தளிர் - 16
அங்கிருந்து ஓடி வந்த தென்றலுக்கு மூச்சு வாங்கியது .
அங்கு இருந்த ஒரு மரத்தை பிடித்தபடி மூச்சு வாங்கியவளோ சிறிது நேரம் அப்படியே அமர்ந்துவிட .
அவளின் 'மனதோ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் ' என்று கேள்வி எழுப்ப .
தென்றலுக்கு மனதை ஒருநொடி உறுத்தினாலும் அதை புறம் தள்ளியவளோ தான் வந்த நோக்கம் முக்கியம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினால் .
இங்கு பாண்டியனுக்கோ எதுவும் புரியா நிலை அவள் சொல்வது அனைத்தும் உண்மை தான் , அவளை கண்ட பின் வேறு எந்த பெண்ணையும் அவன் பார்க்கவில்லை அல்லவா .
அவள் அருகில் இருக்கும் போது ஏதோ ஒரு உணர்வு அவனை அலைக்கழிக்கிறது அல்லவா .
அவள் மனம் வருந்தினால் இவன் மனதிலும் ஏதோ போல் ஆகிறது அதற்கான காரணம் தான் தெரியவில்லை .
இதுவரை அவன் காணாத அன்பை அவள் கொடுக்கிறாள் என அனைத்தும் தெரிகிறது தெரிந்தும் அவன் விலகத்தான் நினைக்கிறான் .
ஆனால் அவளது ஏதோ ஒரு நடவடிக்கை அவனை அவள் பக்கம் இழுத்து விடுகிறது .
இன்று அவளை முத்தம் இடும் போது கூட அவன் மனதிலோ ஒரு இனம் புரியாத உணர்வு , வேறு எந்த பெண்ணிடமும் அனுபவிக்காத உணர்வு , ஏன் இவளிடம் மட்டும் இப்படி தோன்றுகிறது என்பது மட்டும் அவனுக்கும் விளங்கவில்லை .
அவனிடம் யார் சொல்வது மனதில் உள்ள பெண்ணிடம் மட்டுமே இவ்வாறான உணர்வுகள் தோன்றி மறையும் என .
மனதில் இருக்கிறாள் என்றால் காதலும் அவள் மேல் இருக்கும் என்று அவன் மனதிற்கு தெரிகிறது ஆனால் அவன் தான் அதை ஏற்க மறுக்கிறான் .
அவள் மேல் இருக்கும் காதலை உணரும் நாளும் வரும் .
அன்று காலை அவனை அவசரமாக தென்றல் எழுப்ப .
அவனோ தூக்கம் போன கடுப்பில் உனக்கு இதே வேலை தான வேற வேலையே இல்லையாடி என்று கடும் குரலில் கேட்க .
தென்றலோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனிடம் ஒரு கவரை நீட்ட .
அவனோ அதை வாங்காமல் இது என்ன என்பது போல் அவளை பார்க்க.
அவளோ ஆசையுடன் அந்த கவரை பார்த்தவளோ இதுல வேட்டி சட்டை இருக்கு , இன்னைக்கு எங்க ஊர் திருவிழா நீங்க இதை போட்டுடிட்டு வர்றீங்களா அவனை ஆசையுடன் கேட்க .
அவனோ அவளை பார்த்தபடி இருந்தவனோ படுக்கையில் இருந்து எழுந்தபடி
நீ கொடுக்கிறத நான் ஏன் போடனும் , முதல்ல நீ யாரு எனக்கு இதை கொடுக்கிறதுக்கு , முதல்ல இதை எடுத்துட்டு இங்கிருந்து கிளம்புடி என்றவனோ பாத்ரூமில் நுழைந்து கொள்ள.
தென்றலுக்கோ அவன் இவ்வாறு கூறியதும் முகம் சட்டென வாடிவிட .
அவள் முகம் பார்த்தபடி பாத்ரூமின் கதவை அடித்து சாத்திக் கொள்ள .
தென்றலோ நீங்க போட்டுட்டு தான் வரனும் என்று அதை கட்டிலின் மேல் வைத்தவளோ அங்கிருந்து சென்றுவிட .
பாண்டியனோ அவள் சென்றுவிட்டால் என்பதை உறுதி படுத்திக்கொண்டவனோ அவள் வைத்து விட்டு சென்ற கவரை பிரித்து பார்க்க .
அதில் ஒரு வேட்டியும் , ஒரு கருநீல நிற சட்டையும் இருக்க , அதை மென்மையாக தடவியவன் இதழ்களிலோ மெல்லிய புன்னகை .
மனதிலோ ' சரியான ஆளு தான் அன்னைக்கு அவ்ளோ நடந்தும் தைரியாம மறுபடியும் வீடு வரைக்கும் வராலே, அப்படி என்ன காதல் , இதுவே வேற யாராவது இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பா இவ என்று எண்ணிக் கொண்டிருக்க .
அவன் மனதோ ' உன்னை மாதிரி யாரும் பண்ணி இருக்க மாட்டாங்க என்று கடுப்புடன் பதில் கொடுக்க ' .
பாண்டியனோ நான் எதுவும் பண்ணலயே என்று எதுவும் அறியா பிள்ளை போல் பதில் கொடுக்க .
மனமோ ' அடேய் இது உனக்கே இது ரொம்ப ஓவரா தெரியல , அந்த சின்ன புள்ளைய பிடிச்சு முத்தம் முத்தமா கொடுக்கல நீ ' என்று அவனை குற்றம் சாட்டும் விதமாக கேட்க .
அவனோ திருதிருவென முழிக்க .
மனமோ " என்ன தம்பி இப்போ சொல்லு நீ எதுவும் பண்ணலயா" என்று கேட்க
பாண்டியனோ அது அவள என்ன நெருங்க விடாம பண்றதுக்கு நான் செஞ்சது என்று சமாளிக்க முயல .
மனமோ " எதுக்கு டா அவள நெருங்க விடாம பண்ற , உண்மைய சொல்லு அவள உனக்கு புடிக்கலையா" என்று கேட்க .
பாண்டியனோ எதுவும் சொல்லாமல் முழிக்க .
மனமோ " உன் மனசுக்கு என்ன தாண்டா வேணும் , அவ மத்தவங்க மாதிரி இல்லடா , எந்த பொண்ணும் இவ்ளோ தூரம் இறங்கி வர மாட்டா , நீ பண்றதுக்கு எப்பவோ வேற ஒரு பொண்ணா இருந்தா இந்நேரம் எங்கேயாவது ஓடி போய் இருப்பா " அவனிடம் வாதாட .
பாண்டியனோ நீ சொல்றதும் சரி தான் ஆனா ஒரு பக்கம் பயமா இருக்கு என்று குரலில் ஒரு வித பயத்துடன் கூற .
மனமோ " அது எல்லாம் விடு உனக்கு அவள பிடிச்சு இருக்கா இல்லையா ? என்று கேள்வி எழுப்ப .
பாண்டியனோ சிறு மெளனத்திற்கு பிறகு சிறு புன்னகையுடன் யாருக்கு தான் அவள பிடிக்காது , அன்னைக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ யாருன்னே தெரியாத எனக்கு நைட் வர கூட இருந்து எல்லாம் பண்ணாலே, தனக்கு நீச்சல் தெரியாத போதும் ஒரு ஆட்டுக்குட்டி காப்பாத்த கிணத்துல குதிச்சாலே , என்று அவன் அவளைப்பற்றி ஒவ்வொன்றாக சொல்ல .
அவனை தடுத்த மனதோ " அதை எல்லாம் நான் கேட்கல உனக்கு பிடிச்சு இருக்கா இல்லையா என்று கேட்க .
பாண்டியனோ ஆமா அவள எனக்கு பிடிச்சு இருக்கு என்று கண்களை அழுந்த மூடி திறந்தபடி கூற .
மனதோ " சிரித்தபடி அப்புறம் என்னடா போய் சொல்ல வேண்டியதுதான ஏன் இவ்ளோ தயக்கம் . அதோட உன்னையும் வருத்தி , அந்த பெண்ணையும் வருத்தர என்று கேட்க.
பாண்டியனோ சற்று முறைப்புடன் நான் ஏன் சொல்லனும் , அவளுக்கே என்னை பத்தி தெரியும் , அதான் மேடம் எல்லாத்தையும் சரியா கண்டுபிடிச்சுடுறாங்களே, அப்போ இதுவும் தெரியும் . என் காதலும் அவளுக்கு தெரியும் என்று விட்டு வேட்டி சட்டையை அணியத் தொடங்க .
மனமோ "என்னுமோ போடா ஆனா ஒன்னு சொல்றேன் உண்மையான காதலோ , எதிர்பார்ப்பு இல்லாத அன்போ யாருக்கும் கிடைக்காது , அப்படிதான் தென்றலோட அன்பும் என்று அது மறைந்து விட .
பாண்டியனோ அங்கிருந்த கண்ணாடியில் தன்னை முழுதாக பார்க்க . சட்டையோ அவனுக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்க .
அவனோ சரியா எடுத்து இருக்காளே என்றபடி வீட்டை விட்டு வெளியே வந்தவனோ காரை எடுக்க போக .
அவன் நினைவோ அன்று ஒரு நாள் அவன் பைக்கை துடைத்துக் கொண்டிருந்த போது , அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்த படி நீங்க பைக் ஓட்டுவீங்களா என்று கேட்க .
அவனோ ஆமா என்றுவிட்டு தனது வேலையை செய்யத் தொடங்க .
அவளோ அப்போ என்ன ஒருநாள் இதுல கூட்டிட்டு போறீங்களா என்று கண்களில் ஆர்வம் மேலிட கேட்க.
பாண்டியனோ ஏன் இதுக்கு முன்னாடி பைக்ல போனதே இல்லையா என்று கேட்க.
அதை கேட்டவுடன் அவள் முகமோ சட்டென மாறிவிட .
அதை கவனித்தவனோ என்ன ஆச்சு என்று கேட்க .
அவளோ அது எங்க அப்பா இருந்த போது போனதுதான் அதுக்கு அப்புறம் இல்லை என்றவளோ வீட்டின் உள் சென்றுவிட .
போகும் அவளையே விழி எடுக்காமல் பார்க்க.
உள் சென்றவளோ மீண்டும் திரும்பி வந்து நீங்க வேட்டி சட்டை போட்டு பைக் ஓட்டுனா சூப்பரா இருக்கும் என்று கூறிவிட்டு ஓடி விட .
இப்போது அதை நினைத்தவனின் இதழ்களிலோ மெல்லிய புன்னகை அதே புன்னகையுடன் பைக்கை எடுத்தவனோ திருவிழா நடக்கும் இடம் நோக்கி செல்லத் தொடங்கினான் .
அதே நேரம் இங்கு தென்றலோ அவளின் பாட்டியுடன் கோவிலுக்கு தயாராகி சென்று கொண்டிருக்க .
அவளோடு வந்து சேர்ந்தான் அவளது நண்பன் முருகன் . இருவரும் பேசியபடி கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து சேர .
அவளது பாட்டியோ தென்றல் நீ இங்க இரு நான் போய் சாமிக்கு எல்லாம் வாங்கிட்டு வரேன் என்று செல்லப் பார்க்க .
தென்றலோ பாட்டி நீ இங்க உட்காரு நான் போய்ட்டு வரேன் என்றபடி இருவரும் நடக்கத் தொடங்க .
முருகனோ ஏதோ அவளிடம் பேசியபடி வர . அங்கிருந்த கடையில் இருவரும் பொருட்களை வாங்கியபடி இருக்க .
அதே நேரம் அங்கிருந்த இளம் வயது பெண்களோ ஏய் அங்க பாருடி அந்த பைக்ல வர்வரு அழகா இருக்காரு இல்ல என்று அங்கு பைக்கில் வேட்டி சட்டையில் , கண்ணில் கண்ணாடி அணிந்தபடி வந்து கொண்டிருந்த பாண்டியனை பார்த்தபடி கூற .
தென்றலோ யாரையோ என்று எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்க . அவள் மனதோ ஒருவேளை அவரா இருக்குமோ என்று நினைத்தாலும் , அவரு எல்லாம் வர மாட்டாரு என்று சமாளிக்க .
மீண்டும் அவர்களோ ஏய் இங்க தாண்டி வர்றாரு என்று தங்களுக்குள் சிரித்தபடி பேசிக்கொள்ள .
அவனது பார்வை முழுவதும் அங்கு அவனது சட்டைக்கு ஏற்றார் போல் புடவை அணிந்து , முடியை தளர பின்னி மல்லிச்சரம் அவள் தோளில் வழிந்த படி இருந்த தென்றலின் மீது படிந்தததோ இல்லையோ , அவள் அருகில் இருந்த முருகன் மீது தான் அழுந்த படிந்தது .
அதன் பின்னே தென்றல் யார் அவன் என்று திரும்பி பார்க்க.
தென்றலுக்கோ ஆச்சர்யம் . அவனையே கண்கள் இரண்டும் வெளியே வந்து விடும் அளவு ஆச்சர்யத்துடன் பார்த்தபடி இருக்க .
பாண்டியனோ அவள் அருகில் வந்தனோ முருகனை அழுத்தமாக பார்க்க.
முருகனோ அவன் பார்வை தந்த பயத்தில் தென்றல் நீ பாரு நான் அப்புறம் வரேன் என்று அங்கிருந்து சென்றுவிட.
தென்றலோ அவனையே விழி எடுக்காமல் பார்க்க .
அவனோ முருகன் போன திசையை பார்த்துவிட்டு தென்றலின் பக்கம் திரும்ப .
அவளோ அவனையே அடிச்சு முழுங்குவது போல் பார்க்க .
அவனுக்கே அவளது பார்வையில் வெட்கம் வர . அதை மறைப்பதற்காக சுற்றியும் கண்களை சுழல விட்டவனோ , பின்னந்தலையை வருடியபடி அவளை பார்க்க .
அவளோ சிரித்தபடி அழகா இருந்தது என்று சொல்ல .
அவனோ என்ன என்பது போல் புரியாமல் பார்க்க.
அவளோ உங்க வெட்கம் , அதை தெரியாம என்கிட்ட மறைச்ச அந்த விதம் என்றுவிட்டு நடக்கத் தொடங்க .
பாண்டியனோ ஒரு இதழ் புன்னகையுடன் அவள் பின்னோடு நடக்கத் தொடங்க .
அவளோ புன்னகையுடன் அவள் பாட்டி இருக்கும் இடத்திற்கு வந்து சேர . அவரது பாட்டியே பாண்டியனை கண்டவுடன் ஒரு நல விசாரிப்புடன் அனைவரும் கோவில் உள் நுழைய .
சாமியை வணங்கிவிட்டு அவளது பாட்டியோ நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் தென்றல் எனக்கு கால் வலிக்குது என்று அவர் சென்றுவிட .
தென்றலும் அடுத்து என்ன என்று தெரியாமல் பாண்டியன் அருகில் தடுமாறி நிற்க .
பாண்டியனுக்கோ அவளது நிலையை கண்டு சிறு புன்னகை வர .
அவனோ அப்போ நானும் கிளம்பறேன் என்று செல்லத் தயாராக.
தென்றலுக்கு அவனை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் பதட்டத்துடன் இருக்க . அவளுக்கே இது அனைத்தும் புதிதாக அல்லவா இருக்கிறது . ஏதோ அவனை முதன் முதலாக காண்பது போல் அல்வா இருக்கிறது . தைரியமான பெண் தான் ஆனால் ஏனோ இன்று அவளிடம் தடுமாற்றம்.
அவனோ வண்டி இருக்கும் இடம் நோக்கி நடக்க . தென்றலும் அவன் பின்னோடு வந்தவளோ அவனை பார்த்தபடி இருக்க .
அவனோ பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்ப தயாராக.
தென்றலோ நானும் வரேன் என்று கேட்க .
இதைத்தானே அவன் எதிர் பார்த்தான் , சிரிப்பை கட்டுப்படுத்தியவனோ . அவளை ஏறு என்பது போல் பார்க்க .
அவளும் எங்கே பிடித்து ஏறுவது என்று தெரியாமல் முழித்தவளோ பின் அவன் தோளை பிடித்து ஏறி அமர .
அவனோ ஏன் இதை முதல்லயே செய்ய வேண்டியதுதானே என்று அவளை போலி கோபத்துடன் கேட்க .
அவளோ எதுவும் சொல்லாமல் இருக்க .
அவனோ வேகத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்க . கோவில் இருக்கும் இடத்தில் இருந்த பெண்கள் கண்களோ அவன் மீதே இருக்க .
இங்கு தென்றலுக்கோ கடுப்புதான் கிளம்பியது . இவரை யாரு இவ்ளோ அழகா ரெடியாகி வரச்சொன்னது என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வர .
பாண்டியனுக்கும் அவள் பேசுவது அனைத்தும் கேட்டும் கேட்காதது போல் இருந்தாலும் அவளது இந்த சிறு பொறாமையும் பிடிக்கத் தான் செய்தது .
அவனோ சாலையில் வண்டியோ வேகத்துடன் இயக்கிய படி போக .
தென்றலுக்கோ அவனது வேகத்தில் தடுமாறி எங்கு பிடிப்பது என்று தெரியாமல் இருந்தவளோ.
பின் என்ன நினைத்தாளோ அவன் இடுப்போடு கைப்போட்டு அணைத்து . அவனோடு நெருங்கி அமர்தவளோ அவன் தோள்பட்டை மேல் முகத்தை வைத்தபடி முன் பக்கம் பார்க்க.
பாண்டியனுக்கோ ஒருகணம் அதிர்வுதான் என்றாலும் , பின் அவனும் எதுவும் சொல்லாமல் அணைப்பை ரசித்தபடி வர .
மாலை நேரம் என்பதால் சூரியன் மறைந்தும் மறையாத படி , அடிவானம் சிவந்தபடி காட்சி அளிக்க . அவர்கள் செல்லும் சாலையின் இருபக்கமும் வயல்வெளிகள் காற்றில் அசைந்தாட, அதன் ஓரத்தில் செல்லும் ஓடையில் தண்ணீர் செல்லும் சத்தம் இசையாக , குளிர் காற்று இருவரையும் தழுவி செல்ல , பனிப்போல் காற்றில் நீர்துளிகள் வீச . இருவருக்கும் ஏகாந்த மாலையாக அமைந்தது .
அவளோ கண் மூடியபடி அவன் தோள் வளைவில் முகம் புதைத்தபடி இருக்க .
நீண்ட தூரம் சென்ற பின் வண்டி ஒரு இடத்தில் நிற்க.
பாண்டியனோ கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டியபடி தன் தோளில் கண்மூடி சாய்ந்து இருந்த தென்றலை வண்டி கண்ணாடி வழி கண்டவனோ அவளை மெய் மறந்து ரசித்தபடி இருக்க .
தென்றலுக்கோ அப்போதுதான் வண்டி நின்று விட்டது என்று கண் முழித்த தென்றலின் பார்வை பட்டது என்னவோ பாண்டியனின் பார்வை அவளை பார்ப்பதை மட்டுமே .
அவளும் அவன் விழிப்பார்வையில் சிக்கி கிடக்க.
பாண்டியனோ என்ன என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க.
தென்றலோ சட்டென அவன் இவ்வாறு கேட்டவுடன் தடுமாறியபடி இல்லை என்று தலையாட்டிவிட்டு வண்டியில் இருந்து இறங்கி செல்லத் தயாராக.
பாண்டியனோ போகும் அவள் பின்னோடு வந்தவனோ அவள் இடையில் கைகொடுத்து கையில் ஏந்தி கொண்டு வீட்டின் உள் செல்லாமல் அங்கிருந்த ஊஞ்சல் நோக்கி நடக்கத் தொடங்க . அவளோ அவனை தூக்கியதில் சற்று பதட்டம் ஏற்பட்டாலும் ,தன்னை சமாளித்துக் கொண்டவளோ அவனையே விழி எடுக்காமல் பார்த்தவளோ தன் கண்ணில் இருந்த மையை எடுத்து அவன் காதின் பின் பக்கமாக வைக்க .
பாண்டியனுக்கோ அதை எதற்கு வைக்கிறாள் என்று அறிந்தவன் இதழ்கள் புன்னகை செய்ய .
அவளும் அவன் முகம் பார்த்தபடி அழகா இருக்கீங்க என்று , அவன் கன்னதில் அழுந்த முத்தமிட .
பாண்டியனோ அவள் இதழ் முத்தத்தில் சற்று தடுமாறினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு ஊஞ்சலில் அவளை அமர வைக்க .
அவள் பின் பக்கம் சென்று ஊஞ்சலை மெதுவாக ஆட்டியபடி பேசத் தொடங்கினான் .
அதை கேட்க கேட்க தென்றலுக்கோ அதிர்ச்சியே மேலிட்டது .
தொடரும் ....
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா , updates சீக்கிரம் கிடைக்கும் .
Review please 🙏
