Share:
Notifications
Clear all

அழகன் 26

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 328
Thread starter  

 

அழகன் 26

 

“அப்புறம்.. அழகன் பொண்டாட்டி.. ஒரு வழியா உங்க நாத்தனாரோட காதல் கல்யாணத்த வெற்றிகரமா நடத்த போறீங்க போல..” என்று தங்கள் அறைக்கு வந்தவுடன் முன்னே சென்றவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து இடையோடு கட்டிக்கொண்டு கேட்டான் அழகன். 

 

“இல்லையா பின்ன.. ஆனா னா நோக்கு பேர போலவே அத்தனையும் கள்ளத்தனம்.. கள்ளத்தனம்..” என்று அவன் நெஞ்சிலேயே தன் பிஞ்சு விரல்களால் அடித்தவள், 

 

“நேத்து நைட்டு அவ்வளவு நான் பக்கம் பக்கமா டயலாக் பேசுனதுக்கு கொஞ்சம் கூட இந்த மூஞ்சில ஒரு ரியாக்ஷனையும் காட்டாம.. காலையில அதிரடியாக இறங்கி ஆத்து மாப்பிள்ளைய பார்க்க போயிருக்கேள்.. கூடவே என்கிட்ட வந்து தனியா சொல்லாம.. எல்லாருக்கும் முன்ன போட்டு உடைக்கிறேள்? அவ்வளவுதான் இல்ல நானு?” என்ற அவளின் பேச்சில் திருதிருவென்று விழித்தான் அழகன்.

 

‘என்னடா நாம இதெல்லாம் செஞ்சதுக்கு சந்தோஷப்படுவான்னு பாத்தா.. இவ வேற ஒரு கோணத்துல யோசிக்கிறா..’ எங்கோ அபாய மணி சங்கு அடித்தது அழகன் காதில் கேட்டது.

 

‘உஷாராகிக்கோ டா அழகா’ என்று அவன் மனம் உஷார் மோடுக்கு தாவியது.

 

“இங்க பாரு பொம்மா..! 

கண்ணி விஷயம் ஏற்கனவே நானு யோசிச்சிட்டு இருந்த விஷயம் தேன். என்ன கண்ணிக்கு அவளுக்கான டைத்தை கொடுக்கிறதா ஒதுங்கி இருந்தேனே ஒழிய.. ஒட்டுமொத்தமா அவளை விட்டு விலகிப் போயிடல..!”

 

“ஆனா ஒன்னு ஒத்துக்கணும் டி பொம்மமா.. நீ பார்த்த கவனிச்சு அளவு இங்கன வீட்ல எங்கள யாரும் சரியா கவனிக்கல… எனக்கும் கண்ணிக்கும் இடையில மெல்லிசா ஒரு பனித்திரை இருந்தத அவங்க யாருமே கண்டுபிடிக்கல..! அத நீ தான் டி கண்டுபிடிச்ச என் செல்ல பொண்டாட்டி..!” என்று அவளின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான் அழகன். 

 

“இந்த ஐஸ் வைக்கிற ஜோலி எல்லாம் என்கிட்ட வேணாம்னா. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ” என்று முகத்தை திருப்பி கொண்டாள் அவள்.

 

“அடிக் கள்ளி.. கையால செய்யதாடா கள்ளழகா, உதட்டால செய்யுனு சிம்பாலிக்ககா மொகத்த திருப்பிச் சொல்றியோ?” என்றவன் இப்பொழுது அவள் திருப்பி இருந்த முகத்தில் பளிச்சென்று தெரிந்த கன்னத்தில் தன் மீசை முடிகள் குத்த அழுத்தமாக முத்தமிட்டான். 

 

“ஸ்ஸ்ஆஆஆ.‌. உங்க மீச முடி குத்துத்துனா..!” என்று சிணுங்கியவள்,

 

“இது ஒரு சாக்கு நோக்கு..! என்னான்ட கள்ளாட்டம் ஆடுறேள் போங்க..!”

 

“இது என்னடி வம்பா போச்சு..! உன்கிட்ட ஆட்டம் ஆடா வேற யாருகிட்ட ஆட சொல்லுறவ?” என்று மூக்கோடு மூக்கு உரசினான்.

 

“நீங்க நேக்கு சரியான பதிலே சொல்லலனா..” என்று முகம் சுருங்கியது அவளுக்கு.

 

“ஹே.. இங்க பாரு பொம்மா..நீ வேற நான் வேறையா டி? இது நாம பண்ணுன ஏற்பாடு பொம்மா..! இதுல நீனு நானு பிரிச்சு எப்படி நான் பேச?” என்றவனின் பேச்சில் மனது மயங்கினாலும்,

 

‘இவன் கள்ளன்.. மயங்காத ஆண்டாளு..!’ மனம் எச்சரிக்கை செய்ய,

 

 “போங்கோ.. போங்கோ.. ஏதேதோ பேசி பேசி என்னை டைவர்ட் பண்றேள்..! உங்கள இந்த ரூம் விட்டு நான் தள்ளி வைக்கிறேன்..!” என்று சட்டென்று குனிந்து அவன் பிடியிலிருந்து கதவு பக்கம் நின்று கண்களால் வெளியே போ என்று நாட்டமையாய் ஆண்டாள் தீர்ப்பு சொல்ல..

 

“செல்லாது..! செல்லாது.‌.! நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு” என்று கைகால்களை உதறியவனை கண்டு அவள் சிரித்து வைக்க..

 

“அடி கொழுப்பெடுத்த கழுத.. என்னையே ரூம்ல இருந்து விரட்டுவியா டி” என்றவன் அவள் காதை பிடித்து திருகி.. கன்னத்தில் செல்லமாக இரண்டு தட்டு தட்டி.. அவன் இறுக்கமாகப் பற்றியிருந்த இடுப்பில் நறுக்கென்று கிள்ளி என்று அவனுக்கே உரிய வகையில் புதிய கணவனாய்.. காதலனாய் தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருந்தான் ஆண்டாளுக்கு. 

 

“ஸ்ஸ்ஆஆ.. வலிக்குதுனா.. விடுங்கோ.. விடுங்கோ… சொன்னா கேளுங்கோ.. அங்க எல்லாம் கை வைக்காதீங்கோ னா.. நேக்கு கூச்சமா இருக்கு” என்று அவனின் கிச்சுகிச்சு மூட்டலில் அவள் உடலை அங்கு இங்கு என்று நெளித்து அவனிடமிருந்து தப்பிக் கொள்ள போராட.. 

 

அவனோ ஏற்கனவே மனைவியின் மேல் அத்தனை மோகப்பித்து கொண்டிருக்க.. இப்போது கண்ணியின் கல்யாண பேச்சு அத்தனை நிம்மதியாக இருக்க.. தன் மனைவியை இப்போது தங்கு தடையின்றி முழுங்க முடுவு செய்தவனின் சித்தம் மொத்தமும் கலங்கி அவளை கொள்ளை கொள்ள காத்திருந்தது.

 

அதிலும் இந்த காதல்? ஓஓஓ இது தான் காதாலா? 

 

ஆம் இது தான் காதல்..!

 

ஏன் திருமணமான பின் காதல் வர கூடாதா? 

 

திருமணமான பின் வரும் காதல் தான் உண்மையான உறுதியான காதல் என்று நம்பியவன், ஐயம்திரிபுற புரிந்துக் கொண்டவனுக்கு, இப்போது தன் மனைவி மீது காதல் கொள்ளை கொள்ளையாய் வந்தது.

 

அதை எப்படி காண்பிக்க?

கதையில் திரைப்படத்தில் வருவது போல பூங்கொத்து கொடுத்தா? இல்லை ஒற்றை ரோஜாவை நீட்டியா?

 

 ப்ச் அதெல்லாம் காதல் இல்லை பேத்தல் என்று விலகி தள்ளியவன்,

 

எப்படிச் சொல்வது என்று தெரியாமல்.. தனக்கு தெரிந்த வழியில் 

அவள் தான் தன் எல்லாமும்.. 

அவள் தான் தன் உயிர்.. 

அவள் தான் தன் காதல் நேசம்.. என்று தெளிந்து, அவனுக்கு தெரிந்த விதத்தில் இப்படி காண்பித்துக் கொண்டிருக்கிறான். 

 

 

அழகனின் கண்கள் மோகத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன..!

அவள் கனிந்த கன்னங்களின் மென்மையும்.. மூக்கின் வெட்கச் சிவப்பும்.. சிவந்த உதடுகளின் கெஞ்சலும் கொஞ்சலும்.. உதட்டின் மீது வேர்த்திருந்து அந்த வேர்வை துளிகளும்.. நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும்.. அவன் இளமையின் வனப்பும்… அவனின் விழிகளுக்குள் மோகத்தை தூண்டின…!! காதல் பாடத்தை விடுத்துக் கட்டில் பாடத்தை படிக்க உணர்வுகள் தூண்டப்பட்டன..!!

அதுவரை தன்னை சீண்டி தீண்டி என்று விளையாடிக் கொண்டிருந்த கணவனின் விரல்களும் முரட்டு கைகளும் இதழ்களும் சற்றென்று வேலை நிறுத்தம் செய்ததில் ஏனென்று யோசனையாக கணவனை பார்த்தால் ஆண்டாள். 

அவன் கண்களில் தெரிந்த கிறக்கத்தில் அவள் மீதான மயக்கத்தை அப்பட்டமாக அப்படியே காட்ட…

ஆண்டாளின் கண்கள் அவன் கண்களைச் சந்தித்து மெல்ல வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின..

இதயம் படபட வேண்டும் என்று அடித்துக் கொண்டது. இது முதல் முறையல்ல… கணவன் தன்னை காதலாக பார்ப்பது என்றாலுமே அந்தப் பெண்மையை நானும் அவளை நாணமுறச் செய்தது.

“பொம்மா…” என்றவன் பிடித்திருந்த அவள் கையை தன் முரட்டு கையால் சுண்டித் தன் அருகில் இழுக்க அவள் நெஞ்சத்தில் தஞ்சமானாள் வஞ்சி அவள்.

அவள் இதயத்தின் துடிப்பை துல்லியமாக அறிய முடிந்தது அவனால்.‌. கணவனின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் அவனின் அழுத்தமான அனைத்து மூலம் அவளுக்கு கடத்தப்பட.. அதன் உள எழுச்சியை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள்.

அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் காதல் உற்றுயிருந்தது.

இயற்கையின் பஞ்ச பூதங்களைப் போல.. நம் உடலில் பஞ்ச பூதங்களும் அவற்றை உள்வாங்கி உயிர்ப்புடன் சிலிர்த்திருப்பதை உணர்ந்தாள். அவள் மனம் நிலையற்று தவித்தது!!

அழகன் அவள் தோளில் கை வைத்தான். சட்டென்று உடல் விரைக்க விதிர்த்தாள். அவள் உடலில் சிறு நடுக்கம் எழுந்தது. மென்மைகள் விம்மித் தணிய நீளப் பெருமூச்சு விட்டாள். அவன் பார்வை அவளின் பக்கவாட்டு இளமைக் குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின..! அவற்றில் உறவாடின..!

 

 

“என்னடி பொம்மா.. இந்த இரவின் கூடலுக்கு பின்னுமா உனக்கு யேன் மேல பயம் போகமா.. இப்படி உடல சிலுத்துக்குறவ?” என்று கேட்டவனின் கண்டு அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.

 

“இன்னுமாடி என்ன பழகல பொம்மா நீ?” என்று அவன் கேட்ட தினுசில் அவளுக்கு லஜ்ஜைமாகி போக, இப்போது அவளேத் தாவி அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.

 

 

“பொம்மா..” என்று அவன் ஆனந்த் அதிர்ச்சியோடு அவளை பார்க்க.. 

 

 அவளோ வெட்கம் மேலும் எதுவும் சொல்லாமல் மீண்டும் கண்களை மூடினாள். அவள் நெஞ்சகம் சட்டென விம்மித் தணிந்தது. அவளின் உஷ்ண மூச்சை தன் முகத்தில் உணர்ந்தபடி அவள் உதட்டை நெருங்கினான் அழகன். அவளின் தவிப்பான உதடுகளுடன் தன் பசியான உதடுகளை இணைத்தான். அவள் கைகள் அவன் கைகளை இறுக்கின. அவளின் தடித்த கீழ் உதட்டை பற்களால் கவ்வினான். ஆண்டாள் மறுப்பின்றி அமைதியாக இருந்தாள். அவள் உதடும் சூடாகியிருந்தது. அவள் கீழ் உதட்டை கவ்வி இழுத்து சப்பிச் சுவைத்தான். அவள் கை விரல்கள் அவன் விரல்களைக் கோர்த்து இறுக்கமாகப் பிண்ணின. தன் முகத்தில் மோதும் அவளின் சூடான மூச்சுக் காற்றை ஆழமாக சுவாசித்தபடி அவள் உதட்டின் தித்திப்பான பருவ நீரை உறிஞ்சி சுவைத்தான்.

அவளின் கீழ் இதழையும் மேல் இதழையும் மென்று சுவைத்தான். முழுவதுமாக அவனுக்கு சுவைக்கக் கொடுத்துக் கிறங்கினாள். அந்த சுவைப்பு பல நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் மெல்லிய சிணுங்கலுடன் தன் அதரங்களை இழுத்துக் கொண்டாள்.

“ம்ம்ம்ம்மா னா.. விடுங்கோ‌‌.. வாயே வலி வந்துடுச்சு” வாயைப் பொத்திச் சொன்னாள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அள்ளி தன் மடி புது அமர்த்திக் கொண்டான்.

அவன் கையைப் பிடித்தாள்.

“எப்படி இப்படி முத்தமா கொடுத்திட்டு இருக்கீங்க.‌ உங்களுக்கு போர் அடிக்கலையா?”

 

“போரா? ஹா ஹா.. அதெல்லாம் அடிக்காது. உனக்கு புடிச்சுதா டி பொம்மா?”

 

“புடிச்சுதாவா? போங்கோ.. வெம்பயர் மாதிரி.. வாயே வலிக்குதுனா..”

 

“அதான் டீப் கிஸ்.. இன்னும் முத்தங்கள் எத்தனை வகை இருக்கு தெரியுமா? ஒவ்வொரு நாளா ஒன்னுன்னா கிளாஸ் எடுக்கிறேன்.. கிளாஸ ஒழுங்கா கவனிச்சு நான் டெஸ்ட் வைக்கும் போது கரெக்டா பாஸ் ஆய்ட்டனும் சரியா?” என்றவனின் பேச்சில்

அவள் நாணமுற்று..

 

“அச்சோ..!” என்று அழகன் வாயை பொத்தினாள். 

 

“புருஷன் பக்கத்துல இருக்கும்போது இப்படித்தேன் வாய மூடுவாங்களா? தப்பு பொம்மா ரொம்ப தப்பு.. எப்படி மூடனும் தெரியுமா? இப்படி..” என்றவன் அவள் உதட்டை கவ்வினான். ஒரே நொடியில் படக்கென தன் உதட்டைப் பிடுங்கினாள்.

 

“போதும் னா”

 

“முத்தம் குடுத்தா ஆயுள் கூடுமாம். ஒரு ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.. எனக்கெல்லாம் உன் கூட ரொம்ப வருஷம் வாழனும் டி பொம்மா”

 

“அட ரங்கநாதா..! இதெல்லாமா ஆய்வு செய்வாங்க..” என்று யோசித்தவள் கள்ளழகனின் கள்ள புன்னகையில் அவனை சரியாக கண்டுகொண்டாள் கள்ளி.

 

“பொய் சொல்றேள்.. போங்கோ.. போங்கோ‌‌.. சும்மா..” முத்தமிட வந்த அவன் முகத்தில் கை வைத்து பின்னால் தள்ளிச் சிரித்தாள். 

 

“இப்படி ஆசையா வந்தவன தள்ளிவிட்டினா அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? கணவனுக்கு எப்படி பதிவிரதையா இருக்கணும்னு இதெல்லாம் நீ படிக்கலையா? கருட புராணத்துல கூட இதுக்கு தண்டனை இருக்காம்” என்றவன் விடாமல் அவள் இதழைத் தழுவ, அதனை தவிர்த்தவளின் பக்கத்தில் இருந்த கன்னத்தில் தன் உதடுகளை பதித்தவன் கழுத்தில் வந்து நிறுத்தினான்.

 

 

“ஆனாலும் னா.. உங்களைப் போல ஒரு ஆள நான் பார்க்கவே இல்லனா.. என்னமா உங்க தேவைக்கு ஏற்ப புராணத்தையும் வேதத்தையும் துணைக்கு அழைக்கிறேள்” என்று அவள் அதிசயத்து பார்க்க..

 

அவள் கழுத்தைச் சுற்றி வளைத்தான். அவளின் சதைப் பற்றான கன்னத்தை விரல்களால் அழுத்தியபடி அவளின் முகத்தை இழுத்து தன் முகம் அருகே வைத்துக் கொண்டவன், 

“இந்தக் கலை எல்லாம் சொல்லி வருவதில்ல.. தானா தெரியும் டி.. நம் இணை மீது காதலும் காமமும் மோகமும் முட்டு முட்ட இருந்தா..” என்றான் ஹஸ்கி வாய்ஸில்..!

அவன் மெல்ல அவள் உதட்டை உறிஞ்சி சுவைத்தான். அவள் கிறக்கத்துடன் கண் மூடினாள்.

மெல்ல அவளை திருப்பி பின்னிருந்து அணைத்துக் கொண்டவன் உதடுகளோ அவளின் பின் கழுத்தில் குட்டி குட்டி முத்தங்களை இட்டுக் கொண்டிருந்தன..

 

அவன் கைகளோ அவளின் இடையைத் தடவி மெதுவாக மேலே போனது. சுருண்டு கசங்கிய உடைக்குள் சென்று தன் லீலைகளை காட்டின்..! அவளை மெல்ல மெல்ல இன்பச் சிலிர்ப்பில் திளைக்கச் செய்து கொண்டிருந்தன..!

அவன் உதடுகள் அவளின் முதுகிலும் பிடறியிலும் முத்தங்களைப் பொழிந்தபடி அலைந்தன. அவனின் மூச்சுக் காற்றின் சீறல் அவள் உடலில் வெண்ணீர் ஆவியாய் பட்டது. அவளை இறுக்கியபடி மெல்ல கட்டிலில் சரிந்தவன், அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

மென்மையாய்.. வெம்மையாய்.. தாபமாய்.. மோகமாய்..!!

 

 

கூடல் முடிந்து அவள் அப்படியே அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவன் மேலே படர்ந்திருந்தாள்.

ஜன்னல் வழியா வந்த அந்த மதுரை மழைப் பருவக் காற்று அவர்கள் உடம்பைத் தீண்டினாலும், அவர்களுக்குள் இருந்த அந்தச் சூடு குறையவே இல்லை. அவளின் அந்தப் பால் போன்ற மேனியின் வாசனை அவனின் மூக்கைத் துளைக்க.. அவளோட அந்த இதயத் துடிப்பை அவன் தன் உடம்பு முழுக்க உணர… அவளை இன்னும் தன்னுள் பொதித்துக் கொண்டான்.

அப்போது வெளியே மழை பொழியும் சத்தம் மெல்லக் கேட்க ஆரம்பித்தது. 

இருவரையும் அமைதி பெரும் போர்வையாய் போர்த்திக் கொள்ள..

அந்தத் தனிமை..

அந்த அமைதி..

அதன் இனிமை..

அப்புறம் அவன் மேல் அவனின் தேவதை…

எல்லாம் சேர்ந்து அந்த ஒரு இரவை.. ஒரு கனவு போல தோன்றியது அழகனுக்கு..!

 

 

“என்னோட வாழ்க்கை இவ்வளவு அழகா காதலா மாறனும் நான் எதிர்பார்க்கவே இல்ல டி பொம்மா..! பொம்மா..!” என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் கூற..

 

 

ஆண்டாள் மெல்ல அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து

 

 

“ம்ஹூம்..! ஆண்டாள்.. இந்த அழகனின் ஆண்டாள்” என்றாள் காதலோடு..!

 

 

 

 

சின்ன சின்ன முத்தங்கள் இட்டவள், மறுபடியும் அவன் நெஞ்சுக்குள்ளேயே புகுந்துக் கொண்டா

ள். 

 

 

அந்த அறையின் இருட்டில் அவர்களின் அந்த நேசமும் காதலும் மோகமும் ஒன்றாய் கலந்து ஒரு அழகான தாம்பத்தியமாய் மாறியது..!

 

 

 

 

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top