30
'ச்சீ... என்ன மனுஷன் இவேன்?' என்று தான் நினைத்தாள்.
"என்ன நானெல்லாம் மனுஷனானு நினைக்கிறியா?" என்று அவள் மனதை படித்தவன் போல திரும்பவும் அவன் கேட்க..
'ச்சசே.. ராட்சசன்!! அரக்கன்!! மனசில கூட ஒண்ணும் நினைக்க விட மாட்டேங்கிறானே!' என்று அதற்கும் அவள் மனதுக்குள் அவனுக்கு லட்சார்ச்சனை செய்ய..
சட்டென்று குனிந்து அவள் அதரங்களை இரு விரலால் பிடித்து இழுத்தான் அவளுக்கு வலிக்க.. வலிக்க..
"ஸ்ஸ்..!!" என்று முகத்தை சுருக்கினாலும் அவள் விடு என்று கூறவில்லை. வெறித்த பார்வையோடு அவனை தான் பார்த்துகொண்டு இருந்தாள். அவள் கண்களை பார்த்துக்கொண்டே இன்னும் இரு விரல்கள் கொண்டு அவள் அதரங்களை அவன் நசுக்க.. மெல்லிய கண்ணீர் படலம் கண்களுக்குள். ஆனால் வாய் திறந்து விடு என்றோ.. வலிக்கிறது என்றோ.. கூறவில்லை அவள்!
"அவ்வளோ திண்ணக்கம் உனக்கு? ம்ம்ம்!!" என்றவன் இரு விரல்கள் செய்த வேலையை அவன் அதரங்களுக்கு மாற்றினான். அவனின் சற்று பெரிய மீசை அடர்ந்த அந்த அதரங்களுக்குள் பெண்ணின் மெல்லிய சிவந்த அதரங்கள் சிக்கி கொள்ள.. அங்கே கவ்வலும் கொய்தலும் அரங்கேற.. மீண்டும் முகத்தை சுழித்தாள் அஸ்திரா. அவள் பிடரி முடிக்குள் கைகளை விட்டவன், தன்னை நோக்கி இன்னும் இழுத்து இதழ் கொய்தலை அதிகப்படுத்தி.. காய்ப்படுத்தியே விட்டான்.
மெல்ல அதரங்களை விட்டாலும், நீக்கவில்லை அதரங்களை அவன்!!
"என்னடி.. ரொம்ப சுழிக்கிற? நாந்தேன் இந்த செவந்த உதட்ட மொத மொத கிஸ்ஸடிச்சது. தெரியுமா உனக்கு? ஞாபகம் இருக்கா உனக்கு?" என்றான் கண்களில் அந்நாள் கனவுகளை தேக்கியப்படி!!
அவளும் தான் எப்படி மறப்பாள்?
முதன் முதலாக ஒரு ஆணின் வன் இதழ்கள் முரட்டுத்தனமாய் தன் இதழ்களை களவாண்டதை?? அவளின் இதழ் அமிர்தத்தை உறிஞ்சி குடித்ததை? வயதுக்கு ஏற்ற பித்தத்தோடு அவன் கொடுத்த முத்த யுத்தத்தை?? வெறுப்பாக இருந்தாலும் அதையும் தாண்டி உள்ளுக்குள் ஓரமாய் அவனின் அம்முத்தததை தான் ரசித்ததை??
எப்படி மறப்பாள்?? எங்கணம் மறப்பாள் உயிர் வரை தீண்டிச் சென்றதை!!
"என்ன மறந்திருச்சோ? வேணும்னா ஞாபகப்படுத்த வா?" என்று அவன் சிரிக்க.. அச்சிரிப்பில் தெறித்த எள்ளலை.. அவனின் இந்த அலட்சியத்தை வெறித்து பார்த்த பாவையவளின் கண்கள் முன்னே அன்றைய நாள் விரிந்தது.
வீரா தன் முதுகலை பட்டத்தை முடித்துக்கொண்டு தந்தையின் தொழிலை கையிலெடுத்த நேரம். தர்மா வழக்கம்போல் மில் வேலைகளில் தனது திறமையை காட்டிக் கொண்டிருக்க.. ஜெகநாதன் அவர்களது தோப்புத்துறை பார்த்துக்கொண்டிருந்தான். சஞ்சயன் பெரும்பாலும் சின்ன மாமா வீட்டோடு இருப்பதால் அவரோடுதான் அவனது நாட்கள் கழியும். சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு பொறுப்பாக தான் அவரது வரவு கணக்கை அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.
கணக்கில் சிறு பிழை கூட வராது அவனிடம். அதே போல மற்றவர்களையும் செய்ய விட மாட்டான். அவ்வளவு கறார் பேர்வழி.. கணக்கு வழக்கில் அவன்!!
தங்கை மகனின் இந்த கெடுபிடியில் உள்ளம் பூரித்துப் போவார் அம்பலவாணன். தனக்கு பிறகு சொத்துக்களை அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு எப்பவும் உண்டு.
இந்நிலையில்.. அன்றைய வருட திருவிழாவும் ஆரம்பித்தது.
இம்முறை பஞ்சநதிகுளக் காரர்கள் தான் திருவிழாவை தலைமை ஏற்று நடத்த வேண்டும். இதுவே கம்பம் கரை எடுத்து நடத்தி இருந்தால் அம்பலவாணனும் அவரது ஆட்களும் ஏதாவது குட்டையை குழப்பி பிரச்சினை உருவாக்கத்தான் திட்டம் தீட்டுவார்கள். திருவிழா நன்றாக நடந்த முளைக்க சுண்டு விரல் கூட அசைக்க மாட்டார்கள்.
சற்குண பாண்டியன் நாச்சிமுத்து அவரது ஆட்களும் சரி.. இங்கே அசோகன் மற்றும் அவரை சேர்ந்தவர்களும் சரி.. எவ்வளவுதான் கவனமாக பார்த்துக் கொண்டாலும், மற்றவர்களுக்கு அறிவுரையை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், கடைசியில் சரக்கின் கையில் சிக்கி சண்டையில் வந்து முட்டிக் கொள்பவர்களே அதிகம்!!
அதையெல்லாம் தடுக்க முடியாது!! ஆனாலும் இந்த வருட திருவிழாவில் அப்படி நடக்க விடக்கூடாது என, திருவிழா நடக்கும் இந்த 15 நாட்களும் காப்புகட்டி உள்ளதால் ஊர் மக்கள் அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று இரு ஊரின் பஞ்சாயத்திலும் முடிவு எடுக்கப்பட்டது.
அந்த சுத்தம் என்பது அசைவம் சாப்பிடக்கூடாது என்பது தொடங்கி சாராயம் ஊருக்குள் வரவே கூடாது என்பது வரை சில பல கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலான மக்கள் கடவுள் மீது கொண்ட நம்பிக்கை பக்தியினால் அல்ல பயத்தினால் இதை கண் மூடிக்கொண்டு கடைப்பிடித்து விட.. ஒருசில தற்குறிகள் நாத்திகம் பேசி இருக்கிறவர்களையும் குழப்புவார்கள். இதெல்லாம் பொதுவாக எங்கும் நடப்பதுதான்!!
இப்படியாக திருவிழாவுக்கு காப்புகட்டி விட.. உற்சாக கொண்டாட்டத்தோடு ஆரம்பமானது கோவில் திருவிழா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேண்டுதல்கள் விரதங்கள் நிறைவேற்றப்படும். மாவிளக்கு போடுதல்.. பால்குடம் எடுத்தல்.. முளைப்பாரி வைத்து கும்மி அடித்தல்.. தீச்சட்டி ஏந்துதல்.. பூ மிதித்தல் கடைசியாக சாமி ஊர்வலம் என்று முடித்து அதற்கு அடுத்த நாள் சமபந்தி போஜனம் என்று இரு ஊர்களுக்கும் பொதுவாக சமைத்து அன்னதானம் போட்டு திருவிழாவை நிறைவு செய்வார்கள்.
இதில் ஒரு நாள் வானவேடிக்கை கொண்டாட்டமும் மறுநாள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சில சமயம் புதிய திரைப்படங்கள் திரையிடல் போன்றவை எல்லாம் நடக்கும். சாமி ஊர்வலம் மட்டும் முதல் நாள் எந்த ஊர் திருவிழா எடுத்து நடக்கிறதோ.. அந்த ஊருக்கு முதல் நாளும்.. அடுத்த நாள் மற்ற ஊருக்கும் செல்லும். மற்றைய நிகழ்ச்சி எல்லாம் ஒருநாள் நிகழ்வு மட்டுமே!!
இப்படியாக நடந்துக் கொண்டிருந்த திருவிழாவில் சில பல காதல் தூதுகளும்.. காதல் களியாட்டமும் யாரும் அறியாமல் நடைபெறும். இன்னும் சொல்லப் போனால் இந்த திருவிழா தான் பல காதலர்கள் தங்களின் இணைகளைக் காண.. பேச.. கொஞ்ச.. கெஞ்ச.. கூடிக்களிக்க.. வழிவகுக்கும்.
கண்களால் காதல் பேசி.. யாருமறியாமல் தீண்டிச் சென்று..
அவளுக்கு பிடித்த தின்பண்டத்தை போகிற போக்கில் கையில் திணித்து செல்வது..
அவனுக்குப் பிடித்த விதமாய் அலங்காரம் செய்து கொண்டு வந்து அவனை கிறங்க வைப்பது..
அவள் சாப்பிட்ட குச்சியை ஐசை கூட்டத்தோடு கூட்டமாக செல்லும்போது பறித்துச் செல்வது.. அதை அவள் உதட்டை பார்த்துக்கொண்டு உறிஞ்சி சுவைப்பது..
அதில் அவள் நாணி சிவந்து தலை குனிவது..
இன்னும் சில பேர் சற்று தைரியம் கொண்டு ஆலமரத்துக்கு பின்னாலும், வண்டிகளுக்கு பின்னாலும், தன் காதல் இணைகளை அணைத்து முத்தாடுவது.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. அவன் அவள்களை பற்றி!!
கிராமத்து திருவிழா வெறும் திருவிழாவாக மட்டுமல்லாமல் சொந்தங்களின் பாசத்தை வலுவூட்டி.. ஊர்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை போக்கி.. ஒற்றுமையைக் கொண்டு வருவதே முக்கிய காரணம்!! ஆனால் அதிலும் கூட சச்சரவு சண்டையை உண்டு பண்ணி மக்களிடையே சாதி மத பிரிவினையை ஏற்படுத்துவது அம்பலவாணன் போன்ற வக்கிரபுத்தி கொண்டோரின் வேலை.
இம்முறை இளைஞரணி என்ற பெயரில் இரு ஊர் இளைஞர்களையும் ஒன்றாக சேர்த்து திருவிழாவில் களப்பணி முதல் களை எடுக்க வேண்டிய சண்டைக்காரர்களை அனைத்தையும் இளைஞர்களை வைத்து செய்து கொண்டிருந்தான் வீரா.. கூடவே ஜெகனும். இரு ஊர்களின் இரு முக்கிய குடும்பத்து வாரிசுகளின் தலைமையில் செயல்படுவதால் பெரும்பாலும் பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு.. மீறினால் தகர்க்கப்பட்டு.. திருவிழா நல்ல படியாகத்தான் நடந்து கொண்டிருந்தது.
இவர்கள் நால்வரும் ஒன்றாக அவ்வப்போது சுற்றித் திரிகையில் இடையில் சஞ்சயன் எங்காவது கலந்து மறைந்து விடுவான்.
"இந்த சஞ்சயன் என்னடா ஆளையே காணோம்? அப்பப்ப அப்ஸ்காண்ட் ஆகி போகிறானே??" என்று தர்மா கேட்க..
"அவனும் எத்தன நாளைக்கு தேன் மாப்புள நம்ம கூடவே சுத்திட்டு இருப்பியான்.. ஏதாவது பொண்ணை பார்த்து இருப்பியான்.. பின்னாடியே பிராக்கெட் போட போயிருப்பியான்.. விடுறா.. விடுறா.. சிங்கிள்ஸ் பொண்ணுங்கள் வருவதும் போவதும் சகஜமப்பா!!" என்று வீரா சிரித்துக்கொண்டே விழிகளால் திருவிழா கூட்டத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது சஞ்சயன் ஒரு பெண்ணின் கையை பிடித்து ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு நழுவுவது வீராவின் கண்களில் பட மெல்ல சிரித்துக் கொண்டான்.
நண்பர்கள் மூவரும் போவோர் வருவோரை எல்லாம் கேலி பேசி கிண்டல் செய்தாலும் அவ்வப்போதுக் கூட்டத்தையும் கண்காணித்து கொண்டனர்.
அப்போதுதான் அவளைப் பார்த்தான் வீரா. கிராமத்துப் பெண்களுக்கே உரிய அந்த பாவாடை தாவணியில்.. ஒற்றை நீள சடையில் மல்லி பூ வைத்து.. அளவான ஆபரணங்களோடு.. அசத்தலான அலங்காரத்தோடு வளைய வந்தவளை தான் இமைக்காமல் பார்த்தான் வீரா.
மற்ற இருவரும் இவனோடு பேசிக்கொண்டிருந்தாலும் கூட்டத்தையும் கண்காணிக்க வீராகமம் கண்காணிக்கிறான் என்ற நினைப்பில் இருந்தனர். மறந்தும்கூட இவனது பார்வை அஸ்திரா பக்கம் திரும்பும் என்று அவன் உயிர் நண்பர்கள் கூட அறிந்திருக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தெரியும் என்பதால் கிஞ்சித்தும் யாருக்கும் அந்த எண்ணம் இல்லை. ஏன் வீராவுக்கு கூட இல்லை!! அன்று அவள் அவனை கட்டிப்பிடித்து உருண்டு அதன்பின் ருதுவான காலம் வரை..
இப்போதெல்லாம் அவனையும் மீறி அவன் கண்கள் அவளைத் தான் ரசித்து ரசிக்கின்றன.. மனமோ அவள் கடந்து போனாலே பின்னோடு செல்ல சித்தமாக பித்தாகியது!!
வீரா கூட்டத்தை பார்வையிட்டுக் கொண்டே அவள் அருகே சென்றான். பக்கவாட்டில் அவளைப் பார்த்தான். மாலை நேரச் சூரிய ஒளியில் அவள் கன்னம் பளபளப்பாக மின்னியது. அவளது நீள மூக்கும்.. மெலிந்த இதழ்களும் கொஞ்சம் நிறம் கூடி ஜொலித்தது!! அவளின் காதோர மயிரழைகள் மாலை நேரக் காற்றில் சிலிப்பிக் கொண்டிருந்தன. காதில் தொங்கும் ஜிமிக்கி அவ்வப்போது காதோரம் இசைப்பாடின..
கழுத்தில் போட்டுயிருந்த செயின் மார்பில் விளையாட.. கண்களை திருப்ப முடியவில்லை வீரவால்!!
அப்பொழுது தோழியர் கூட்டத்தோடு அருகே இருந்த குளிர்பான கடைக்கு சென்று அவள் கூட்டம் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடிக்க.. வீராவும் அவளைப் பார்க்காதது போலவே அதே கடையில் சென்று கூல்டிரிங்கிங் வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
ஒருவாய் குடித்துவிட்டு அருகே அவன் வைக்க.. ஊர்க்காரர் ஒருவர் தேடி வந்து அவனோடு பேச.. அவனும் அவரோடு சிறிது நேரம் திருவிழாவைப் பற்றி பேசிவிட்டு மீண்டும் அருகிலிருந்த கூல்டிரிங்க்ஸை எடுத்து ஒருவாய் குடித்தான். அவருக்கும் விருந்தோம்பலுக்கு வாங்கிக்கொடுக்க முனைய.. அவர் மறுத்து விட்டு சென்று விட்டார்.
"சரி.." என்று தோளைக் குலுக்கிக் கொண்டவன் மீண்டும் கூல்டிரிங்ஸை எடுக்க.. இம்முறை அதன் மேல் இன்னொரு கையும் பட்டது.
"வேணுமுன்னா கேட்டா வாங்கித் தர மாட்டானா நானு.. இப்படி அற்பத்தனமா என்னோட எடுத்து குடிக்கிறியே.. வெக்கமா இல்ல உனக்கு?" என்று வாடி வாசல் திறக்கக் காத்திருக்கும் காளை போல புசுபுசுவென்று மூச்சை விட்டுக்கொண்டு நின்றிருந்தாள் அஸ்திரா.
"போயும்.. போயும்.. உன்னோடதை நானு குடிப்பேனா.. அதுக்கு விஷத்தை குடிக்கலாம்" என்று அலட்சியமாக கூறியவனிடம் கண்களால் சுட்டிக்காட்ட அவனுக்கு மறு பக்கத்தில் இருந்தது அவன் குடித்து வைத்த கூல் ட்ரிங்க்.
"ஸ்ஸஸ்..!!" என்று அவள் அறியாமல் நாக்கை கடித்துக்கொண்டான் திரும்பி நின்று கொண்டு வீரா.
"சரி.. சரி.. இந்த உன்னது. நீயே குடிச்சுக்கோ" என்று அந்த பாட்டிலை அவள் புறம் திருப்ப.. "உவ்வே.. ச்சீ.. நீயி குடிச்ச எச்சில நான் குடிக்கிறதாவது.. நான் யார் தெரியுமா? அம்பலவாணன் பொண்ணு!! அல்பத்தனமா நடக்க மாட்டேன் உன்னைய போல.. அதுவும் உன் எச்சில.." என்று வாந்தி எடுப்பதை போல் சைகை காட்டிவிட்டு அவள் நகர்ந்து சென்றாள்.
இத்தனைக்கும் வீரா அதை அன்னாந்து தான் குடித்திருந்தான். செல்லும் அவளையே கண் இடுங்க பார்த்தான்.
தோழிகள் முன்னே சென்றுவிட.. அவள் கடைகடையாக பார்த்துக்கொண்டே மெல்ல வந்தாள். சட்டென்று ஆல மரத்துக்கு பின்னால் இழுக்கப்பட.. அதிர்ந்து பார்த்தவள் முன் புதிதாக திறக்கப்படாத கூல்ரிங்ஸ் ஒன்றை நீட்டினான் வீரா.
அவள் கண்களில் சற்றே கர்வம். அவன் அறியாத மெல்லிய நேசம்!!
"பரவாயில்லையே எனக்காக வாங்கி வந்து இருக்க.. அந்த பயம் இருக்கட்டும்!!" என்றவள் முன் அதை ஓபன் செய்து கொடுக்க.. ஒரு வாய் குடித்து அவனை பார்த்து அலட்சிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்!!
"நல்லா இருக்கா?" என்று அவன் கேட்க..
"ம்ம்ம்.." என்றவள் அடுத்தடுத்து குடித்து அரை பாட்டில் காலி செய்யும் வரை அவளை தான் பார்த்திருந்தான் வீரா கண்களில் ஒருவித மின்னலோடு!!
"என்ன?" என்று அவள் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க.. ஒன்றுமில்லை என்று இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் "ஒருவாய் நான் அண்ணாந்து குடிச்சத.. குடிக்க மாட்டேனு சொன்னவ.. வாந்தி எடுத்தவ.. இப்ப நான் வாய வைச்சு உறிஞ்சி எச்சில் படுத்தி குடிச்ச மிச்ச எச்சத்தை ரசிச்சு குடிச்சியா.. அதான் பார்த்தேன்!" என்றான் கண்களில் சிரிப்போடு!!
வாயில் வைத்து இருந்ததை அவள் துப்ப போகும் நேரத்தில்
தாமதிக்காமல் அவள் கழுத்தில் கைபோட்டு வளைத்து, அவள் முகத்தை அருகில் இழுத்து அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சி சுவைத்தான் கூல்டிரிங்கிஸோடு?!
அவளுக்கு திமிறக் கூட தோன்றவில்லை. கண்களை மட்டும் இறுக மூடினாள். கையில் இருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
அவ்வளவு சுலபத்தில் அவளது உதடுகளை விட்டு விட அவன் தயாராக இல்லை. அவள் துவண்டு போகுமளவுக்கு அவளின் சின்னஞ் சிறு இதழில் தேன் குடித்தான்.
இந்த முறை அவனது காதலோடு அவளது பேச்சும் சேர்ந்துக் கொள்ள.. உச்சத்திற்கேறி விட்டது அவனது தாபம்!! அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்து இறுக்கி.. மூச்சுத் திணறுமளவு அவள் இதழ்களோடு இதழ்களை வைத்து முத்தமிட்டான்.
எதிர்க்கும் நிலையை முற்றிலும் கடந்து விட்டாள் அஸ்திரா.
அவன் விட்டு விலகும் போது..
கண்களில் லேசான அதிர்ச்சி தெரிந்தது. உதடுகளோ உலர்ந்து போயிருந்தன.. நடையில் தெம்பு இல்லை தொய்ந்து போக.. உடம்பு மொத்தமும் தளர்ந்து போயிருந்தது அவனது ஒற்றை முத்தத்தில்!!
சுதியேறிப் போய் இத்தனை நேரமும் இம்சையைக் கொடுத்த அவனின் இளமை நரம்புகள் தீண்டப் பட்டதும் அவனால் நம்ப முடியாத அளவுக்கு சுகமான ஒரு இன்ப உணர்ச்சியைக் கொடுத்தது வீராவுக்கு அவளிடத்தில்.. இனி அவள் என்னவள் என்ற எண்ணம் ஸ்திரமானது!!
தீருமோ தாகம்!!
