என்ன திமிராடி?
விஜய் ஆத்மிகாவின் கணவன் சுரேஷின் கையை இறுக்கமாக பற்றி இருந்தான்,
“ஏய் அதுக்குள்ள இங்க வந்து இன்னொருத்தன பிடிச்சிட்டியா? எவ்வளவு தைரியம் டி உனக்கு, இதுக்கு தான் இந்த ஊருக்கு வந்தியோ?” என்று கடுப்புடன் கேட்டான்
வலியில் முகம் சுருங்கியது அவனுக்கு, “டேய் ராஸ்கல்” என்று சொல்லவும், அவன் கை தானாகவே ஆத்மியின் தலைமுடியில் இருந்து பிரிந்தது, அவள் தலைமுடியிலிருந்து கை எடுத்த பிறகுதான், விஜய்யும் அவன் கையை விட்டான்.
“ ஏய், என்ன பண்ணிட்டு இருக்க? இங்கே நீ போனா போதும்னு போய் தொலைந்ததுனு விட்டா, இங்க வந்து இன்னொருத்தன் கூட சுத்திட்டு, என் பேரை கெடுக்குறதுக்குனே இருக்குறியா,
இங்க நம்ம சொந்தக்காரங்க இருக்குறாங்க நாயே, ஒழுங்கா வீட்டுக்கு வாடி” என்றான்.
பொது இடம் என்று பாராமல் அவளை இஷ்டத்துக்கு பேசவும் கூனிக் குருகி போனாள் ஆத்மி அந்த இடத்தில்,
அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா, எப்படி இந்த பார தூரமான வார்த்தைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள், எவ்வளவு செல்லமாக வளர்ந்த பெண், அவளை கையில் வைத்து தாங்கும் தந்தை சகோதரர்கள் தாய் இத்தனை பேர் இருந்தும், எப்படிப்பட்டதான ஏச்சுப் பேச்சுக்கள் இவனுடனா வாழ்ந்தாள்.
செய்வதறியாது திகைத்து அவள் நிற்க, விஜய்க்கு சுர்ரென்று ஏறியது, “ஏய்” என்று அவன் முன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க..
“டேய் யார்ரா நீ? எதுக்கு எங்களுக்கு நடுவுல வர, நான் என் பொண்டாட்டியை கேட்டுனு இருக்குறேன், கண்டவன் கூட ஊரை சுத்திக்கிட்டு இருந்தா கேட்க மாட்டாங்களா?” என்று அவன் பேசவும், விஜய் ஒன்றும் சொல்லவில்லை கைகளை கட்டி கூர்மையாக பார்த்தான்.
அவன் பார்த்த ஆத்மிகா இது இல்லையே படபடவென்று துருதுருவென்று பேசும் அவள் வாய் எங்கே போனது சுட்டித்தனம் நிறைந்த அவள் குறும்புகள் எங்கே போனது இப்படி இவ்வளவு பேச்சுக்களை இத்தனை பேர் முன்னால் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் ஏனென்று கேட்காமல் அவள் நம் அமைதியாக நிற்பது அவனை பெரிதும் வாட்டியது.
திவ்யா நாம கிளம்பலாம் என்று சொன்னதும், சட்டென திவ்யாவும் ஆத்மிகாவும் ஒருங்கே அதிர்ந்து போய் அவனை பார்த்தார்கள் .
“அண்ணா எப்படின்னா?” என்று தோழியை இந்த அரக்கனிடம் விட்டு செல்வதா என்ற பதட்டம் அவளுக்கு, ஆத்மிகாவிற்கோ, ஐயோ இவன இங்க இருந்து துரத்திடுங்களே என்பது போல் பார்த்தாள்.
சுரேஷ் இதழில் வன்ம புன்னகையுடன் தன் கைகளை விஜய் பிடித்திருந்த இடத்தில் கை வலித்துக் கொண்டிருந்தது.
தன் கையை அழுந்த தேய்த்தபடி இருந்தான் அவன்.
அவள் கெட்டிமாக திவ்யாவின் கையை பிடித்துக் கொண்டாள், “ப்ளீஸ்” என்று பதற்றமாக அழைத்த விஜய், அவள் கரங்களைப் பார்த்தான்.
அவ்வளவு இறுக்கமாக திவ்யாவை பற்றி இருந்தாள், அவன் மனம் வலித்தது,
“ஏன்டி இப்படி ஆயிட்ட? என்னால உன்ன இப்படி பார்க்க முடியல” என்று அவன் மனம் அரற்றியது, அவள் எந்த அளவுக்கு அழுத்தமாக அவள் கரங்களைப் பற்றினாளோ அதே அளவுக்கு விஜயின் முகத்தில் இறுக்கம் ஏறிக்கொண்டே சென்றது.
“ திவ்யா, வா கிளம்பலாம், எனக்கு டைம் ஆகுது” என்று சொன்னான் அழுத்தமாக,
அவன் பார்வையோ திவ்யாவை பிடித்திருந்த ஆத்மியின் கரங்களிலேயே இருந்தது, அவள் கரங்களை அழுத்த பற்றும் அளவிற்கு கூட அவளுக்கு சக்தி இல்லை என்று தோன்றியது.
“இங்க பாரு திவ்யா, அவங்க அவங்களுக்காக, அவங்கவங்க பேசணும் புரிஞ்சதா, நமக்காக நாம பேசுலனா அடுத்தவங்க பேசுவாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது, இவன மாதிரி பொறுக்கி எல்லாம் செவில்லையே நாலு வெக்கணும்,
அதை விட்டுட்டு அடுத்தவங்களை எதிர்பார்த்து இருந்தா நாளைக்கு நம்ம போன பிறகு திரும்பவும் வரமாட்டான் என்று என்ன நிச்சயம்?” என்று அவன் கேட்கவும், திவ்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை,
அவள் சங்கடமும் வலி நிறைந்த கண்களுடன் ஆத்மியை பார்த்தாள், ஆத்மியோ தலை குனிந்தபடி அழுது கொண்டிருந்தாள்,
“ சரி இவங்கள ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு, நம்ம போறோம்னு வச்சுக்கோ, நாளைக்கு ரோட்ல போறவன் வரவன் எல்லாம் கண்ட மேனிக்கு பேசுவான், அப்போ எல்லாம் இப்படியே யாராவது வந்து காப்பாத்திட்டு இருக்க முடியுமா?” என்று கேட்டான்.
அவள் அப்போ நான் மேனேஜ் பண்ணிக்கிறேன், இப்போ இப்போ.
என்று சொல்லும்போது,
“ஏன் வீரமெல்லாம் அப்பதான் வருமா இப்ப வராதா அப்பவும் உன்னால பேச முடியும்னா இப்பவும் பேச முடியும், இவன் என்ன வேற்று கிரக ஜந்துவா இவனுக்கும் நம்மள மாதிரி இரண்டு கை இரண்டு கால் தானே இருக்கு, நீ சமைச்சு போட்ட சாப்பாட்டில் தானே உடம்பை வளர்த்திருக்கான், நாலு கன்னத்திலேயே விடு” என்றான் விஜய்.
“என்ன அடிக்கிறதா, ஏய் என்ன தப்பு தப்பா சொல்லி கொடுத்துட்டு இருக்கியா? நீ என்னடா? நீ என்ன அவளுக்கு துடுப்பா? ஏன்டி கண்டவனையும் பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க, புருஷனையே அடிக்க சொல்றான், இவன் எல்லாம் என்ன மாதிரி.. என்று சொல்லி முடிப்பதற்குள் ஓங்கி ஒரு அரை வைத்திருந்தாள் ஆத்மிகா.
“ தட்ஸ் மை கேர்ள்” என்று விஜய் மனதில் நினைத்தபடி இன்னும் கையை கட்டியபடி நிற்கவும், “ஏய் என்னையே அடிச்சிட்டியா?” என்று கேட்க,
இவ்வளவு நேரம் அவளைப் பற்றி தரகுறைவாக பேசிக் கொண்டிருந்தான். அதை கூட கேட்டு அமைதியாக இருந்தாள், விஜய் பற்றி பேசியதும் அவ்வளவு கோபம் வந்துவிட்டது.
அப்போதிலிருந்தே அவன் மீது ஒரு பிரமிப்பு, இப்போதும் இருக்கிறது, அதனால் தான் அவன் முன் பேசவே பயப்படுகிறாள், அவனிடத்தில் எப்போதும் ஒரு நிமிர்வு, நேர்த்தி , நிதானம், கம்பீரம் இருக்கும், ஆளுமை இருக்கும் ,அதை அவளும் கவனிப்பாள்.
அது தான் ஒரு வேளை அவனை விட்டு விலகி நிற்க காரணமாய் இருந்ததோ என்னவோ, இவள் சுட்டித்தனத்திற்கும் அவனின் ஆளுமையான அமைதிக்கும் சற்று பயம் அப்போதிலிருந்து, அவனைப் போய் என்னவெல்லாம் பேசுகிறான், பேசத் துணிந்தான் என்று அவள் யூகித்தாள் அதனால் தான் அறைந்தாள்.
“ ஏய் என்னடி பயம் போயிடுச்சா? என் மேலேயை கை வைக்கிற, என்ன இவங்க எல்லாம் இப்ப கூட இருக்கிறாங்க, இப்படி பேசினா நான் சும்மா இருந்திருவேனா, உன்னை அவ்வளவுதான், புருஷன்னு மரியாதை இல்ல” என்று அவன் மீண்டும் அடிக்க வர,
அவளோ, “யாருக்கு யார் புருஷன்? நமக்கு தான் டிவோர்ஸாக போகுதே, என்னால உங்க கூட இனிமேல் வாழவே முடியாது,
ஏன் இதுவரைக்கும் வாழ்ந்தது மட்டும் என்ன? ஒரு சமையல் காரியா, ஒரு வேலைக்காரியா இதுக்கு தானே இருந்தேன், சுயம் தொலச்சி, மரியாதை இல்லாம குப்பையை விட கேவலமா தானே நடத்துனீங்க,
அந்த வாழ்க்கையை நான் வாழுறதுக்கு, செத்தே போவேன், ஆனா இனிமேல் உன்னால அந்த வாழ்க்கைக்குள்ள இருக்க முடியாது, உங்களுக்கு நான் டிவோர்ஸ் குடுத்துட்டேன், இதுக்கு மேல கோர்ட்டில் பாத்துக்கலாம்” என்று திக்கி திணறி பேசி முடிக்கவும், அவள் கூறியதை எல்லாம் கேட்க கேட்க விஜயின் முகம் பாறை என மாறி இருந்தது.
திவ்யாவும் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை எல்லாம் நினைத்து அதிர்ந்துதான் போயிருந்தாள், “என்னடி சொல்ற?” என்று தவிப்புடன் கேட்கவும்,
“வாடி நம்ப போகலாம்” என்று ஆத்மிகா உள்ளே செல்ல திரும்ப, அவளை சட்டென தடுத்து நிறுத்தியவன்,
“ ஏய் என்ன? விட்டா ஓவரா பேசிக்கிட்டு இருக்க, நீ டிவோர்ஸ் கொடுத்தா நான் அதை ஏத்துக்கணுமா !மரியாதையா வீட்டுக்கு வந்து சேர வழிய பாரு, இல்லன்னா அவ்வளவு தான்,
இவன் கூட என்ன கூத்தடிக்க போறியா, அதுக்கு தான் இப்படி எல்லாம் நடந்துட்டு இருக்கியா? ஆள் பார்க்க வாட்ட சாட்டமா இருந்தா பிடிக்க பாக்குறியா? உன்னாலாப் எவன்டி சட்டை பண்ணுவான், மரியாதையா கூட வந்துரு ,கண்டவன் கூட ஊர் மேயிறதுக்கு தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறியா?” என்று இஷ்டத்துக்கு வார்த்தைகள் அதிகமாகிக் கொண்டே சென்றது.
“ ஏய்?” என்று கோபமாக அவன் புறம் திரும்பினாள், மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.
“ இன்னொரு முறை தப்பா ஒரு வார்த்தை வந்தது போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணுவேன், நீ என்னை எப்படி யூஸ் பண்ணிட்டு இருந்தனு சொன்னேன் வை, வேணாம், நான் ஊரை சுத்திட்டு இருக்கேனா நாயே?” என்றவள் அவன் அருகில் வந்து,
“ நீதான்டா இன்னொருத்தி கூட போயிட்டு, எனக்கு துரோகம் பண்ணி இன்னொரு குடும்பமே வெச்சு நடத்திட்டு இருக்க, இதுல நீ என்ன வந்து சொல்றியா? இதையே நான் எவிடன்ஸா போலீஸ்ல சொன்னா, உன் மானம் எல்லாம் கப்பலேறும்,
ஒழுங்கு மரியாதையா எனக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு கிளம்புற வழியை பாரு, இன்னொரு முறை யாரை பற்றியாவது நீ தப்பா பேசினா, மரியாதை இருக்காது” என்றதும்,
அவளின் இந்த மிரட்டலை சுரேஷ் எதிர்பார்க்கவில்லை, திருமணமானதிலிருந்தே தன்னிடம் மிரண்டு பணிந்து போய் கொண்டிருக்கும் அவள் இப்படி எதிர்த்து பேசுவாள் என்று யார் நினைத்தது.
“ஏய்” என்று மீண்டும் அவளின் உடைய பிடிக்க வர, விஜய் கோபமாக அவனை தடுக்க வர,
அதற்குள் அங்கிருந்த ஹாஸ்டலில் இருந்த பெண்கள் எல்லாம், ஏன் நாங்களும் பார்த்துட்டு தான் இருக்கிறோம், அந்த பொண்ணு கிட்ட ரொம்ப ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டு இருக்க,
நீ பேசுவதை வச்சே தெரியுது, நீ எந்த அளவுக்கு அந்த பொண்ண நடத்திட்டு இருக்கேன், அந்த பொண்ண பார்த்தாலே உன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருக்கு, விட்டு தொலையா இன்னும் எதுக்கு இருக்கிற உயிரையும் எடுக்க பாக்குறியா?
இன்னும் நீ அந்த பொண்ணு மேல கைய வச்ச, மகளிர் காவல் நிலையத்தில் போய் கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம், மகனே நீ காலத்துக்கும் வெளியே வர முடியாது” என்று அங்கிருந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து மிரட்டவும்,
அவன், “என்ன, என்னடி ?எல்லாரும் சேர்ந்து..” என்று சொல்ல, அங்கிருந்தவர்களில் சற்று நடுத்தர வயதுள்ள பெண்மணி வந்து ஓங்கி ஒரு அரை விட்டாள்,
“ வீடியோ எடுங்கடி” என்றவள், “யாரைப் பார்த்து, எங்க வந்து வாடி போடின்னு பேசிகிட்டு இருக்கேன், போய் கம்ப்ளைன்ட் பண்ணனும்னு வச்சுக்கோ, அவ்வளவுதான், ஜெயில்ல தான் களி சாப்பிடுவ, எங்களையே மட்டு மரியாதை இல்லாம நீ பேசுற, இந்த பொண்ண என்னன்னெல்லாம் பாடுபடுத்தி இருப்ப” என்று சொல்லவும், ஆத்மிகா தலைகுனிந்தபடி அழுதபடியே இருந்தாள்.
“ மா உன்னை ஏதாவது பண்ணானா சொல்லுமா, நாங்க உனக்கு சப்போர்ட்டா இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி வெளியே செல்ல,
மற்றவர்களும், “நீங்க இங்க ஸ்டே பண்ண போறீங்களா? உள்ள வாங்க, இந்த நாய் எல்லாம் ஒரு பொருட்டா எண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
அவர்களெல்லாம் உள்ளே சென்றதும், உன்னை அப்புறமா பார்த்துக்கிறேன் டி, ஆட்கள் இருக்கிறார்கள்னு ஆடுறியா? உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று சென்று விட்டான்.
அனைவரும் சென்றதும் திவ்யாவிடம் திரும்பிய விஜய், “நீ பார்த்துட்டு வா, நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு, அவன் ஒரு கணம் திரும்பி ஆத்மிகாவை பார்த்து செல்ல போக சட்டென தேங்க்ஸ் என்றாள் ஆத்மி.
பட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வருவான்.
