நான் நம்புறேன்..
மாயவன் ஒரு மிகப்பெரிய லாயர் முன்பு அமர்ந்திருந்தான். அவர் எடுத்த எந்த கேஸூம் தோல்வியில் முடிந்தது இல்லை, அவர் நியாயத்திற்காகத்தான் பாடுபடுவார், ஆனால் குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி தப்பிக்க வழி தேடும் பொழுது, அவர் நல்லதற்காக அந்த ஓட்டைகளை பயன்படுத்துவர்.
அதனால் நேர்மையானவர் ,நியாயமான வழக்குகளுக்கு வாதாடுவார் என்ற விஷயங்களில் அவர் பெயர் பெற்றவர், எந்த கேசாக இருந்தாலும் அவரிடம் சென்றால் சக்சஸ் தான், அவர் முன் தான் அமர்ந்திருந்தான் விஜய் மாயவன்.
“என்ன விஜய், நீங்களே வந்திருக்கீங்க, என்ன விஷயம் ?ஏதாவது பெரிய இஷ்யூ வா? என்று அவர் கேட்க, லேசாக சிரித்தவன், “அதெல்லாம் இல்ல கொஞ்சம் பர்சனல், வேண்டப்பட்டவங்களுக்கு வேண்டப்பட்ட விஷயம் செய்யணும் இல்ல, அது தான் டைரக்டா இறங்கினா, நல்லதுன்னு தோணுச்சு” என்று கூறினான்.
வேண்டப்பட்டவர்களில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறி லேசாக சிரித்தவர், “யார் அந்த வேண்டப்பட்டவங்க? என்ன விஷயம் சொல்லுங்க?” என்றார்.
அவன் ஆத்மிகாவை பற்றி அனைத்தையும் தெரிவித்தான், “ஓ அப்படியா, பாத்துக்கலாம் கவலைப்படாதீங்க” என்று கூறவும் , டிவோஸ்தான சில டாக்குமெண்ட்ஸ்ல எல்லாம் அவங்க சைன் பண்ணனும், அதை சைன் பண்ணி கொடுத்துட்டாங்கனா, அதை எப்படி முடிக்கணும் நான் முடிக்கிறேன் 10டேஸ்ல என்று சொன்னார்.
“ ஓகே, தேங்க் யூ” என்றவன் அப்புறம், “இன்னொரு விஷயம்” என்று சொல்லவும், “ஒரு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணனும்” என்றதும் “மேரேஜ் ரிஜிஸ்டர்ரா? யாருக்கு? என்று அவர் யோசனையுடன் கேட்க, லேசாக சிரித்தவன் “எனக்கு தான்” என்றதும்,
“ வாவ் சூப்பர், இவ்வளவு நாளா மனசு மாறாம இருந்தீங்க, சட்டுனு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணனும் சொல்றீங்க, யார் அந்த பியூட்டி, யாரு உங்கள இம்ப்ரஸ் பண்ணது?” என்று கேட்க, அவன் அர்த்த புன்னகையுடன் சொன்ன விஷயத்தில் அவர்தான் கொஞ்சம் ஆடிப் போனார்.
“ விஜய் நிஜமாதான் சொல்றீங்களா?” என்றதும், “ஆமா அது பாசிபிளா? என்றான்
* பாசிபில் தான், ஆனால் உங்களுக்குள்ள இப்படி ஒரு லவ் இருக்குன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல, இதை நீங்க அவங்க கிட்டயே டைரக்டா சொல்லி இருந்தா, இந்நேரம் உங்க ரெண்டு பேர் லைஃப்புமே நல்லா இருந்திருக்குமே” என்று அவர் கூறவும், அவன் லேசாக சிரித்தவன்,
“ ஒருவேளை லேட்டா தான் என்கிட்ட வரணும்னு இருந்திருக்கா போல, இதுக்கு மேலயும் அவளை விட ஐடியா இல்ல” என்று சொன்னான். அவன் கண்களில் கோபம் வலி ஆதங்கம் காதல் எல்லாமே தெரிந்தது.
“ ஆல்ரைட்” என்றவர் இதில் அவர்கள் சைன் பண்ணும் பொழுது, இந்த டாக்குமெண்ட்டோட சேர்த்து வாங்கிக்கோங்க” என்று சில டாக்குமெண்டை ரெடி பண்ண சொல்லி அவனிடம் கொடுத்தார்.
ஒன்று சுரேஷ் ஆத்மிகாவின் விவாகரத்து, மற்றொன்று விஜய் மாயவன் ஆத்மிகாவின் திருமண பதிவு.
தான் செய்ய நினைத்ததை முடிவு செய்து விட்டவன் அவனுடைய ஆபீஸிற்க்கு சென்று வேலைகளை எல்லாம் முடித்து, மாலையில் சோர்வாக வீட்டிற்கு வந்தான்.
ஹாலில் தான் அனைவரும் அமர்ந்திருந்தார்கள், என்ன எல்லாரும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு கணம் பார்த்தவன், தன் அறைக்கு நேரே செல்ல போக, “விஜய்” என்று அழைத்தார் வாசுகி.
“சொல்லுங்கம்மா” என்று திரும்பினான், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா” என்று கூற, “என்னிடமா? மேல வரீங்களா, இல்ல நான் இங்க இருக்கவா?” என்று கேட்டான்.
மகன் எப்போதுமே அவனுக்காக யோசிப்பவன் அல்ல, தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான், ஆனால் அவனுக்காக நான் என்ன செய்தேன் என்று கேள்வி மனதில் எழுந்தது.
“இப்படியே பேசலாமாப்பா” என்று கேட்க, “பேசலாம்மா சொல்லுங்க” என்று அவன் அங்கே உட்காரவும், அனைவரும் எழுந்து செல்வதை பார்த்தவன்,
“ நீங்க உக்காருங்க, அம்மா நம்ம கீழே ஆபிஸ் ரூம் போயிடலாமா?” என்று கேட்டான், சட்டென அவன் அப்படி சொன்னது மற்றவர்களுக்கு தான் ஒரு மாதிரியா ஆகிவிட்டது,
அவன் வந்து அமர்ந்ததால் அவர்கள் எல்லோரும் எழுந்து செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான் என்று புரிந்தது.
“இல்லனா நீங்க ஏதோ பேசுறீங்க, அதுக்கு தான்?” என்று திவ்யா தவிப்புடன் கூற, “பரவால்லம்மா, அம்மா நீங்க வாங்க” என்று அங்கே இருக்கும் தன் அலுவலக அறைக்கு அவரை அழைத்து சென்றான்.
“ஏய் லூசு, எதுக்கு அவன் வந்து உட்கார்ந்ததும், நீ எழுந்த அதுக்கு தான் அவன் ஏதும் நெனச்சுக்கிட்டான்” என்று அஜய் திட்டினான்.
“ஏய் நான் பழக்க தோஷத்துல எழுந்துட்டேன், அண்ணா வந்ததும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவாங்க, நம்ம இருந்தா சங்கடமாக இருக்கும் என்றுதான் எழுந்தேன். ஆனால் அதை அவர் சங்கடமா அவர் மனசு நினைக்கிறதுனு எனக்கு தெரியாது” என்று கூறினாள் அவள்.
“இப்பதான் தெரியுது, உங்களுக்குள்ள மிஸ் அன்டர் ஸ்டாண்டிங் எப்படி வந்ததுன்னு” என்று கூறினான் சரவணன்,
அவளும் அஜயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் ,இனிமேலாவது கொஞ்சம் அவ கூட முழுசா பழக பாருங்க” என்றதும்,
“ கொஞ்சம் தயக்கமா இருக்கே, இப்படி பழகிட்டோம்” என்று திவ்யா கூற,
“ அப்புறம் ஒன்னும் பண்ண முடியாது” என்று எழுந்து உள்ளே சென்று விட்டான் சரவணன்.
தன் அம்மாவை உள்ளே அழைத்து வந்த விஜய் சொல்லுங்கமா, “என்ன விஷயம்?” என்று அவரை உட்கார வைத்து, தானும் எதிரில் சுமந்து கொண்டு கேட்டான்.
“ விஜய், அது வந்து பா..” என்று தயங்கினார், தன் அம்மா, தன்னிடம் பயன்வதை பார்த்தவன்,
“ என்ன விஷயமா? எதுக்கு என்கிட்ட தயங்குறீங்க, அஜய் கிட்டையும் திவ்யா கிட்டயும் இப்படி பேசுவீங்களா?” என்று அவனையும் அறியாமல், அந்த ஆதங்கம் வெளிப்பட்டது.
அவனுக்கும் தாய் அன்பு வேண்டும் ,அவர் மரியாதையாக தன்னை பார்ப்பது அல்ல, தன்னை தன் மகனாக பார்ப்பது தான் முக்கியம், அதை அவரும் அப்போதுதான் புரிந்தார்.
“எப்பா அப்படியெல்லாம் ஏன் பேசுற, நீ தான்பா இந்த வீட்டோட சாமி” என்று அவர் சொல்ல,
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் இதற்கு பிறகு அவர்களை மாற்றுவது எல்லாம் கடினம்” என்று தோன்ற, “ஒரு பெருமூச்செரிந்து, சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.
அவருக்கு ஒரு மாதிரி கஷ்டமாகிவிட்டது, தன் மகனை புரிந்து கொள்ளாமல் விட்டோமோ என்று..
“சொல்லுங்கம்மா, என்ன விஷயம்?” என்று அவன் மீண்டும் கேட்க, “அது வந்து நீ எப்பப்பா கல்யாணம் பண்ண போற, உன்னுடைய தம்பி தங்கைகள் எல்லாம் குடும்பமா இருக்கும் பொழுது, நீ மட்டும் இப்படி ஒத்தையா நிற்கிறத பார்க்கும்போது எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது ராசா, எனக்கு அப்புறம் நீ இப்படியே தனியா நின்று விடுவியோனு பயமா இருக்குது கண்ணா” என்று கூறினார் அவர்.
அவருக்கு தன்மேல் அக்கறை பாசம் எல்லாமே இருக்கிறது, எல்லாவற்றையும் விட மரியாதை இருக்கிறது, அது தான் அவன் பிரச்சனையாக உள்ளது, அவன் மற்ற பிள்ளைகளைப் போலவே தன்னிடமும் இயல்பாக இருக்கவே விரும்பினான்.
குனிந்து ஒரு கணம் யோசித்தவன், நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தான், முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிந்தது,
“இப்போ என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டான், “நீ கல்யாணம் பண்ணனும்” என்று அவர் தயக்கத்துடன் கூறினார்.
“ நான் கல்யாணம் பண்ணா சந்தோஷப்படுவீங்களா? இல்ல நான் எனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணா சந்தோஷப்படுவீங்களா?” என்று கேட்டான்.
அவர் கண்கள் ஒரு கணம் ஒரு பளிச்சிட, அதை அவன் கவனித்துக் கொண்டான்,
“ நீ கல்யாணம் பண்றது எனக்கு சந்தோஷம் தான் பா, அதுவும் அது உனக்கு பிடிச்ச வாழ்க்கையா இருந்தா, நான் இன்னும் சந்தோஷப்படுவேன்” என்று சொன்னார் அவர்.
அவரைப் பார்த்து லேசாக புன்னகைத்தவன், அவர் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு, அம்மா கவலைப்படாதீங்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்று சொல்ல,
“ தம்பி ஏற்கனவே” என்று அவர் ஏதும் சொல்லவும், “இவ்வளவு நாள் அமைதியாக இருந்தீர்கள் தானே” என்று கூற , “தம்பி” என்று பதறிப்போனார்.
“ ஐயோ நான் தப்பா சொல்லலம்மா, இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டிங்கள, இன்னும் ஒரு ரெண்டு மாசம், எனக்கு டைம் கொடுங்க, ரெண்டு மாசம்ங்கறது அதிகம் தான், அதுக்குள்ள எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றதும், அவர் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று வந்து விட்டது.
“நிஜமாதான் சொல்றியா கண்ணா?” என்று கேட்டார் அவர்,
“ லேசாக சிரித்தவன், உங்க புள்ள மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்க,
“ அவர் நா உன்ன நம்பாம, யாரப்பா நம்ப போறேன், எனக்கு எல்லாமே நீ தானே” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டார், இதை அவனை எதிர்பார்க்கவில்லை.
அவர் அழுவதை உணர்ந்தவன், “அம்மா அழாதீங்க” என்று அவரை தன்னிடம் இருந்து விலக்கி கண்களை துடைத்து விட்டான்.
“உன்னுடைய பசங்களையும் பார்த்துட்டேனா, நான் நிம்மதியா கண்ண மூடுவேன்ப்பா” என்று சொல்லவும்,
“ ஏமா இப்படி எல்லாம் பேசுறீங்க, நான் தான் மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட இல்ல, அழாதீங்க” என்று சொல்லியவன்,
“ எதை நினைச்சும், குழம்பாம யோசிக்காமல் போய் ரெஸ்ட் எடுங்க” என்று அவரை அனுப்பி வைத்தான்.
மகனரையிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் வாசுகி, தற்போது மகள் சொன்னது ஊர்ஜிதம் ஆகிவிட்டது, அவன் ஆத்மிகாவை மணந்து கொள்ளும் யோசனையில் இருக்கிறான் என்று புரிந்தது,
எப்படியோ இருவரும் சந்தோஷமாக இருந்தால் சரி, என்று ஒரு தாய் உள்ளம் ஏங்கத்தான் செய்தது.
ஆனால் இப்போது விஜய்க்கு தான் சற்று குழப்பமாக இருந்தது அவள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்,
ஒருவேளை அவளுக்கு கணவன் பால் அன்பும் காதலும் இருந்தால், அவன் சரியாகி தன்னுடன் ஒழுங்காக வாழ்ந்தால் அந்த நிம்மதி போதும்” என்று அவள் இருந்தால் என்ன செய்வது, இதைப்பற்றி அவளிடம் உறுதி செய்த பின்பு தான் அடுத்த வேலையை தொடர வேண்டும் என்று நினைத்தான்.
காரணம் அவளுக்கு வெறுப்பை மீறி அன்பு இருந்தால் ஒரு வேலை அவன் திருந்த வாய்ப்பு கொடுக்கலாம், இருந்தாலும் அவளை இன்னொருவன் மனைவியாக பார்க்க அவனுக்கு எரிச்சல்தான்,.
அடுத்த நாள் அவன் நீட்டிய டாக்குமென்ட்களை எல்லாம் என்ன ஏது என்று கேட்காமல், சைன் செய்து கொண்டிருந்தாள் ஆத்மிகா, அதை விஜய் திவ்யாவின் மூலமாக தான் கொடுத்திருந்தான்,
“என்னடி நீ பாட்டுக்கு சைன் பண்ணிக்கிட்டு இருக்க, எதையும் படிச்சு பாக்கல? என்று திவ்யாவே சந்தேகமாக கேட்க, சட்டுனு அவளை நிமிர்ந்து பார்த்தவள்,
“ நான் உங்க அண்ணன நம்புறேன், அவரை நம்ப சொல்லி என் மனசு சொல்லுது” என்று மட்டும் சொல்லி மீண்டும் கையெழுத்திட, அவள் சைன் போட்டு விட்டாளா என்று கேட்க உ
ள்ளே வந்த விஜய்க்கும் சரி, அவளிடம் கேள்வி கேட்டா திவ்யாவுக்கு சரி பெரும் அதிர்ச்சி தான்.
தொடரும்.
