அத்தியாயம் 9
ஆயிற்று இன்றோடு சயந்தன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு மாதத்தினை கடந்து விட்டது..
சயந்தன் என்று வீட்டை விட்டு வெளியேறினானோ, அன்றிலிருந்து யாதிராவிற்கு விடுதலையும் கிடைத்தது.. வாசுதேவனுடனான கல்யாணத்தையும் நிறுத்தியிருந்தார் சந்தோஷ்..
சயந்தன் என்கின்ற எலிக்கு பயந்து தானே வீட்டைக் கொளுத்தப் பார்த்தது..
இப்பொழுதெல்லாம் சுதந்திர மூச்சுக்காற்றை சவாசித்தாள் யாதிரா என்று சொன்னால் மிகையாகாது..
ஆனால் அவளை நிம்மதியான மூச்சுக்காற்றை சுவாசிக்க விடவேண்டுமே மிஸ்டர் சயந்தன் அவர்கள்..
அவளுக்கென்றே பிரச்சினைகளை உருவாக்கி, அவளே அவனை தேடி வரும்படி செய்துக் கொண்டிருந்தான் அவன்..
சயந்தனுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தாள் யாதிரா..
“மேடம்..” என ஒருவன் சற்று பவ்வியமாக அழைத்தான்..
சயந்தன் கமிஷனர் அலுவலகம் செல்லும் போதே சொல்லி விட்டான் யாதிரா வருவதையும்.. அவளுக்கு சிறு மரியாதைக் குறையக்கூடாது என்பதையும்..
அனைவரின் பார்வையிலும், அவன் அவளின் தங்கை.. அதனால் தான் இந்த மரியாதை என்று தான் நினைத்தனர்..
ஆனால் அவனின் பார்வையில் அவள்.. தங்கையா?.. அப்படி நினைக்க முடியுமா அவனால்..
கனவில் கூட அப்படி ஒன்றை நினைத்துப் பார்க்க மாட்டான் அவன்..
மதிய வேளையில் வந்து காத்துக் கொண்டிருந்தாள்.. மாலை ஆகியும் சயந்தன் வரும் வழியை தான் காணவில்லை..
“ப்ச்ச்..” என சலிப்பாக நினைத்தாள்..
இப்படியே ஓடி விடலாமா?.. என உள் மனம் தவித்தாலும், இல்லை.. என் தந்தைக்காக நான் இருக்க வேண்டும் என கண்களில் நீருடன் அவள் அமர்ந்திருந்த கணம், மின்னல் வேகத்தில் ஏதோ அவளை கடந்து செல்வதைப் போன்று உணர்ந்தாள்..
எதுவோ? தன்னைத் தாண்டிச் சென்றதே அது என்ன?.. என நிமிர்ந்துப் பார்த்தாள்..
அவளைத் தாண்டிச் சென்ற புயல் வேறு யாருமல்லைங்க.. அவளின் பெரியப்பா பெத்த வேஸ்ட் பீஸூ தான்..
“என்ன மின்னல் வேகத்துல கடந்துட்டான்?.. இவன் கூட நடக்கணும்னா, நாம ஓடணும் போல..” என சலிப்பாக நினைத்துக் கொண்டே எழுந்து அவனின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து விட்டாள்..
ஆனால் நுழைந்த பின்பு தான் உணர்ந்தாள்.. ஏன்டா நுழைந்தோம் என்று,
“என்னடா நினைச்சிட்டு இருக்கான் அந்த கமிஷனர்… பெரிய மயி** அவன்.. ஹான்.. எவளுக்கோ பாதுகாப்பா போகணும்னு சொன்னான்.. இப்போ என்னடான்னா, அவ காணாம போயிட்டா.. அதுக்கு நான் தான் காரணம்னு சொல்லுறான். ******************” என காதில் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை வட்டத்துக்குள் வந்து நுழைந்தான் யாதிரா..
“ஏய்ய்ய்ய.. நீ எதுக்கு டி உள்ளே நுழைஞ்ச?..” என்றவனின் கர்ஜனையில் அதிர்ந்து விட்டாள் யாதிரா..
எப்பொழுதும் அவளிடம் அவன் கரிசனமாக பேசியதில்லை தான்.. ஆனால் இவ்வளவு கடினத்தையும் அவள் எதிர்பார்க்கவில்லை..
சட்டென்று பேசக்கூட அவளுக்கு வார்த்தை வரவில்லை.. பாவமாக ஒரு பார்வை பார்த்தாள்..
“ரூம் திறந்திருந்தா, நீ பாட்டுக்கு உள்ளே நுழைஞ்சிடுவீயா?.. வெளியே போடி..” என டேபிள் மேல் இருந்து பேப்பர் வெயிட்டை தூக்கிக் கொண்டு அவளை அடிக்கப் பாய்ந்திட, பயத்தில் நா உலர்ந்து விட்டது யாதிராவிற்கு..
“சார்.. சார்.. உங்க தங்கச்சி தானே சார்.. இவ்வளவு கோபப்படாதிங்க” என கான்ஸ்டபிள் ஒருவர், சயந்தனைப் பிடித்துக் கொள்ள..
“அரக்கன்..” என இதழோடு முணுமுணுத்தபடி வெளியே சென்றாள் யாதிரா..
அவள் முணுமுணுப்பை புரிந்துக் கொண்டவனுக்கு, அவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் மறைந்து, உல்லாச மனநிலைக்கு வந்திருக்கேன்..
“ஏய்ய்ய்.. நில்லு.. நில்லு..” என வாசல் வரை சென்றவளை சத்தமாக அழைத்தவன், மற்றவர்களைப் பார்க்க. அங்கிருந்த கான்ஸ்டபிள் அனைவரும் வெளியேறியிருந்தனர்..
“உட்காரு..” என்றவன், அவளுக்கு நேர் எதிராக இருந்த தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..
“என்ன மேடம் என்ன தேடி வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?..” என்றவனைக் கண்டு பல்லைக் கடித்தாள்..
அவனுக்கு நன்றாக தெரியும்?.. ஏன் வந்திருக்கிறாள் என்று..
“சொல்லுங்க மேடம்..” என்றாள் படு நக்கலாக,
“அப்பாவை அந்த கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வரணும்..” என்றவளின் விழிகளில் நீர் வழிந்துக் கொண்டேயிருந்தது..
“ஓஹோ.. உங்க அப்பனுக்கு தூதா வந்திருக்குறீயா?.. அதெல்லாம் வெளியே வர முடியாது.. உங்க அப்பன் ஜெயிலுக்குப் போகத் தான் போறான்..”
“ப்ளீஸ்.. எனக்காக எங்க அப்பாவை விட்டுருங்க..”
“உனக்காக நான் ஏன்டி, உங்கப்பனை விடணும்.. ஹான்.. நீ என்ன என் பொண்டாட்டியா?..” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் யாதிரா..
அவன் சுற்றி சுற்றி எங்கே வருகிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது..
இதற்காகத் தானா?.. என் அப்பாவை இப்படி பழி தீர்க்குறீயா?.. என நினைத்தவள், எதுவுமே பேசாமல் வெளியே செல்ல முயன்றாள்..
இங்கே பாரு.. நீ யாரை வேணும்னாலும் பாரு.. ஆனா உங்கப்பனை வெளியேக் கொண்டு வரவே முடியாது.. கண்டிப்பா உங்கப்பன் ஜெயிலுக்குள்ள தான் இருப்பான்.. இருக்க வைப்பேன்.. என வன்மத்துடன் கூறியவனின் கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொன்றால் என எண்ணும் அளவிற்கு வன்மம் தான் வந்தது யாதிராவிற்கு..
எதுவுமே பேசாமல் அமைதியாக தன் வீட்டிற்குள் வந்தாள்.. வீட்டின் வெளியே இருந்த தோட்டத்தில் அஞ்சலியும், மகாலெட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர்..
அவர்களைப் பார்த்தவளின் விழிகளில் நீர் கசிந்தது.. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்..
தன் அப்பாவின் சிக்கலைப் பற்றிக் கூறினால், இவர்கள் நிலை இப்படியா இருக்கும்..
வேகமாக தன் அப்பாவின் அறைக்குள் தான் நுழைந்தாள்..
அவரும் அவளுக்காகத் தான் காத்திருந்தாற் போல.. அவள் உள்ளே நுழைந்ததும், சட்டென படுக்கையில் இருந்து எழுந்து நின்றார்..
“பேசிட்டீயா.. யாது பாப்பா?.. என்ன சொன்னான் அவன்?.. உனக்காக என்னை விட்டுருவேன்னு சொன்னானா?..” என்றவரைக் கண்டு அமைதியாக நின்றாள் யாதிரா..
அவன் மறுத்து விட்டான் என தந்தையிடம் சொன்னால், தந்தை உடைந்து போவாரே, என தவித்துப் போய் தான் நின்றாள் யாதிரா..
“என்னம்மா சொன்னான்?. அவன் உனக்காக..” என இழுத்தபடி தன் மகளை தான் ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தார்..
“யோசிச்சு சொல்லுறேன்னு சொல்லியிருக்காங்க அப்பா..” என்றாள் சற்று நிதானமான குரலில்..
ஏனோ தன் தந்தையை வருத்திப் பார்க்க அவளுக்கு மனமில்லை..
“ஓஹ்.. சரி ம்மா..” என்றவர், தன் போனில் யாருக்கோ அழைத்தவர், தன் மகளை திரும்பிப் பார்த்தார்..
‘இங்கிருந்து வெளியே போ..’ என சொல்லாமல் சொன்னது அந்தப் பார்வை..
அந்தப் பார்வையின் தாக்கத்தில் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் யாதிரா..
அவள் வெளியேறி தன்னறைக்குள் சென்றவளுக்கு, சிறிதும் எதிலும் மனம் நிலைக்கவில்லை..
எப்படியாவது தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும்?.. தன் தந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது?.. என தீர்க்கமாக நினைத்தவள், இரவு உணவைக் கூட தவிர்த்து விட்டாள்..
மகாலெட்சுமியும், அஞ்சலி வந்து அழைத்துப் பார்த்தார்..
தலைவலி என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.. தன் தந்தையை பற்றிய வலி என அப்பொழுதும் பெண்ணவள் சொல்லவில்லை..
யோசித்தாள்.. ஏனோ உறக்கம் என்பதை மறந்து யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவொன்றை எடுத்தாள்..
அடுத்த நாள் காலையில் 6 மணிக்கே ப்ரணவ் வீட்டின் வாசலில் தான் நின்றிருந்தாள் யாதிரா..
காலையில் எப்பொழுதும் 6 மணிக்கு வாக்கிங் செல்வதற்காக எழுந்து வந்த ப்ரணவ்வீற்கு, வீட்டின் வாசலில் நின்றிருந்த யாதிராவைக் கண்டதும் திக்கென இருந்தது..
“யாதுக்குட்டி, நீ இங்கே என்ன பண்ற?.. அதுவும் இவ்வளவு காலையில?..”
“எனக்கு சயந்தனைப் பார்க்கணும்..” என்று மட்டும் தான் சொன்னாள்..
அவளின் முகத்தில் இருந்த ஒரு வித இறுக்கத்தைக் கண்டு அவரின் புருவங்கள் முடிச்சிட்டது..
“ஏதாவது பிரச்சினை பண்றானா?..” என்றார் சற்று அக்கறையான குரலில்..
“நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்..” என்றாள் முகத்தில் அடித்தாற் போன்று..
“என்கிட்ட என்ன பேசப்போற?..” என்ற கணீர்க்குரலில், வாசலை தாண்டி உள்ளே பார்த்தாள் யாதிரா..
ஜிம் செல்வதற்காக ஒரு பையை தோளில் மாட்டிக் கொண்டு நின்றிருந்தான் சயந்தன்..
அவனைப் பார்த்ததும், ஒரு வித எரிச்சல் உள்ளுக்குள் மண்டியது.. தன் முகத்தில் அந்த எரிச்சலைக் கொண்டு வராமல் இருப்பதற்கு சற்று தவித்து தான் போனாள்..
“நாம தனியா பேசலாமா?..” என்றாள் ப்ரணவ்வை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே..
“மாமோய்ய்ய்ய்.” என்பதற்குள், வாசலை நோக்கி நடையைப் போட்டிருந்தார் ப்ரணவ்..
ஏனோ யாதிரா இவ்வளவு காலையில் சயந்தனை தேடி வந்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
“உள்ளே வா..” என்றவன், தன் தோள் பையினை டேபிள் மேல் வைத்தவள், சோபாவில் சாய்வாக அமர்ந்தான்..
சிறிது நேர தயக்கம்… சிறிது நேரம் அழுகை.. சிறிது நேரம் விரக்தியான பாவனை.. என யாதிரா பல வித உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்..
சயந்தனும், தன் பொறுமையெல்லாம் ஒன்று திரட்டி அரைமணி நேரம் அமைதியாக இருந்து பார்த்தான்..
அதற்கு மேல் அவன் பொறுமை, எருமை மேல் ஏறி சென்று விட்டது..
டேபிள் மேல் வைத்த தோள்பையினை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முயன்றான்..
“எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ண சம்மதம்..” என்றவளின் வார்த்தையில், சயந்தன் உதட்டில் சிறு கேலிப் புன்னகை..
“என்ன சொன்ன நீ?..” என்றான்,தனக்கு கேட்கவில்லை என்பதை போல் ஒரு பாவனையில்..
சிறு தயக்கத்துடனே மீண்டும் அழுத்தமாக சொன்னாள்..
“எனக்கு உங்களைக் கல்யாணம் சம்மதம் சொன்னேன்..” என்றாள் எந்த வித கலக்கமும் இல்லாமல்..
“ஓஹ்.. சரி.. நாளைக்கு வடபழனி முருகன் கோவில்ல கல்யாணம் வச்சிக்கலாம்..” என்றவனை சற்று அதிர்ந்து பார்த்தாள் யாதிரா..
சத்தியமாக அவன் இவ்வளவு விரைவில் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவான் என எதிர்பார்க்கவேயில்லை..
“நாளைக்கா?..” என அதிர்ந்து கேட்டாள் தன் முட்டைக் கண்களை விரித்து,
“ஆமா.. நாளைக்குத் தான்..” என்றான் எந்தவித அலட்டலும் இல்லாமல்..
அவனிடம் என்ன பேசுவது என்றே அவளுக்குப் புரியவில்லை..
மீன் வலையில் சிக்கியாச்சு.. இனி வித்தாலும் சரி தான்.. இல்லை கண்ணாடித் தொட்டியில் போட்டு தன்னை வளர்த்தாலும் சரி தான்.. என்று தான் உள்ளம் தவித்தது..
எதுவுமே பேசாமல் மெளனமாக வீட்டை விட்டு வெளியேறினாள்..
“நாளைக்கு வந்திடுவ தானே..” என்றான் சற்று சந்தேகக்குரலில்..
“ஆமா..” என்றாள் மெல்லியக் குரலில்,
“அப்புறம் வரும் போது தனியா வராதே.. உன் பாசக்கார கும்பலையும் சேர்த்து அழைச்சிட்டு வந்திடு.. முக்கியமா அஞ்சலியை அழைச்சிட்டு வந்திடு.. என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க..” என்றான் சற்று கேலியான குரலில்..
“சரி..” என தலையாட்டி விட்டு வெளியே செல்வதற்கும், ப்ரணவ் பக்கவாட்டில் இருந்து உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது..
வீட்டிற்குள் நுழைந்த ப்ரணவ் விட்டான் ஒரு அறை சயந்தன் கன்னத்தில்..
