4
அவர்களுக்கான பகுதி வரும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை. தாமரை தங்கியிருக்கும் அந்த ஒற்றைப் படுக்கை அறை வீடுகள் கொண்ட பகுதி வந்தும், அவளை அவன் பின்தொடர்வதை நிறுத்தவே இல்லை.
தாமரை திரும்ப அவனை ஒரு முறை பார்த்தவள் விடுவிடுவென்று சற்று வேகமாக செல்ல.. அவனும் தன் நீல கால்களை எட்டு வைத்து இருகைகளையும் ஜெர்க்கின் பாக்கெட்டில் விட்டபடி கேஷுவலாக நடந்து வந்தான்.
அவனை எந்த ஏரியா லாண்டரியில் பார்த்த ஞாபகம் இருக்க.. இங்கே எங்காவது இருப்பானாக இருக்கும் என்று நினைத்தவள், இவள் அப்பார்ட்மெண்ட் பகுதிக்கும் பின்னே தொடர்ந்து வருவதை பார்த்ததும் சிறு பயம் பிடித்துக்கொண்டது அவளுக்கு.
ஆறுமாதமாக இங்கே வேலை செய்தாலும் அந்த அளவுக்கு யாரிடமும் இவள் நெருங்கி பழகியது கிடையாது. ஏன் தன் வட்டத்துக்குள் யாரையும் அனுமதித்ததும் கிடையாது. தான் உண்டு! தன் வேலையுண்டு!! என்று இருப்பவள், இப்படித் தன் பின்னே ஒருத்தன் பின்தொடர்வதை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் பயந்தாள். வேகவேகமாக கைகளை பிசைந்து கொண்டே தன் வீட்டின் கதவைத் திறக்க.. அவசரத்திலும் பதட்டத்திலும் அவளுக்கு சாவியை சரியாக செலுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை கீழே விழுந்து விட்டது.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவள், முடியாமல் போக.. "ஷல் ஐ?" என்று காதின் அருகே கேட்ட அந்த ஆளுமையான குரலில் திடுக்கிட்டு இரண்டடி பின்னே எடுத்து வைத்தவள் மீண்டும் கையில் இருந்த சாவியை நழுவ விட்டு இருந்தாள்.
ஜெர்ரிக் அதை சரியாக பிடித்தவன்.. "ஆர் யூ ஆல்ரைட் டாம்?" என்று கதவை திறந்தவன், அவள் தோளை தொட போக அனிச்சை செயலாக பின்னே நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.
"ஓகே! ஓகே! ரிலாக்ஸ்!!" என்று அவனே கதவை நன்றாகத் திறந்து உள்ளே செல்லுமாறு கையை காட்ட.. பின்னோடு வந்து விடுவானோ என்ற அச்சத்தில் நின்றவள், "நீங்க போங்க நான் போகிறேன்!!" என்றாள்.
அவன் இந்த இடத்தை விட்டு சென்றால் தான் தன்னால் நன்றாக மூச்சு விட முடியும் என்று தோன்றியது.
அதனை ஒரு விஷமச் சிரிப்புடன் "ஆர் யூ சூர்?" என்று கேட்க..
அவளும் வேக வேகமாக அவன் போனால் சரி என்று தலையாட்டினாள்.
"நீ எவ்வளவு ஆசைப்படும் போது நான் மாட்டேன்னு சொன்னா?? உன்னோட சின்ன இதயம் ரொம்ப ஹாட் ஆகிடும்.. அந்த ஒரே காரணத்துக்காக எனக்கு விருப்பமில்லைனாலும் நான் போறேன்" என்று அவன் பேச பேச 'எப்பா சாமி போய் தொல டா?!' என்று அவள் மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவனை பார்த்தாள்.
ஆனா வெளியே செல்லாமல் சட்டென்று அவள் வீட்டுக்குள் நுழைந்து அந்த வீட்டை சுற்றி பார்த்தான். "அடப்பாவி! அடப்பாவி!! நான் அவன் வீட்டுக்கு போக சொன்னா, இவன் என்ன நம்ம வீட்டுக்குள்ள போய் நிற்கிறான்" என்று கோபம் கொண்டு..
"உங்களை நான் போக சொன்னேன்" என்று கடுப்புடன் மொழிய..
"அதான் நான் வந்துட்டேனே!!" என்றவன், அவள் அவன் வீட்டுக்குப் போக சொன்னதை.. அவள் வீட்டுக்கு உள்ளே போக சொன்னதாய் அர்த்தம் பண்ணிக் கொண்டு அவளிடம் தர்க்கம் பண்ணிக் கொண்டு நின்றான்.
"ஐயோ!!" என்று வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவளை பார்த்தவன், அதற்குமேல் அவளைச் சோதிக்க விரும்பாதவனாய்.. "இட்ஸ் ஜெஸ்ட் ஃபன் டாம்.. உன்னை நார்மலாக தான் இப்படி செய்தேன்" என்றவன் "பை த பை நானும் இதே ஸ்டோர்ல தான் இருக்கேன்.. சேம் ப்ளோர்" மீண்டும் ஒரு கண் சிமிட்டலுடன் குட்நைட் என்று கூறிவிட்டு அவள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் தனது வீட்டிற்கு சென்றான்.
அன்று ஏதோ ஒரு அசௌகரியம்.. விளங்க முடியாத ஒரு கோபம்..
மனது அலை களைப்பாக இருக்க எப்போதும் போல அவள் கைகள் அவளது வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தது.
எப்போதும் காத்திருக்கும் மகேஷின் அழைப்பு கூட என்று வெறுப்பாய் தோன்றியது. போதாத குறைக்கு அவன் இன்று சற்று தாமதமாக அழைக்க.. எப்போதும் எது பேசினாலும் "ம்ம்!! சரி!!" என்று கூறும் தனது அழகிய தலையாட்டி பொம்மை இன்று எடுத்தவுடனே "இனிமே இந்த மாதிரி லேட்டா கால் பண்ணாதீங்க!! கொஞ்சம் சீக்கிரம் கால் பண்ணுங்க!!" என்று படபடப்பாக பேச முதலில் சற்று அதிர்ந்து கோபப்பட்டாலும் அதன் பின் விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தவன் "சரி ஓகே!!" என்று தழைந்து கூற.. அதற்கு மேல் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. எப்பொழுது உம் கொட்டியே பழகிய அவளுக்கு, இன்று பேச்சு வராமல் போக "நாளைக்கு கூப்பிடுறேன்" என்று போனை வைத்து விட்டாள்.
போனையே சிறுது நேரம் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் 'நாளைக்கு பார்த்துக்கலாம் வட்டியும் முதலுமாக!' என்று நினைத்தான்.
அன்று இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை மென்மையாக யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது..
இமைகள் திறக்க முடியாத இறுக்க பிணைப்பில் இருக்க.. கருவகழிகளோ இமைகள் மீது இங்குமங்கும் சதிராட.. மீண்டும் மீண்டும் அதே மென்மையாக குரல் அவளது காதுகளில்...
எப்போதோ அவள் சிறு வயதில் கேட்ட அதே குரல்.. நிஜம் தானா?? நான் கேட்பது நிஜம் தானா?? என்று மீண்டும், புருவங்களை சுருக்கி காதுகளை கூர்மையாக்கி மீண்டும் உன்னிப்பாக கேட்க.. ஆம்!! அதே குரலே தான். சந்தேகமில்லை..
ஒற்றை அழைப்பிலேயே அன்பை வாரி வழங்கும் குரல்.. "செல்விக்கண்ணு!! என் செல்லம்மா!!" என்றழைக்கும் அன்னையாய் அவளை அரவணைக்கும் ஆணின் குரல்.. பல வருடங்கள் முன் கேட்ட அதே குரல்!!
"செல்விக்கண்ணு!! என் செல்லம்மா!!"
மீண்டும் மீண்டும் அந்த அழைப்பு அவள் காதுகளில் இனிய ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே இருக்க... ஒரு கட்டத்தில் அந்த அறை முழுவதும் அந்த குரலில் எதிரொலிக்க அந்த கணம் தாங்க முடியாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு தலையை இரு பக்கமும் ஆட்டி அதை விரட்ட முயன்றயவள், முடியாமல் தோற்று சட்டென விழித்து எழுந்து அமர்ந்தாள்.
மைனஸ் டிகிரி செல்சியஸில் ஊரே உறை நிலையில் இருக்க.. தாமரைக்கோ தாரை தாரையாய் வியர்த்து வழிந்தது.
தான் கேட்ட குரலில் சொந்தகாரனை தேடி தேடி பார்க்க.. இருந்தால் அல்லவா?? தேடி தேடி ஓய்ந்தவள், சோர்ந்து அமர்ந்தாள்.
ஏன் இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு கனவு?? கனவே தான்!! நிஜமாக இருக்க வாய்ப்பே இல்ல!! என்றவாறே தூங்கி போனாள்.
காலையில் எப்பொழுதும் எழுந்திருக்கும் நேரத்தை விட இன்று தாமதமாகிவிட அவசர அவசரமாக கிளம்பியவளுக்கு உணவு உண்ண கூட நேரமில்லை..
இருக்கும் அந்த ட்ரெயினையும் விட்டால் அடுத்து வருவதற்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும். அதுவும் இப்பொழுது ட்ரெய்னிங்கில் இருக்கும் பொழுது தாமதமாக சென்றால், அதற்கு வேறு காரணம் சொல்லவேண்டும் என்றவாறே வேகவேகமாக ரயில் நிலையத்தை நோக்கி ஓட.. அப்போது தான் கிளம்ப தயாராக இருந்த ரயிலின் கதவு மூட செல்ல.. "போச்சு!! போச்சு!!" என்று தவியாய் தவித்தவள் அதன் அருகே நிற்க அடுத்த நொடி.. அவள் இடுப்பை அழுந்த பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டு அந்த ட்ரெயின் உள்நுழைந்து இருந்தான் ஜெர்ரிக்.
பின்னிருந்து அணைத்து இருந்தவன் முகமோ அவளது கன்னத்தோடு கன்னம் இழைத்து கொண்டிருக்க.. அவளோ.. எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் உறைந்து இருந்தவள், அடுத்த நொடி அவனிடமிருந்து விலக போராட.. அதே சமயம் ரயிலும் வேகமெடுக்க.. ஜெர்ரிக்கின் அழுத்தமான உதடுகள், மைனஸ் டிகிரியில் சில்லிட்டு இருந்த அவளது ரோஜா கன்னங்களில் சூடாக பதிந்தது.
தாமரையோ அதிர்ச்சியின் உச்சத்தில்!!
அவனின் ஆறடியை தன் வலு கொண்டு மட்டும் தள்ளி நிறுத்தி, காளியாக அவள் உருமாறி இருந்தாள்.
"இட்ஸ் ஜெஸ்ட் ஆக்ஸிடென்ட் டாம்!!" என்று, ஒரு கையால் ட்ரெயினின் ஹாண்டிலை பிடித்தபடி மறு கையை விரித்தப்படி அவன் கூற..
அவளோ பொசு பொசு என்று மூச்சை விட.. ஏறி இறங்கிய அவளது மென்மைகளை மறைத்த ஜெர்க்கினை சபித்தவனாய் நின்றிருந்தான் ஜெர்ரிக்!!
"ஹேய்.. டாம் தாங்க்ஸ் சொல்லைனாலும் பரவாயில்லை.. பயமுறுத்தாதே!! நிஜமா இட் வாஸ் ஆக்சிடென்ட்" என்றவன் அவள் முன்னே குனிந்து பாவமாக கூறினாலும் கண்களில் குறும்பு கூத்தாடியது.
"அதெப்படி ஆக்ஸிடென்ட்.." என்று வாய் திறந்தவளின் இதழ்களோ, டக்கென்று அடுத்த ஸ்டேஷனில் நின்ற ட்ரெயினில், பிடிமானமின்றி தன் எதிரே குனிந்து நின்றவனின் இதழோரம் பதிந்து, இப்படி தான் என்று காட்ட.
.
"ச்சே.. ஜஸ்ட் மிஸ்!!" என்ற விழி மொழியுடன் ஜெர்ரிக்!!
டாம் அண்ட் ஜெர்ரி.. வருவாங்க..
