Share:
Notifications
Clear all

காமன் 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 265
Thread starter  

அத்தியாயம் 2

 

 

 

 

 

உறவே பொய்த்து விட்டால்?? சொத்து பத்தை வைத்து என்ன செய்வது என்று புரியவில்லை?

 

 

 

ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பணமே பிரதானம்..!

 

 

 

ஆனால் அவர்கள் சொன்னது போலவே ரவீந்திரன் அவ்வப்போது ஊருக்கு சென்று வந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் வரவே இல்லை.

 

 

 

இத்தனைக்கும் சித்தாராவின் குடும்பம் பணக்காரர்கள் தானாம்.

 

 

 

ஒரு‌முறை சமையல் செய்யும்போது சித்தாரா கை சுட்டுக் கொள்ள அதனை கண்டு தவித்தவாறு புலம்பித் தவித்த தந்தையின் பேச்சிலிருந்து கண்டுகொண்டாள் ரதி. ஆனால் இந்நாள் வரை அவர்கள் குடும்பத்தை பற்றி எதையுமே சித்தாரா பிள்ளைகளிடம் சொன்னதே கிடையாது..!

 

 

 

‘நான் அப்படி வாழ்ந்தேன். இப்படி சொகுசா இருந்தேன்.. உங்க அப்பாவை கல்யாணம் பண்ண பிறகு தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்’ என்று ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததில்லை, அவர் இறக்கும் வரை..!

 

 

 

அவர்களின் வாழ்க்கையை பிணைத்தது பணம் அந்தஸ்து அல்ல உண்மையான அன்பும் காதலும்..!

 

 

 

ஆனால் அந்த உண்மையான காதலுக்கு உரித்தவரா லோகநாதன் என்றால்?? அதுவும் இல்லாமல் போய்விட்டது காலம்.

 

 

 

ஒருவேளை சித்தாரா அவரது குடும்பத்தை பற்றி பிள்ளைகளிடம் சொல்லி இருந்தால்.. இன்றைய நிலைமையை அவர்களுக்கு வந்து இருக்காதோ??

 

 

 

“இல்ல.. இல்ல.. அம்மா செஞ்சது சரிதான். அப்பாவை ஏற்காத ஏன் ஒரு மனுஷனா கூட மதிக்காத அந்த குடும்பம் எங்கள மட்டும்‌ மதிக்குமா என்ன? ஏற்குமா என்ன? அப்படி ஏற்றாலும் இப்படிப்பட்ட குடும்பம் எங்களுக்கு வேண்டாம். உறவுகளும் எங்களுக்கு வேண்டாம்..! நானும் என் தம்பியும் மட்டும் போதும்..!” என்று முடிவெடுத்தவள் அதற்குப்பின் தலையை உலுக்கி அவளை கொல்லும் இந்த பொல்லா நினைவுகளை விரட்டிவிட்டு, மெல்ல அவர்கள் வீட்டு கதவை திறந்தாள்.

 

 

 

அவளின் தம்பி ராகவ் சந்தர் மும்மரமாக படித்துக் கொண்டிருந்தவன், அக்கா உள்ளே நுழைந்ததை பார்த்ததும் ஒரு கண்டன பார்வையோடு அவளையும் தன் கையில் இருந்த ஃபோனில் உள்ள மணியையும் பார்த்து அவளை முறைத்தான்.

 

 

 

“சாரி டா.. சாரி டா.. அப்படியே யோசிச்சிட்டு பீச்சிலேயே உட்கார்ந்துட்டேன்டா” என்று தம்பியின் அருகில் சோகமாக அமர்ந்திருந்தவளை பார்த்தவன்,

 

 

 

“வெளில போயிட்டு வந்தா ஃபர்ஸ்ட் கைகால் எல்லாம் கழுவிட்டு வா ரதி. எத்தனை கொரோனா வந்தாலும் நாமெல்லாம் திருந்தவே மாட்டோம் இல்ல..” என்று சற்று அதட்டலாக கேட்டவுடன் அவனை பார்த்து மீண்டும் கெஞ்சலாக ஒரு சாரியை உதிர்த்துவிட்டு.. உள்ளே ஓடினாள்.

 

 

 

“வரவர இவனுக்கு நான் அக்காவா இல்ல அவன் எனக்கு அண்ணனானே தெரிய மாட்டேங்குது?” என்று நொடித்துக் கொண்டாலும் தம்பியின் இந்த அக்கறை அதட்டல் அவளின் நொந்த மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.

 

 

 

தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் இரவு உணவு இருவருக்கும் தயார் செய்து, உண்க.. அமைதியாக கழிந்தது அவ்விரவு..!

 

 

 

இரவு என்னவோ அமைதியாகத்தான் கழிந்தது ஆனால் அவர்களுக்கோ வாழ்க்கைக்கான போராட்டம் உள்ளத்திலே எத்தனை.. எத்தனை..!!

 

 

 

மறுநாள் கல்லூரிக்குச் சென்ற ரதியோ எதிலும் கவனம் இல்லாமல் ஏதோ இழந்ததைப் போல இருக்க அவளின் தோழியான ரத்னா,

 

 

 

“ஏன்டி இப்படி இருக்க.. உங்க அம்மா உனக்காக விட்டுட்டு போனது சொத்து உன்னை விட்டு போகாது ஃபீல் பண்ணாதடி..!” என்று மதிய உணவு வேளையில் அவளை சமாதானப்படுத்தினாள்.

 

 

 

தனக்காக பேசும் தோழியை கண்டு மனதில் ஒரு இதம் பரவினாலும் நிதர்சனம் வேறாக அல்லவா இருக்கிறது? என்று பெருமூச்சு விட்டபடி அமர்ந்திருந்தவள் முன் டிபன் பாக்ஸை நீட்டி “சாப்பிடு” என்றாள்.

 

 

 

“ம்ப்ச்.. பசியில்ல ரத்னா” என்றாள் அவள்.

 

 

 

“அது எப்படி பசி இல்லாம போகும்? மனுஷனா பொறந்தா பசி, துக்கம், அழுகை,கோபம், தாபம், மோகம் என்று எல்லாமே இருக்கணும்டி ரதியே.. அப்படி இருந்தா தான் அவன் மனுஷன்” அவள் கண்ணடித்து கூற..

 

 

 

அவள் கூறிய தினுசில் சோக பதுமை ரதியும் மெல்ல இதழ் வளைத்து சிரித்தாள்.

 

 

 

“குட் இப்படியே சிரித்துக்கிட்டே இரு ஈவினிங் ஒரு ஃபெலோவை உனக்கு இன்ட்ரோ பண்றேன். யார் கண்டா அவர் மூலமா உனக்கு நல்லது கூட நடக்கலாம்” என்று பூடகமாக கூறிய நண்பியை எதிர்பார்ப்போடு பார்த்து

 

 

 

“யாருடி? செல்லேன் டி?” என்று கேட்டாள்.

 

 

 

"சஸ்பென்ஸ்..! சொல்ல மாட்டேன். இப்ப நீ சாப்பிட்டு ஒழுங்கா கிளாச கவனிப்பியாம்.. ஓகே?” என்றதும் தனக்காக ஏதோ உதவி ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று புரிந்து

 

 

 

“ஆண்டவன்.. இம்மட்டிலாவது எனக்கு இந்த கதவை திறந்தானே” என்று மனதில் நிமம்தி கொண்டாள்.

 

 

 

“இதோட மூணாவது டீ டி. இதுக்கு மேல டீ குடிச்சா என் உடம்புல ரத்தம் ஓடாதுடி டீயா தான் ஓடும்” என்று பேசிய ரதியின் கையை பற்றிய ரத்னா,

 

 

 

“என்ன பண்ண சொல்ற? அதுக்கு பஞ்சுவால்ட்டிக்கும் ஏழாம் பொருத்தம். வரேன்னு சொன்னா ஒரு மணி நேரம் கழிச்சு தான் வருவான். அப்படியும் உன்னை நான் லேட்டா தான் இங்க கூட்டிட்டு வந்தேன். இருந்தாலுமே லேட்டா வரான் பாரேன்.. வரட்டும் அவனை..” என்றதும் தோழியின் முகத்தில் தெரியும் உரிமை கலந்த கோபத்தை ரசித்தவள்,

 

 

 

“ஓ விஷயம் அப்படியா?” என்று கலாய்த்தாள் ரதி.

 

 

 

“சும்மா இரு டி” என்று ரதியை திட்டினாலும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

 

 

“ஹாய் ரத்து பேபி..” என்று ஆர்ப்பாட்டமாய் வந்தவன் ரத்னாவை தோளோடு அணைத்து “மிஸ் யூ பேபி” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்து அமர இருவரையும் ஆஆவென்று வாயைப் பிளந்து பார்த்தாள் ரதி.

 

 

 

“நான் சொன்னேன்ல என்னோட பிரண்டு இவதான் ரதி.. ஏற்கனவே அவ பிரச்சனையை உங்ககிட்ட நான் டிஸ்கஸ் பண்ணி இருக்கேனே..” என்றாள்‌ ரத்னா.

 

 

 

“யா.. யா.. ஐ க்நோ தட்..” என்று ரத்னாவிடம் வழிந்து பேசியவன்,

 

 

 

ரதியின் புறம் திரும்பி “டோன்ட் வொர்ரி சிஸ்டர். நான் இதை பத்தி என்னோட ஹெட் கிட்ட பேசுறேன் எங்க ஹெட் யார் தெரியுமா கதிர்காமன்..!! த லீடிங் லாயர் இன் மும்பை..! எந்த கேஸூனாலும் அப்படி தட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பாரு” என்று பெருமையாக கூறினான்.

 

 

 

“கதிர்காமன் சாரா?” என்று ரதி அதிர்ந்து வியந்து இருவரையும் பார்க்க..

 

 

 

“எஸ்.. டி! அவரே தான்” என்றாள் ரத்னா சந்தோஷத்தோடு..!

 

 

 

“அவரை எப்படி டி.. அவரு எவ்வளவு பிஸி தெரியுமா?” இன்னும் நம்பிக்கை வராமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி.

 

 

 

“பார்த்திவ், என்னோட அத்தை பையன். கதிர்காமன் சார் கிட்ட தான் பி.ஏவா இருக்காரு..” என்றாள் ரத்னா பெருமையோடு.

 

 

 

“ஓஹ்.. ரியலி??!!” என்று ரதி ஆச்சரியமாக பார்க்க..

 

 

 

இப்பொழுது பார்த்திவ் தன்னை பெருமையாக உணர்ந்து “யு டோன்ட் வொர்ரி சிஸ்டர். இன்னையோட உங்க பிரச்சனையெல்லாம் முடிஞ்சதுன்னு வச்சுக்கோங்க.. கதிர்காமன் சார் கிட்ட வந்துட்டீங்க இல்ல.. இனி உங்களுக்கு கவலையே இல்லை. உங்க வேண்டுதலை அந்த கடவுள் கேட்டு பெரிய வாசகதவையே தொறந்துட்டான்” என்று ஆதரவு அளித்தான்.

 

 

 

அந்த வாசல் கதவு அவளுக்கு சொர்க்கமா இல்லை நரகமா?

 

 

 

கதிர்காமன்…!!

 

 

 

ஆபத்பாந்தவனா? இல்லை ஆபத்தானவனா?


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top