மாயவன் - 7

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 4 weeks ago
Messages: 6
Thread starter  

விஜயை புரிஞ்சுக்கல..

 

அந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்தினர் பேசுவதை எல்லாம் விஜய் கவனித்துக் கொண்டுதான் இருந்தான், ஆஹா இப்படியே போனால் இங்கேயே செட்டில் ஆயிடுவா போலயே, சரி இல்லையே” என்று யோசித்தான், 

 

ஆனாலும் என்ன செய்வது இப்போதைக்கு இங்கேயே இருக்கட்டும், தானாக தன் வழிக்கு வருவாள், தன் வாழ்க்கைக்குள் வருவாள் என்று நினைத்தவன்,

 

“ போலாமா?” என்று தங்கையிடம் கேட்க,அவர்கள் இருவரும் அவளைப் பேசி முடித்து அங்கே சேர்ப்பித்து விட்டு, வெளியேற வரும் பொழுது,

 

“ அப்புறம் இன்னொரு ஒரு ஹெல்ப்?” என்று தன் சிநேகிதியிடம் கேட்டாள், அவனும் நின்றான்,

 

“ எனக்கு வந்து லா படிக்கணும்” என்று அவள் தயக்கத்துடன் கூறவும், “எனது லா படிக்க போறியா ஏன்டி திடீர்னு?” என்றாள் திவ்யா,

 

“அது..” அவள் தயங்க, “ஓஹோ லா படிச்சா தான், தைரியம் வருமா?” என்று நக்கலாக கேட்டான் விஜய்,

 

“ நான் அப்படி சொல்லலையே” என்றாள் அவள், பின்ன உன் பேசிக் கோர்ஸ் டிசைனிங் தான பண்ண, ரெண்டு பேரும் எவ்வளவு அலப்பறைகள் செஞ்சு அந்த கோர்ஸ் ஜாயின் பண்ணீங்க, பிறகு இப்போ லா படிக்கணும்ன என்ன அர்த்தம்?

 

“ படிச்சதுக்கு ஒன்னும் பிரயோஜனம் இல்லை, அட்லீஸ்ட் படிக்கிறதாவது, எனக்கோ இல்லனா மத்தவங்களுக்கும் புரோஜனப்படுத்துறதுக்காக இருக்கட்டும், அதுக்கு தான் என்றாள் அவள்,

 

“ அது லா படிச்சு தான் பண்ணனும்னு அவசியம் இல்லை” என்றவன் திவ்யாவை பார்க்கவும்,

 

“ புரியுதுனா, நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்” என்று சொன்னான்,

 

 அவனும் தலையாட்டி விட்டு, “சரி கிளம்புறோம்” என்று அங்கிருந்து வெளியேறினார்கள் இருவரும்,

 

 காரை எடுக்கும் முன் அவளையை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், அவன் பார்வையில் என்ன இருந்தது என்பதை அவளால் கிரகிக்க முடியவில்லை. ஆனால் திவ்யாவின் கண்ணிற்கு தான் எல்லாமே வித்தியாசமாக தெரிந்தது.

 

அவளை வீட்டிற்கு விட்டு விட்டு மீண்டும் தன் அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தான் விஜய்,

 

 அவன் மனதில் முழுக்க முழுக்க அவள் ஞாபகங்களே, இன்னும் பனிச் சாரலாய் ,பசுமரத்தணியாய் பதிந்து போன அவளின் இளம் வயது முகம், அவன் கல்லூரி வயதில், அவள் பதின்ம வயதில் திவ்யாவுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த நாளை அவன் ஒருபோதும் மறக்கவே மாட்டான்

 

 சட்டென அவன் முன் வந்து நின்ற அவளின் சிரித்த முகம், அந்த முகத்தில் இன்று சிரிப்பிற்கு பஞ்சம் என்பது போல் மாற்றிய இந்த கயவனை என்ன செய்வது, முடிவெடுத்துக் கொண்டவன் நிச்சயம் அவனை சிறப்பாக செய்ய வேண்டும், ஆனால் அதற்கு முன் அவனிடமிருந்து ஆத்மிகாவிற்கு விவாகரத்து வாங்க வேண்டும், அதை வாங்கி கொடுத்த பிறகு தான் அவனை சிறப்பாக வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

 

வீட்டிற்கு வந்த திவ்யாவோ, , “அம்மா, என்னங்க, அண்ணி அண்ணா” என்று கத்திக்கொண்டே வந்தாள்.

 

 “அஜய் தான், ஹேய் எதற்கு வரும் பொழுது இப்படி அலராம் அடிச்சிட்டு வர, குழந்தை தூங்குறான்” என்று கூறவும்,

 

“ இங்கு வாங்க, முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்” என்று அனைவரையும் அழைத்தாள்.

 

“ என்னடி உங்க அண்ணன் கூட தானே போன, சரி இல்லையே என்று சரணவணன் கேட்கவும்,

 

“ அட அதை சொல்ல தான் வர சொன்னேன்” என்றவள், சோபாவில் நடுவில் வந்து அமர, “அம்மா ,கணவன், அஜய், தீபிகா என்று அவளை சுற்றி அமர்ந்தனர்.

 

 அவள் வெகு நேரம் யோசனையில் இருக்க, “விஷயத்தை சொல்லுடி, என்னமோ வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டம் போடுற மாதிரி எங்கள வேற கூட்டு வச்சிட்டு, நல்லா உக்காந்துட்டு இருக்கே, உனக்கு தான் வேலை வெட்டி இல்ல, எனக்குமா இல்ல?” என்று சொல்லவும்,

 

“ அம்மா” என்று முறைத்தாள், அவர், “பின்ன டக்குனு விஷயத்தை சொல்லுடினா உக்காந்து யோசிச்சிட்டு இருக்க, பெருசா திட்டம் போடுற மாதிரி” என்று சொல்லவும் உதட்டிற்குள், சிரித்துக் கொண்டான் சரவணன்.

 

 அவனை பார்த்து முறைத்தவள், “வாயா உனக்கு வீட்டுல வச்சுக்கிறேன்” என்றதும், “அய்யய்யோ நான் எதுவும் பண்ணல தங்கமே, அத்தை ஏன் என் பொண்டாட்டிய திட்டுறீங்க?” என்றான்.

 

 “அது சரி” என்று அவளை திரும்பிப் பார்த்து, “சொல்லு நீ சீக்கிரமா” என்று கேட்டார். 

 

“அது வந்து நம்ம இதுவரைக்கும் விஜய் அண்ணாவை சரியா புரிஞ்சுக்கலனு நினைக்கிறோம், அவர நாம அப்பா ஸ்தானத்துல வச்சு பார்த்ததினால், டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிட்டோம்னு தோணுது” என்று சொல்ல,

 

“அதுல தப்பில்லையே” என்றான் சரவணன், “அது தப்பு இல்ல தான், இருந்தாலும் அவர் எங்க மேல அக்கறையா இருக்காரா,  

 

அப்பா மாதிரி நினைச்சு மரியாதை என்ற பேர்ல நாங்க ஒரு வட்டத்துக்குள்ள இருந்துட்டோம், நானும் அஜ்ஜையும் பழகுற மாதிரி அண்ணா கூட மூவ் ஆக மாட்டோம், அதனாலேயே அவர் என்ன நினைக்கிறார், என்ன ஃபீல் பண்றாருன்னு கூட எங்களுக்கு தெரியாம போச்சு போல” என்று சொல்லவும்,

 

 இதையெல்லாம் வாசுகி யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தார், “எதனால் அப்படி சொல்ற?” என்று கேட்டார்.

 

தீபிகாவும், “அது மாமாவுடைய இயல்புல, அவர் எப்போவும் அப்படித்தானே இருக்காரு, அதனால நீங்களும் அவர்கிட்ட நெருங்கி பழகாமல் இருந்திருக்கலாம்” என்று ஆதரவாக பேசினாள்.

 

 “இல்ல அண்ணி எனக்கு அப்படி தோணல” என்று சொல்லவும், அஜய் பொறுமை இழந்து, “முதல்ல விஷயத்தை சொல்லு, எதுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கேன்னு, அப்புறமா அது உண்மையா இல்லையா?” என்று ஆராய்ச்சி பண்ணலாம் என்றான். 

 

“அதுவா?” என்று அவள் இங்கு ஆத்மி வந்ததிலிருந்து விஜய் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் கூற, மற்றவர்களும் யோசனையில் ஆழ்ந்தனர்.

 

 அவன் சிரித்து பார்த்ததில்லை, பேசி பார்த்ததில்லை, பெரும்பாலும் குடும்பத்தினருடன் இயல்பாக பழக மாட்டான், ஒரு வேளை அவன் ஒரு வரையறைக்குள், அவன் ஒரு கூட்டிற்குள் இருந்து விட்டானோ இல்லை இருத்து வைக்கப்பட்டானோ,

 

 அம்மாவும் அவனிடம் ஒரு மரியாதையாகவே பழகுவார், மகள் சொன்னது போல, எல்லாம் சேர்ந்து, அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை கூட அறியாமல் விட்டு விட்டோமோ என்று நினைத்தார்கள். 

 

“இதெல்லாம் கூட பரவால்ல பா கடைசில ஒன்னு சொன்னார் பாருங்க” என்று அவள் கூற

 

“ எனது?” என்றார் வாசுகி, அஜ்ஜையும், “இதுக்கு மேல என்ன சொல்லியிருப்பாரு?” என்று யோசனையுடன் பார்த்தான்.

 

 சரவணன், “ப்ரொபோஸ் பண்ணிட்டாரா?” என்று கேட்க , “இல்லை இப்போ இருக்கிற நிலைமையில ப்ரொபோஸ் பண்ணாருன்னா அறை கொடுப்பாளோ, இல்லை பயந்து ஓடிடுவா, அப்புறம் நம்ம கண்ணில் கூட இருக்க மாட்டா, அவ இப்படி வந்து நிப்பானு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என்று சொல்லவும்,

 

 தன் அண்ணனுக்கே அவளை பிடித்திருக்கிறது என்றால், நிச்சயம் ஏதோ நல்ல பெண்ணாகத்தான் இருக்க வேண்டும், நான் தான் அவளை பற்றி புரியாமல் கடிந்து கொண்டோமோ என்று நினைத்தான் அஜய். 

 

“சரி என்ன சொன்னான், உங்க அண்ணன்” என்று கேட்டார் வாசுகி,

 

“ அவ எனக்கு சீக்கிரம் டிவோர்ஸ் கிடைக்க ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டா பாருங்க, உனக்கு இரண்டு மாதத்தில் நான் டிவோர்ஸ் வாங்கி தரேன், ஆனா பதிலுக்கு நான் கேட்கிறதை நீ கேட்கிறதை கொடுக்கணும்” என்று விஜய் சொன்னதை அவன் எப்படி சொன்னானோ, அப்படியே சொல்லவும், அதை அனைவரும், ஆ என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“ நிஜமாவடி சொல்ற?” என்று முகவாயில் கை வைத்தபடி கேட்டார் வாசுகி. 

 

“இவ்வளவும் உங்க அண்ணன் பேசினாரா?” என்று இன்னும் ஆச்சரியம் விலகாமல் கேட்டாள் தீபிகா,” நிஜமாதான் சொல்றியாடி, இல்லை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போடுறியா?” என்று கேட்டான் சரவணன். 

 

“அட உங்க மேல ப்ராமிஸா” என்று அவன் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டவும், “அடியே உனக்கு தாண்டி பிரச்சனை, நான் போய் சேர்ந்தேனா” என்று சொல்ல, 

 

“அவனை முறைத்தவள், உண்மைய தான் சொல்றேன், இப்படியே தான் பேசினாரு, எனக்கே ஷாக் ஆயிடுச்சு, அண்ணனா இவ்வளவு பேசுறாரு, சிரிக்கிறார் என்று, காமெடி எல்லாம் வேற பண்றாரு, 

 

சொல்லப்போனால், நான் ஆத்மியை புரிஞ்சு வெச்சுட்டு இருக்கிறது விட, அவர் தான் அதிகமா அவளை பத்தி சொல்றார், இன்னும் நாளைக்கே அவள நான் என்னுடைய பொட்டிக்கு வேற கூட்டிட்டு போக சொன்னார், பேஷன் டிசைன்க்காக என்று சொல்லவும், ஓஹோ என்று கூறினார்கள் அனைவரும் கோரசாக. 

 

“உங்கண்ணன் பெருசா ஏதோ பண்ண போறான், அப்படித்தானே?” என்று சரவணன் கேட்க, “அதுதான் நானும் நினைக்கிறேன்” என்றாள் அவள்,

 

 ஆனால் அஜய் தான், “இருந்தாலும் டிவோர்சான பொண்ணு” என்று இழுக்க, வாசுகியும் திவ்யாவும் ஒரு சேர, “டிவோர்சான பொண்ணா இருந்தா என்ன, பரவால்ல, என் பையன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குதுன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா ,இந்நேரம் அவங்களுக்கு குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருந்திருப்பாங்க” என்று பெருமூச்செறிந்தார்,

 

“ எதெது எப்பப்போ நடக்கணும்னு இருக்கோ அப்பப்ப நடக்குது போல, எல்லாத்துக்கும் கால நேரம் பொருந்தி வரணும், என்ன பண்றது?” என்று சோகமாக கூறினார் அவர்.

 

“அவ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா? எவ்வளவு சந்தோஷமா இருந்தா, அவ இருக்கிற இடமே கலகலன்னு இருக்கும், அப்படி இருந்தவ கடைசில இப்படி வந்து நிற்பான்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என்றாள் திவ்யாவும்,

 

“ எனக்கு என்னவோ உங்க அண்ணா வந்து செகண்ட் மேரேஜ் பண்ணிக்க கேப்பாருன்னு நினைக்கிறேன்” என்று யோசனையுடன் கூறினான் சரவணன்.

 

“ அப்படி இருந்தா சந்தோஷம்தான், ஆனால் அவ அதுக்கு ஒத்துக்கணுமே” என்றாள்,

 

 “ஆத்மீகா அவ மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்ல அது மட்டும் நல்லா தெரியுது” என்று சொல்ல,

 

“ ஏய் உங்க அண்ணன பத்தி நீ என்ன நெனச்ச, அவன் உனக்கு அண்ணன் என்கிறதை விட என்னோட ஃப்ரெண்ட். 

 

இந்த ரெண்டு மாசத்துல அவளை எப்படி மாத்துறான்னு மட்டும் பாரு ,அப்படி இல்லனா கூட ஆட்டோமேட்டிக்கா அவளை ஓகே சொல்ல வைப்பான்” என்று சிரித்தபடி கூறினான் சரவணன், 

 

“பார்க்கலாம்” என்று அனைவரும் கூறினார்கள், அதேநேரம் மிகப்பெரிய லாயர் முன் அமர்ந்திருந்தான் விஜய் மாயவன். கையில் இரண்டு டாக்குமெண்ட் ஒன்று சுரேஷ் மற்

றும் ஆத்மிகாவின் விவாகரத்து பத்திரம், இன்னொரு அவனுக்கும் அவளுக்குமான திருமண பதிவு.

 

வருவான்.

 

 

 

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top