Share:
Notifications
Clear all

காதல் சகி 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 202
Thread starter  

31

 

 

தாமரை கூறியவற்றைக் கேட்ட ஜெர்ரிக்கு அவ்வளவு கோபம் அவளது சித்தியின் மீது.. பதின்பருவத்தில் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணை.. அதுவும் தன் சொந்த அக்கா பெண்ணை தன் கணவரோடு இணைந்து பேசியது மட்டும் அல்லாமல்.. நட்ட நடு இரவில் வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்றார் என்றால்.. எப்பேர்ப்பட்ட வன்மமும் கொடூரமும் அவரு மனதினில் இருந்திருக்கும்.

 

இப்போது மட்டும் அவர் கையில் கிடைத்தால் வெளுத்து வாங்கும் கோபம் பொங்கியது அவனுக்கு.. இந்த அழகில் அவருக்கு வேறு இரண்டு பெண்கள். ஆனால் அவனின் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நடுங்கும் தேகத்தோடு அமர்ந்திருந்தவளை வாரி அணைத்துக் கொண்டான்! தன்னுள் பொதித்துக்கொண்டான்!! 

 

 

"அன்னைக்கு நீ கஷ்டப் படும்போது உன் பக்கத்துல நானில்லையே ஹனி.. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. ப்ளீஸ் அந்த விஷயத்தில் இருந்து வெளியில வா ஹனி உனக்கு நான் இருக்கேன் டா! இப்போதும் எப்போதும்!" என்று பாசத்தோடும் அன்போடும் அவனது குரல் அவளை அரவணைக்க, சற்று நேரத்திலேயே தெளிந்தவள் அவனின் அணைப்பில் இருந்து வெளிவர, "வேணாம்.. வேணாம் இப்படியே இருந்து சொல்லு!" என்றான் ஜெர்ரி.

 

 

"ஐ அம் ஓகே ஜெர்ரி.. சின்ன வயசிலிருந்து இதை அனுபவிக்கிறேனே. அதனால எனக்கு நானே ஆறுதல்! தேறுதல்!" என்று கூறி விரக்தியாக சிரித்தாள் மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டவன், "இந்த அணைப்பு உனக்காக இல்லை ஹனி.. எனக்காக!! நீ சொன்ன அந்த விஷயத்தை என்னால் டைஜிஸ்ட் பண்ண முடியல.‌ உன் உடம்பை விட என் உடம்பு தான் நடுங்குது பாரு!" என்றவனின் விரல்கள் உண்மையிலேயே நடுங்க.. அவன் முரட்டு கைகளை தனது தளிர் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள் பெண்ணவள்!!

 

 

மனதால் என்றுமே பெண்கள் ஆண்களைவிட வலிமையானவர்களே!! சக்தி கொண்டவர்களே!!

 

"ஆனால்.. என் சித்தியின் கணவரால் இரவெல்லாம் தூங்க முடியல.. மனைவியிடம் அந்த பெண்ணை உள்ளே அழைத்து வா என்று வற்புறுத்தி சொல்ல, அவரோ மறுத்து மீண்டும் வார்த்தைகளை விட, இம்முறை அறைந்தே விட்டார் அவர். அதில் என் சித்தி குய்யோ முய்யோனு சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழிச்சிட்டாங்க.

 

 'இரு உன் மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறேனு' அர்த்த ராத்திரியில் கூப்பாடு போட.. அதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சித்தி சொன்னதைக் கேட்டு, அவரை தான் வாய்க்கு வந்தபடி திட்டி 'அந்தப் பெண்ணை உள்ளே அழைத்துப் போ' சத்தம் போட்டாங்க.. 

 

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை பார்த்து பாய்ந்து வந்தவர் என்னை எழுப்பினாங்க.. ஆனா.. ஆனா.. நானோ எப்படி அந்த இடத்தைவிட்டு எழுவேன்? அந்த இடத்தை விட்டு அசையாமல் நான் இருந்ததைப் பார்த்து என் சித்தி நான் ரொம்ப கல்லுளிமங்கி.. திமிருபிடிச்சவனு ஏதேதோ சொன்னாங்க.. அது எதுவும் அப்போ என் நிலையில சரியா கேட்கல.. சித்தியை திட்டிவிட்டு அவர் கணவர் பக்கத்து வீட்டு அக்காவை விட்டு பார்க்க சொல்ல, அவரிடம் நான் கூற.. அதற்கு பின் அங்கு உள்ளவர்களை சேர்ந்து என் சித்தியை இன்னும் மோசமாக திட்டி என்னை உள்ளே அழைத்து சென்றனர்.

 

 சின்னதா வீட்டோட ஃபங்ஷன் வெச்சாங்க.. ஆனா அதுக்கப்புறம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பேசி 'இந்த பொண்ண நீ எதுவும் செய்ய கூடாது. பேச கூடாது. நீ இருக்கிறது உங்க அம்மாவோட வீடு. அதுல உனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை ராகவி பொண்ணுக்கும் இருக்கு' என்று சொத்தைக் காட்டி மிரட்டி என்னை தங்க வைச்சாங்க...

 

 

ஆனால் அதற்கப்புறம் எனக்கு கட்டுப்பாடுகளும் அதிகம். பேசக் கூடாது யாரிடமும். குறிப்பாக வீட்டுக்குள் அவங்க கணவர் பிள்ளைகள் இருக்கிற பக்கம் தலை வைத்து படுக்க கூடாது. காலையில எனக்கு கொடுத்த வேலையைச் செய்துட்டு நான் ஸ்கூலுக்கு போகணும். இப்படியேதான் ஓடுனது என்னுடைய பள்ளி காலம்.. எனக்கு இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர ஒரே வாய்ப்பு. ஆன்சைட் வொர்க்.. அதுக்கு என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன். மருத்துவத்தை தவிர்த்து இன்ஞ்னியரிங் காலேஜில சேர்த்தேன் ஃபீரீ சீட்ல.. ஸ்காலர்ஷிப்புல தான் படிச்சேன்.

 

 

அப்பத்தான் எனக்கு காலேஜ்க்கு தேவையான பிரண்ட் அவுட் ப்ராஜெக்ட் வொர்க் பண்றதுக்கு எங்க ஊருக்கு பக்கத்தில் கடை வைத்திருந்த மகேஷ்வரன் கடைக்கு நான் போனேன். என்னோட கம்ப்யூட்டர் நாலேட்ஜ் பார்த்துட்டு பார்ட் டைம் ஜாப் தந்தான். அதை ஏத்துக்கிறதுக்கு முதல பயமா இருந்தாலும் அதில் வர சம்பளத்தை நினைத்து ஒத்துக்கிட்டேன். 

 

 

அப்பத்தான் பைனல் இயர் முடிக்கிற சமயத்துல மகேஷ் என்னை லவ் பண்றதா சொன்னான். எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தினான். ஒரு நாள் நான் என் சித்தியின் கணவர் கிட்ட இதை சொல்லிட்டேன். 

 

 

அவர் ஒருநாள் மகேஷை நேரடியாக கூப்பிட்டு கேட்க, உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இருந்தா உன் அம்மா அப்பாவோட வான்னு சொல்லி மிரட்டி அனுப்பிட்டார், அவனும் அடுத்த சில மாதங்களிலேயே வந்துவிட்டான்.

 

என் சித்தி பசங்களெல்லாம் அப்பதான் ஸ்கூல் படித்துக்கொண்டிருந்த நேரம்.. குடும்பமும் ஓகே.. பக்கத்து ஊரு என்று எல்லோருக்கும் சம்மதம் சொல்ல.. என் சித்தி தான் 'இவளை இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு படிக்க வச்சதுக்கு கொஞ்சமாவது சம்பாதித்து கொடுத்தது தான் போகணும்' என்று விட்டார். அதன்படி இரண்டு வருடம் சம்பாதித்துக் கொடுத்து விட்டு அதன்பின் மகேஷ் உடனான என் திருமணம் என்று அப்போது அங்குள்ள அவர்களால் நிச்சயிக்கப்பட்டது.. 

 

 

இதில் யாருமே எதிர்பார்க்காதது என்னென்ன…" என்று அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டவள், "அவர் இறந்தது தான்!" என்றாள்.

 

 

"அவர்னா?? உங்க சித்தி கணவரா??" என்று ஜெர்ரி கேட்க..

 

"ஆமா அவருக்கு உள்ளுக்குள்ளே கேன்சர் இருந்திருக்கு தெரியல.. ஸ்டோமச் கேன்சர். லாஸ்ட் ஸ்டேஜ்ல தான் கண்டுபிடித்தோம். ஆனாலும் புரோஜனம் இல்லை.. அவர் கடைசி நேரத்தில் கூட என் கைய புடிச்சி கிட்டு தான் இறந்தார்.. 

 

என் அம்மா செய்த துரோகத்துக்கு வேறு யாராவது இருந்தா என்னை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டாங்க.‌ ஆனால் அவரோ தாய்மாமன் ஸ்தானத்திலிருந்து என் அம்மாவையும்.. ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து என்னையும் நல்லாவே பார்த்துக் கொண்டார். என்ன கடைசி வரைக்கும் என்னால அவரை அப்பான்னு கூப்பிடவே முடியல.. அதுக்கு இந்த சித்தி ஒரு தடவ கூட வாய்ப்பு கொடுக்கவே இல்லை" என்றாள் அழும் குரலில்..

 

"எனக்கு அப்பா என்கிற பிம்பத்தையும் அது கொடுக்கும் பாதுகாப்பையும் அறிவுரையும் அன்பையும் எனக்கு கொடுத்தவர் அவர்தான்! என்னை பெத்தவன் யாரோ இருக்கலாம்.. ஆனால் எனக்கு அப்பானா அவர்தான்" என்று கண்களை துடைத்துக் கொண்ட பேசியவளை தன் கை வளைவுகளில் வைத்து கொண்டான் ஜெர்ரி.

 

 

அப்போது அவன் மனதில் தன்னவள் இழுந்த அதே குடும்ப பாசத்தை.. தந்தையின் அரவணைப்பை.. தாயின் அன்பை தன் குடும்பமாக கொடுக்க வேண்டும் என்று!

 

யாரோ யாருக்கு தவறு செய்திருக்க.. யாரோ யாருக்கு துரோகம் பண்ணியிருக்க.‌. ஆனால் அனைத்து வலியும் இவள் மேல்!! அனைத்துக்கும் பிழையானள் இவள்!!

 

"ரெண்டு வருஷம் முடிஞ்சுதா ஹனி?" என்று அவன் கேட்க..

 

"இன்னும் ரெண்டு மாசத்துல முடியுது! அன்னைக்கு கூட கணேஷ் வந்திருந்தான். அவங்க அம்மாவுக்கு ஆப்ரேஷன் பணம் வேணும்னு.. என் கிட்ட அவ்ளோ பணம் இல்ல அப்போ ஸ்டீபன் கேட்டு தான் வாங்கி கொடுத்தேன். என் சேலரி வந்தவுடன் திருப்பிக் கொடுத்தேன்.. அவனும் இதே சென்னையில்தான் எங்கே வேலை செய்றான் போல..‌" என்றவள் சோர்வாக அவன் மீது சாய்ந்து கொள்ள..

 

"எனக்கு தூக்கம் வருது பா.. தூங்கட்டா?" என்று கேட்டாள்.

 

பல நாட்கள் துக்கத்தினால் தூக்கத்தை தொலைத்தவள் இன்று அனைத்தையும் அவன் தோளில் இறக்கி வைத்த நிம்மதியோடு துயில் கொண்டாள்.

 

தன் அறையில் உள்ள நீள் இருக்கையில் படுத்து உறங்கும் அவளை மென்மையாக தலைகோதி நெற்றியில் முத்தமிட்டவன் நிஷாவை அழைத்து பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

 

"சார்…" என்று அவள் இழுக்க..

 

"ஓவர் ஸ்டிரஸ் அண்ட் டென்ஷன்! அதான் வேற ஒன்னும் இல்ல தூங்கி எழுந்தால் சரியாயிடும்! பார்த்துக்கோங்க!!" என்றவன் வேக நடையோடு ரஹீமை தேடிச் சென்றான்.

 

அடுத்து இருபதாவது நிமிடத்தில் மொத்த ஆபீஸூம் அந்த அலுவலகத்தில் இருந்த பெரிய மீட்டிங் ஹாலில் இருந்தனர்! இருக்க வைத்தான் ஜெர்ரிக்! 

 

ஒருத்தரும் விடாமல்.. ஹெச் ஆர்.. டெக்னிசியன்ஸ்.. பேக் ஆபீஸ் ஸ்டாப்ஸ் என்று அனைவரும் ஆஜராக..

 

 

"ஐ அம் ஜஸ்ட் ஷேம் ஆன் யூ ஆல்!" என்று கோபமான குரலில் ஆரம்பித்த ஜெர்ரியை பார்த்து அனைவரும் ஒரு நிமிடம் நடுங்கி தான் போயினர்.

 

"இங்க இருக்கிற மேன்பவர் நம்பி இந்த ப்ரொஜெக்ட் செய்யலாம் இங்கே வந்தேன். ஆனா இப்ப தான் தெரியுது? இங்கே உள்ள மேனுக்கு எல்லாம் மட்டமான மைண்ட்னு.. ஹவ் டேர்‌ யூ ஆல் டூ கிரிட்டிசைஸ் அதர்ஸ் அண்ட் ஸ்ப்ரட் ரூமர்ஸ்.. உங்களுக்கெல்லாம் இங்கே வேலை கொடுத்து அதற்கு நிறைய சலுகையும் கொடுத்து கை நிறைய சம்பளம் கொடுக்கிறதுக்கு கொஞ்சம் கூட வேலையில் கவனம் போகாமல் வேறு விஷயத்தை பேசிட்டு இருக்கீங்க.. 

 

 

என்ன தெரியும் என்னை பற்றி உங்களுக்கு? எப்படி நீங்க என்னை இதுல சம்பந்தப்படுத்தி பேசலாம்? என் தனிப்பட்ட வாழ்க்கையை பேச நீங்களெல்லாம் யாரு?" என்று அவன் அந்த மேடையில் நடந்துகொண்டே கர்ஜிக்க.. 

 

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அவ்வளவு அமைதி. "சோ.. இப்போ என்னோட பொஸிஷன் இந்த கம்பெனியில் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என்னையே இங்கு இவ்வளவு க்ரிட்டிசைஸ் பண்ணும்போது ஒரு சாதாரண ஸ்டாபை என்னென்னவெல்லாம் பேசுவிங்க? 40% ஆஃப் யுவர் சேலரி வில் பி டிடெக்டட் இன் திஸ் மன்த்!!" என்று அவன் கூற..

 

 "இதில் தவறு செய்தவர்களோடு செய்யாதவர்களும் சேர்ந்து அனைவரும் பாதிக்கப்படுவார்கள்!" என்று ஒரு பெருசு தலையை காட்ட..

 

"அப்பா அந்த நியாயவாதிகள்.. தவறு செய்யாதவர்கள்.. தவறு செய்தவர்கள் தவறு செய்யும்போது ஏன் அமைதியா இருந்தீங்க? எவனோ எப்படியோ போனா நமக்கென்ன என போறதுமே ஒரு குற்றம். இனி இந்த ஆபீஸ்ல இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் மொத்தத்தையும் ஐ ஜஸ்ட் ஃபையர்டு!" தன் ஆத்திரம் அடங்காமல் அனைவரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டு அமைதியானான்.

 

"அண்ட் ஒன் மோர் நான் இங்க வந்ததுக்கு காரணமே தாமரைச்செல்வி தான்!! ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் எங்களுக்குள்ள அதனால அவளை கன்வின்ஸ் பண்ண தான் இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் நான் இங்கே தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தேன்.. டாம் இஸ் மைன்! மை கேர்ள்!! நெவர்‌ எவர் ஷோன் யுவர்‌ பிங்கர் ஆன் ஹர்..!!" என்று அதுவரை அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தில் அனைவரையும்‌ வெளுத்து வாங்கியவன், கடைசியாக

"நசுக்கிடுவேன் நசுக்கி!!" என்று‌ தமிழில் முடிக்க.. அரங்கமே அதிர்ந்து நின்றது அரங்கநாதன் மகனின் அதிரடியை பார்த்து..

 

அடுத்த நிமிடம் வேக நடையுடன் இவன் தன் அறைக்கு சென்று விட அங்கே அதிர்ச்சியில் இருந்தவர்கள் சில மணித்துளிகள் ஆனது சமநிலையை அடைய..

 

 

இவருக்கு தமிழ் தெரியுமா?

 

ஜெர்ரிக்கு தமிழ் தெரியுமாம்!!

 

இது தான் ட்ரெண்ட் ஆனது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அலுவலகம் முழுவதும்.

 

"நம்ம ஜெர்ரி சார் தமிழ்ச்செல்வி கரெக்ட் பண்றதுக்காகவே தமிழ் கத்து இருக்காரு போல.."

 

"ஆனாலும் செம லவ்வுல.. பாரு எப்படி மனுஷன் எல்லாரையும் அல்லு விட வைத்து விட்டார்!" என்று திரும்பவும் ஒரு வதந்தி பரவ தான் செய்தது.

 

காட்டுத்தீயை கூட அணைத்து விடலாம் போல.. இந்த வதந்தியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது!!

 

அன்று மாலை முதல் முதலாக அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றான். அவள் இருக்கும் அதே தளத்தில் சற்று வலதுபுறம் திரும்பி சென்றால் இருக்கும் இரண்டாவது வீட்டில் தான் அவனும் இருந்தான்.

 

 

"எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க?" என்று அந்த வீட்டை கண்கள் பார்த்தப்படி அவள் கேட்க, "நீ வந்து ரெண்டாவது மாசத்துல நான் இந்த வீட்டை வாங்கிட்டேன்" என்றான்.

 

"என்னது வாங்கிட்டீங்களா?" என்று அதிர்ச்சியாக கேட்க..

 

"ஆமாம்.. இதே ப்ளோர்ல்தான் வீடு வேணும்னு கேட்டேன். வாடகைக்கு இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க அதான் வாங்கிட்டேன்" என்று அசால்டாக கூறி அவளை உள்ளே அழைத்து சென்றவன், "ரெப்பிரஷ் பண்ணிட்டு வா" என்று அனுப்பி வைத்துவிட்டு இருவருக்கும் சாப்பிட குடிக்க என்று செய்து கொண்டு வந்து வைத்தான்.

 

 

அப்போதுதான் மதியம் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வந்த தாமரைக்கு, அங்கு நடந்த பிரச்சனையில் சாப்பிடாததே ஞாபகம் வர, ஜெர்ரி செய்து வைத்திருந்ததை அவசரமாக பிட்டு வாயில் போட்டுக் கொண்டாள்.

 

 

அவனும் சாப்பிட்டு முடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி, தந்தைக்கு அழைத்து அன்று சொன்னது போல "உங்க மருமகளை காட்டப் போறேன்!" என்று பிரெஞ்சில் கூறி வீடியோவை தாமரையின் பக்கம் திருப்பினான்.

 

முதலில் லூசியை பார்த்த தாமரை இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறினாள்.

 

அதன் பிறகு அப்பா என்று அவன் அறிமுகப்படுத்திய அரங்கநாதனை பார்த்து அவள் அதிசயித்து தான் போனாள். அவரின் உருவத்தை வைத்து இந்தியர் என்று கண்டு கொண்டு.

 

"தாமரை மா எப்படி இருக்க?" என்று அவரின் அழகு தமிழில் ஆனந்தம் கொண்டவள் பற்கள் தெரிய அழகாக சிரித்து வைத்தாள்.

 

"அடிப்பாவி!!! நான் கூடத்தான் உனக்காக தமிழ் கத்துக்கிட்டு பேசினேன்.. அப்போ ஒரு தடவை கூட இந்த மாதிரி நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே!" என்று ஜெர்ரி ஆதங்கப்பட

 

அவள் என்ன சொல்வது என்று புரியாமல் திரு திருவென்று விழித்தாள்.

 

"ம்ஹூம்.. இதுக்கு எப்படி எப்படியெல்லாமோ பதில் சொல்லியிருக்கலாம் ரொமான்டிக்கா.. லவோட.. அன்போட.. ஆனா உன்னோட இந்த ரியாக்ஷன்.. அம்மாஆஆஆ என்றவன், "ப்பா.. பாருங்க என் வாழ்க்கைய.. கல்யாண வாழ்க்கை எவ்வளவு ரொமான்டிக்கா போகும்னு உங்க மருமகளை பார்த்தாலே தெரிந்துவிடும்!" என்று சோகமாக ஜெர்ரி கூற.. அவன் முடிப்பதற்குள் கலகலவென்று சிரித்தார் அரங்கநாதன்.

 

"அவளுக்கு தெரியலனா என்ன? நீ சொல்லிக் கொடு! உனக்கு தெரியாததை அவ சொல்லிக் கொடுப்பா! அதுதான் பரஸ்பர தாம்பத்தியத்தில் தார்ப்பரியம்!!" என்றார்.

 

இருவரும் சிறிது நேரம் அவர்களோடு உரையாடி முடித்தவுடன் "சீக்கிரம் எல்லாம் சரி பண்ணிட்டு சொல்லு ஜெர்ரி நான் டிக்கெட் போடணும்" என்றார்.

 

போன் பேசி முடித்தவுடன் தான் இருவர் மட்டும் தனியாக இருக்கும் அந்த தனிமை அவளுக்கு புரிய சற்றே நெளிந்து நெளிந்து அமர்ந்தாள். அவன் கண்களோ அவள் முகத்தை தான் ஆசையாகப் பார்த்தது. அவன் பார்வை அவளின் மெல்லிய உணர்ச்சிகளை தட்டி எழுப்ப.. அவள் உள்ளங்கைகளிலும் நெற்றிலும் அதிக ரத்த ஓட்டம் பாயந்து வியரத்தது. உலர்ந்த உதடுகளை நாக்கை நீட்டி தடவி ஈரப்படுத்திக் கொண்டாள். 

 

 

மெல்ல நெருங்கியவன் அவள் கையை தன் கையில் எடுத்து வருட... அவளுக்குள் பல உணர்ச்சிகள் மெல்ல பாய.. விடாது அவள் விரல்களை நீவியவன், பின் குனிந்து முத்தமிட்டான் ஒவ்வொரு விரல்களாய்... 

 

அவள் உடல் சிலிர்த்து சிணுங்க.. மனசு அவனிடம் சரிந்து இருந்தாலும் 

ஏனோ உடல் விறைப்பாகவே இருக்க.. அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தவனின் கையோ அவள் இடையை வளைத்து அணைத்தது. கூச்சத்தில் அவள் நெளிய.. அவன் முகம் அவள் கழுத்தருகே வந்து வாசம் பிடித்து பின் முகத்தை பார்த்தவன் அவளது உணர்ச்சிகளை படித்தான்.

 

 

தாமரை இருக்கமாக கீழுதட்டை கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க.. கள்ளப் புன்னகை கொண்ட அவன் கண்களும் உதடுகளும் அவள் கண்களை முத்தமிட்டன.. அவள் கண் இமைகள் சிறகை விரித்து பறக்கும் பட்டாம் பூச்சி என படபடக்க..

அதை ரசித்தவன், அவள் முகத்தை காதலாகப் பார்த்தான்.

 

"நான் உனக்கு கிஸ் பண்ணா.. நீ எவ்வளவு உணர்ச்சிவசப்படுற.. பயப்படுற.. அதனால.. யூ கிஸ் மீ ஹனி" கிறக்கமாக கேட்டவன், அவன் உதடுகளை குவித்து காட்டினான். 

 

அவனின் இந்த அருகாமையும் தனிமையும் அவளுக்கு வியர்த்து வழிந்தது. நேற்று ஏதோ ஒரு உணர்ச்சிப்பெருக்கில் கொடுத்துவிட.. இன்று அவளின் ஒரு அணு கூட அவனை நோக்கி நகராமல் அழுத்தமாய் இருக்க.. 

 

"ஏன் டாம்.. இன்னும் உனக்கு என் மேல் நம்பிக்கை வரலையா?" என்ற அவனின் குரலில் இருந்த வலி அவளை அவனை நோக்கி நகரச் செய்தது.

 

மெல்லிய வெட்கத்துடன் சிறிது தயங்கியவள் பின் அவன் உதட்டில் தன் ஈரமான மெல்லிதழ்களை பதித்து முத்தமிட்டு சட்டென்று விலகி விட்டாள்.

 

"நான் ஃபீல் பண்ணவே இல்லடி!!" என்று அவன் உதடு பிதுக்கி காட்ட.. 

 

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இப்படி எல்லாம் எனக்கு வரல.." என்று துடிக்கும் உதடுகளோடு அவள் கூற..

 

துடிக்கும் ஈர இதழ்களை சிறைப்பிடித்தான் மாயவன் வன்மையாக!!

அந்த வன்மையுள் மென்மை காட்டினான்!!  

அந்த மென்மை உள்ளே தாபத்தை ஊட்டினான்!! 

தாபத்தின் மூலம் மோகத்தை தூண்டினான்!!

ஒற்றை முத்தத்தில் பல வித்தைகளை அவன் காட்ட..

 

அவனின் இதழ்கள் களியாட்டத்தில், ஆழ்கடலின் சுழலில் மாட்டிக் கொண்டதை போல உணர்ந்தவள் விரும்பிய அந்த சுழலில் சிக்கினாள் 

முழுவதுமாக..

இனிமையாக..

காதலாக..

 

காலை தூக்கம் கலைந்து கண் விழித்தபோது அவனின் பார்வை அவனருகில் நெருக்கமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த தாமரை மீது படர்ந்தது. தலையணை மீது கை வைத்திருந்த ஜெர்ரியின் கை மீது கன்னம் தாங்கி அவனைப் பார்த்தவாறு படுத்திருந்தாள்.

 

கண் மூடித் தூங்கும் தன்னவளின் அழகிய வதனத்தை ஆசையாக அமைதியாக காதலாக ரசித்தான் இந்த காதலன். அவளின் மொழு மொழு மூக்கும்… இறகு போல மூடியிருந்த நீள கண்களும்... அதன் கீழே பிரித்து வைத்த ஆரஞ்சு சுளை போன்ற மெல்லிய இதழ்களும்.. பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை.

 

நேற்று அவளைப் பற்றி பேசிக்கொண்டே அவன் தோளில் சாய்ந்து தூங்கி விட்டாள் அவனது வீட்டிலேயே தாமரை.

 

தாமரை இன்னும் வரவில்லை என்று ஒருவேளை லேட்டாக வருவாளோ என்று நினைத்த வித்யா வேலைக்குச் செல்வதாக மெசேஜ் போட்டு விட, அதை பார்த்த ஜெர்ரியும் ஓகே என்று மட்டும் பதில் அளித்து அனுப்பி இருந்தான்.

 

கண்களை திறந்த தாமரை காதலாக தன்னை பார்க்கும் அவனை பார்த்து சிரிக்க..

அவள் இடுப்பை இறுக்கி பிடித்து தன்னோடு அணைத்தவன், "குட் மார்னிங் ஹனி" இதழ்களைக் கவ்வினான் ஜெர்ரி.

 

அவள் இதழ்களை ஆவேசமாக சுவைக்க ஆரம்பித்தவன் சில நிமிட ஆவேச முத்தத்தில் இறங்க, இருவருமே அதில் லயித்து கிறங்கினர். 

 

"என்னது இது காலையிலேயே?" என்று அவனை பார்த்து கேட்க அவனோ "ஜஸ்ட் மார்னிங் கிஸ்! இனிமே இப்படித்தான் பழகி கோ!" என்றான் கண்ணடித்து..

 

கண்களைத் திறந்து ஒரு நொடி அவனைப் பார்த்து புன்னகைத்தவள், சட்டென அவன் மார்பில் முகத்தை புதைத்து உறக்கத்தை தொடர்ந்தாள்.

 

அவள் நெஞ்சில் இப்போது தனது கவலைகள் இருக்கவில்லை. தன்னவனின் காதலும் அன்பும் மட்டுமே அவளது நெஞ்சை ஆக்ரமித்திருந்தது. அவனது மொத்த உருவம் மட்டுமே அவள் மனக் கண்ணில் நிலைத்திருந்தது. இவ்வளவு நாளாய் தாமரையின் கண்கள் இப்படியொரு நிம்மதியான தூக்கத்தை உணர்ந்ததில்லை. ஏக்கத்தை மட்டுமே அறிந்திருந்தது. ஆனால் இன்று.. இப்போது.. அவளுக்கென்று அவளவன்! அவனது குடும்பம்!! இனி அவளது குடும்பம். நினைக்கவே அவ்வளவு சந்தோசம்.. மனநிறைவு!

 

"என்ன மேடம்.. நேத்திலிருந்து இப்படி தூங்குறிங்க.. பக்கத்துல ஒருத்தன் தவிப்போடு காத்திருக்க புரியுதா உங்களுக்கு?" என்றவன் மீண்டும் அவள் இதழ்களை முற்றுகையிட.. சுக களைப்பில் கண்களை மூடினாள் தாமரை. மோக மயக்கத்தில் மோன லயிப்பில் தாப உணர்வுகள் தறிகெட்டு ஓட.. அவளோ அவனின் மோக தாளத்தில் மிதக்கத் தொடங்கினாள். ஆனால் ஜெர்ரிக்கோ.. அவளை தின்று தீர்த்து விடும் தாபம் கிளிரந்தது. அவளின் இதழ்களில் அமுதம் குடித்து குடித்து அமரனாகி கொண்டிருந்தான்.

 

 

பின் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன்,

அவள் வயிற்றில் தன் கைகளைக் கோர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

"உன் மீது நான் கொண்ட இந்தக் காதல் என்று தணியுமடி சகியே!!

 

இல்லையில்லை காலமெல்லாம் இது தீ

ராது.. என்றுமே நீ என் காதல் தானடி சகியே!!"

 

என்றவன் அவள் கன்னத்தில் தன் உதடுகளை பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தான். அவளோ கண்களை மூடி லயித்தாள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top