தளிர் - 17
இருவரும் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்க ஒருவரின் முகமோ கடும் சினத்துடன் காணப்பட மற்றொருவரின் முகமோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க.
செழியனோ இதழை சுவரோடு சுவராக அழுத்தியபடி அவளிடம் சண்டைக்கு போக .
இதழோ வலியில் முகம் சுருங்கி அவனிடம் இருந்து விலக.
அவனோ அவளை விடாமல் இருபக்கம் கைகள் வைத்து அணைக்கட்டியவனோ அவள் முகம் நோக்கி குனிய .
அவளோ முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள .
அதில் கோபம் கொண்ட செழியனோ
ஏய், என்னடி திமிரா என்று அவள் கன்னத்தை அழுத்தி பிடித்தபடி கேட்க .
அவளோ அவனையே விழிகளில் ஒரு அழுத்தத்துடன் பார்க்க.
செழியனோ அவள் கன்னத்தை அழுந்த பற்றியபடி காலையில அந்த அஸ்வின் எதுக்குடி உன்கிட்ட வந்து பேசுனான், என்கிட்டயே உன்ன பத்தி விசாரிக்கிறான் கோபத்தில் சீற .
அதை கேட்ட தென்றலுக்கோ அதிர்ச்சியே ஏற்பட்டது .
அவளோ எதுவும் சொல்ல முடியாமல் முழிக்க .
செழியனோ என்னடி முழிக்கிற என்றவனோ
ஓஓஓ ! உன்னோட அடுத்த குறி அவனா என்று உதட்டில் நக்கல் புன்னகையுடன் கேட்க .
இதழுக்கோ சுர்ரென கோபம் வர அவன் கையை தட்டிவிட்டவளோ அங்கிருந்து செல்ல பார்க்க .
செழியனோ கோபத்துடன் அவள் பின்னோடு வந்தவனோ அவள் முழங்கையை பற்றியபடி அங்கிருந்து இழுத்து செல்ல .
கேன்டீன் இருந்த அனைவரும் இவர்களையே பார்க்க .
இதழோ அனைவரின் பார்வையும் தங்கள் மேல் விழுவதை கண்டவளோ அவன் பிடியில் இருந்து விடுபட போராட .
ஏய் இப்ப சும்மா வரல இங்கிருந்து தூக்கிட்டு போக வேண்டியது வரும் என்று பல்லைக் கடித்தபடி சீற .
அதன் இதழோ அவன் வார்த்தையில் கட்டுப்பட்டு அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல .
அவளை இழுத்து வந்தவனோ அங்கிருந்து அறையின் உள் தள்ளி கதவை பூட்டியவனோ அவளை அழுத்தமாக பார்த்தபடி சோபாவில் அமர.
இதழோ முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி இருக்க .
செழியனோ இப்போ சொல்லுடி அவன் எதுக்கு உன்கிட்ட வந்து பேசுனான் என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கூட்டி கேட்க.
அவளோ அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்று வெடுக்கென்று கூற .
செழியனுக்கோ அவளது பதிலில் பத்திக் கொண்டு வர , தன்னை கட்டுப்படுத்தியவனோ எதுடி தேவையில்லாத விஷயம் , அவன் எதுக்குடி உன்ன பத்தி விசாரிக்கனும் என்று குரல் உயர்த்தி கேட்க .
இதழின் நினைவோ இன்று காலை அவள் அவசர அவசரமாக அலுவலகம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போது அவள் முன் ஒரு கார் ஒன்று நிற்க . இதழோ அதை கடந்து செல்ல பார்க்க.
அதில் இருந்து இறங்கினான் அஸ்வின் பிரபல VR தொழிற்சாலையின் ஓனர் அவனோ இதழிடம் ஏதோ பேச வர .
அவளோ விலகி நடக்கத் தொடங்க . அஸ்வினோ ஏங்க ஒரு நிமிஷம் என்று அவளை நிறுத்த .
இதழோ என்ன என்பது போல் அவனை பார்க்க.
அவனோ ஹாய் என் பேர் அஸ்வின் என்று அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனோ அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க .
அவளோ என்ன வேணும் உங்களுக்கு என்று சற்று தடுமாறியபடி கேட்க .
அஸ்வினோ உங்க பேர் இதழினி தான என்று சிறு புன்னகையுடன் கேட்க .
அவளோ ஆம் என்பது போல் தலையாட்ட.
அஸ்வினோ உங்களோட கேன்டீன் சாப்பாடு நல்லா இருந்தது என்று அவளிடம் பேச்சுக் கொடுக்க தொடங்க .
அவளோ எதுவும் சொல்லாமல் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருக்க .
அஸ்வினோ நான் நேரடியாகவே விஷயத்துக்கு வரேங்க உங்கள எனக்கு பிடிச்சு இருக்கு என்று பட்டென்று உரைத்துவிட.
இதழுக்கு அவனது பேச்சு சற்று திகைப்பை கொடுத்தாலும் .
தன்னை சமாளித்துக் கொண்டவளோ இல்லங்க இது சரிபட்டு வராது என்று கூறிவிட்டு அவள் நடக்கத் தொடங்க .
அஸ்வினோ ஏங்க சரிபட்டு வராது நான் பெரிய இடம் அப்படின்றதாலயா என்று கேட்க .
அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு என்று சொல்ல.
அஸ்வினோ சிரித்தபடி ஏங்க பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லுங்க இப்படிலாம் பொய் சொல்லாதீங்க என்று அவன் சற்று திகைப்புடன் கூற .
இதழோ ஒருகணம் கண்களை அழுந்த மூடித்திறந்தவளோ, நான் ஏன் உங்ககிட்ட பொய் சொல்லனும் அதுதான் நிஜம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று சென்றுவிட .
அஸ்வினுக்கோ அவள் தன்னை தவிர்ப்பதற்காக தான் இவ்வாறு பொய் சொல்கிறாள் என்று எண்ணியவனோ செழியனிடம் அழைத்து கேன்டீன் பற்றி விசாரிப்பதுபோல் அவளை பற்றி விசாரிக்க.
செழியனுக்கோ அவன் பேசும் விதத்திலேயே தெரிந்துவிட்டது அவன் யாரைப்பற்றி கேட்க வருகிறான் என தெரிந்து கொண்டவனுக்கு சற்று கடுப்பு கிளம்பியது . அதே கடுப்புடன் தான் இதழிடம் சண்டையிட வந்தது .
இதழோ அறையை விட்டு வெளியே செல்லப் பார்க்க.
செழியனோ என்னம்மா இதழினி அடுத்து உன் ஆசைக்கு அந்த அஸ்வினா என்று குரலில் நக்கல் இழையோட கேட்க .
இதழோ எதுவும் சொல்லாமல் திரும்பி நிற்க .
தொடர்ந்த செழியனோ இருக்கலாம் , இருக்கிறதால தான என்னையே விட்டிட்டு போன என்று அவள் அருகில் வர .
இதழோ இதற்கு மேல் இவன் விஷ வார்த்தைகளை கேட்க முடியாது என்று நினைத்தவளோ அங்கிருந்த செல்லத் தயாராக.
அவனோ அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவனோ தன்னோடு நெருக்கி கொள்ள .
அவளோ அவனிடம் இருந்து விலக பார்க்க.
செழியனின் பிடி இறுகியதே தவிர விலகவில்லை .
அவன் முகம் பார்த்தவளோ இப்போ என்ன வேணும் உங்களுக்கு என்று குரல்ல கடுமை கூட்டி கேட்க .
அவனோ ஏன் உனக்கு தெரியாத என்று அவள் இடையை அழுந்த பற்ற .
அவளோ அவன் கையை இடையில் இருந்த விலக்க பார்க்க .
அவளை தன்னோடு அணைத்தபடி அங்கிருந்த சோபாவில் அவளோடு சாய்ந்தவனோ தனக்கு கீழ் அவளை கொண்டு வர .
இதழுக்குத்தான் அவன் நெருக்கம் பெரும் தவிப்பாய் மாறியது . அவளோ முதல்ல என்ன விடுங்க என்று தன்மேல் இருந்து அவனை தள்ளப் பார்க்க .
அவனோ நன்றாக அவள் படர்ந்தவனோ அவள் கழுத்து வளைவில் முகம் புதைதப்படி அழுந்து முத்தமிட .
இதழோ தன்னை அறியாமல் கண்கள் மூடி அவன் முத்தத்தை ரசித்தவளோ அப்படியே இருக்க .
செழியனோ சிறிது நேரம் அப்படியே இருந்தவனோ , எவன் தொட்டாலும் இப்படி தான் மயங்கி இருப்பியோ என்று வார்த்தை எனும் வாள் கொண்டு அவளை வதைக்க .
அவன் கேட்ட கேள்வியில் விலுக்கென நிமிர்ந்து பார்த்த இதழோ அவனை தன் பலம் கொண்டு உதறித் தள்ளிவிட்டு விலகி எழுந்துவிட .
அவனோ அடே எப்பா என்னடி பெருசா கோபம் வருதோ , உண்மையைத் தானே சொன்னேன் என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன் கண்களோ அவளை வஞ்சனையுடன் நோக்க .
அதே நேரம் இதழோ அவன் கேட்ட வார்த்தையில் கண்கள் கலங்கி கொண்டு வந்தாலும் அதை சமாளித்தவளோ .
நான் யார் கூட போனா உங்களுக்கு என்ன ? என்று அவளது வார்த்தைகளும் சூடாக வந்து விழ .
செழியனோ நீ யார் கூட போனா எனக்கு என்ன ஆனா உன்னால அடுத்து எந்த நல்லவனும் பாதிக்கப்படக் கூடாது பாரு அதுக்குதான் இந்த அக்கறை என்று குரலில் ஒரு வித நக்கலுடன் கூற .
இதழோ உங்க அக்கறைய உங்களோட வச்சுக்கோங்க என்று அறையைவிட்டு வெளியில் வந்தவளோ லிப்ட்டில் கேன்டீன் இருக்கும் தளம் நோக்கி பட்டனை அழுத்தி விட்டு கோபத்துடன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி இருக்க .
அதே நேரம் இங்கு செழியனுக்கோ தான் ஏன் இப்படி மாறினோம் என்று தெரியாமல் வெறி கண்டன் போல் அங்கிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அடிக்க .
செழியனோ கோபத்தில் அங்கும் இங்கும் நடக்கத் தொடங்க . என்ன வார்த்தை பேசுகிறாள் என்று நினைக்க நினைக்க அவனுக்கோ கோபத்தில் முகமோ சிவந்து தான் போனது .
தற்செயலாக அவன் பேசியதை மட்டும் மறந்து விட்டான் போல . அவன் பேசியதற்கு பதிலடி தான் அவள் கொடுத்தது .
இங்கு லிப்டில் இருந்த இதழுக்கோ அவன் வார்த்தை ஒவ்வொன்றும் ஊசி போல் இறங்க . அதை நினைத்தவளோ வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி இருக்க . திடீரென ஒரு சத்தம் கேட்டு லிப்டோ அப்படியே நின்றுவிட .
இதழுக்கோ ஒரு கணம் திடுக்கிட்டவளோ பின் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று எண்ணியபடி வேர்த்த தன் முகத்தை துடைத்த படி இருக்க . அதுவோ சரியாவது போல் தெரியவில்லை . இதழோ ஒரு கட்டத்திற்கு மேல் பதட்டமும் பயத்துடன் திறக்க பார்க்க. அதுவோ முடியாமல் போனது .
இதழுக்கோ நேரம் ஆக ஆக மூச்சு எடுக்க முடியாமல் தவித்தவளோ லிப்ட்டை தட்டி காப்பாத்துங்க காப்பாத்துங்க என்றவளோ ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் மயங்கி சரிய .
அதே நேரம் இங்கு அறையில் இருந்த செழியனுக்கோ மனதில் ஏதோ இனம் புரியாத பதட்டம் ஏற்படத் தொடங்கியது .
கோபத்தால் அவ்வாறு இருக்கும் வெளியில் சென்றால் சரியாகிவிடும் என்றபடி அவன் அறையை விட்டு வெளியில் வந்தவனோ லிப்ட்டை ஆன் பண்ண அதுவோ எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருக்க.
செழியனோ குழப்பத்துடன் மீண்டும் முயற்சி செய்ய .
அதே நேரம் கதிர் இடம் இருந்து ஒரு அழைப்பு வர அதை கேட்டவனோ அதிர்வுடன் .
என்னடா சொல்ற என்றபடி லிப்ட் நின்ற தளம் நோக்கி ஓடத் தொடங்கினான் .
மூச்சுவாங்க வந்த செழியனை கண்ட ஊழியரகளோ விலகி நின்று கொள்ள .
கதிர் அருகில் சென்றவனோ என்னடா ஆச்சு , இது எப்போ நடந்தது என்று கடுப்புடன் கேட்டவனோ அங்கு லிப்ட்டை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டவனோ .
அங்கு பயத்துடன் நின்று கொண்டிருந்த மேனேஜரை பார்த்தவனோ
என்ன மிஸ்டர் பண்ணிட்டு இருக்கீங்க இது எல்லாம் நீங்க முன்னமே பார்த்து இருக்க மாட்டீங்களா , இப்போ யாராவது உள்ள இருந்த என்ன பண்றது என்று காட்டு கத்தாக கத்த தொடங்க .
கதிரோ செழியா என்று அழைக்க .
அவனோ என்ன என்பது போல் பார்க்க.
கதிரோ அது அது என்று திக்க .
செழியனோ உனக்கு என்னடா வந்தது , நீ ஏன் இப்ப திக்கிற என்று அவரிடமும் காய .
கதிரோ லிப்ட்டுக்குள்ள ஆள் இருக்குட என்று பயத்துடன் கூற.
அதை கேட்ட செழியனோ வாட் என்று அதிர .
அவனோ ஆமா ஆள் இருக்குடா அதான் இப்போ பயமே அவனும் பதட்டத்துடன் கூற .
செழியனுக்கோ அடுத்து என்ன செய்வது என்றே புரியா நிலை .
அதே நேரம் அங்கு பதட்டமும் , பயத்துடன் வந்த கேன்டீன் ஊழியரான கனகாவோ சார் சார் இதழ காணோம் சார் என்று கூற .
கதிரோ ஏம்மா அந்த பொண்ணு இங்க தான் இருக்கும் , இங்கேயே மனுஷனுக்கு தலைக்கு மேல் போர பிரச்சினை போய்ட்டு இருக்கு என்று அவன் முணங்க.
கனகாவோ சார் அந்த பொண்ணு இன்னும் கேன்டீன் உள்ளேயே வரல சார் என்று செழியனை பார்த்தபடி கூற .
அப்போது தான் செழியனுக்கு ஒன்று விளங்கியது .
O my god கதிர் சீக்கிரம் லிப்ட்டை ஓப்பன் பண்ண சொல்லுடா உள்ள இருக்கிறது இதழ்டா என்று படபடக்க .
கதிரோ என்னடா சொல்ற என்று அவனும் பயத்துடன் கேட்க.
ஆமாடா அவ தான் உள்ள இருக்க என்றவனோ அங்கிருந்த அனைவரையும் உண்டு இல்லை என்று ஆக்கியவனோ, சிறிது நேரம் கழித்து லிப்ட்டும் திறக்கப்பட .
இதழ் இருந்த நிலை கண்ட செழியனுக்கோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவளை பார்த்தபடி இருக்க .
தொடரும் ....
Review please 🙏
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா , updates சீக்கிரம் கிடைக்கும் .
