பார்த்து இவள் பெருமூச்சு விட்டாள்.
ரெக்ஸி மட்டுமில்ல அந்த ட்ரெயினிங்கு வந்திருந்த இருபது பெண்களின் பார்வையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவ்வப்போது அந்த ஹாட் ஜெர்ரிக்கை தான் ரசித்துக் கொண்டிருந்தது.
"எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை.. வேணும்னா நம்ப ரெண்டு பேரும் ப்பேரை சேஞ்ச் பண்ணிக்கலாம்" என்று தாமரை கூறிய நொடி "ரியலி!! ரியலி!!" என்று குதித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திய ரெக்ஸி பாய்ந்து பீட்டரிடம் சென்றாள்.
ஆனால் பீட்டரோ "இதுபோல எல்லாம் ஜோடியை மாற்ற முடியாது" என்று கட் அண்ட் ரைட்டாகவே கூறிவிட.. முகத்தைத் தொங்கப் போட்டு வந்தவளிடம், "இட்ஸ் ஓக்கே ரெக்ஸி.. ஜஸ்ட் பார் தர்ட்டி டேஸ்!! இதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற.. என்னமோ அவன் தான் உனக்கு லைஃப் பார்ட்னர் வர போற மாதிரியும்.. இவன் தான் எனக்கு லைஃப் பார்ட்னரா வர மாதிரியும்.. உனக்கு ஏன் இவ்வளவு பொறாமை? விடு.. முப்பது நாளுக்கப்புறம் இவர்களுக்கும் நமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது" என்று விதியின் விளையாட்டை அறிந்திராமல் பெரிய ஞானி மாதிரி ரெக்ஸிக்கு தன் நீண்ட நெடிய அறிவுரையை கொடுத்தாள் தாமரை.
ரெக்ஸிக்கு சிறுது முகம் தெளிந்தவுடன் பை என்று விட்டு தன் இடத்திற்கு விரைந்து விட்டாள்.
மீண்டும் பீட்டர் தன் கையில் மைக் எடுத்தவன் "இந்த முப்பது நாளும் இங்கே உங்களுக்கு டெய்லி கோட் அப்டேட்ஸ் இருக்கும்.. கூடவே அவ்வப்போது அவுட்டிங்.. பார்ட்டி டின்னர் என்று ஜாலியாக இருந்தாலும், இந்த ட்ரெய்னிங் முடிந்தவுடன் நீங்க எல்லாரும் உங்க பார்ட்னர் கூட சேர்ந்து ஒரு ப்ராஜக்ட் செய்து சம்மிட் பண்ணனும்... உங்களோட டெய்லி ஆக்டிவிடீஸ், ப்ராஜெக்ட் அவுட்கம், இதெல்லாம் பார்த்து பெஸ்ட் ப்பேர் செலக்ட் பண்ணுவோம். அவங்களுக்கு நம்ம எம்டி ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் வைத்திருக்கிறார்" என்றவுடன் மீண்டும் அந்த ஹால் கரவொலியால் அதிர்ந்தது.
அதன் பின் அன்றைய தினம் இவர்களுக்கு ட்ரெய்னிங் எடுக்கப்போகும் மற்றவர்கள் வருவதும் தங்களை பற்றியும் மற்றவர்கள் பற்றிய அறிமுக படலம் அரங்கேறியது.
வழக்கம்போல ரெக்ஸியுடன் இவள் வருகையில் சற்று பின்னே ஜெர்ரிக்கும் வர, ரெக்ஸி அவனை கண்டு பரப்பப்பாகி "ட்டாம்.. இட்ஸ் ஹி.. ஜெர்ரி" என்று சந்தோஷ கும்மாளமிட.. அவளுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது "இன்று பார்த்த ஒருவனுக்காக இப்படி எக்சைட்மென்ட் ஆக வேண்டுமா என்ன?" என்று!!
எப்போதுமே அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட விரும்பாததால், தாமரை இருவரையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக காத்திருக்க.. முதலில் அவளுக்காக வந்த ரயிலில் அவளா ஏறிவிட பின்னொடு ஜெர்ரிக்கும் ஏறினான். இது சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் விழி விரிவை கண்டவன் மீண்டும் ஒரு கண்ணாடி சிமிட்டலுடன் எதிர்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
பார்த்துக்கொண்டிருந்த ரெக்ஸி "ம்ஹீம்.. டாம் சோ லக்கி!!" என்று பெருமூச்சு விட்டவள் தனக்கான ரயில் வரவே அதில் ஏறி சென்றாள்.
