வஞ்சகன் - 8

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 8

 

காலையில் தூங்கி எழுந்து சோம்பல் முறித்த சயந்தன் முன்பாக நின்றிருந்தனர் கெளதமும், சந்தோஷூம்.. 

 

‘என்னடா இது?.. ராமனும்.. லக்ஷ்மணனும் நம்மளை தேடி வந்திருக்காங்க.. ஒரு வேளை சீதா தேவியை காட்டுக்குள்ள போய் விட்ட மாதிரி.. நம்மளையும் இந்த வீட்டை துரத்தப் போறாங்களா?..’ நினைத்து முடிக்கவில்லை.. 

 

அதே வார்த்தை அச்சரம் பிசகாமல் வெளிவந்தது கெளதமின் உதட்டில் இருந்து.. 

 

“இந்த வீட்டை விட்டு வெளியே போடா” என்றார் கெளதம்.. 

 

‘அப்பாஆஆஆ… அப்பாஆஆஆ..’ என முகத்தில் மூன்றாம் பிறை கமல் போல் ஒரு எக்ஸ்பிரஷனைக் கொண்டு வந்தவனைக் கண்டு கடுப்பாயினர் கெளதமும், சந்தோஷூம்.. 

 

“டேய்ய்ய்.. வெளியே போடாஆஆஆ..” என அதட்டல் குரலில் சொன்னார் சந்தோஷ்.. 

 

“என்ன சித்தப்பூ.. நீங்களுமா?..” என நக்கல் குரலில் கேட்டவனைக் கண்டு நரநரவென பல்லைக் கடித்தார் சந்தோஷ்.. 

 

நேற்று யாதிராவை அப்படியொரு நிலையில் பார்த்ததில் இருந்தே அண்ணன், தம்பி இருவரும் எந்த வித பாகுபாடுமின்றி எடுத்த முடிவு தான் சயந்தனை வீட்டை விட்டு வெளியேற்றும் நிகழ்வு.. 

 

“இங்கே பாரு சயந்தா.. நீ என் அண்ணன் பையன்தான். உன் மேல அன்பு, பாசம் எல்லாமே இருக்கு.. ஆனா என் பொண்ணா, நீயான்னு வரும் போது.. என் பொண்ணு தான் எனக்கு உசந்து நிக்குறா.. நீ அவளை தங்கச்சியைப் பார்த்தா எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.. ஆனா நீ அவளைய்ய்ய்..” என்றவர் வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டார்.. 

 

ஏனோ அந்த வார்த்தையை சொல்லக்கூட அவருக்குப் பிடிக்கவில்லை.. 

 

“ஓஹ்.. அப்போ நான் இந்த வீட்டை விட்டுப் போனா தான் நிம்மதியா இருப்பீங்க.. அப்படித்தானே..” என்றான் சயந்தன்.. 

 

ஆமா.. ஆமா.. என இருவரும் ஒன்று போல் கோரஸாக சொல்ல.. 

 

“அப்போ நான் கண்டிப்பா போகமாட்டேன்..” என மறுபடியும் குப்புற படுத்துக் கொண்டான் சயந்தன்.. 

 

“அடப்பாவி.. டேய் மரியாதையா வீட்டை விட்டு வெளியே போடா.. இப்போ நீ போக போறியா? இல்ல வாட்ச்மேனை விட்டு கழுத்தை புடிச்சு வெளிய தள்ளட்டுமா?..” என்றார் கௌதம் சற்று கடுமையான குரலில்.. 

 

அவர்களின் அதட்டல் குரலில் வலதுகைக்கு தலைக்கு கொடுத்து பள்ளிக் கொண்ட பெருமாளைப் போல் படுத்திருந்தவன், எதிரில் நின்றிருந்த தன் தகப்பனையும், சிறிய தகப்பனையும் சிறு நக்கல் புன்னகையுடன் பார்த்தான் சயந்தன்.. 

 

“ஓஹோ.. என் மேல கை வைக்கிற அளவுக்கு உங்க வீட்டு செக்யூரிட்டிக்கு அவ்வளவு தில்லு இருக்கா.. எங்கே?.. நீங்க உங்க வாட்ச்மேனை வர சொல்லுங்க?.. எப்படி என் மேல கை வைக்கிறார்னு நானும் பார்க்கிறேன்..” என்றான் சற்று தோரணையாக 

 

இவனிடம் இப்படி பேசி ஜெயிக்க முடியாது என திட்டவட்டமாக புரிந்தது சந்தோஷிற்கு.. 

 

“இங்கே பாரு சயந்தா?.. நீ என்னதான் சொன்னாலும் நீ பண்றது பெரிய பெரிய தப்பு.. சின்ன பொண்ணுடா யாதிரா.. அவளைப் போய் பூஞ்ஜாடியை வச்சு அடிச்சிருக்க?.. எப்படி வலியில அழுதா தெரியுமா?..” என்ற கெளதமை ஓரக்கண்ணால் பார்த்தவன்,  

 

“ய்யார்ரு.. ந்ந்நான்ன்ன்.. அவளை அடிச்சேன்.. அதை நீ பார்த்த?..” என்றான கெளதமை அலட்சியமாக பார்த்தபடி, 

 

“ஆமா நீ தான் அடிச்ச?.. வேறு யார் யாதிராவை அடிக்க போறா?.. உனக்கு தான் கோபம் வந்துச்சுன்னா கண்ணுமண் தெரியாம வருதே..” என்ற சந்தோஷை பார்த்து, இடவலமாக தலையாட்டினான்.. 

 

‘அடப்போங்க ய்யா, உங்களோட போராட எனக்கு தெம்பில்லை..’ என தலையணையில் முகம் புதைத்தான் சயந்தன்..  

 

“தூங்காம எந்திரிச்சு வெளியே போடா?..” என்ற கெளதமை சலிப்பாக பார்ததான்.. 

 

“இப்போ என்ன வேணும்?.. உங்க ரெண்டு பேருக்கும்.. நான் இந்த வீட்டை வெளியே போகணும்.. அவ்வளவு தானே?..” என்றான் சற்று கலங்காமல்.. 

 

“ஆமாடா.. நீ இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்..” 

 

“நீ வெளியே போனா தான் யாதிரா சந்தோஷமா இருப்பா..” என இருவரும் மாறி மாறி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் நேரம் சைந்தனின் போன் அலறியது 

 

“ஹூ இஸ் த டிஸ்டபென்ஸ்..” என முணங்கிக் கொண்டே போனை எடுத்து காதில் வைக்க மறுமுனையில் இருந்தது என்னவோ பிரணவ் தான் 

 

“ஏண்டா… நான் ஒரு அசைன்மென்ட் கொடுத்தா அதை பத்தின கவலையே கிடையாது உங்க ரெண்டு பேருக்கும்” என்றார் எடுத்த எடுப்பில்.. 

 

அவர் சொன்ன ரெண்டு பேர் என்ற வார்த்தையிலேயே புரிந்துக் கொண்டார் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று..  

 

“இங்க பாரு மாமா எனக்கு எங்கேயும் வெளில வந்து எஸ்கார்ட் வேலை பார்க்கிறது எல்லாம் பிடிக்காது” என்றான் கத்தரித்தாற் போன்று பேச்சை முடித்து..  

 

“புரிஞ்சுக்கோடா.. அந்த பொண்ணுக்கு ஆபத்து இருக்கு..” என்றார் சற்று இறங்கிய குரலில்.. 

 

“அதுக்கு நான் என்ன பண்றது?.. அவ கூட நானும் சாகவா முடியும்?..” என்றான் எரிச்சல் கலந்த குரலில்.. 

 

“இங்கே பாருடா சயந்தா.. தமிழ்நாட்டிலேயே பெஸ்ட்டா ரெண்டு பேர் வேணும்னு கேட்டு இருக்காங்க.. அதனால தான் நான் உன்னையும் வாசுதேவனையும் ரெக்கமென்ட் பண்ணியிருக்கேன்.. அதுக்கும் மேல உன் இஷ்டம்.. வந்தா வா வராட்டின்னா அப்படியே ஏதாவது பாழாங்கிணறு இருக்கும்.. அதுல விழுந்து செத்துடு.. பல பேர் உயிர் பிழைப்பாங்க..” என புலம்பியபடி போனை வைத்தார் ப்ரணவ்.. 

 

அவரும் எவ்வளவு தான் அவனுடன் போராடுவது.. சில நேரத்தில் சலித்துப் போகிறார் மனிதர்..  

 

“சரி.. சரி.. ரொம்ப புலம்பாதே.. வர்றேன்.. ஏற்கனவே இங்க என்ன வீட்டை விட்டு துரத்த தான் செய்றாங்க.. பேசாம அங்கேயே வருவோம் ஏன் மாமா என் ரூமை எல்லாம் க்ளீன் பண்ணி வச்சிருக்கீயா?..” 

 

“எல்லாம் க்ளீனா தான் இருக்கு.. எப்படியும் கெளதமும், சந்தோஷூம் உன்னை வீட்டை விட்டு துரத்திடுவாங்கன்னு தெரியும்.. அதான் உன்னோட ரூமை க்ளீன் பண்ணிட்டேன்.. சீக்கிரம் வந்து தொலைடா நாயே..” என போனை வைத்து விட்டார் ப்ரணவ்..  

 

இவனைய்ய்ய.. கட்டி மாரடிக்கிறதுக்கு பேசாம பத்து எருமை மாட்டை கட்டி மேச்சிடலாம் போல.. ஷ்ப்பபாஆஆஆ.. சாவடிக்கிறானே” என புலம்பிக் கொள்ளவும் தவறவில்லை..  

 

போனை பேசி அணைத்துவிட்டு திரும்பியவன், தன்னெதிரில் நின்றிருந்தவர்கள் கண்கள் இடுங்க பார்ததான்.. 

 

“சரி கால்ல விழாத குறையா கெஞ்சி கேக்குறீங்க?.. அதனால நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்.. போதுமா?..” என்றான் சயந்தன் தன் கெத்தை அப்பொழுதும் விடாமல்.. 

 

“நீ இந்த வீட்டை விட்டு போனாலே போதும் ராசா.. எங்களுக்கு எல்லாமே சுபிட்சமா மாறிடும்.. போய் தொலைடா..” என்றார் கௌதம்.. 

 

பெத்த பையன் வீட்டை விட்டு வெளியே போறான்னு கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?..  

 

“எனக்கென்னமோ உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே, டவுட்டா இருக்கு..” என்றான் தாடியை நீவிக் கொண்டு, 

 

“என்ன டவுட்டு?..” என்றார் சந்தோஷ் சற்று புருவம் இடுங்க.. 

 

“ஒருவேளை என்னை வெளியே அனுப்பி வச்சிட்டு.. எனக்கு தம்பி, கிம்பி யாராவது ரெடி பண்ண போறீங்களா என்ன?..” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தார் கெளதம்.. 

 

“சீய்ய்ய். வாயை மூடுடா.. பெத்த அப்பா கிட்ட பேசுற பேச்சா இது?.. வெளிய போடா” என்றார் கௌதம் 

 

“என்னமோ சொல்றீங்க?.. நானும் போறேன்.. வரும்போது ரெண்டா இருந்தா ஓகே தான்.. மூணா மாறிச்சின்னா, ஒன்னும் பண்ண முடியாது..” என புலம்பிக்கொண்டே குளியல் அறைக்கு சென்றான் சயந்தன்.. 

 

“பாத்தீங்களா அண்ணா ?.. எப்படி பேசிட்டுப் போறான்னு.. கொஞ்சமாவது வெட்கம், மானம்.. ஏதாவது இருக்குதா பாருங்க” என்றார் சந்தோஷ் சற்று சிடுசிடுப்பாக.. 

 

“நீ விடு சந்தோஷ்.. பைத்தியக்காரனை பெத்து வச்சா.. இப்படித்தான்.. எதையாவது பண்ணிட்டுப் போகட்டும்.. வீட்டை விட்டு வெளியே போறானே அதுவே போதும்..” என்றார் கெளதம்.. 

 

குளித்து முடித்து டிப்டாப்பா வெளியே வந்தான்.. அவன் வெளியே வந்த நேரம் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.. 

 

“என்னடா நடக்குது இங்கே?.. ஒரே வட்ட மேஜை மாநாடு மாதிரி கூட்டமா இருக்கு..” என்றான் 5 பேர் மட்டுமே அமர்ந்திருந்த டைனிங் டேபிளை பார்த்தபடி.. 

 

“ஆமாடா.. நீ பெரிய அரசியல் தலைவன் பாரு.. உன்னோட பேச்சைக் கேட்குறதுக்காக மாநாடு போட்டு அமர்ந்திருக்கோம்.. பேசாம தின்னுட்டு வீட்டை விட்டு வெளியே போடா”.. என்றார் கௌத்தம் 

 

“என்ன நீங்க?.. அநியாயத்துக்கு என்ன வெளியில தள்ளுறதிலேயே குறியா  இருக்கீங்க?.. சம்திங் இஸ் ராங்க்.. எங்கேயோ இடிக்குதே..” என்றவன், வேண்டுமென்றே யாதிராவை இடித்துக் கொண்டு தான் அமர்ந்தான்.. 

 

“ஏன்டா?.. இப்பக் கூட அந்த பொண்ணை இடிக்காம உக்கார மாட்டியா?” என்றார் அஞ்சலி சற்று காட்டமாக..  

 

“என்ன மம்மி நீ?.. உன் பையன் உன் மருமகளை இடிச்சா குத்தமா?.” என்றவனை அதிர்ந்து பார்த்தார் அஞ்சலி 

 

“டேய்ய்ய்.. அவ எனக்கு மக முறை டா..” என்றார் சற்று கலக்கமாக..  

 

“ஏன் மருமகளா வர்றவளை நீ  பொண்ணா பார்த்துக்க மாட்டீயா?..” 

 

“எல்லாரும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க.. என்னைக்கு இருந்தாலும் நான் தான் இந்த வீட்டு பையன்.. நம்ம யாதி குட்டி தான் என்னோட பொண்டாட்டி..” என யாதிராவின் தட்டில் இருந்த சப்பாத்தியை உருட்டி அப்படியே வாயில் போட்டுக் கொண்டான் 

 

“என் ஆளு கைப்பட்ட சப்பாத்தி கூட மணக்குதுடா” என்றபடியே தண்ணீரை குடித்து விட்டு வேகமாக வெளியேறினான்.. 

 

என்னடா டிரஸ் ஏதும் எடுத்துட்டு போகலையா?.. என்றார் கெளதம்.. 

 

அவனை வீட்டை விட்டு துரத்துவதில் அவ்வளவு ஆர்வம்.. 

 

“அய்ய.. ரொம்பத்தான் பண்ற பெருசு நீ.. கிளம்புறேன்னு சொல்லிட்டோம்ல கண்டிப்பா கிளம்பிடுவேன்.. டிரஸ் எல்லாம் அப்பவே பேக் பண்ணி கார்ல வெச்சாச்சு” என்றபடி காக்கி ஷூவை எடுத்து மாட்ட ஆரம்பித்தான் சைந்தன்.. 

 

“நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகும் போது, ஒரு மாதிரிக்கு மனசுக்கு ரிலாக்ஸா பீலாகுது டா..” என்றார் அஞ்சலி.. 

 

“இருக்கும் மம்மி.. இருக்கும்.. நான் போனா ரிலாக்ஸா தான் இருக்கும்.. நான் திரும்பி வர 4 மாசம் ஆகும்.. அதுக்குள்ள ரெண்டாவது ரிலீஸாகிடாம பார்த்துக்கோ…” 

 

“ரெண்டாவது ரிலிஸா.. அது என்ன படம் டா?..” என்றார் அஞ்சலி அப்பாவியாக.. 

 

“ஹான்.. உன் புருஷன் கிட்ட கேளு.. அவர் சொல்லுவார்.. வரட்டுமா மம்மி.. வரட்டுமா பொண்டாட்டி.. வர்றேன் சித்தி.. உங்க ரெண்டு பேர் கூடவும் டூ…” என்றபடி வெளியே சென்றான் சயந்தன்.. 

 

வீட்டை விட்டு வெளியே வந்த சயந்தன் நேராக சென்றது என்னவோ ப்ரணவின் வீட்டிற்கு தான் ..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top