தளிர் - 18
மயங்கி கிடந்த இதழை பார்த்தபடி இருந்த செழியனின் நினைவை கலைத்தது கதிரின் குரல்.
அதன் பின்னே நிதர்சனம் உரைத்து இதழின் அருகில் சென்றவனோ பதட்டத்துடன் அவளை தூக்கியபடி அங்கிருந்து ஓடினான் .
இங்கு மருத்துவமனை கொண்டு செல்வதற்காக அவளை காரில் படுக்க வைத்தவனோ . காரை எடுக்க முடியாமல் தடுமாறத் தொடங்க .
அவன் பின்னோடு ஓடி வந்த கதிரோ செழியா நீ அந்த பொண்ணு கூட இரு , நான் கார் எடுக்கிறேன், உன்னால இப்போ காரை எடுக்க முடியாது என்று அவன் காரை எடுக்க .
செழியனுக்கும் அதுவே சரி என்று பட .
பின் பக்கம் ஏறி இதழை தன் மடியில் கிடத்தியவனோ அவள் முகத்தை தாங்கி இதழ் , இதழ் என்று பயத்துடன் அவள் கன்னம் தட்ட .
செழியனோ டேய் கதிர் கொஞ்சம் சீக்கிரம் போடா என்ற செழியனின் முகமோ பதட்டத்திலும் , பயத்திலும் வேர்க்கத் தொடங்க.
அவனும் சரிடா என்றபடி பதட்டத்துடன் காரை வேகமாக செலுத்த .
இங்கு செழியனுக்கோ உள்ளூர பயம் ஏற்படத்தொடங்கியது .
இவளுக்கு எதாவது என்றால் என்ன செய்வேன் நான் , என்று நினைக்க நினைக்க அவனுக்கோ பயமோ இன்னும் அதிகமானது .
இதழை முகத்தை தன் மார்போடு அணைத்து பிடித்துக் கொண்டவனோ .
டேய் சீக்கிரம் போடா என்று அவனிடம் காட்டு கத்தாக கத்திக் கொண்டிருக்க .
அவள் முகம் தாங்கியவனோ இதழ் இதழ் கண்ணத் திறடி , ஏன்டி என்ன பயப்படுத்துற , நான் பேசுனது எல்லாம் தப்புதான்டி , அதுக்கு என்ன இப்படி தவிக்க விடுவியா என்று அவனது குரலோ கலங்கி போய் வர .
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்குத்தான் இது அனைத்தும் விநோதமாக தெரிந்தது .
காரணம் அவன் இவ்வாறு வேறு எந்த பெண்ணிற்கும் கலங்கி போனது இல்லை அல்லவா ? . அதுவும் பெண்கள் என்றால் வெறும் உடல் சுகத்திற்காக மட்டும் நாடுபவன் ஆயிற்றே . ஆனால் அவனா இப்படி ஒரு பெண்ணிற்காக கலங்கி போய் நிற்பது .
அதே நேரம் ஹாஸ்பிட்டலும் வந்து சேர்ந்தது . அவளை கைகளிலேயே தூக்கி சென்றவனோ மருத்துவரிடம் சண்டையிட்டு அவளுக்கு மருத்துவம் பார்க்க செய்ய .
செழியனை சமாளிப்பது தான் கதிருக்கு பெரும் பாடு ஆகிப்போனது .
ஏன்டா இன்னும் கண்ணு முழிக்கல , அவளுக்கு எதாவது ஆகிடுமாடா என்று பயத்திலேயே அவனை உலுக்கி எடுக்க .
அதே சமயம் அங்கிருந்த மருத்துவர்களையும் அவன் சும்மா இருக்கவிடவில்லை ஏன் இன்னும் அவள் கண் முழிக்கவில்லை என்று அவர்களிடமும் காட்டு கத்தாக கத்தி
கொண்டிருக்க .
இதற்கு எல்லாம் சொந்தகாரியோ செழியனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு கண் முழிக்க .
இதழோ மெதுவாக கண் திறக்க . அவள் கண் முன் இருந்தது அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தபடி இருந்த செழியனே . அவன் முகமே சொன்னது அவன் எவ்வளவு தவித்து பயந்து போய் இருக்கிறான் என்று .
இதழோ அவனை நோக்கி கையை நீட்ட .
அவனோ இதற்கு தான் நான் காத்திருந்தேன் என்பது போல் அவள் அருகே தவித்துப்போய் வந்தவனோ அவள் கையை அழுந்த பற்றி அதில் முகம் புதைத்து கொள்ள .
இதழோ ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் தலையை கோதியபடி.
பயந்துடீங்களா என்று ஈனஸ்வரத்தில் கேட்க .
செழியனோ எதுவும் சொல்லாமல் அவள் படுத்திருந்த படுக்கையில் ஓரம் அவளோடு ஒட்டிப்படுத்துக் கொண்டவனோ அவளை பக்கவாட்டாக அணைத்துக் கொணடவனோ அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொள்ள .
அந்த அணைப்பே உணர்த்தியது அவன் எவ்வளவு பயந்திருக்கிறான் என்பதை .
இதழும் அவனை ஒரு கையால் மெதுவாக அணைத்துக் கொண்டவளோ .
ரொம்ப பயப்படுத்திட்டேனோ என்று ஒரு வித ஏக்க குரலில் கேட்க.
அவன் பதில் சொல்லவில்லை, ஆனால் அவள் கேள்விக்கான விடையாக அவன் அணைப்போ மேலும் இறுகியது .
இதழோ அவன் அணைப்பில் ஒரு பக்கம் வலி எடுக்க
ஸ்ஸ்ஸ் .... என்று வலியில் முகம் சுருங்க .
பதறிய செழியனோ என்னடி ஆச்சு , எதாவது பண்ணுதா என்று அவள் முகத்தை தவிப்பாக பார்க்க.
இதழோ ஒரு மெல்லிய இதழ் விரிப்புடன் அப்படிலாம் இல்லப்பா என்று அவன் கையைப்பிடித்து தன் கன்னத்தோடு ஒட்டிக்கொள்ள.
செழியனோ அவள் கன்னத்தை அழுந்த பற்றி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட.
இதழுக்கோ சட்டென கண்கள் கலங்கிவிட்டது . எத்தனை நாட்கள் கழித்து அவன் நெற்றியில் முத்தமிடுகிறான் . அவனுடன் இருக்கும் போது அவளே பல நாள் கேட்டு இருக்கிறாள் அல்லவா நெற்றி முத்தம் தா என்று .
அப்போது எல்லாம் நினைக்கும் போது தருவேன் என்று அவள் உதட்டில் அழுந்த முத்தமிடுவானே.
ஆனால் அந்த முத்தம் இன்று இப்படி ஒரு சூழ்நிலையில் தான் கிடைக்க வேண்டுமா ? என்று அவள் நினைக்க .
அவளது மனசாட்சியே இதற்கு எல்லாம் காரணமும் நீதானே என்று அவளை குற்றம் கடிய .
செழியனோ அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டவனோ
எதுக்குடி அழுகுற என்று சற்று குரல் தணிந்து கேட்க .
அவளோ இல்லை என்பது போல் கண்களை துடைத்தபடி தலையாட்ட .
அதே நேரம் கதவை திறந்து கொண்டு கதிர் உள் நுழைய .
அதை கண்ட செழியனோ எந்த பதட்டமும் அடையாமல் எழுந்து அமர ., இதழுக்கு தான் இது சங்கடமாக இருக்க .
கதிருக்குத்தான் இது ஆச்சர்யமாக போனது .
அவனோ அதே அதிர்வுடன் அவர்களை பார்த்தபடி இருக்க .
செழியனோ என்னடா அப்படி பாக்கிற என்றபடி அவன் கையில் இருந்த மருந்துகளை வாங்கியபடி கேட்க .
கதிரோ நான் ஒன்னும் பாக்கலடா என்று இதழை விசாரித்துவிட்டு அவன் வெளியே சென்றுவிட.
அவளது கேன்டீன் ஊழியரான கனகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்தவரோ இதழின் அறையை நோக்கி சென்றவரோ அவளை ஒரு பயத்துடன் அணைத்துக்கொண்டவரோ .
நான் ரொம்ப பயந்துட்டேன் இதழ் , எனக்கு லிப்டில நீ அப்டி மயங்கி கிடந்தது பாக்கும் போது ஒரு நிமிஷம் எனக்கு திக்குன்னு ஆகிடுச்சு , அப்புறம் நம்ம எம்டி சார் ஏதே ஏதோ பண்ணி கதவை திறந்த உடனே உன்ன இங்க தூக்கிட்டு ஓடி வந்தாரு என்று அவர் படபடவென அனைத்தையும் பொறிந்து தள்ள .
இதழோ அக்கா ,அக்கா பொறுமை பொறுமை என்று ஒரு சிரிப்புடன் அவரை நிறுத்த .
அவரோ சரி இதழ் நீ இப்போ ஓகே தான என்று சற்று கவலையுடன் கேட்க .
இதழோ நான் இப்போ நல்லா இருக்கேன் அக்கா .
அவளிடம் அவளின் போனை கொடுத்தவரோ ,
உனக்கு யாரோ போன் பண்ணிட்டே இருந்தாங்க இதழ் . ஏதோ ஒரு பேர் சொல்லி உன்கிட்ட பேசனும் சொன்னாங்க என்று அவளிடம் போனை நீட்ட .
இதை எல்லாம் ஒரு ஓரமாக போனை பார்த்தபடி கேட்டும் கேட்காமலும் அமர்ந்து இருந்தான் செழியன் .
கனகாவோ அவன் அங்கு அமர்ந்து இருப்பதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை .
இதழோ என்ன பேர்க்கா என்றபடி போனை ஆன் பண்ண .
அவரோ சிறிய யோசனைக்கு பின் ஹான் அஸ்வின் என்று முடிக்கவில்லை .
பெயரை கேட்டவுடன் செழியனோ கடுப்புடன் அங்கிருந்த வாட்டர் பாட்டிலை தட்டிவிட்டு வெளியில் சென்றுவிட .
அந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிய கனகாவோ அப்போதுதான் செழியன் அங்கிருந்ததையே உணர்ந்தார் .
இதழுக்கோ அவன் எதற்காக எழுந்து செல்கிறான் என்பதை அறிந்து கொண்டவளோ போகும் அவனையே பார்த்தபடி இருக்க .
கனகாவோ இவரு இங்க தான் இருந்தாரா என்று சிறிய அதிர்வுடன் கேட்க .
இதழோ அதை எல்லாம் கவனியாமல் இருக்க .
கனகாவோ எதாவது சாப்பிட்டியா இதழ் என்று கேட்க .
அவளோ அப்போதுதான் அவர் கேட்பதே காதில் விழ அவளோ
ஹான் என்னக்கா கேட்டீங்க என்று தன் நினைவு கலைந்து கேட்க.
கனகாவோ சாப்பாடு வாங்கிட்டு வரவா
இதழோ இல்லை வேண்டாம் அக்கா என்றவளோ படுக்கையில் சாய்ந்து அமர .
கனகாவோ அவளை பார்ப்பதும் , ஏதோ கேட்க வருவதுமாக இருக்க .
அதை கண்ட இதழோ என்னக்கா ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கு என்று புருவமுடிச்சுடன் அவரை பார்க்க .
கனகாவோ அது அது உன்கிட்ட கேட்கலாமா ? வேண்டாமா ? யோசிக்கிறேன் என்க .
இதழோ சிரிப்புடன் சொல்லுங்க என்ன வேணும்
அது உனக்கும் , செழியன் சாருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கா இதழ் என்று தட்டு தடுமாறி அவர் கேட்டுவிட .
அவர் கேட்டவுடன் இதழின் முகமோ வாடிவிட .
அதை கண்ட கனகாவோ பதறியபடி இல்ல இதழ் நான் வேணும்னு கேட்கல . ஏன்னா இன்னைக்கு அவர் உனக்காக பதறித் தூக்கிட்டு ஓடினார் இல்ல அதான் கேட்டேன் என்க.
இதழோ அதுலாம் பழைய கதைக்கா அதுலாம் இப்போ பேச வேண்டாம் என்று அதை அத்தோடு முடித்துக் கொண்டவளோ வேறு பேச்சிற்கு தாவி விட .
அதன்பின் அவரும் அதை விடுத்துவிட.
அதே நேரம் மீண்டும் அவளுக்கு அழைப்பு வர .
அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளோ அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ .
இதழோ ஒரு அதிர்வுடன் என்ன சொல்றீங்க ! .
சரி நான் இப்பவே வரேன் என்று அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி செல்ல .
இங்கு வண்டியில் வந்து கொண்டிருந்த செழியனுக்கோ ஏகத்துக்கும் கடுப்புதான் கிளம்பியது .
அவனோ சரியான கோபத்தில் வர , அவன் அருகில் இருந்த கதிரோ டேய் எதுக்குடா வண்டிய இவ்ளோ வேகமா ஓட்டுர என்று பயத்துடன் காரின் கதவோரம் ஒட்டி அமர்ந்த படி கேட்க .
செழியனோ அவன் ஏன்டா அவளுக்கு போன் பண்ணனும் , அவ நம்பர் எப்படிடா அவனுக்கு கிடைச்சு இருக்கும் என்று அவனிடம் சண்டையிட .
கதிருக்கோ காரை எங்கேயாவது கொண்டு சொருகிவிடுவானோ என்ற பயம் மட்டுமே இப்போதைக்கு இருக்க .
செழியனோ சொல்லுடா என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க .
கதிரோ டேய் யார்கிட்ட , யாருடா பேசுனது , எவளுக்கு எவன்டா போன் பேசுனது என்று அவன் உயிர் பயத்தில் பதற .
செழியனோ அவன் தான்டா என்று காரின் வேகத்தை கூட்டியவனோ அங்கு எதிர் புறம் இருந்த மரத்தை நோக்கி காரை வேகமாக செலுத்த , அதை கண்ட கதிரோ
டேய் ! டேய் ! டேய் ! மரம் டா என்று பயத்தில் கண்களை மூடிக்கொள்ள.
டமார் என்று ஒரு சத்தம் ..
தொடரும் ...
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்க
Review please 🙏
