தேன்மழை 💞 - (43)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 44
Thread starter  

"நான் வரலைனா.. வரல.. அவ்வளவு தான்.." என்றவள் அவனுக்கு பாராமுகம் காட்டி நிற்க, கரம் பிடித்து இழுத்து என்னவென வினவியவன் முகத்தை இயலாமையோடு ஏறிட்டாள்.

 

"லிசன் ராசிகா! நீ மேரேஜ் ஆனப்பிறகு நான் ஏதோ சொல்லிக்குடுத்து மாறிட்டன்னு யாரும் சொல்லிடக்கூடாது. அதுவும், அஸ்வத் அண்ட் பிருந்தா விருப்பத்துல தான் இந்த மேரேஜ் நடக்குது. அப்படியிருக்கும் போது, ஏன் நீ பாஸ்ட் பத்தி யோசிக்கிற?

 

எதையும் ஃபேஸ் பண்ண பழகிக்கோ. இனி அவங்க உன் அக்கா ஹஸ்பண்ட் அவ்வளவு தான். அதுனால பழசை யாரும் பெரிசா நினைக்க வாய்ப்பில்லை. நீ சோபால உட்காரு. நான் கிளம்பி வரேன்."

 

அவன் எளிதாக சூழ்நிலையை சமாளி எனக் கூறிச்சென்றாலும், அவளுள் உண்டான நெருடல் தான் ஏதேதோ யோசிக்க வைத்தது. இருப்பினும் போகாமல் இருந்தால், அன்னையின் மனம் வேதனை கொள்ளுமே என்னும் யோசனையோடே அமர்ந்திருந்தாள்.

 

அவனும் சிறிது நேரத்திற்கு பின் கிளம்பி வர, இயந்திரப்பாங்கில் அவனை பின்தொடர்ந்தாள்.

 

வழிநெடுக அவளிடம் நிலவிய பேரமைதியை கலைக்க அவனும் முயற்சித்து தோற்று போனது தான் மிச்சம்.

 

ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்திருந்தவள் முகத்தை எட்டிப்பார்த்தான். அவளது தேவையில்லாத குழப்பத்தை தெளிவுப்படுத்த நினைத்து பேச்சு கொடுக்க, அவள் வாய் திறவாத மௌனியானாள்.

 

இங்கு இவள் தான் இப்படியென்றால் பிருந்தாவும் எப்படி பிரதீஷை எதிர்கொள்ள போகிறோம் என்னும் சிந்தனையில் இருந்தவளை, அஸ்வத்தின் அழைப்பு சிந்தை கலைத்தது.

 

சுரத்தையின்றி அவள் குரல் ஒலிக்க, மறுமுனையில் மணவாளன் ஆகப்போகிறவன் சற்று உரிமையோடும், பதட்டத்தோடும் "என்னாச்சு டி?" என்றான்.

 

"நத்திங் அஸ்வத்.."

 

"ஏன் அப்பறம் வாய்ஸ் உள்ளேப்போகுது? என்ன திங்கிங்?"

 

"அது ஒண்ணுமில்ல.. நல்லா தான் இருக்கேன்.."

 

"சரி நல்லா தானே இருக்க.. அப்போ வெளியே வா மால் போலாம்.."

 

"ஸாரி.. நான் வரல.. கொஞ்சம்.."

 

"அப்பறம் ஏன் நல்லாருக்கேன் பொய் சொல்லுற?"

 

"நான் அப்பறம் பேசுறேன் அஸ்வத்.." என்றவள் பட்டென போனை வைக்க, அவனுக்கு தான் மனம் படாத பாடு பட்டது. இடைவிடாது அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும் அவளிடம் பதிலில்லை.

 

அந்நொடி தான் அவர்கள் வீட்டிற்கு ராணியும், கௌதமனும் வருகை தந்தனர். எல்லோரும் முகுர்த்த பட்டு எடுக்க கிளம்பிட, அவளை பற்றி மனம் குமைந்ததில் பிருந்தா வரலையா என கேட்டுவிட்டான்.

 

எல்லோரும் அடக்கப்பட்ட புன்னகையோடு அவனிடம் வரவில்லை என்றுரைக்க, அதையெல்லாம் ரசிக்கும் மனநிலை அவனிடம் இல்லை.

 

காரில் ஏறிய ராணி என்ன நினைத்தாரோ என்னவோ, பிருந்தாவை அழைத்துக் கொண்டு கடைக்கு வரும்படி கூற அவனுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

அவளும் வெளியேவரவில்லை என்று விட்டாள். போதாக்குறைக்கு, திருமணம் முன்பு தனியே பார்க்க பெரியோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். வழித்தெரியாது நின்றவனிடம், ராணி நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டு செல்ல அவனோ ஜெட்டாக அவள் வீட்டை நோக்கி பயணித்தான்.

 

"ராசிகா.."

 

".........."

 

"ராசிகா.."

 

"ம்ம்ம்.."

 

"விளங்கிடும்.. இப்படி போற வரை ம்ம்ம் சொல்லிட்டுருந்தா.. இதுக்கு ஏன் கார்ல வரணும்? பஸ்ல போயிருக்கலாமே.."

 

"போக வேண்டியது தானே.. நானா இப்போ அவ கல்யாணத்துக்கு போறேன்னு இப்போ ஒத்தைக்கால்ல நிக்கிறேன்?"

 

"பின்னே நானா நின்னேன்?" என்றவன் அவளைப்பார்த்து கண்களை சிமிட்டி சிரிக்க, அவளோ முறைப்பை காட்டி திரும்பிக் கொண்டாள்.

 

அவளது உள்ளங்கை பற்றிட நினைக்க கொந்தளித்து விட்டாள் அந்நொடியே.

 

"இதுக்கு தான்னு சொல்லிருந்தா நான் வந்துருக்கவே மாட்டேன் கார்ல. நீங்க நல்லா பஸ்லயே போயிருக்கலாம். எனக்கு இப்போ இந்த மூட்லாம் இல்லை. முடிஞ்சா அமைதியா வாங்க பிரதீஷ். இல்லை இங்கயே ஸ்டாப் பண்ணுங்க நான் வீட்டுக்கு போறேன்.."

 

'இப்போ நான் என்ன பண்ணுனேன்னு இப்படி பேசுறா? மூட் இல்லையா அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?' என நொந்தவன் பல்லைக்கடித்துக் கொண்டு ஸாரி என கேட்டுவிட்டு பாதையில் மட்டும் இலக்கானான்.

 

"பிருந்தா.. பிருந்தா.."

 

அவனது குரலில் அதிர்ந்து எழுந்தவள் கூடம் நோக்கி வர, அங்கு தான் நின்று கொண்டிருந்தான் நேர்த்தியான உடையில். அவனை எதிர்பாரதவள் அதிர்ந்து உறைந்து நிற்க, "ரெம்ப ஷாக் ஆக வேணாம் கிளம்புங்க கடைக்கு போலாம்.." என்றான் அவளிடம் வம்பிழுக்கும் நோக்கில்.

 

"நான் வரல.." என்றவள் அறைக்குள் நுழைய அவளை பின்தொடர்ந்தான்.

 

நுழைந்த வேகத்தில் அவள் பின்னால் திரும்பி பார்க்க, அவன் வருவதில் துணுக்குற்றவள் "அங்கேயே நில்லுங்க அஸ்வத்.." என்றாள் அதட்டலாக.

 

"ஏன் இங்க நிக்கனும்?"

 

"நில்லுங்கனா.. நில்லுங்க.."

 

"ஓஹ் கிளம்பி வரயா? வெயிட் பண்ணுறேன்.."

 

"நான் கிளம்பி வரல.. நில்லுங்க ஹாலுக்கு வரேன்.."

 

"நீ வர்றதா இருந்தா நான் ஹால்ல வெயிட் பண்ணுறேன். இல்லை.."

 

"இல்லை.." என்றவள் கேள்வி கேக்கும் நேரமே அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், அங்கிருந்த சேரில் விஸ்தாரமாக அமர்ந்துகொண்டு அவளை பார்த்து சிரித்தான்.

 

அதில் அவளோ ஏதேதோ எண்ணி விழிகளை உருட்டி அவனை காண, அவன் தான் குபீரென சிரித்து விட்டான்.

 

"ஏன்.. இப்போ சிரிச்சீங்க?"

 

"சும்மா.." என்றவன் விழிகளை ஒருசேர சிமிட்டிட, அதில் பெண்ணவள் அவன் விழிகளில் விழுந்து எழுந்தாள். அப்பார்வையும் அவனது அதிரடியான வருகையில் ஏற்கனவே உறைந்து இருந்தவள் இதயம் இப்போது முழுவதும் இயந்திரக்கோளாறு அடைந்தது.

 

அவளோ திருதிருவென விழிக்க, "பிருந்தா இங்க வாங்க.." என்றவன் அருகில் இருந்த நாற்காலியில் அமரக்கூற, மேலும் நெஞ்சை கவ்வியது பதட்டம்.

 

அஸ்வத் அவளை உறுத்து முகம் காண, பெண்ணவள் கதுப்புகள் இரண்டும் செம்மை பூசிக்கொண்டது.

 

"என்ன?"

 

"ஒண்ணுமில்லை சைட் அடிக்கிறேன்.."

 

"ரெம்ப முக்கியம்.."

 

"என் பொண்டாட்டியை சைட் அடிக்கிறது எனக்கு முக்கியம் தான்.."

 

அதில் அவளது மனதுக்குள் வீணையின் அதிர்வு. அதுவும், அந்த உரிமையின் குரலில் ஒருநொடி இமைக்க மறந்து அவனை காண, அஸ்வத் கண்ணடித்து சிரித்தான்.

 

சட்டென திரும்பியவள் முகம் சிரிப்பை பூசிக்கொண்டுள்ளது என அறிந்தவன், "என்னை பாத்து சிரிச்சா நானும் சந்தோஷப்படுவேன்ல.." என்றவனை நாணி கோணி கண்டவளை, மேலும் கண்ணடித்து வெட்கத்தில் ஆழ்த்தினான்.

 

"கிளம்பு டி போலாம்.."

 

"நான் வரல.."

 

"ஏன்?"

 

"ப்ளீஸ் அஸ்வத்.."

 

"அதான் ஏன்?"

 

"நான்.. வரல.. அதுக்கு மேல கேக்காதீங்க.."

 

"ஓகே அப்போ நீ வரல.. சரி நான் கிளம்புறேன்.."

 

அவனும் விடைபெறுகிறேன் என்று கூற, அதற்கும் பதில் கூறாது மலங்க மலங்க விழித்தவளை கேள்வியாக பார்த்திருந்தான்.

 

"அதான் வரல சொல்லிட்டியே கிளம்புறேன் பிருந்தா.." என்றவன் விடுவிடுவென நடை போட அழைத்தாள் மனதில் உள்ளதை கொட்டிடவே.

 

சட்டென திரும்பியவன் அவளை என்ன என்பது போல் காண, "அஸ்வத்.. எனக்கு  கில்டி ஃபீலிங்கா இருக்கு.." என்றாள்.

 

அவள் குரலில் தெரிந்த நடுக்கத்தை உணர்ந்தவன், "ராசிகா அண்ட் அவ ஹஸ்பண்ட்டை ஃபேஸ் பண்ண யோசிக்கிறயா?" என பட்டென கேட்டு விட்டான்.

 

அதில் அவள் மௌனம் சாதிக்க, "அதுல என்ன உனக்கு பிராப்லெம் பிருந்தா?" என்றான்.

 

"அவளுக்கும் எனக்கு நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் மேரேஜ் அப்பறம். அவ பேசுன விதம் இப்படியொரு தங்கச்சி.." என்றவள் குரல் தொண்டையில் அடைப்பட்டவாறு, விழிகளில் வழிந்தோடியாது கண்ணீர்கோடுகள்.

 

"அதுக்காக அவ உன் தங்கச்சி இல்லைன்னு ஆகிடுமா?"

 

அதில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டவள் விழிகளில் சொல்லொண்ணா வலிகள். அதோடு அவன் மீதும் கோவம் கொடி போல் படர்ந்தது அனல் மூச்சாக.

 

"அஸ்வத்.. கிளம்புங்க.."

 

"பிருந்தா.. நான் என்ன சொல்ல வரேன்னு கேளு.."

 

"ஒன்னும் கேக்க வேணாம் கிளம்புங்க.."

 

"பிருந்தா.. என்னை பேச விடேன் டி.."

 

"முதல டி சொல்லுறதை விடுங்க.."

 

"சரி பிருந்தா சொல்லல. ஆனால், நான் சொல்லுறதை கேளு ஒன் செகண்ட்.."

 

"எப்படி உங்க சிஸ்டர் ஃப்ரண்ட்ன்னு சப்போர்ட் பண்ணுறதையா?"

 

"உனக்கு அவ மேல என்ன கோவம்?"

 

"எனக்கு அதெல்லாம் எக்ஸ்பிளைன் பண்ண டைம் இல்லை இப்போ.." என்றவள் விடுவிடுவென அறை நோக்கி செல்ல, சற்றே அதிகாரமாக அழைத்தான்.

 

"உன் புருஷனா இருந்து கேட்டாலும் சொல்ல மாட்டியா?"

 

அதில் அவள் நடை தளர, சடீரென அவனை திரும்பி பார்த்தாள்.

 

அவனிடம் மனதில் உள்ளதை கூறிவிடு என்னும் முகபாவனை. அவளோ வேண்டாம் என விலகிட நினைக்க, அவன் விழியால் இறைஞ்சியதில் கொட்டி விட்டாள் ஆற்றாமையாக.

 

"அன்னேக்கி மேடையில வீட்டுல சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிட்டு போனவ, மேரேஜ் அப்பறம் எப்படி நீ என் புருஷனை அப்படி பேசலாம்ன்னு கேக்குறா. இப்போ வந்த புருஷனை விட அக்கா முக்கியமில்லையா அவளுக்கு?

 

இல்லை.. அவளையும் என்ன சொல்லி மனசை மாத்தி பேச வச்சான் தெரியல. அவ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் முகத்துல முழிக்காத அளவு இருக்கு இப்போ வரை. யார் வேணாலும் மறக்கலாம் என்னால இதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. முன்னே பின்னே தெரியாத ஒருத்தனுக்கு வக்காளத்து வாங்கிட்டு, என்கிட்ட சண்டைக்கு வர்றா.."

 

"பிருந்தா அவ புருஷன் கேக்க சொல்லி கேட்டா, கேக்கல இது நமக்கு தேவையில்லையே.."

 

"அப்போ கொஞ்சம் என் நிலைமையை யோசிச்சு பேசணும்ல.."

 

"நீயும் அவ நிலைமையை யோசிச்சு பேசணும்ல டி.. ஸாரி ஸாரி அகைன்.."

 

"நான் என்ன யோசிக்கணும்?"

 

"ம்ம்ம்.. அவ மனசுல என்ன இருக்குன்னு?"

 

"அதை நான் ஏன் யோசிக்கணும்?"

 

"உன் நின்னு போன கல்யாணத்தை பண்ணிட்டது அவ தானே.. அப்போ நீ தானே யோசிக்கணும்.."

 

அவனது வார்த்தையில் உள்ள அழுத்தமும், முகத்தில் ஜிவுஜிவுத்த கோவம் கண்டு அதிர்ந்து போனாள்.

 

"அவ யாரையோ லவ் பண்ணுறதா என்கிட்டே சொன்னா. உன் மேரேஜ் முடியவும் வீட்டுல பேசணும் கூட சொன்னா. அப்படியிருக்கிறவ அந்த நொடியில மேரேஜ் பண்ணி குடும்ப மானத்தை காப்பாத்துனான்னு யோசி.."

 

இதயம் முன்பை விட பலமாக அடித்துக் கொண்டது.. கோவத்தில் அல்ல! குற்ற உணர்வில்..

 

தன்னால் அவள் வாழ்க்கை அடமானம் வைக்கப்பட்டு விட்டதோ என்னும் நெருடலில். தனது முட்டாள் தனத்தையும், சில நேரங்களில் முன் கோபியாக இருப்பதை நினைத்து இன்று கதறினாள்.

 

"ஸாரி அஸ்வத்.. எனக்கு இது நிஜமா தெரியாது.. தெரிஞ்சிருந்தா.. நிச்சயம் நான் கல்யாணத்தை கெடுத்துருக்க மாட்டேன் கண்டதை பேசி.. அவளுக்கும் யாரு மேலயோ லவ் இருந்துருக்கு.. அதை புரிஞ்சுக்காம என்னால.." என்றவள் கேவி அழ, அவளை பட்டென அணைத்து சமன் செய்தவன் நெஞ்சில் ஒன்றி போனாள் மன்னிப்பை யாசித்தவளாக.

 

சிலருக்கு மட்டுமே அவள் காதலித்தவனை கரம் பற்றினாள் என்ற உண்மை அறியும். ஏன் அதை கூற வேண்டுமென கூறாமல் இருந்து விட்டனர். அவள் மேல் இருந்த தவறான எண்ணம், அஸ்வத் அவள் காதலன் யாரென அறியாது கூறிய விடயம் மீண்டும் அன்பை துளிர்விட வைத்தது.

 

இரண்டு நாட்களுக்கு பின்..

யாதவ் கெஸ்ட்ஹவுசில் தான் வந்த இரு நாட்களாக தங்கியிருந்தனர் பிரதீஷ் மற்றும் ராசிகா. இன்று காலையில் அருகில் உள்ள முருகன் கோவிலில் திருமணம். கிளம்பும்போது இருந்த கலக்கமோ நெருடலோ இப்போது அவளிடம் இல்லை.

 

அவள் மனதை புரிந்து கொண்ட பிருந்தா, அன்று தங்கையிடம் அவள் நலனையும் கணவன் நலனையும் மேலோட்டமாக குசலம் விசாரித்து விட்டு, மன்னிப்பை யாசித்தாள். இதனை தொலைவில் இருந்து பார்த்த பிரதீஷின் கண்களில் தான் மலையின் வியப்பு.

 

அக்கா தங்கையிடம் இருந்த பிரிவு நேரில் கண்டதும் காற்றாக கரைந்து விட்டதே என பெருமிதம் கொண்டவன், ராசிகாவை எண்ணியும் நெகிழ்ந்து போனான்.

 

ஆனால் பிரதீஷ், மாமா அத்தையை தவிர எல்லோரிடமும் சம்பிரதாயமாக புன்னகைத்து பேசிக்கொண்டான். வரும் வரை வழக்கிட்டவள், இப்போது அவனது விலகளை கண்டு அவளுக்கு தான் உறுத்தலாக இருந்தது. தன்னை அழைத்துக் கொண்டு வர பிடிவாதம். செய்தான்.

 

இன்னும், அவன் யாரோடும் ஒட்டுதலின்றி இருப்பதை உணர்ந்தவள் தான் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பலாம் என்றாள்.

 

அதன்பின்பு அவள் முறுக்கிக் கொண்டு மல்லுக்கு செல்லவில்லை. மௌனமாக தான் இருந்தாள். 

 

காலை சுப வேளையில் அஸ்வத் மற்றும் பிருந்தா திருமணம் முருகன் கோவிலில்  முடிந்தது. ஊரார் வாய்க்கு அவலாக இருந்த பிருந்தா வாழ்க்கையும் இப்போது தெளிவு பெற்ற நிம்மதியில், கௌதமன் இரு மருமகன்களையும் கண் குளிர கண்டு மெச்சி போனார்.

 

அவளும் அஸ்வத்தை அக்காவின் கணவன் என்னும் பாங்கில் மட்டுமே பார்த்து பேசினாள்.

 

ஆர்த்திக்கும் அவள் மீதிருந்த கோவம் மாறிவிட்டது. திருமண முடிந்த சந்தோஷத்தில் எல்லோருமே பழைய விடயங்களை மறந்து, சம்பிரதாய சடங்கில் மூழ்கினர்.

 

வீடு வந்த சேர்ந்த புதுமணத்தம்பதிகளுக்கு சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி அடுத்தடுத்த சடங்கு சம்பிரதாயங்களை செய்ய, அதற்குள் பூதாகரமான சேதி பிரதீஷ் போனை வந்தடைந்தது. இருவரும் உடனே கிளம்பி விட்டனர்.

 

அவர்களது புதுவீட்டில் மாடம் கட்ட கட்டிட ஆட்கள் வந்திறங்கி விட்டு, சதாசிவத்திற்கு போன் செய்தனர். அவரோ, தாங்கள் யாரையும் இப்பணியை செய்ய சொல்லவில்லை என்க, வேலையாட்களோ மேஸ்திரீ சொல்லி தான் இங்கு வந்தோம் என்றனர் தீர்க்கமாக.

 

அவர் யார் இந்த முகவரி குடுத்து தங்களை வரச்சொல்லியது என வினவ, மேஸ்திரீ என்றார் ஒருவர். அவருக்கு அழைக்க, மேஸ்திரீயோ சண்முகம் அவர்கள் பெயரைக் கூற அதிர்ந்து போனார் சதாசிவம்.

 

அவர் காணாமல் சென்று பல நாட்கள் ஆகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் அவர் பெயரைக் கேட்டதும், சதாசிவம் நடுங்கி எழ; மேஸ்திரீ மீண்டும் அவர் தான் இவ்வேலையை பார்க்க உத்தரவிட்டார் என்றார்.

 

அதன்பின் கட்டிட ஆட்களும் வீடு திறந்திருந்தில் பின்புறம் தோட்டத்தில் உள்ள ஒரு இடத்தில், லாரியில் வந்த சிமின்ட் மணலை உள்ளே இறக்கி விட்டு பணியை தொடர போன நேரம் சாவித்திரி பாட்டி மற்றும் சதாசிவம் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

சாவித்திரி பாட்டி கணவனை கண் மண் பாராது திட்ட, அவர்களோ எல்லாம் சரி தான் என்று விட்டு இறுதியாக குழந்தைக்கு மாடம் அமைத்து வழிபடுவதில் என்ன குறை என மீண்டும் ஆரம்பித்த இடத்திலே வந்து நின்றனர்.

 

அதில் சதாசிவம் மற்றும் வேலையாட்களுக்கு கைகலப்பு உண்டான போது தான், பாட்டி பிரதீஷ் மற்றும் ராஜீவிற்கு அழைத்தார்.

 

மூவரும் அவ்விடம் வந்து சேர சில நிமிடங்கள் ஆனது. அவர்கள் வந்த நேரம், சண்முகம் அங்கு நின்று கொண்டு மகன் மற்றும் மனைவியிடம் தீவிரமாக வழக்காடிக் கொண்டிருந்தார்.

 

தப்பி ஓடியவர் வந்ததில் சதாசிவம் தந்தையை தாக்க முயல, அவரை போராடி தடுத்துக் கொண்டிருந்தார் சாவித்திரி.

 

அவர் தான் இக்காரியத்தை செய்ய சொன்னது என்ற போது எவரும் நம்பவில்லை. ஆனால், அவரே நேரில் வந்திட, இருவருக்கும் கொலைவெறி கோவம் உண்டானது. மகன் தந்தை என பாராது அறைந்ததோடு, மரியாதையின்றி பேசினார்.

 

அவரும் பதிலுக்கு தவறெல்லாம் தன் மீது தானே. இந்த ஒரு பிராயச்சித்தம் வேண்டுமென கேட்க, முகத்தை பார்த்தப்படி தரையில் காரி உமிழ்ந்தார் சாவித்திரி.

 

வந்த பேரன்கள் இருவரும் தாத்தாவை தாக்க முற்பட, சாவித்திரி பாட்டியோ செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது என்றதில், இருவரும் அவரை இங்கிருந்து வெளியேறுப்படி எச்சரிக்கை விடுத்தனர்.

 

அவரோ மீண்டும் இந்த ஒரு காரியத்தை செய்ய அனுமதி கேட்டு மன்றாட, ராஜீவ் அன்று அவனுக்கு அவர் போதித்த பாடத்தை இப்போது தாத்தாவிற்கு நக்கலாக எடுத்துரைத்து நியாபகப்படுத்தினான்.

 

அதற்கு பிரதீஷும் இப்படியெல்லாம் பேச தாம் என்ன ஒழுக்கசீலனா என கேட்டு அவனும், அவரை அடிக்க பாய சாவித்திரி பாட்டி பேரன்கள் இருவரையும் முடிந்த வரை போராடி தடுத்தும் மீறி வாய்ப்பேச்சும் கைகலப்பும் முற்றியது.

 

இறுதியில் தாம் வெளியேறா விட்டால் தான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று அவர் உச்சபட்ச கோவத்தில் எச்சரிக்கை விடுக்க, சண்முகம் அவர்களோ தன் எண்ணம் ஈடேறாது போனதில் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வெளியேறினார்.

 

தார்ச்சாலை இல்லாத ஒருவழிப்பாதையில் அவ்வளவு வேகமாக வந்தது மிகப்பெரிய லாரி. வீட்டினரும் அதனை கவனியாது, சண்முகம் அவர்களை அள்ளித்தூற்றிக் கொண்டிருந்தனர்.

 

வேகங்கொண்டு வீசியதொரு புயல் காற்று. அதில் தள்ளட்டமாக நின்றப்படி, கடந்து செல்லும் அவரை நஞ்சாக பார்த்திருந்தனர். ராஜீவ் அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டுமென நினைத்தவன், யாருக்கோ போன் செய்த நேரம் கண்முன் அந்த அசம்பாவிதம் கோரமாக நடந்தேறியது.

 

வேகமாக வந்த லாரி சண்முகம் அவர்களை இடித்து தூக்கி வீசி செல்ல, ராசிகா மற்றும் ராஜீவ் அதனை கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

 

சதாசிவம் என்ன இருந்தாலும் அப்பா என்னும் பந்தத்தில் விழுந்தடித்து அவரை காண ஓட, கல் இடறி கீழே விழுந்ததில் இடுப்பில் பலமான அடி. ராஜீவ் அவரை தூக்கிட செல்ல, மற்றவர்கள் பதறியடித்து அவரை காண சென்றனர்.

 

தலையில் வடியும் ரத்த வெள்ளத்தில் குப்பிற படுத்திருந்தார். பிரதீஷ் அவரின் நிலை கண்டே, இறந்து விட்டார் என்று அவனது பாட்டி தோளை ஆதூரமாக பற்ற, அவரோ மாரில் அடித்துக் கொண்டு அழுதார்.

 

சிலரது தலைகீழ் ஆட்டம் மரணத்திலும், பெரும் அடியையும் உண்டாக்கி விட்டது. ஆனால் வருத்தம் என்னவோ அதனை நேரில் காணும் குடும்பத்தாருக்கே. அப்படி தான் அவர்கள் நிலையும் ஆனது.

 

காதலுக்காக கொலை செய்தனர் ஒன்று சேர்ந்து. இன்று அந்த ஆன்மா ஏதோ ஒரு விதத்தில் பழி தீர்க்க, அவரின் மரணமோ எல்லோரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்தது.

 

எங்கு கொலை செய்தனரோ அதே இடத்தில் அவரும் மரணித்திட, அதற்கு உடந்தையாக இருந்த சதாசிவத்திற்கு இடுப்பில் பலமான அடி ஏற்பட்டது.

 

தேன்மழை💖💖

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top