Share:
Notifications
Clear all

காமன் 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

10

 

 

 

தமையனாய் அவளை மிரட்டி விட்டுச் சென்ற ராகவ்வை பெருமையோடு பார்த்தாள் ரதி.

 

 

 

இதே வயதில், எனக்கு இத்தனை லட்சத்தில் வண்டி வேண்டும்.. இவ்வளவு ஆயிரத்தில் ஃபோன் வேண்டும்.. இவ்வளவு ரூபாய் பாக்கெட் மணி வேண்டும் என்று அடம் பிடித்து சண்டை போட்டு வாங்கும் இவனது சகாக்களையே நிறைய பேர் பார்த்திருக்கிறாள் ரதி.

 

 

 

ஏன் அதில் ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடெல்லாம் கிடையாது.

 

 

 

“எங்க அப்பா அம்மா சம்பாதிக்கிறது எனக்கு தானே? அதை இந்த வயதில் அனுபவிக்காமல் வேற எந்த வயதில் அனுபவிக்க?” என்று கேட்ட பிள்ளைகளே அதிகம்.

 

 

 

அவ்வளவு ஏன் அவ்வப்போது நீதிமன்றத்தில் நடக்கும் சில வழக்குகளை இவர்கள் பாடத்துக்காக எடுத்துக் கொள்ளும் போது, எத்தனை 18 வயது உட்பட்டவர்கள் வண்டி ஆக்சிடென்ட் செய்தோ இல்லை மது போதைக்கு ஆட்பட்டு ஏதேனும் தவறுகள் இழைத்தோ.. வழக்காடு மன்றத்தில் கைதிகளாக நிற்பதை பார்த்திருக்கிறாள்.

 

 

 

இது எதுவுமே இல்லாமல் தன் வாழ்க்கையை தானாக தீர்மானித்து, பிற்காலத்திற்கும் தனக்காவும் சேர்த்து நிதர்சனத்தை எதார்த்தமாக எதிர்கொள்ளும் தம்பியின் இந்த தீர்க்கமான அறிவைக் கண்டு மெச்சிக்கொண்டாள் தமக்கையாய்..!

 

 

 

“இவ்வளவு நல்ல தம்பிக்கு நாம இன்னும் என்ன செஞ்சாலும் தப்பேயில்ல..! கண்டிப்பா செய்வேன்..! காலேஜ் முடிச்சுட்டு அவன் விருப்பப்பட்ட படியே அவனை படிக்க வைப்பேன்” என்று தனக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டாள்.

 

 

 

ஆனால் அந்த தீர்மானம் எல்லாம் நிறைவேறாமல் போக போவதை அப்போது அவள் அறியவில்லை..!

 

 

 

அன்று கல்லூரியிலும் அவளால் சரியாக கவனிக்க முடியாமலே இருந்தது பாடத்தை மட்டுமல்ல தன் சுற்றுப்புறத்தை கூட..

 

 

 

சில முறை விரிவுரையாளருக்கு தெரியாமல் ரதியின் தொடையை கிள்ளி நடப்புக்கு கொண்டு வருவாள் ரத்னா‌.

 

 

 

சில முறை பேராசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு தட்டும் வாங்கினாள்.. தண்டனைக்காக வெளிய போய் நிற்கவும் செய்தாள்.

 

 

 

ஆனாலும் அவர்களுக்கோ நன்றாக படிக்கும் பெண் ஏன் இப்படி இன்று கவனம் இல்லாமல் இருக்கிறாள்?” என்று ஆராய எல்லாம் நேரமில்லை..!

 

 

 

அவரவர் வேலை அவரவருக்கு..!

 

 

 

அவர்வர் நியாயங்கள் அவரவருக்கு..!

 

 

 

அவரவருக்கான காலங்கள் அவரவருக்கு..!

 

 

 

இதில் அடுத்தவர்களுக்காக வருத்தப்படுவதோ துயரப்படுவதோ அதை போக்க தன்னாலான உதவிகளை செய்வதோ.. இதை எல்லாம் இப்பொழுது கதைகளிலும் படங்களில் மட்டுமே காணக்கூடிய அறமாகி போனது.

 

 

 

நிதர்சனத்தில் எங்கேயாவது ஒரு துயரத்தையோ ஒரு அநீதியையோ கண்டால் ‘அச்சோ பாவம்’ என்று உச்சிக்கொட்டி நகர்ந்துவிடும் மக்களைத்தான் இப்போது இந்த சமூகம் சுமையாக சுமந்துச் செல்கிறது..!

 

 

 

எங்கே செல்கிறது இந்த சமூகம் என்று ஒரு சில நல்லவர்கள் விசும்பினாலும்.. உண்மை என்னவோ அவர்கள் முகத்தில் பலமாக அறைந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறது..!

 

 

 

இப்படியாகத்தான் இந்த சிறிய பெண்ணான ரதியின் வாழ்க்கையும். த லெஜன்ட் லாயர் கதிர்காமன் கைகளில் சிக்கியது.

 

 

 

மாலை போல ரத்னாவுடன் கதிர்காமன் அலுவலகத்திற்குச் சென்றாள் ரதி. பெரும் தயக்கமும் அதி பயமும் அவளை ஆட்டியது என்னவோ உண்மை..!

 

 

 

அதை காட்டிலும் தன் வீட்டை மீட்க வேண்டும் என்ற வேட்கையே அவளுக்கு அதிகம்..!

 

 

 

இவர்கள் தங்கள் பற்றி கூறி கதிர்காமனை பார்க்க வேண்டுமென வரவேற்பு பெண்ணிடம் கூறினார்கள்.

 

 

 

இருவரையும் ஏன் இறங்க பார்த்த வரவேற்பு பெண்ணோ “அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்று கேட்க இருவரும் திருதிருவென்று விழித்தனர்.

 

 

 

சாதாரணமாக வக்கீல் ஆபீஸ் செட் அப்பை இவர்கள் நினைத்துச் சென்றால்.. அவ்வலுவலகமோ ஒரு சின்ன கார்ப்பரேட் நிறுவனம் போல அத்தனை பிரமிக்க வைக்கும் உள் அலங்காரங்களுடன் இருவரையும் அச்சுறுத்தியது..! மிரட்டியது..!

 

 

 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “அப்பாயிண்ட்மெண்ட் இல்லை.. பட் கதிர் சார் இன்னைக்கு வர சொல்லி இருந்தாங்க.. அவங்க அசிஸ்டன்ட் பார்த்திவ் கூப்பிட்டு நீங்க கேட்டு பாருங்களேன்” என்று அழகான ஆங்கிலத்தில் பேசி ரதியை இன்னொரு முறை பார்த்த அந்த வரவேற்பறை பெண் பார்த்திவ்வுக்கு அழைத்து கேட்க..

 

 

 

“ஹா.. எஸ்.. எஸ் ஸ்வப்னா. நம்ம பாஸ் தான் அவங்கள வர சொல்லி இருந்தாரு. அவங்கள வெளியில வெயிட் பண்ண சொல்லுங்க.. நான் பாஸ் கிட்ட டைம் கேட்டு சொல்றேன். நீங்க அதுக்கப்புறம் அவங்களை உள்ள அனுப்புங்க” என்று கட்டளையிட்டான்.

 

 

 

அதன் பின் கதிர்காமனின் வேலைகள் ஓய்ந்ததும், அவனிடம் ரதி வரவை பற்றி பாரத்திவ் சொல்ல..

 

 

 

“நோ பார்த்திவ்.. இப்போ செம டயர்ட்.. பயங்கர ஹெட்ஏக்.. நீ அவங்கள இன்னொரு நாள் வரச் சொல்லு” என்றான்.

 

 

 

பார்திவ்வும் இதுக்குமேல் இவனை வற்புறுத்தினால் சுத்தமாக வழக்கையே எடுத்துக் கொள்ள மாட்டான் என்று புரிந்து “ஓகே சார்..” என்று வெளியே சென்று அவர்களிடம் கூறினான்.

 

 

 

“என்ன பார்த்திவ்.. இப்படி சொன்னா எப்படி? டெய்லி வந்துட்டு இருக்க முடியுமா? நீங்க உங்க பாஸ் கிட்ட எங்களுக்காக ரெக்கமண்ட் பண்ண கூடாதா?” என்று அலுப்பாக கேட்ட ரத்னாவை போல் ரதியால் கேட்க முடியவில்லை.

 

 

 

“நான் ரெகமெண்ட் பண்ணதுனால தான் நீங்க ரெண்டு பேருமே இங்க.. இந்த ஆபீஸ்ல.. இந்த நேரம்.. நின்னுட்டு இருக்கீங்க” என்றான் தன் காதலியை முறைத்தவாறு..

 

 

 

“நோ டென்ஷன் அண்ணா.. நாளை கண்டிப்பாக நான் வரேன். அவரை பார்க்க முடியும் தானே?” என்று தவிப்பாய் ரதி கேட்க‌‌..

 

 

 

“கண்டிப்பா மா” என்றான் பார்த்திவ்.

 

 

 

அதே நேரம் எதார்த்தமாக திரும்பி

 

சிசிடிவி ஃபுட்டேஜை தன் கணினியில் கதிர்காமன்‌ பார்க்க.. அதில் இரு பெண்கள் இருப்பதைக் கண்டு நெற்றி சுருக்கியவன், பின் ரதியை கண்டு கொண்டான்.

 

 

 

ஒரு நிமிடம் அவளது ஈர உதடுகளின் ஈரம் நினைவுகளாய் அவனை தாக்க..

 

மேல் அதரங்களை உள்ளிழுத்து ஈரமாக்கிக் கொண்டவனின் எண்ண ஓட்டத்தில் என்னென்னவோ எண்ணங்கள் ஓட..

 

 

 

“வர சொல்லு பார்த்தா” என்றவன், பின் “அந்த பொண்ண மட்டும் வர சொல்லு பார்த்திவ்” என்று ஆணையிட்டான்.

 

 

 

“ரதியை மட்டுமா?” என்று கேட்ட பார்த்திவ் குரலில் சற்று ஆச்சரியம் தான்.!

 

 

 

“ரதியோ ரம்பையோ பேர் எல்லாம் எனக்கு தெரியாது..! யாருக்கு தேவையோ அந்த பொண்ணை மட்டும் அனுப்பி வை” என்றான் அசட்டையாக..!

 

 

 

பார்த்திவ் பேச பேச இருவரின் முகங்களிலும் சற்றே புத்துணர்ச்சி கலந்த மலர்ச்சி..!

 

 

 

“அப்பாடி நாளைக்கும் வரணுமானு நினைச்சேன். நல்ல வேளை மனுஷன் கூப்பிட்டுட்டாரு.. பத்திரமா போயிட்டு வாடி அம்மா.. இன்னைக்கு தெளிவா பேசு.. அன்னைக்கு மாதிரி தெளிவில்லாமல் பேசிடாத..!” என்று ரத்னா அறிவுரை கூறி அவளை அனுப்பி வைக்க..

 

 

 

“ரத்னா.. நீ இங்கே வெயிட் பண்ணு. ரைட் சைடு வெயிட்டர் ஹால். நான் ரதியை எங்க பாஸ் கிட்ட திரும்ப ஒரு இன்ட்ரோ கொடுத்துட்டு வரேன்” என்று ரதியுடன் சென்றான் பார்த்திவ்.

 

 

 

ரதியுடன் பார்த்திவ்வை கண்ட காமன் கையசைத்து வெளியே போக சொல்ல “பாஸ்.. நான்.. இவங்க..” என்று அவன் திணறி நிற்க..

 

 

 

“ஐ செட் கெட் அவுட்” அவனை அழுத்தமாக பார்க்க.. அடுத்த நொடி கதிர்காமனிடம் தலையசைத்து அறையை விட்டு வெளியே வந்தான் பார்த்திவ்.

 

 

 

சிங்கத்தின் குகையில் தனியாக மாட்டிய சிறு மா

னாய் அவன் முன்னே மெல்லிய தேகம் அச்சத்தில் நடுங்க நின்றிருந்தாள் ரதி‌.

 

 

 

அவனோ.. அடுத்த கூறிய வார்த்தையில் அவள் தேகம் உலுக்கி போட அவனை அதிர்ந்து பார்த்தாள் ரதியவள்..!

 

 

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top