Share:
Notifications
Clear all

காதல் சகி 32

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 202
Thread starter  

32

 

மறுநாள் காலை தாமரை தன் வீட்டுக்கு செல்லும் அதே நேரத்தில்தான் வித்யாவும் வந்தாள். தாமரையை ஆச்சரியமாக பார்த்தாள். விஷயம் எல்லாம் ஏற்கனவே அலுவலகத்தில் அவளுக்கு பகிரப்பட்டு இருக்க.. 

 

அவளால் நம்ப கூட முடியவில்லை ஜெர்ரியின் அதிரடிகளை.. தாமரைக்காக அவன் செய்த வேலைகளை.. அந்த ஆச்சரியம் நீங்காமலே இவள் வீட்டுக்கு வர.. தாமரை அப்போது தான் வந்தவள் வித்யாவை பார்த்து வெட்கம் கலந்த ஒரு சிரிப்புடன் உள்ளே செல்ல முனைய.. "இரு தாமரை! உன் கிட்ட பேசணும்" என்று அலுவலகத்தில் நடந்த அத்தனையும் கூறினாள். 

 

 

 

அவளுக்கு தன்னை பேசியவர்களை மட்டும்தான் தெரிந்தது. ஆனால் அதற்கு பதிலடியாக ஜெர்ரி செய்தது தெரியாது அல்லவா? வாழ்க்கையில் முதல்முறையாக ராமதாசுக்கு பிறகு அவளுக்கு.. அவளுக்காக என்று குரல் கொடுக்கும் மற்றொரு மனிதன். அவளின் மனுசன்!!

 

 

ஜிவ்வென்று பறப்பது போல இருந்தது மனம் சிறகில்லா பறவையாக.. 

 

 

"தாங்க்ஸ் வித்யா.. எனக்கு இது எதுவும் தெரியாது!" என்று அவளிடம் முகம் மலர கூறியளுக்கு அப்போதே ஜெர்ரியை பார்த்து அணைத்துக்கொள்ள ஒவ்வொரு அணுவும் பரபரத்தது.

 

 

 

தன் அறைக்கு சென்றவள், குளித்து வேறு உடை அணிந்து வேகமாக ஜெர்ரி பார்க்கத்தான் ஓடினாள். அவனும் அலுவலகத்திற்கு தான் கிளம்பி கொண்டிருக்க அழைப்புமணி சத்தத்தில் வாயில் வந்து பார்த்தான்.

 

 

முகம் முழுவதும் பூரிப்புடன்.. கண்கள் நிறைய காதலுடன்.. 

 

தன்னைத் தேடி வந்த தேவதையை இவனும் வா என்று தலையசைக்க..

 

உள்ளே வந்தவள், ஒரே தாவலில் அவர் கழுத்தை மாலை என கைகளால் கோர்த்து பின்னி பிணைந்து கொண்டாள் இறுக்கமாக அவனுடன்.

 

 

 

"என்னாச்சு என் ஹனிக்கு?" என்று அவன் அவள் காது மடலில் மீசையால் உரசிக்கொண்டே கேட்க..

 

 

'ஒன்றும் இல்லை!' என்று தலையாட்டியவள் அவன் முகம் முழுவதும் பதித்தாள் தன் முத்தங்களை.. 

 

 

"ஹனி.. ஹனி.. ஹனி.. ஹனி.." என்று அவள்‌ முத்தத்தில் கிறங்கி அவன் முணுமுணுக்க..

 

 

மிச்சத்தையும் விடாமல் அவள் எச்சங்களால் அவனை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

போதும் என்ற மனமே பொன்செய் மருந்து! ஆனால் காதலில்.. காமத்தில்.. மோகத்தில் அதற்கு விதிவிலக்கு!

 

 

பெண்ணவள் அவனை இறுக்கி அணைத்தவாறு நின்றவள், "தேங்க்ஸ் ஜோன்!" என்று கூறி முடிக்க.. அவள் கீழ் இதழை இரு விரல்களால் பிடித்து இழுத்தவன் "இனி ஒருமுறை இந்த உதடு எனக்கு தேங்க்ஸ் சொன்னா, இதை அப்படியே விழுங்கிடுவேன்! இட்ஸ் ஹேப்பன்!" என்றவன் அதை செயலிலும் காட்டினான். சிறுது நேரம் என்று இவர்கள் ஆரம்பித்த இந்த முத்த யுத்தமானது ஒரு முடிவுக்கு வந்தபோது.. மணியை பார்க்க அது பத்தை கடந்திருந்தது.

 

 

"போச்சு இன்னைக்கு ஆபீஸ் போன மாதிரி தான்!" என்றவன் மணியை பார்த்துவிட்டு சோபாவில் அமர தொற்று கிளியாக அவன் தோளை உரசிக்கொண்டே அமர்ந்தவள் "இன்னைக்கு லீவு போட்டுக்கலாம் ஜோன்!" என்றாள்.

 

 

"என்னது லீவா?? அதுவும் சொல்லுறது டாம்மா?" என்று அதிசயத்தான்.

 

 

"ஆனா இந்த ப்ராஜக்டை சீக்கிரம் முடிச்சி கொடுத்தே ஆகணும் அதனால நோ லீவ்.. ஹனி!" என்றான் பொறுப்பான அதிகாரியாக!

 

 

அவள் மனசு சுணக்கமாக எழுந்து போக.. அதை தாங்க மாட்டாமல்.. "சீக்கிரம் அப்பாவை நாள் பார்க்க சொல்லுறேன்டா!" என்று அவளைக் அரவணைத்தான். அலுவலகத்திற்கு இருவரும் ஒன்றாகத்தான் சென்றனர். மொத்த அலுவலகமே தங்களுக்குள் அவர்களின் ஜோடியாக கண்டதும் கிசுகிசுத்தே கொண்டாலும் வெளியே வாய் திறந்து பேச அத்தனை அச்சம்! ஜெர்ரியிடத்தில்!!

 

 

கூடவே 'இம்மாதிரியான காதலெல்லாம் இந்த துறையில் எத்தனையோ பார்த்தாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று!' என்று கடந்தவர்களும் உண்டு.. அவர்களை பற்றி விமர்சிப்பவர்களும் உண்டு.. ஆனால் இது எதையுமே தங்கள் காதுகள் வழியாக மூளைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் வேலையை மட்டுமே பார்த்தனர் இருவரும்.

 

 

 

ஸ்டீபன் கூட வந்து அவளிடம் பேசு விட்டு சென்றவன் வாழ்த்துக்களும் கூறினான்.

 

 

"ஸ்டீபன் நல்ல காதல் இன்னும் இருக்கு. பொண்ணுங்களும் உண்மையா தான் காதல் செய்வாங்க!" என்று அவள் கூற அதை தலையை அசைத்து ஆமோதித்தான். "நீங்க அந்த பெண்ணையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க சரியா?"

 

 

 "தாமரை பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. கன்சிடர் பண்றேன்!" என்றவன் சிரித்த முகமாகவே சென்றான்.

 

 

 

இப்படியாக சிரிப்பும் வேலையுமாக அலுவலகத்தில் பம்பரம் என அவள் சுழல.. அந்தப் பம்பரத்தை சொடுக்கும் கயிறாக இருந்தான் ஜெர்ரி. குரு டீமில் அனைவருக்குமே மகிழ்ச்சி தாமரையின் இந்த மாற்றத்தை பார்த்து.‌ அதுவும் ஜெர்ரியின் காதலில் வியந்து தான் போனார்கள்.

 

 

ஒரு மாதமாக இவர்களின் காதல் காலை அலுவலகத்திலும் மாலை பார்க்.. கடற்கரை.. என்று இரவு வரை நீட்டிக்கும். அதன் பின் அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு இவன் தன் வீட்டுக்குச் சென்றான். அதன் பின்னான இரவுகளில் அவன் வீட்டில் அவளை தங்க விடவில்லை. ஓரளவு இம்மக்களின் உணர்வுகளை படித்துப் புரிந்து கொண்டவன். 

 

 

இடையில் ஒருமுறை கணேஷை அழைத்து அவள் வீட்டிலேயே வைத்து பேசி இருந்தான். ஓரளவு மனம் மாற்றமடைந்த. கணேஷ் இப்போது ஒட்டு மொத்தமாக மாறி இருந்தான்.

 

 

கூடவே அவன் படிப்பு சம்பந்தமாக வேலையை வெளி நாட்டில் வாங்கி தருவதாக கூறி நம்பிக்கை அளித்தவுடன் கணேஷுக்கு இந்த வெளிநாட்டு மாமன்காரனை அத்தனை பிடித்து போனது. அவளை அக்கா என்று அழைக்கவில்லை என்றாலும் இவனை அத்தான் என்ற உறவுமுறையை வைத்து அழைத்தான். இதில் எல்லாம் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை தாமரை. 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?' என்று தான் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

"அந்தப் பையன் உண்மையிலேயே கெட்டவன் இல்லை ஹனி. அவன் அம்மாவின் பேச்சு.. வளர்ந்த சூழ்நிலையில் தான் உன்னிடம் அவன் அப்படி நடந்துகொள்ள காரணம். இல்லை என்றால் இவன் மாறி இருக்கு வாய்ப்பு இல்லை தானே.. விடு ஹனி.. அவங்க நல்லா இருந்தா உன்னை சபிக்க மாட்டாங்க தானே!" என்றவனின் அலாதி அன்பில் கரைந்து தான் போனாள் தாமரை! 

 

 

"அடுத்த வாரம் உங்க ஊருக்கு போகிறோம்" என்றவுடன் அதுவரை இருந்த இதம் மறைய, சட்டென்று அவள் உடம்பில் ஒரு நடுக்கம் ஓடி மறைய, "கூல் ஹனி.. நான் இருக்கேன் தானே!" என்று ஆறுதல் கைகளால் மட்டும் அளிக்காமல் செயலிலும் காட்டினான்.

 

 

அதன்படி கணேஷை அழைத்துக்கொண்டு திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அவர்கள் வீட்டுக்கு காரிலேயே பயணித்தார்கள். ஜெர்ரி வெகு கூலாக வர, தாமரைக்கு தான் ஏதோ தனல் மேல் இருப்பது போல இருந்தது. கூடவே அவள் சித்தியின் வாய் அவள் அறிந்ததுதானே?? தன்னை பேசினால் கூட பரவாயில்லை. ஜெர்ரியை ஏதும் பேசி விட்டால்.. அந்த நினைப்பு தான் அவளுக்கு பதைபதைத்தது.

 

 

ஒரு வழியாக அவர்கள் வீட்டின் முன்னால் கார் நிற்க உள்ளிருந்து வந்த பெண்ணை பார்த்து சுமதி தாமரை வந்திருக்கு என்றான் கணேஷ்.

 

 

"தாமரையா?" என்று அவள் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நெடுநெடு என்று உயரத்தோடு வந்து இறங்கிய வெளிநாட்டவனை பார்த்தவளுக்கு கண்கள் தெறித்து விழுந்துவிடும் அளவு ஆச்சரியம் அத்தோடு சுவாரஸ்யம்.

 

 

தன் அன்னையிடம் தாமரை வந்திருப்பதை சொல்லிவிட்டு உள்ளே சமயலறை பக்கம் நின்று கொண்டாள் சுமதி கூடவே சுந்தரியும்.

 

 

 

வாடி வாடி என்று கடும் கோபத்தில் இருந்தார் மாதவி.

 

 

அங்கிருந்து கிளம்பிய மகேஷ் நேராக வீட்டுக்கு கூட செல்லாமல் அப்போதுதான் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மாதவியை பார்த்து அவன் கேட்ட நாளை பத்தாக திரித்து கூறி "ஆத்தாள போல ஒழுக்கம் கெட்டவளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு அவசியமே இல்லை. அவ மட்டும்தான் அப்படியா? இல்ல நீ பெத்து வச்சிருக்க ரெண்டும் அப்படித்தானா?" என்று மாதவியை பேசவிடாமல் பேசிவிட்டு சென்றான்.

 

 

இதனால் வரை அடுத்தவர்களை பேசிய பழகிப்போன மாதவிக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

 

 

தாமரை உள்ள நுழைந்தவுடனேயே "வாடி சிறுக்கி மோவளே! ஓடுகாலிக்கு பிறந்தவளே!" என்று அவர் முடியாமல் எழுந்து அமர்ந்து கத்த.. நடுக்கதோடு அவள் நிற்க, அருகில் இருந்த ஜெர்ரியோ அவள் கைகளை இறுகப் பற்றிக் கொள்ள.. சட்டென்று அவளுக்குள்ளும் ஒரு தைரியம் பிரவாகம் எடுத்தது.

 

 

"ஆமா நான் ஓடுகாலிக்கு பிறந்தவ தான்.. ஆனா.. என்‌ அம்மா ஒன்னும் ஊர் மேயல.. காதல்னு பெயர்ல ஏமாந்தவங்க… அதே காதல் தான்‌ என்னையும் இன்னைக்கு உயிர்ப்போட வைச்சு இருக்கு. என் அம்மா காதல் உண்மையானது. அதான் காதலிச்சவனையே நினைச்சு.. கடைசியில் உயிரை விட்டாங்க.. ஆனா நீங்க.. அவர் உயிரோடு இருக்கும்போதும் பேசுனிங்க.. இறந்த பின்னும் இன்னும் பேசி பேசிக் கொல்லுறிங்க.. உங்களை விட எங்க அம்மா எவ்வளவோ மேல். இனி ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை அம்மா பத்தி கூட நீங்க பேச கூடாது" என்று கர்ஜித்தவளை கண்ட மாதவிக்கு சற்று உள்ளுக்குள் நடுங்கியது. 

 

 

 

கூடவே இரண்டு மாதங்களுக்கான தன் சம்பள பணத்தை தனது சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்தவள் அவர் முன்னே வைத்தாள். "நீங்க சொன்ன இரண்டு வருட கணக்கு இதோட முடிஞ்சது. இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இவரை தான் நான் கட்டிக்க போறேன்! சொல்லாம போனா எங்க அம்மாவை சொன்ன மாதிரி என்னையும் ஓடுகாலினு சொல்லுவிங்க. அதனாலதான் வந்து சொல்லிட்டு போறேன். கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வைக்க என் மாமனார் வருவார்" என்று பேசி முடித்தவள் அவ்வளவுதான் என்று வாசல் திண்ணையில் போய் நின்றுகொண்டு ஜெர்ரியைப் பார்த்தாள்.

 

 

ஜெர்ரியோ அருகிலிருந்த ஒரு நாற்காலியை இழுத்து மாதவி முன் போட்டு அமர்ந்தான். இந்த வெளிநாட்டுக்காரன் "தஸ்புஸ்னு இங்கிலீஷ்ல பேசினா நமக்கு ஏதாவது புரியுமா? இவன் ஏன் நம்மகிட்ட வந்து உட்கார்ந்து இருக்கான்?" என்று அவர் நினைவை பொய்யாக்கி "உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் தான் வந்தேன். எப்படி அன்னைக்கு நைட்டு என் தாமரை உங்களால வெளில நிற்க வைக்க முடிந்தது? அதுவும் அப்பா போல இருக்கிறவரோடு இணைத்துப் பேச உங்களுக்கு வாய் கூசல.. நீங்களும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கீங்க தானே?" என்று அவன் கேட்ட மாத்திரத்தில் சமையலறையிலிருந்து ஓவென்று அழுகிற சத்தம் கேட்க அனைவருடைய கவனமும் அங்கே சென்றது.

 

 

சுந்தரி மடிந்து உட்கார்ந்து கொண்டு அழ, அவளுக்கு அருகில் அமர்ந்து சுமதி தேற்றிக் கொண்டிருந்தாள்.

 

 

கணேஷோ சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் தந்தையின் படத்தை வெறித்து பார்த்துக் கொண்டே நின்றான். அழும் சத்தம் கேட்டவுடன் தாமரையும் வீட்டுக்குள் வந்து விட, அங்கு என்ன நடக்கிறது என்று இருவருக்கும் புரியவில்லை.

 

 

"கணேஷ்.. ஏன்டா அவ அழறா? என்னாச்சு? என்னாச்சு?" என்று பதட்டத்துடன் தாமரை கேட்க..

 

 

"அன்னைக்கு நீ ஒருநாள் தான் அழுத.. அது சாமிக்கு கேட்டு இருக்கும் போல.. அதான் நித்தமும் எங்களை அழ வச்சுக்கிட்டு இருக்கார்" என்றவனிடம், "என்னாச்சு சொல்லுடா?" என்று மீண்டும் கேட்டாள். தாமரைக்கு அந்த பெண்களை நெருங்க கூட ஒரு சின்ன தயக்கம்.. பயம். சித்தி மீண்டும் வாய்விட்டு விடுவாரோ என்று.

 

 

"வயசுக்கு வர்ற மாதிரி இருந்த பொண்ண வெளியில் ராத்திரியெல்லாம் நிக்க வச்ச பாவத்துக்கு.. அவங்க பொண்ண வயசுக்கு வர முடியாதபடி கடவுள் தண்டிச்சிட்டார். சுந்தரிக்கு தான். எவ்வளவு டாக்டர பார்த்தாச்சு. கருப்பை வளர்ச்சி அடையவே இல்லையாம்.. இன்னும் என்னன்மோ சொல்றாங்க. ஆனால் நான் ஒன்னு தான் சொல்லுவேன்.. கடவுள் இருக்கான்!" என்று விரக்தியாக சிரித்தான் கணேஷ். கணேஷின் மாற்றத்திற்கு இதுதான் முதல் படியாக இருக்கும் என்று நினைத்த தாமரை, அங்கே அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் உள்ளே சென்று இரு பெண்களையும் ஒருமுறை அணைத்து "சத்தியமா நான் எந்த சாபமும் உங்களுக்கு கொடுக்கல!" என்றவள், ராமதாஸ் புகைப்படத்திற்கு நேரே நின்றவள், மனதார "அப்பா!!" என்று‌ மனதுக்குள்

 

அழைத்து விட்டு வெளியேறி விட்டாள். 

 

 

"டாம் அந்த மகேஷை பார்த்து எதுவும் பேசணுமா?" என்று கேட்க ஆமாம் என்று மட்டும் அவள் தலையசைக்க, கணேஷ் அழைத்துக்கொண்டு அவன் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தும் இடத்திற்கு சென்றனர்.

 

 

 

அன்று ஏதோ விடுமுறை போல சில மாணவிகள் உள்ளே பிரவுசிங் செய்துகொண்டிருக்க.. இவன் பிரிண்ட் அவுட் எடுக்க வந்த ஒரு மாணவியிடம் கண்களால் துச்சாதனன் வேலை பார்த்துக் கொண்டே அந்த பொண்ணு கேட்டவற்றை செய்து கொண்டிருந்தான். குனிந்து பிரிண்ட் அவுட்டை எடுத்த நிமிரும்போது அங்கே அந்த பெண்ணிற்கு பதிலாக தாமரை நிற்க, ஒரு கணம் கண்களை மூடி திறந்தவனின் கன்னம் திகுதிகு என்று எரிந்தது.

 

 

"இன்னொருமுறை என்னை பத்தி தப்பா பேசுன பிச்சுருவேன் பிச்சு!! நீ ரொம்ப ஒழுங்கா? என்ன பேசற? நீ யாரு கூட எங்கங்க சுத்துன எத்தனை தொடர்பு வச்சிருக்கன்னு எல்லா விஷயமும் எனக்கு தெரியும். அமைதியா ஒதுங்கிப்போன உனக்கு அடிமைனு நினைத்திடியோ? இனி இந்த மாதிரி எந்த பொண்ணு கிட்ட விளையாட்டு காமிச்ச.. ஒட்ட நறுக்கிடுவேன்!" என்று அவள் சத்தமாக பேச அங்கே இருந்து பெண்கள் முதல் அருகருகே பேருந்துக்காக நின்றவர்கள்.. அடுத்த கடையில் இருந்தவர் என்று கூட்டமே தாமரையின் பேச்சை கேட்டது. 

 

 

அது மகேஷுக்கு அவமானமாக போக "என்னடி யார் யார் கூடவோ கூத்தடிச்சிட்டு, நான் நியாயம் கேட்டா பழியை என் மேல போடுறியா? உன்னை?" என்று கை ஓங்க நினைத்தவனின் அடுத்த கன்னமும் இப்பொழுது பழுக்க அறையப்பட, பொறித்தட்ட நிமிர்ந்தவனின் எதிரில் கை முஷ்டியை முறுக்கி நின்றிருந்தான் ஜெர்ரிக்.

 

 

 

"எனக்கு இருக்கிற இன்ஃப்லியூன்ஸ் யூஸ் பண்ணி உன்னை என்ன வேணாலும் பண்ணமுடியும். இதே இடத்தில் தொடர்ந்து கடை நடத்தனுமா? வேண்டாமானு நீ தான் முடிவு பண்ணனும்!" என்ற அவனின் பேச்சில் எச்சில் விழுங்கியவன் வாயை இறுக்க மூடிக்கொண்டான். 

 

அரசல்புரசலாக இவனைப் பற்றி அவ்வப்போது பேச்சுக்கள் வந்து கொண்டிருக்க.. இதில் இவனும் சேர்ந்து ஏதாவது செய்தால் மொத்தமாக நாமம் தான் என்று!!

 

 

இவர்கள் இருவரையும் ஜெர்ரியே பேசியிருக்க முடியும். ஆனால் பாதிக்கப்பட்ட தாமரை அவர்களுக்கு பதிலடி கொடுக்க வைத்து, அவளை அந்த ஊரிலிருந்து மதிப்புடன் அழைத்து வந்தான்.

 

 

அடுத்த ஒரு வாரத்தில் அரங்கநாதனும் லூசியும் வந்து சேர்ந்துவிட.. இன்னும் கொண்டாட்டமானது தாமரைக்கு தான். 

 

 

அதே நேரம் இவர்கள் முதல்கட்ட ப்ராஜெக்ட் முடிவு நிலைக்கு வர, இவர்கள் கல்யாணத்தை வடபழனி முருகன் கோவிலில் சிம்பிளாக ஏற்பாடு செய்தார் அரங்கநாதன். அதன்படி ஒரு சுபயோக தினத்தில் பிரம்மமுகூர்த்தத்தில் இந்து முறைப்படி தாமரைசெல்வியை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஜெர்ரிக் ஜோன்ஸ்.

 

 

"ஏம்பா ரிங் மாத்தி கல்யாணம் பண்ண தாமரை ஒத்துக்க மாட்டாளா?" என்று சாதாரணமாகத்தான் கேட்டான் ஜெர்ரி.

 

 

 

"ஒவ்வொரு பெண்களும் அவர்களுடைய அந்தப் சிறுவயது பழக்கவழக்கங்கள் அவர்கள் மனதில் ஆழமாக இருக்கும். அதன்படி நீ என்னதான் அவளுக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்தாலும் இல்லை நான் உன் அம்மாவுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தினாலும்.. அது பெரிதாக மனதில் எல்லாம் தொடாது. லூசிக்கு அவள் சம்பிரதாயப்படி மோதிரமும் தாமரைக்கு அவ சம்பிரதாயம் தான் கல்யாணத்தில் புனித பந்தம் என்று நம்புகிறார்கள். அதை ஏன் நாம் மாற்றவேண்டும். மகனே! தாலியோ மோதிரமோ.. இனி தாமரை உன் மனைவி தானே!" என்று சொல்ல அவனும் புரிந்ததற்காக அடையாளமாய் தலையசைத்தான்.

 

 

திருமணத்திற்கு கணேஷ் மட்டும் வந்திருந்தான். கூடவே அலுவலக நண்பர்கள்! அனைவருக்கும் அன்று மாலையே ஹோட்டலில் ஒரு பார்ட்டியும் கொடுத்து தங்களது திருமண விருந்தை முடித்துக் கொண்டனர் இத்தம்பதியினர்.

 

 

அடுத்த இரண்டு நாட்களிலே இந்தியாவிலிருந்து மீண்டும் சான்பிரான்சிஸ்கோ பயணம்.. அரங்கநாதனும் லூசியும் பிரான்ஸ் சென்று விட, இவர்கள் மட்டுமே தனிக்குடித்தனம் இங்கு.

 

 

இங்கே வந்து வீடு வீட்டுக்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் வாங்கி செட் செய்யவே அவர்களுக்கு இரண்டு நாள் ஓடிவிட்டது. அவ்வப்போது ஆசைக்காக அளவில்லா முத்தங்களை கொடுத்து அதே போல அளவில்லா முத்தங்களை பெற்றுக் கொண்டதோடு சரி இருவரும். அதற்கு அடுத்த கட்டத்திற்கு இன்னும் நகரவில்லை..

 

 

இதோ வெளியே மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வர, காரைவிட்டு இறங்கியவள் அதிலேயே சாய்ந்து நின்று கொண்டு இரு கைகளையும் விரித்து அவளை அழைத்தாள்.

 

 

'' என்ன ஹனி ?''

 

 

'' கால் வலிக்குது ஜோன்.என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போ!''

 

 

''வாட்?? உப்பு மூட்டை?!'' என்று அவன் விழிக்க.. அவள் விளக்க.. பின் கரும்பு தின்ன கூலியா அவனுக்கு ஒத்துக் கொண்டான்.

 

 

அவன் முதுகில் தொத்திக் கொண்டாள் தாமரை. அவள் நெஞ்சை அவன் முதுகில் அழுத்தி.. கைகளால் கழுத்தைக் கட்டிக் கொள்ள.. அவளது தொடைகளை தாங்கிப் பிடித்தபடி அவளை உள்ளே தூக்கி போனான் ஜெர்ரி. இரண்டு கைகளில் வாங்கி வந்த பொருட்கள் வேறு!

 

 

வீட்டுக்குள் போய் இறக்கி விட்டான்.

 

அவள் இறங்கி நின்று சிரித்தவளின் இதழ்கள் வாவென்று அழைக்க, இழுத்து அணைத்து அவள் உதடுகளை சுவைத்தான். 

 

 

"போதும்.. போதும்.. பசிக்குது ஜோன்"

 

என்றவள் சிணுங்க..

 

 

"உன்னை பார்த்த நொடியில் ஆரம்பித்த பசி இன்னும் தீரவில்லையடி!" என்று அவள் கன்னங்களை மெதுவாக வருடியபடி அவன் கூற.. இவள் புரியாமல் விழிக்க..

 

 

"ஆக்சுவலா அந்த ட்ரெயினிங்கு நான் ஹெட்டா தான் வந்தேன். அந்த லாண்டரில உன்னை பார்த்ததும் எனக்குள் ஒரு மாற்றம்

 

 அப்புறம்தான் உன்னை பற்றி விசாரிக்கும் போது, இன்னும் ஒரு சுவாரசியம்! அதான் ஹெட் போஸ்ட்டை விட்டுவிட்டு நானும் ட்ரைனியா உள்ளே நுழைந்து விட்டேன். இது செபாஸ்டினுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்!" என்று அவன் சிரிக்க.. அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது இவன் எப்படி சென்னைக்கு டைரக்டராக வந்தான் என்று!

 

 

"போ.. போ.. என் கிட்ட மறச்சிடில" என்று‌ அவள் திரும்ப, அவள் பின் கழுத்தில் அவன் உதடுகள் கோலமிட்டன. அவன் பற்கள் அவள் பிடரியை கடிக்க.. அவன் நாக்கு நீண்டு பெண்ணின் முகத்தை திருப்பி இதழ்களுக்குள் தஞ்சம் அடைந்தது. தாமரையின் கோபம் எல்லாம் எங்கோ பறந்து போனது.

 

 

 அவனுக்குள் பிரவாகமெடுத்த மோகம் என்னும் போதை அவனது உடலின் நுண்ணிய நரம்புகளைக் கூட லயம் மாற வைத்திருந்தது. தாமரையின் பெண்மையின் வசீகரம் அவனுக்குள் கிளர்ச்சியை தூண்ட.. அவன் ஆண்மை முறுக்கிக் கொண்டு அவளின் பெண்மையில் மோகம் கொண்டிருந்தது. அவளது மெலிந்த இடுப்பில் தன் கையைப் படர விட்டு.. அவள் கன்னத்தில் மூக்கை உரசினான். 

 

 

அவனின் மோமத்தை அவளுள் அவன் கடத்த, அவனைப் பார்த்த அவள் விழிகள் கிறக்கத்தில் மின்னியது. அவளது உதடுகள் பிளந்து.. அவனிடம் 'என்னைக் கவ்விக் கொள் ' என்றது. அவளின் இடையை இறுக்கிப் பிடித்து தன்னோடு அணைத்தவனின் உதடுகள் ஊர்ந்து வந்து அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டது. 

 

 

உடம்பிலும் மனசிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்திருந்தது. பெண் சுகம் என்பது ஒரு மிகப்பெரிய போதை என்பதை இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்தான். அவனின் மனைவியை முழுக்க முழுக்க அனுபவிக்க அனைத்து உரிமையும் உள்ளவன் தான். ஆனாலும் தன்னவளிடத்தில் அனுமதி பெற அவள் கண்களைப் பார்க்க.. நாணம் கொண்ட விழிகளோ இமை எனும் சிறகை விரித்து மூடிக்கொண்டது.

 

 

எங்கனம் மறுப்பாள் பெண்? அவளின் அன்பும், பாசமும் அவன் மீதான பிடித்தமும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமாக்கியிருக்கிறது. அவரை கைகளை ஏந்திக் கொண்டான். அவர்கள் முறைப்படி முதலிரவுக்கு செல்லும் மணமக்தளை போல..

 

 

 

மெத்தையில் இட்டவுடன் நாணம் வந்து அவளை போர்வையாக்கி கொள்ள.. மெல்ல அவள் கெண்டைக்காலின் அடியில் வருடினான். அவன் விரல்களின் வருடல் தையலின் உடலில் அனலை மூட்ட, அவள் நெளிய.. அவன் விரல்கள் மெல்ல மேலேறி அவள் மெல்லிடையின் நாபிச் சுழியை வருடியது. நுண்ணிய உணர்வுகளைக் கொண்ட அந்த இடத்தின் வருடலில் உடல் மொத்தமும் சிலிர்த்தாள் தாமரை!!

 

 

அவன் இதழ்களோ அவளது பாதங்களின் குட்டிக் குட்டி விரல்களை சுவைக்க.. மொத்தமாய் உணர்வுகளின் பிடியில் தத்தளித்தாள் தாமரை!!

 

 

 

முதல் கூடல் சற்றே வலி இருந்தாலும் தன்னவனுக்காக அதனை அவள் சுகமாகி கொள்ள..

 

அவளின் நிலையறிந்து அவனும் அவளை மென்மையாக கையாண்டான்.

 

 

பலம் காட்டவில்லை அவன்…

 

பால் வண்ண மேனியில் மென்மையாக விளையாடினான்.

 

அவளது பருவ செழுமைகளை ஒரு குழந்தையின் கன்னத்தை வருடுவதை போல, மிருதுவாக.. மென்மையாக.. வருடிக் கொடுக்க.. 

 

உதடுகளோ தாபமாக உறிஞ்சி கொண்டன ஒன்றையொன்று!!

 

 

அவன் அணு அணுவாக தன் தன் ரதியின் அந்தரங்கத்தை ரசித்தான் காமனவன். காமம்.. காதல்.. ஆசை.. இச்சை எல்லாம் கலந்த மோக உணர்வுடன் அவளின் அத்துணையையும் துளித் துளியாக முத்தமிட்டு கொஞ்சினான்.. ரசித்தான்.. ருசித்தான்.. கடித்தான்.. லயித்தான். சந்தோஷ ஆலாபனை சத்தமின்றி அரங்கேறிக்கொண்டிருந்தது.

 

 

 

கூடல் முடிந்து அவளை தன் மீது போட்டுக் கொண்டு காதோரம் முத்தமிட, அவனை பார்த்த அவள் கண்களில் அபப்டியொரு நிறைவு! இருவரும் காதலாக புன்னகைத்துக் கொண்டார்கள்.

 

"ஜோன்!! நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்!" அவன் உதடுகளை நீவி மீசையை வருடினாள். அவள் விரல்களை பிடித்து ஒவ்வொரு விரலாய் வாயில் கவ்வி முத்தமிட்டு கொண்டிருந்தான்.

 

 

"உன்னுடைய இந்த காதல் மட்டும் போதும்!! வேறு எதுவும் வேண்டாம்!! இந்த நிமிடமே என் உயிர் பிரிந்தால் கூட.. சந்தோசமாக போவேன்!"

 

 

அவள் பேசியது அவனுக்கு சுவைக்கவில்லை.. அதற்கு தண்டனையாக, அவள் கன்னத்தில் அழுத்தி கடித்தப்படி அவள் உதட்டோரம் அவன் ஆவேசமாக முத்தமிட்ட தொடங்க.. அவளின் பேச்சுகள் எல்லாம் மறந்து போனது. ஏன் அவளையே மறந்து போனாள்!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top