மாயவன் - 3

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 3 days ago
Messages: 2
Thread starter  

திவ்யா ஆத்மியிடம், “ஹேய் ஆத்மி” என்று அவளின் தோளை தட்ட, சட்டென அந்த பெயரில் தான், படி ஏறப்போன விஜய் அப்படியே திடுக்கிட்டு நின்றான்.

 

“ ஆத்மியா?” என்று அவன் ஒரு கணம் திரும்பி பார்த்தான், அவன் பார்த்ததை மற்றவர்கள் பார்க்கவில்லை,

 

“ஹாங், என்னடி” என்று திவ்யாவிடம் திரும்பினால் ஆத்மிகா, 

 

“அது சரி ஃபிசிக்கலி ப்ரெசென்ட் மென்டலி அப்செண்ட்” என்று கூறினான் அஜய்.

 

“ஏன்டி இப்படி இருக்கிற, அண்ணா வந்தது கூட உனக்கு தெரியல” என்றாள்,

 

 “அண்ணாவா?”.. என்று அவள் கேட்க, “ஆமா பெரிய அண்ணா, விஜய் அண்ணா, அவர பார்த்தா தான் உனக்கு பயமே” என்று அவள் கூற,

 

“ ஓ விஜய் அண்ணாவா? வந்தாரா? என்று கேட்டாள், அவள் அண்ணா என்று அழைத்ததில் கேட்டுக் கொண்டிருந்த விஜய்க்கு ஒரு கணம் முகம் இறுகியது.

 

 மற்றவர்கள் அவளை குழப்பமாக பார்க்க, “ஹாங் ஆமாவா.. சாரிடி கவனிக்கல” என்று குழப்பத்துடன் சொல்லவும் அவளை அப்படி பார்த்த விஜய், “நான் ரூமுக்கு போறேன்” என்று அவளை கூர்ந்து பார்த்துவிட்டு மேலே ஏறி சென்று விட்டான்.

 

ஏனோ அவன் அப்படி பார்த்ததில் ஒரு கணம் பயம்தான் வந்தது, ஆத்மிகாவிற்கு,

 

“ நான் என்ன பண்ணேன், எதுக்கு இப்படி முறைக்கிறாரு, அவருக்கு ரெஸ்பெக்ட் பண்ணலன்னு முறைக்கிறாரோ?” என்று அதே பயம் இன்றும் இருந்தது, பள்ளி கல்லூரி நாட்களில் இருந்தது போலவே,

 

 ஆனால் அவன் முறைத்து சென்றதன் காரணம் அவன் மட்டுமே அறிவான்,அவளை இப்படி பார்த்ததிலிருந்து அவன் மனம் தவியாய் தவித்தது ஏன் இப்படி இருக்கிறாள் என்று..

 

“என்னாச்சு ஏன்மா இப்படி இருக்க?” என்று தயக்கமாக கேட்டார் வாசுகி..

 

அவரின் அந்தப் பரிவு அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ அடைத்தது, வாமா போமா என்றெல்லாம் கேட்டு நாட்கள் ஆகிறதே ,நாட்களா வருடங்கள் அல்லவா ஆகிறது, அவள் எதுவும் சொல்லவில்லை, கண்களில் குளம் கட்ட ஆரம்பித்தது.

 

 அவ்வளவு நேரம் கடுகடுத்துக் கொண்டிருந்த அஜய்க்கு கூட ஏதோ பரிவாகப் பேசும்போது அவள் கண்கள் கலங்குவது புரிய, வார்த்தையினால் ரொம்பவே காயப்படுத்துகிறோமோ என்று நினைத்தவன்,

 

 ஆமா ஃபர்ஸ்ட் ரெஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட சொல்லுங்க, இங்கதான் இருக்கிறாங்க, பொறுமையா விசாரிங்க என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து உள்ளே சென்றான். 

 

அவன் அப்படி சொன்னதும், அவனுக்குத்தான் இங்கு வந்தது பிடிக்கவில்லை போல அதுதான் கடுகடு என்று இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு,

 

 ஆத்மிகா, “திவ்யா எனக்கு ஒரு ஹாஸ்டல், என்றதும்..”

 

“ அட என்னமா நீ, நாங்க எல்லாம் இருக்கிறோம் ,ஹாஸ்டல் ஹாஸ்டல் என்று சொல்லிட்டு இருக்க, சரி எங்க கூட தான் இருக்க பிடிக்கலைன்னாலும், உன்னுடைய பேரன்ட்ஸ் எங்கம்மா? அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்க?” என்று கேட்கவும் அதற்கும் கண்கள் தான் கலங்கியது.

 

 “அப்பா இறந்துட்டாரான்ட்டி” என்று சொன்னாள் அவள்,

 

“ என்னமா சொல்ற? எப்போ? என்று கேட்டான், அவள் ஒரு வருஷம் ஆகுது என்று கூறவும்,

 

“ தம்பி, எல்லாம்..? என்று விசாரிக்க, “எல்லாரும் மேரேஜ் ஆகி செட்டில் ஆயிட்டாங்க, அம்மா தம்பி கூட இருக்காங்க” என்று கூறினாள்.

 

 நீ இங்க வந்தது அவங்களுக்கு தெரியுமா என்று கேட்கவும், மேலே இருந்து விஜய்,

 

 மா ஃபர்ஸ்ட் ரெஸ்ட் எடுக்கட்டும், எதுவா இருந்தாலும் அப்புறமா கேளுங்க ,இப்பவே உட்கார வச்சு எல்லாத்தையும் கேட்டு என்ன பண்ண போறீங்க, காலைல என்ன இப்படி உக்காந்துட்டு பேசிகிட்டு இருக்காங்க எல்லாரும் போய் வேலையை பாருங்க என்றான்.

 

உடனே அனைவரும் ஹாலில் இருந்து எழுந்து கொண்டார்கள் விஜய்க்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் மட்டும்தான் குரலை உயர்த்துவான், அது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

தீபிகாவும் தன் கணவனுக்கும் அவன் அண்ணனுக்கும் ஆத்மி இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்று தோன்றியது,

 

 ஆத்மியிடம் வந்தவள், “இங்க பாருங்க, எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ண கத்துக்கோங்க, தைரியமா இருங்க, அழுக உங்கள பலவீனப்படுத்தக் கூடாது, நீங்க ஏதோ பெருசா சஃப்ர் ஆகி இருக்கீங்கன்னு எனக்கு தோணுது, நாங்க கேக்குற கேள்விகள் கூட உங்க காயங்களை அதிகப்படுத்தும்,

 அதனால நீங்க உங்க மனச கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க என்று ஒரு பெண்ணாக, சகத் தோழியாக ஆறுதல் சொல்லவும், 

 

“இஃப் யூ டோன் மைன்ட்” என்று மெதுவாக இழுத்தாள் ஆத்மி, தீபிகா சிரிப்புடன் அவளை அணைத்துக் கொள்ள, இறுக அணைத்துக் கொண்டாள்.

 

 கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தாரைதாரையாக வழிந்தது, இட்ஸ் ஓகே அவள் மிகவும் தவித்து இருக்கிறாள் என்று தோன்றியது, இதையெல்லாம் மேலே இருந்து விஜய்யும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவன் பார்வை கூர்மையாக ஆத்மிகாவின் மேலையே இருந்தது. 

 

சட்டென விலக்கியவள், “சாரி” என்றாள், “இட்ஸ் ஓகே மா” என்றவள், “ஃபர்ஸ்ட் ரெஸ்ட் எடுங்க, எதுவா இருந்தாலும் மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும் பொழுது தான் தெளிவா யோசிக்க முடியும், போய் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டு அவளும் உள்ளே சென்றாள் வாசுகி.

 

“ உன்ன பார்க்க எங்களுக்கு கஷ்டமா இருக்குடி, என்ன ஆச்சு, ஏன் டிவோஸ் பண்ற, ஆனா நீ இப்படி இருக்குறத பார்க்கும் பொழுது எனக்கு டிவோர்ஸ் சரின்னு தான் தோணுது, ஆனா என்ன ஆச்சு?” என்று மீண்டும் அவர் அதையே கேட்டார்.

 

டிவோர்ஸா என்று மனதில் ஒரு கேள்வி.

 

  “அம்மா அது தான் அண்ணா வேற கத்துனார் இல்ல, திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க, போய் வேலையை பாருமா, அவளே வந்து சொல்லுவா” என்றவள்,

 

“ வா நம்ம போலாம்” என்று அவளை அவளுடைய அறைக்கு அழைத்து சென்றாள்.

 

 இதையெல்லாம் விஜயும் மேலே இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான், அனைவரும் உள்ளே சென்றதும், 

 

“டிவோர்ஸ் பண்ண போறாளா?” என்று அவன் புருவம் யோசனையில் சுருங்கியது, பின்னர் ஏதோ ஒரு முடிவு எடுத்தவன் போல உள்ளே சென்று விட்டான்.

 

“உள்ளே வந்த திவ்யா, ஆத்மியிடம் சரிடி டிரஸ் கொண்டு வந்திருக்கல?” என்றதும்,

 

“ஹம்” என்றாள், பின்னர் அவளை மேலிருந்து கீழே பார்த்தவள் “என்னடி ஏன்டி, இப்படி இருக்க? உன்ன பாக்க பாக்க எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா,

 

 “சரி முடிஞ்சது பத்தி திரும்பவும் பேச வேண்டாம், பட் இனிமேல் ரொம்ப போல்டா இரு, டிவோஸ்ல ஸ்ட்ராங்க தானே இருக்க?” என்று கேட்கவும்,

 

“ அப்ளை பண்ணிட்டு தான்டி வந்து இருக்கேன், திரும்பவும் என்னால வந்து நரகத்துக்குள்ள போய் மாட்ட முடியாதுடி, அதுக்கு நான் செத்துருவேன்” என்று சொல்லவும்,

 

“ அடிச்சீ, உன்ன இந்த நிலைமையில் பார்த்து நானும் உன்னை விட்டுவிடுவேன் என்று நெனச்சியா?” என்றதும்,

 

“ ஆமா உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?” என்று அப்போதுதான் அவளை பார்த்தாள்.

 

ஹம் மேரேஜ் ஆயிடுச்சு மேடம், ஒரு பையன் இருக்கான், அவரு அவங்க அப்பா கூட ஒரு ட்ரிப் போய் இருக்கிறான். நான் அண்ணிய பாத்துட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன், இன்னிக்கு கிளம்பிடுவேன் என்று சொன்னது,

 

“ ஓ” என்று ஒரு சிறு புன்னகை, “பையனுக்கு எத்தனை வயசுடி என்று கேட்க, “நாலு வயசு” என்றாள் அவள்,

 

 “சந்தோஷம்டி” என்று தோழிக்காக சந்தோஷப்பட்டாள், “என்னைய விடு, சரி எதை நினைத்தும் குழம்பாத, போய் ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வா, தூங்கப் போறியா? ரெஸ்ட் எடுக்க போறியா?” என்று கேட்கவும் ,

 

“இல்லடி, பஸ்ஸிலேயே ஓரளவுக்கு தூங்கிட்டேன், அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் எனக்கு ஒரு வேலை வேணும்டி” என்றதும்,

 

“அடடா ரொம்ப பண்ணாதடி ,உன்னால நான் என் பையனை இங்க வர சொல்றேன் ,அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணினா உனக்கு நேரம் போறதே தெரியாது, நான் இன்னைக்கு வீட்டுக்கு போகலாம்னு நினைச்சேன்,

 

 பட் உன்ன பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு இங்க இருந்து போக மனசு வரல, பையனுக்கு லீவு தானே, அவர் வேணா இங்க வர சொல்றேன், நீ போய் ஃபர்ஸ்ட் குளிச்சிட்டு வா, மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று போனை எடுத்துக் கொண்டு, தன் கணவனுக்கு அழைக்க சென்று விட்டாள். 

 

குளித்து முடித்து வந்த ஆத்மிகா ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள், மிகவும் சோர்வாக உணர்ந்தாள்,

 

 உறங்கக்கூடாது என்றுதான் நினைத்தாள், இருந்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை, லேசாக படுத்தது தான், திவ்யா திரும்பி வந்து பார்க்கும் பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் ஆத்மிகா,

 

  இடையில் விஜய் வந்து பார்த்ததை ஆத்மிகாவும் அறியவில்லை, திவ்யாவும் அறியவில்லை.

 

“ஏய் ஆத்மி” என்று திவ்யா அழைக்க, யாரோ அவளை கனவில் அழைப்பது போல் இருந்தது, “ஏய் சனியனே எழுந்து தொலை, காபி வேணும்னு சொல்றேன், மகாராணி இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க, உன்ன என் தலையில வந்து கட்டி வச்சிருக்காங்க பாரு” என்று அவன் கணவன் திட்டுவது தான் அப்படியே எதிரொலிக்க ,

 

“இதோ வரேன்” என்று பயந்து போய் எழுந்து அமர்ந்தாள், தோழியைப் பார்த்ததும் தான் ஆசுவாசமானாள், 

 

அவள் பயத்தை பார்த்து திவ்யா, “என்னடி ஆச்சு?” என்றதும் சுற்றும் முற்றும் பார்த்து மூச்சு வாங்கியது, ஒன்னும் இல்லடி என்றாள்.

 

ஒரு பெருமூச்செறிந்த திவ்யாவிற்கு என்ன சொல்லி எப்படி விஷயத்தை வாங்குவது என்றும் தெரியவில்லை, அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றும் தெரியவில்லை, மிகவும் குழப்பமாக இருந்தது,

 

“ வா சாப்பிடலாம்” என்று அழைக்க, “சாரி டி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

 

“ரிலாக்ஸ்டி கொஞ்சமா அமைதியா இரு, அதெல்லாம் இல்லை, சாப்பிடும் நேரம் தான் என்று சமாதானப்படுத்தவும் முயன்றாள் திவ்யா,

 

“ ஆத்மி, திவ்யா” என்று வாசுகியின் குரல் கேட்க, “வா உனக்காக தான் வெயிட் பண்றேன், சாப்பிடலாம்” என்று கீழே சென்றார்கள்.

 

 ஒரு வெள்ளை நிற காட்டன் புடவையில் இருந்தாள், முன்பை விட இப்போது பரவாயில்லை என்று இருந்தது, வீட்டின் ஆண்கள் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு சென்றிருந்தனர்,

 

 அங்கிருந்த சோபாவில் தான் ஒரு ஜூம் மீட்டிங்கில் இருந்தான் விஜய் ,அவனுக்கு வெளியே ஒரு வேலை இருந்தது, அதற்கு செல்ல வேண்டும், அதை முடித்து விட்டு ஆபீஸ் செல்வான்,

 

அஜய் அன்று விடுமுறை எடுத்திருந்தான் குழந்தையுடன் நேரம் செலவழிக்க.. தீபிகா அஜய் குழந்தை என்று அவர்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர்

 

இவர்களெல்லாம் ஒருபுறம் இருக்க, திவ்யாவின் கணவர் சரவணன் அவர்களுடைய நான்கு வயது மகன் நவீனையும் அழைத்துக் கொண்டு வந்தார்,

 

 “உன்ன அங்க வர சொன்னா, ஃப்ரென்ட் வந்துட்டாங்கன்னு என்னை இங்கு வர வச்சுட்ட?” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

 

“கண்ணா” என்று திவ்யா மகனை அழைக்கவும், “மம்மி” என்று ஓடி வந்து அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான் நவீன், அவர்களை வாஞ்சையாக பார்த்தாள் ஆத்மிகா.

 

 இதையெல்லாம் மீட்டிங்கில் இருந்தாலும் அவ்வப்போது விஜயின் கண்கள் அவள் மீது தான் படிந்திருந்தது.

 

“என்னமா நீ தான் இவ ஃபிரண்டா , ஸ்கூல் ஃபிரண்டா காலேஜ் ஃப்ரெண்டா, எப்படிமா சமாளிச்சீங்க, என்னால முடியல” என்று அவன் இதமாக பேசினான். 

 

அவளுடைய தோற்றத்தையோ அல்லது அவள் வாழ்க்கையை பற்றியோ அவன் தரைக்குறைவாக பேசவும் இல்லை, கேட்கவும் இல்லை,

 

 ஒரு வேளை திவ்யா ஏதாவது சொல்லி இருப்பாளோ என்று நினைத்தாள், இருந்தாலும் அவள் அப்படி சொல்லியே இருந்தாலும் ,மனைவி சொல்வதைக் கேட்கும் கணவன் கிடைப்பது வரம் அல்லவா.

 

அவள் ஏதோ யோசனைகள் இருப்பதை பார்த்த சரவணன், “சரி நீங்க பேசிட்டு இருங்க” என்று அங்கிருந்து நகர்ந்தான் 

 

 “என்ன மச்சான், என்ன சொல்றாரு மாப்பிள்ளை” என்று குழந்தையின் அருகில் சென்றான் சரவணன்,

 

 அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, விஜய் பார்த்து என்ன பெரிய மச்சான் ஆபீஸ் போகலையா?” என்று சரவணன் விஜயிடம் கேட்க,

 

“ கிளம்பும், மீட்டிங்க்” என்று காட்டினான், “ஓ சாரி” என்று அவன் சென்று விட, அவர்களை எல்லாம் பார்க்க மனநிறைவாய் உணர்ந்தாள் ஆத்மிகா.

 

 ஆனால் விஜய்க்கு திருமணம் ஆகவில்லையா, “அவருடைய மனைவி எங்கே?” என்று கேட்க நினைத்தாள், யாரிடம் கேட்பது.

 

இவர்கள் எல்லாம் அவரவர் குடும்பத்துடன் இருக்கிறார்கள் , இவன் மட்டும் தனியாய் இருக்கிறானே, இவருடைய ஒய்ஃப் எங்காவது சென்று இருக்கிறார்களா” என்ற யோசனை அவளுக்குள்,

 

 அந்த நேரத்தில் தன்னிலை பற்றி மறந்து தான் இருந்தாள், திவ்யாவை சுரண்டினால், “என்னடி?” என்று அவள் கேட்கவும்,

 

“ உங்க பெரிய அண்ணாக்கு..” என்று மெதுவாக இழுத்தாள், “என்ன?” என்று அவளுக்கு புரியாமல் மீண்டும் கேட்க,

 

“ இல்ல விஜய் அண்ணாக்கு..” என்று மீண்டும் இழுக்க,

 

“ ஒன்னும் கேட்கலடி, பக்கத்துல தானே இருக்கேன், கொஞ்சமாவது கேட்கிற மாதிரி சொல்லு..” என்றாள் திவ்யா,

 

 “அதான் பெரிய அண்ணாக்கு கல்யாணம் ஆயிடுச்சா, அவங்க வைஃப் எங்க இருக்காங்க?” என்று மிகவும் மெதுவாக கேட்கவும், “அடியே” என்று அவளை முறைத்துப் பார்த்தாள் திவ்யா

 

நவீன் நான்கு வயது சிறுவன் என்றாலும் ஓரளவுக்கு புரிந்தது. “ஐயோ மம்மி ,ஆன்ட்டி விஜய் மாமாக்கு கல்யாணம் ஆச்சானு கேட்குறாங்க” என்றது சட்டென அனைவரின் பார்வையும் அவள் மீது பதிய, திக் என்று ஆனது.

 

 விஜய்க்கும் அப்போதுதான் அந்த மீட்டிங் முடிய அவனும் அவளை தான் பார்த்தா

ன். 

 

அவன் எழுந்து நின்றதும் பயத்தில் அவளும் படக்கென எழுந்து நிற்க, அடி மேல் அடிவைத்து அவன் அருகில் வந்து நின்றான் விஜய் மாயவன். 

 

வருவான்.

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top