நான் கேட்பதை கொடுத்து விடு
ஆத்மிகா விஜய்யிடம் தேங்க்ஸ் என்றதும், எதுக்கு தேங்க்ஸ் என்று கேட்டான்,
“ இல்ல இப்போ..” என்று அவள் சொல்ல தயங்கினாள், “இப்போ என்ன நடந்துச்சு, ஒருத்தன் ஒரு பொண்ண பத்தி ரோட்ல நின்னு தப்பு தப்பா பேசிகிட்டு இருக்கான், அதுவும் பொண்டாட்டி என்ற பெயரில், அதை நீ கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கிற அதுக்கு தேங்க்ஸா?” என்று அவன் சற்று அடக்கப்பட்டு கோபத்துடன் கேட்கவும்,
“ஐயோ அது இல்ல” என்று பதறிப் போய் நிமிர்ந்தாள் அவள், அவன் கண்களில் அவ்வளவு கோபம்,
சட்டென குனிந்து கொண்டாள்.
திவ்யாவும், “அண்ணா” என்று ஏதோ சொல்ல வர, கையை உயர்த்தி அவளை தடுத்தவன்,
“ இங்க பாரு உன் நேச்சரே இதுதானா, அதுல இருந்து கொஞ்சமாவது வெளியில் வர முயற்சிக்கலாம், ஆனா அப்படி கிடையாது இல்ல ,நீ போல்டான பர்சன் தான, எதையும் தைரியமா ஃபேஸ் பண்ற ஒரு பர்சன்தான,
உன் நேச்சர் இது கிடையாது, எல்லாத்தையும் ஸ்போட்டிவா, பாஸிட்டிவா பாக்குற ஆள் தானே, எதையுமே தைரியமா பேசுற ஆள் தானே” என்று அவன் பாட்டுக்கு கேட்க, திவ்யாவிற்கு தான் அதிர்ச்சி, ஆச்சரியம் அவளை இவ்வளவு கவனித்திருக்கிறானா?” என்று ,அவள் மனதில் ஒரு சிறு சந்தேகம் அப்பொழுதுதான் எழுந்தது.
ஆனால் அவள் கேட்கவில்லை, அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள், ஆத்மியோ அவன் கேட்க கேட்க கைகளை பிசைந்தபடி தலையை குனிந்து கொண்டிருந்தாள், உன்ன தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்” என்று சற்று அழுத்தம் திருத்தமாக அதட்டியபடி கேட்கவும்,
சற்று நிமிர்ந்து பார்த்தவள், “அது” என்று தயங்கினாள்,
“ எது? உன்னை இப்படி ஒரு கோழையாக ஆக்கி வைத்திருக்கிறான், அதுக்கு தேங்க்ஸா?” என்று மீண்டும் எரிச்சலாக கேட்டான்,
“இல்ல, நான் கோழை எல்லாம் இல்ல” என்று அவளுக்கு கத்த வேண்டும் போல இருந்தது.
“உண்மையாவே நீ எனக்கு தேங்க் பண்ணனும்னு நினைச்சேனா, உன்னை நீயே பழைய மாதிரி மாத்திக்க, அதுதான் எல்லாருக்கும் நல்லது, அப்புறம் உண்மையாவே அந்த பொறுக்கிக்கு டிவர்ஸ் கொடுத்துட்டியா?” என்று கேட்டான்.
அப்ளை பண்ணிட்டேன், அவனுக்கு போய் சேர்ந்து இருக்கு, அதுதான் டென்ஷன்ல கத்திட்டு இருக்கான், அப்புறம் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றாள் தயங்கியபடி.
அவள் இந்த அளவிற்கு பேச ஆரம்பித்ததே பெரிய விஷயம் என்று நினைத்தவன், கீழே குனிந்த படி இருந்தவளை, “இங்கு பார்” என்று அவள் முன் சொடக்கு போட்டு கேட்டான்.
அவள் பதற்றத்துடன் நிமிர்ந்து பார்க்க, “என் கண்ண பாத்து பேசு, நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன், நான் ஒன்னும் பேய் கிடையாது, மனுஷன் தான் பாரு, ரெண்டு கை ரெண்டு காலு தான் இருக்கு” என்று அவன் ஆக்ஷன் செய்யவும் ,அவளுக்கு சிரிப்பு வந்தது,.
திவ்யாவிற்கு தன் அண்ணன் இப்படி எல்லாம் பேசுவனா என்று ஆச்சரியமாகத்தான் இருந்தது, அவள் அதிர்ச்சியில் ஆ என்று நின்று இருந்தாள், ஆத்மிக்கு சிரிப்பு வர பார்க்க, இருந்தாலும் அவன் முன் சிரிக்க அமைதியாக குனிந்து கொள்ள, அவள் இதழ்கள் துடிப்பதை பார்த்தவன், சிரிப்பு வந்தா சிரிக்கலாம் தப்பு இல்ல” என்று சொல்லவும்,
“ அதெல்லாம் இல்லையே” என்றாள் அவள், அவள் முகத்தில் சிரிப்பை பார்த்த பிறகு தான் அவனுக்கு கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது போல் இருந்தது.
“சரி ஏதோ ஹெல்ப் பண்ண சொன்ன, என்ன ஹெல்ப்?” என்று கேட்டான்.
“ அது வந்து, அவன் எப்படியும் எனக்கு டிவோர்ஸ் கொடுக்கா கூடாதுனு தான் பார்ப்பான், ஏன்னா அவன் ஒரு சாடிஸ்ட்,
“ நான் நிம்மதியா சந்தோஷமா இருந்திட கூடாதுங்கறது இல்ல, உறுதியா இருக்கிறான், என்னை மாதிரி சம்பளம் இல்லாத வேலைக்காரிய யாரும் இருக்க மாட்டாங்களா, அதனால அவன் என்ன பண்ணாலும் கேட்காம அவன் சொன்னதெல்லாம் செஞ்சிட்டு இருக்குற ஒரு அடிமையை அவ்வளவு சீக்கிரம் அவன் விட்ற மாட்டான்” என்று சொல்ல சொல்ல விஜயின் கண்கள் கோபத்தில் சிவந்தது.
அதை ஆத்மிகா கவனிக்கவில்லை என்றாலும், திவ்யா கவனித்துக் கொண்டுதான் இருந்தால், தன் அண்ணனே அவள் இப்படி பார்த்ததே இல்லை, அவன் கோபத்தை பார்க்கிறாள், அவன் சிரிப்பை பார்க்கிறாள் ,அதுவும் ஆத்மி வந்ததிலிருந்து,
எப்போதுமே பெரிய அண்ணன் என்று அவர்களும் அவனுக்கு மரியாதை கொடுத்து நின்றார்கள், அவன் மேல் எப்போதும் மரியாதை இருக்கும் குடும்பத்தை தாங்கியவன் என்று,
ஒரு வேளை தாங்கள் அவனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் போய்விட்டமோ என்று முதல் முறை தோன்றியது திவ்யாவிற்கு,
ஆத்மி அவனுக்குள் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறாள் என்றால், ஏதோ சரியில்லை எங்கேயோ ஏதோ ஒன்று தவறாகி போயிருக்கிறது என்று நினைத்தாள்,
இதை முதலில் அம்மாவிடமும் கணவனிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
அதே நேரம் எப்படி இருந்த தன் தோழியை, இப்படிப்பட்ட ஒரு பாழும் கிணற்றில் போய் தள்ளிவிட்டு இருக்கிறார்கள்,
இப்படி ஒரு திருமண வாழ்வு தோல்வியில் முடிந்தால், அந்த பெண் எப்படி உருவிழந்து நிற்பாள் என்பதற்கு ஆத்மிகா நல்ல ஒரு எடுத்துக்காட்டு, இல்லை கெட்ட எடுத்துக்காட்டு, தோழியை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
ஒரு வேளை ஆத்மிகாவும், தன் அண்ணனும் சேர்ந்து இருந்தால் என்று மனம் எதையெதையோ சிந்திக்க, கடிவாளம் போட்டது ஆத்மியின் குரல்..
“அதனால அவன் டிவோர்ஸ் கொடுக்காம இருக்குறதுக்கு வேணும்னே இழுத்தடிப்பான், இல்லனா ஏதாவது டிமாண்ட் பண்ணுவான், அவன் கிட்ட இருந்து எனக்கு விடுதலை வேணும், அதுக்கு சீக்கிரம் இது முடிகிறதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என்று கூறினாள்.
ஒருகணம் யோசித்தவன், “நான் பண்ணா பதிலுக்கு எனக்கு என்ன பண்ணுவ?” என்று கேட்டான்,
சட்டுனு அவனை திரும்பி பார்த்தாள் திவ்யா, இப்படி எல்லாம் அவன் பேசுபவன் கிடையாது,
“ என்ன சொல்றீங்க? ஏதாவது ஃபீஸ் கொடுக்கணுமா?” என்று கேட்கவும், “ஃபீஸ் தான், நான் பிசினஸ்மேன் இல்லையா? எதையும் ஃபீஸ் இல்லாம பண்ண மாட்டேன்” என்று சொல்ல,
“ நீங்கள் லாயரா? நீங்க வாதாடுவீங்களா?” என்று கேட்டாள் அவள், லேசாக சிரித்தான்.
“இல்ல இன்னும் இரண்டு மாசத்துல அவன் கிட்ட இருந்து உனக்கு நான் டிவோர்ஸ் வாங்கி தரேன், அதுக்கு ஃபீஸா நான் என்ன கேட்கிறேனோ, நீ செய்யணும், ஓகே வா?” என்று கேட்டான்.
“ஃபீஸா என்கிட்ட கொடுக்கிறதுக்கு ஒன்னும் இல்லையே” என்றாள் அவள்,
“இல்லை இருக்கு, அது உன்னால மட்டும் தான் கொடுக்க முடியும்?” என்று சொல்லவும் அவளுக்கு புரியவில்லை ,அவள்தான் உயிர்ப்பை இழந்து, என்ன சொல்கிறார்கள், ஏதோ இந்த உலகத்தில் இல்லாதவள் போல் இருக்கிறாளே, ஆனால் திவ்யாவிற்கு எல்லாமே குதர்க்கமாக இருந்தது.
ஏதாவது எக்குத்தப்பாக வில்லத்தனமாக கேட்பானோ என்று யோசித்தவள், சேச்சே என் அண்ணன் ரொம்ப நல்லவன், அப்படி எல்லாம் தப்பா எல்லாம் கேட்க மாட்டான்,
வேற என்னவா இருக்கும், அதுவும் ஆத்மீகா கொடுக்கணுமா? அப்படி தப்பானவனாக இருந்திருந்தால், தன்னை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் பேச மாட்டான்,
ஆத்மியின் மனதிலும் இந்த எண்ணம் ஓடியது, தங்கையை வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் ஃப்ளர்ட் செய்ய மாட்டானே என்று, முதலில் விஜயை அவள் அப்படி யோசிக்கவும் இல்லை, என்ன கேட்க போகிறான் என்று தான் தோன்றியது.
“ என்னால கொடுக்க முடிந்தது என்றால் கண்டிப்பாக கொடுக்கிறேன்” என்றாள் அவள்,
“ தட்ஸ் குட், சரி, இந்த கேஸ் முடிச்சுட்டு நான் கேட்கிறேன், அப்ப நீ மறுக்கக்கூடாது” என்று சொல்லவும்,
ஐயையோ அவசரப்பட்டு வாக்கு கொடுக்கிறோமோ என்று ஒரு மனம் சொன்னாலும், ஏனோ இன்னொரு மனம் அவனை நம்ப சொல்லியது, “சரி” என்றாள்.
தென் ஓகே விடு, நான் பாத்துக்குறேன் என்றவன்,
நீங்க ஹாஸ்டல் பத்தி விசாரிங்க, எனக்கு ஒரு ஃபோன் கால் பேசணும், நான் கொஞ்சம் வேலைய பாத்துட்டு வரேன் என்று சொல்லவும் திவ்யாவும் ஆத்மிகாவும் உள்ளே சென்றார்கள்.
தன் அண்ணனை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள் திவ்யா, காரணம் அவன் முகத்தில் என்றும் இல்லாத ஒருவிதமான மலர்ச்சி,
எப்போதும் எதோ ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் இப்போது இல்லை, அதைவிட காலையில் ஆத்மிகாவை பார்த்ததிலிருந்து அவன் முகத்தில் கோபம் தவிப்பு இதுபோன்ற உணர்வுகளை தான் பார்க்கிறாள்.
அவன் அண்ணனின் முகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே படுத்தாது , என்று நினைத்திருக்க அவன் உணர்வுகளையும் ஆத்மி தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறாளே,
“ ஐயோ” என்று இருந்தது, யாராவது எனக்கு பதில் சொல்லுங்கடா என்று சொல்வது போல் இருந்தது,) அவளுக்கு, சரி முதல்ல விசாரிப்போம் என்று இருவரும் உள்ளே சென்று டிடைல்ஸ் எல்லாம் கேட்டனர்.
பூரண திருப்தி ஆல்ரெடி சுரேஷ் செய்த அலப்பறைகளை எல்லாம் அந்த நிர்வாகியும் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்.
‘உனக்கு இங்க நல்ல சேஃப்டிமா, நீ கவலையே பட வேண்டாம், எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம், அவனை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்றதுக்கு நீ பண்ணாம இருந்திருக்கலாம் ,
தனியா இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்ட என்று அவளின் ஒடுங்கிய தோற்றத்தை பார்த்து கூறினாள்.
“ நீ சின்ன வயசுல இருந்து இப்படி தான் இருந்தியா, இல்ல..? என்று அவர் ஏதோ கேட்க.. “அய்யோ நல்லா இருந்தா மேடம், இப்பதான் நானே என் ஃபிரண்ட் பார்த்ததும் எனக்கே ஒரு மாதிரியா ஆயிடுச்சு “என்று சொன்னாள் திவ்யா.
“ஆமா இவன மாதிரி ஆள் எல்லாம் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் அதிலிருந்து முதல்ல வெளியே வரணும், அதிலிருந்து நீ வெளியே வந்தாலும் தன்னால நல்லா ஆயிடுவா” என்று சொல்லவும்,
“சொந்தக்கால்ல நிக்கிறோம், நம்ம கைல சம்பாதிக்கிறோம் அப்படின்னு ஒரு தெம்பு வரும்பொழுது, ஆட்டோமேட்டிக்கா, நீ நல்லா இருப்ப டா” என்று கூறினார் அந்த நிர்வாகி,
“ தேங்க்யூ மேம்_ என்றவள், “இப்போ இந்த மந்த் ரென்டல் எவ்வளவு மேம்” என்று கேட்கவும்,
“ உன்னுடைய சூழ்நிலையை, நீ சொன்ன, சோ உன்கிட்ட இருந்து நாங்க எதுவும் வாங்க போறதில்ல,ஆனால் பே பண்ண வேணும் இல்லையா நாங்களே காசு போட்டு அதை பே பண்ணிக்கிறோம்,
நீ வேலைக்கு போயிட்டு உனக்கு சம்பளம் வந்த பிறகு கொடு என்று சொன்னதும், சட்டென அவர்களை அணைத்துக்கொண்டாள் ஆத்மிகா,
உலகில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள், யார் என்ன என்று தெரியாமல் வந்து, எனக்கு இன்று காலையில் இருந்து எத்தனை உறவுகள்.
ஆனால் பேசிவிட்டு உள்ளே வந்த விஜயின் பார்வை அங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இல்லை, இப்ப
டியே போனா இங்கே செட்டில் ஆயிடுவா போலயே” என்று நினைத்தான் அவன். என்ன பண்ணலாம் என்று யோசனை வந்தது.
வருவான்.
